Tuesday, March 31, 2009

RSS.முழு நேர ஊழியனின்.. பேட்டி - 2.

அங்கும் பம்பரமாய் பணியாற்றினேன். இங்கெல்லாம் நான் ஹிந்து மதத்தின் வணக்கங்களில் ஆழ்ந்த பக்தியுடன் ஈடுபட்டிருந்தேன். பணம் வேண்டும் என்றால் அங்கே ஒரு கடவுளை நோக்கி ஓட வேண்டியதிருக்கிறது.

என் சமுதாயம் லோன் என்று கடன்பட்டே வாழ்ந்து பழகிப்போன சமுதாயம். ஆனால் பணத்திற்காக இருக்கும் கடவுளின் பற்று இவர்களின் மேல் இன்றளவும் விழுந்ததாகத் தெரியவில்லை.

இந்தக் கடவுளைச் சந்தித்துக் கடன் கேட்கவே என் மக்களுக்கு உரிமை அளிக்கப்படவில்லை. அதேபோல் கல்விக்காக ஒரு கடவுளை வைத்திருகின்றார்கள். இந்தக் கடவுளையும் என் மக்கள் இன்றும் சந்திக்க உரிமை பெறவில்லை.

வாங்கும் கடனில் வரும் தொல்லைகளுக்கும் அதுபோல் வரும் இதரதொல்லைகளுக்கும் ஒரு கடவுளை நியமித்திருக்கின்றார்கள். என் மக்களுக்கு என்று வரும்போது இந்தக் கடவுளும் இல்லை.

இப்படிப் பிரச்சனைக்கொரு கடவுள் என வைத்துக் கொண்டு அலைவது சதாசர்வகாலமும் என்னை அழுத்தி வந்திருக்கின்றது.
எனினும் நான் எல்லாம் சரியாகிவிடும் எதிர்வரும் நாட்களில் என்றிருந்தேன்.

ஆனால் எதுவும் உண்மையாகவில்லை. என் மக்களுக்கு விடுதலை என்பது ஹிந்துத்துவாவில் இல்லை என்பதை உணர்ந்தேன்.

ஜாதிப்பிரச்னைக்கு ஹிந்துத்துவாவில் தீர்வு இல்லை என்பதே உண்மை.

இதற்கிடையில் நான் ஒருமுறை ஐய்யப்பன் கோயிலுக்குப் போக மாலை போட்டேன்.

நான் ஐய்யப்பன் பால் கொண்ட பக்தியால் என்னை ஐய்யப்பன் என்றே எல்லோரும் அழைப்பார்கள். நான் அங்கிருக்கும் போது முதலமைச்சர் அந்தஸ்தில் கருணாகரன் அங்கே வந்தார். நான் அது போது பி.ஜே.பி.யின் முக்கியஸ்தர்களில் ஒருவன் எனக்கருதப்பட்டவன்.

இது நான் ஆர்.எஸ்.எஸ்., பி.எம்.எஸ். மற்றும் பி.ஜே.பி. ஆகியவற்றிற்குத் தாரை வார்த்துத் தந்த உழைப்பால் ஏற்பட்ட ஏற்றம்.

தலைமை அமைச்சர் அங்கே வந்தார் என்பதற்காகப் பாமரர்கள் அங்கே புறக்கணிக்கப்பட்டார்கள்; புறந்தள்ளப்பட்டார்கள்;
எனக்கு எதுவுமே புரியவில்லை.

ஏன் ஆண்டவனின் சந்நிதானத்தில் இவ்வளவு பெரிய அநியாயம்?
கடவிளின் முன்னால் கூட இங்கே சமத்துவமில்லையே என நான் அங்கலாய்ந்தேன்.

ஆண்டவனின் சந்நிதானத்தில் மனிதர்களில் மேலானவர்கள் - மேல் ஜாதிக்கார்கள் வந்தால் சிறப்புப் பூஜை; தங்கத் தட்டில், வெள்ளித் தாம்பாளத்தில் ஆரத்திகள்;

என்னவர்கள் என்ன கண்டார்கள்?

நான் பி.ஜே.பி.யில் வேட்பாளனாகக் கூட நின்றேன். கண்ணியம் என்பது எப்படி வரும் என் மக்களுக்கு? சலிப்புற்ற நான் பி.ஜே.பி.யில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போதே, தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்த டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பெயரில் ஓர் அமைப்பை ஏற்படுத்தினேன்.

அதன் பெயர் அம்பேத்கர் யுவசரணி. இந்த அமைப்பை பி.ஜே.பி.யால் சகித்துக்கொள்ள இயலவில்லை.

அம்பேத்கரின் பெயரால் வரும் எதையும் அவர்கள் பொறுத்துக் கொள்வதாக இல்லை என்றே எனக்குப்பட்டது.

எதிர்ப்புகள் வலுத்தது பி.ஜே.பி.யிலிருந்து நான் வெளியேறினேன். இது நடந்தது 1991 -ல்.

சுமார் இரண்டாண்டு காலம் நான் அம்பேத்கர் யுவசரணிக்காக என் மக்களின் ஈடேற்றத்திற்காகப் பணியாற்றினேன்.

என் மக்களுக்கு இழைக்கப்பட்டுவரும் அநியாயங்களை ஆழ்ந்து கவணித்தேன்.

அவன் பிறக்கும் முன் தாயின் கருவிலேயே அடிமையாய் கிடக்கின்றான்.

அடிமையாய் வாழ்கின்றான்………..
அடிமையாய் மரிக்கின்றான்…………

அவன் வாழும் சமயத்தில் அடிமையாய் அழிகின்றான்……

அவனுக்கு மதுவும், போதையுமே வாழ்க்கையாக அமைத்துத் தரப்படுகின்றது.

அவன் இறந்த பின்னரும் அவனது புதை குழியில் சாராயத்தை தெளிக்கின்றார்கள்.

எங்கள் பெண்களை கால

Monday, March 30, 2009

இந்தியாவில் இஸ்லாம்-19

தொடர்-19: தோப்பில் முஹம்மது மீரான்

யார் அஞ்சுவண்ணத்தார்?

அஞ்சுவண்ணத்தாரைப் பற்றியும், மணிக்கிராமத்தாரைப் பற்றியும் இரண்டாவது செப்பேட்டின் முதல் பக்கத்தில் 34, 35 வரிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. அஞ்சுவண்ணமும் மணிக்கிராமமும் இரு வியாயார அமைப்புக்கள் என்பதில் வரலாற்று ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடில்லை. ஆனால் எது யாருடைய அமைப்பு என்பதில்தான் குளறுபடிகள்.

இந்த இடத்தில் சற்று நிதானமாகவும், அறிவுப்பூர்வமாகவும் இதை அணுகவேண்டும்.

அஞ்சுவண்ணம் யூதர்களுடைய வியாபார அமைப்பு (Trade Association) என்றும், மணிக்கிராமம் கிருத்தவர்களுடைய வியாபார அமைப்பு என்றும் சொல்லி முற்றுப்புள்ளி போட்டு விட்டனர். பஹ்லவி, கூபிக் ஹீப்ரு மொழிகளில் எழுதப்பட்ட செப்பேட்டில் காணப்படும் ‘கூபி’ லிபியில் எழுதப்பட்ட பெயர்களை வாசித்துப் புரிந்துகொள்ள முடியவில்லை என்று நொண்டி சாக்குக் கூறி அப்படியே விட்டுவிட்டார்கள்.

இங்கு சொல்லப்படும் வியாபார அமைப்புகளில் முஸ்லிம்களைப் பற்றியோ முஸ்லிம்களுடைய அமைப்புகளைப் பற்றியோ குறிப்பிடவில்லை. சுருங்கக்கூறின் துவக்க காலத்திலேயே வரலாற்றிலிருந்து முஸ்லிம்களைத் துடைத்து அப்புறப்படுத்துவதற்காக நடந்த பல சதித்திட்டங்களில் இதுவும் ஒன்று.

வியாபார அமைப்புக்கள் என குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சுவண்ணத்தாரையும், மணிக்கிராமத்தாரையும் அறுநூற்று பேரையும் (நாயர் அமைப்பு) ஈசோ சபீருக்கு வழங்கும் உரிமைகள் (அதிகாரங்கள்) முறையாக செய்யப்படுகின்றனவா என்று மேற்பார்வை செய்ய அதிகாரப்படுத்தியதாக செப்பேட்டில் காணப்படுகிறது. (செப்பேட்டில் 32-36 வரிகள்)

“32 க்கடவராகவும் உல்கு (கூ)ட்டுஞ்சரக்கு இவைகளை வச்சு உல்குவிடுப்பதாகவு —
33 ம் சரக்குமி (வி) லையிடுமிடத்தும் மற்றுமே ஸாமிகரியம் எக்காரியமும்
34 வைகளைக் கூட்டியே செய்வதாகவும் அன்றன்று படுமுல்கு — அஞ்சுவண்ணமும்
35 மணிக்கிராமமும் இலக்கிச் சுவைப்பதாகவும் நாலு வாதிலகத்து —
36 ம் விலக்கும் பூமியாக காராண்மைக் கொடுக்குமெடத்து கோப்பதவாரங் —
37 கோயில ……….”

மேலேயுள்ள செப்பேட்டு வரிகளை டி.ஏ. கோபிநாத் ராவ் மொழிபெயர்த்துத் தருகிறார்.

“the levying of customs on dutiable articles should be done only in their presence. (Similarly) the apprising of articles and all other business of the Lord (The Kind) shall be done in company with their people. The Anjuvannam and the Manigramam shall take care of the customs collected every day.’ (T.A.S. Page 84)

சுங்கவரி வசூலிப்பதை அஞ்சுவண்ணத்தார்களும் மணிக்கிராமத்தார்களும் கண்காணிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதை செப்பேட்டின் 34, 35 வரிகளில் பார்த்தோம். அஞ்சுவண்ணம் யூதர்களுடைய வியாபார அமைப்பாகவும், மணிக்கிராமம் கிருத்தவர்களுடைய அமைப்பாகவும் இருப்பின், கிருத்தவரான ஈகோ சபீருக்கு வழங்கப்பட்ட மானியத்தில் கிருத்தவர்களை சாட்சிகளாகவும் கண்காணிப்பாளராகவும் நியமனம் செய்ய வாய்ப்பு இருக்காது. கிருத்தவர்களுக்கு வழங்கிய மானியத்தில் கிருத்தவர் அல்லாத வேறு மூன்று மதப்பிரிவினரைக் கொண்டு சாட்சி கையெழுத்துப் போட வைத்திருக்கின்றனர். ஈப்ரு மொழியில் கையொப்பம் போட்டவர்கள் யூதர்களும், பஹ்லவி மொழியில் கையொப்பம் போட்டவர்கள் பாரசீகத்தைச் சார்ந்த வணிகர்களும், கூஃபி லிபியில் கையொப்பம் போட்டவர்கள் அரேபியர்களான முஸ்லிம்களும் ஆவார்கள்.

இனி அஞ்சுவண்ணம் முஸ்லிம்களுடைய வியாபார அமைப்பாக இல்லாவிட்டால் கூஃபி லிபியில் கையொப்பம் போட்ட அரபி தெரிந்த வியாபாரிகள் யார்? அதில் காணப்படும் 11 முஸ்லிம் பெயர்கள் அதில் எப்படி இடம்பெற்றன? இந்த முஸ்லிம்கள் யார்? எங்கிருந்து வந்தவர்கள்? இந்தக் கேள்விகளுக்கு முன் இப்போது வரலாற்று ஆசிரியர்கள் மவுனம் சாதிக்கின்றனர். அஞ்சுவண்ணம் என்பது முஸ்லிம்களுடைய வியாபார அமைப்பை அல்லது முஸ்லிம்களைக் குறிக்கும் சொல்லாகும்.

அஞ்சுவண்ணம் என்ற பெயரில் ஒரு ஊர் இருந்ததாகவும், அவ்வூரைச் சார்ந்த மக்கள் அஞ்சுவண்ணத்தார்கள் என்று அழைக்கப்பட்டதாகவும் டாக்டர் Dr. HULTZSCH என்பவர் குறிப்பிடுகிறார். சிலர் அஞ்சுவண்ணம் என்பது யூதர்களுடைய காலனி என்ற கருத்தையும் முன்வைக்கின்றனர். கிருத்தவ மதத்திற்கு மதம் மாறி வந்த ஐந்து சாதியைத்தான் அஞ்சுவண்ணம் என்ற சொல் குறிப்பிடுவதாக திரு.வெங்கய்யா என்ற வரலாற்று ஆய்வாளர் குறிப்பிடுகிறார். திரு.வெங்கய்யா குறிப்பிடும் ஐந்து சாதியினர் 1) ஈழவர் 2) தச்சர் 3) வெள்ளாளர் 4) வண்ணார். ஐந்தாவது சாதி பெயர் கோட்டயம் செப்பேட்டில் (தரிசாபள்ளி செப்பேட்டில்) தெளிவாகத் தெரியவில்லை என்று கூறி முடித்துக் கொண்டார்.

இங்கு குறிப்பிடப்பட்ட நான்கு சாதியினரும் பெயர் தெரியாத ஐந்தாவது சாதியும் தான் அஞ்சுவண்ணத்தார் என்றால் கிருத்தவர்களாக மதம் மாறிய இவர்கள் எப்படி யூத அமைப்பாக குறிப்பிடப்பட்ட அஞ்சுவண்ணத்தார்கள் ஆனார்கள்?

மதம் மாறிய மேற்குறிப்பிட்ட ஐந்து சாதியாளர்களை ‘அஞ்சுவண்ணத்தார்’ என்று ஏற்றுக்கொள்வோமேயானால் யூதர்களுடைய அமைப்பாக சொல்லப்படும் அஞ்சுவண்ணம் எது?

தொடரும்…

மக்கள் உரிமை வாரஇதழ் - ஜனவரி, 20 - 26 , 2006

இந்தியாவில் இஸ்லாம்-18

தொடர்-18: தோப்பில் முஹம்மது மீரான்

செப்பேடு தரும் செய்தி

தரிசாப்பள்ளி செப்பேட்டில் காணப்படும் மூன்று மொழிகளில் போடப்பட்டுள்ள சாட்சி கையொப்பங்களைப் பற்றி டி.ஏ. கோபிநாதராவ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்…

Unfortunately the missing plates are the first and last plates of second grant. They are very important because the first plate contains the name the of sovereign who granted it and the time of the granting, and the last plate bears the signatures of witnesses in Pahlavi, Kuffic and Hebrew characters which talked the emergence of great scholars like Burneld, Harg, West and Gundert to decipher.

சாட்சி கையெழுத்துப் போட்டவர்களின் பெயர்களை வாசித்துத் தெரிந்து கொள்ள பர்னல், ஹாக், வெஸ்ட், குண்டர்ட் போன்ற பெரும் அறிஞர்கள் கடும் முயற்சிகள் செய்தனர் என்று கோபிநாத ராவ் கூறுகிறார். ஆனால் அவர்களால் இப்பெயர்களை வாசித்து தெரிந்து கொள்ள முடியவில்லை. மேலும் சற்று முயன்றிருந்தால் இந்தப் பெயர்களை தெரிந்து கொள்ள முடிந்திருக்கும். சாட்சிப் பெயர்கள் முக்கியமல்ல என்ற குறுகிய நினைப்பில் முயற்சிகளைக் கைவிட்டிருக்கலாம். ஆனால் நம்மைப் பொருத்தவரையில் இவ்வாய்ப்புக்கு அப்பெயர்கள் தான் மிகமுக்கியம்.

இந்த கடைசிச் செப்பேட்டில் சாட்சிகள் கையொப்பம் போட்ட மொழிகள் பஹ்லவி, கூஃபி, ஈப்ரு ஆகியவை. கூஃபி என்பது அரேபியாவிலுள்ள கூஃபா எறும் பகுதியில் அன்று நடைமுறையில் இருந்து வந்த அரபி மொழியின் வேறு ஒரு எழுத்து வடிவமாகும். ஈப்ரு யூதர்களுடைய மொழி யூத (இஸ்ரேல்) நாட்டு மொழி.

“அண்ணல் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் காத்தே ‘கூஃபி’ எனப்படும் கூஃபா எழுத்துக்கள் (லிபி) தான் புழக்கத்தில் இருந்தன. (M.R.M.அப்துல் ரஹீம் - இஸ்லாமிய கலைக் களஞ்சியம், தொகுதி 3) முதல்முதலாக கூஃபா லிபியில் திருக்குர்ஆன் எழுதப்பட்டதாக வரலாற்று தந்தையென அறியப்படுகின்ற இப்னு கல்தூன் தம்முடைய உலகப் புகழ்பெற்ற ‘முகத்திமா’ எனும் நூலில் குறிப்பிடுகிறார். கூஃபி லிபியில் சாட்சிகள் கையொப்பம் போட்டிருப்பதாக டி.ஏ. கோபிநாத ராவ் குறிப்பிடுவதிலிருந்து கையொப்பம் போட்டவர்கள் முஸ்லிம்கள் என்று உறுதியாகின்றது. தரீசா பள்ளி செப்பேட்டில் கூஃபி லிபியில் (அரபி மொழியில்) கை ஒப்பம் போட்டவர்களுடைய பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன.
1. மைமூன் இப்னு இப்ராஹீம்
2. முஹம்மது இப்னு மானி
3. ஸால்க் இப்னு அலி
4. உதுமான் இப்னு அல்மர்சிபான்
5. முஹம்மது இப்னு யஹியா
6. அம்ரு இப்னு இப்ராஹீம்
7. இப்ராஹீம் இப்னு அல்தே
8. பஹர் இப்னு மன்சூர்
9. அல்காசிம் இப்னு ஹாமித்
10. அல்மன்சூர் இப்னு ஈசா
11. இஸ்மாயில் இப்னு யாகூப்

டாக்டர் வி.ஏ.கபீரின் ‘Muslim Momument in Kerala’ எனும் நூலில் 64வது பக்கத்தில் 1 வது இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன. தவிர, Roland E.Miller-ருடைய Mappila Muslims of Kerala எனும் ஆய்வு நூலிலும் இதே பெயர்கள் காணப்படுகின்றன. (Revised Edition 1992, Published by Orient Longman Ltd. page 43)

கிறிஸ்தவர்களுக்கு மானியம் வழங்கப்பட்ட செப்பேட்டில் முஸ்லிம்களையும் யூதர்களையும் சாட்சிகளாக்கியுள்ளனர். ஆனால் சமீப காலம் வரை இந்த செப்பேட்டைப் பற்றி ஆய்வு செய்தவர்கள் யாருமே முஸ்லிம்கள் கையொப்பம் போட்டிருப்பதாக எங்கும் குறிப்பிடவே இல்லை. காரணம், கூஃபி லிபி பிற்காலத்தில் நடைமுறையில் இல்லாததால் அவர்களால் வாசிக்க முடியாமல் இப்பெயர்களைத் தவிர்த்திருக்கலாம்.

கி.பி.1750களில் இவ்விடம் விஜயம் செய்த பிரெஞ்சு நாட்டு பயணியான ஆன்கொட்டில் டூ பேரான் (Anquetil du Perron) இந்த செப்பேட்டை ஆய்வு செய்யும் வகைக்காக, பொன்னானி மகுதூம், கொயிலாண்டி ஆகியோரிடம் இதன் நகல் இருக்குமென்ற நம்பிக்கையில் அவர்களை அணுகியதாக Walter J. Fischel கூறுகிறார். ஆனால் அந்த செப்பேட்டை (மூல செப்பேடு) பற்றி எந்தத் தகவலும் அவர்களிடமிருந்து கிடைக்கவில்லை.

இந்த செம்பேடுகளை ஆய்வு செய்த எவரும் முஸ்லிம்களின் வருகையைப் பற்றியோ, அரேபியர்களைப் பற்றியோ குறிப்பிடாமலிருந்ததற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

தொடரும்..

மக்கள் உரிமை வாரஇதழ் - ஜனவரி, 13 - 19, 2006

Sunday, March 29, 2009

RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 1.

ஆர்.எஸ்.எஸ் முழு நேர ஊழியனான வேலாயுதன் பிலாலானது……..

ஒர் ஆர்.எஸ்.எஸ். காரனாக இருந்த வேலாயுதன் என்ற நான் பிலாலானதை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் குன்னத்துக்காடு பஞ்சாயத்தில் பிணர்முண்டா என்ற கிராமத்தில் பிறந்தேன்.

எனது தகப்பனார் பெயர் ஐயப்பன். தாய் காளி. 1962-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ம் நாள் என்னுடைய பிறந்ததினம். எனது தகப்பாரின் மூன்று திருமணத்தில் 7 குழந்தைகள். அண்ணன் குமாரன், தம்பி சுரேஷ், சகோதரிகள் அம்மிணி, கிரிஜா, பிந்து மஞ்ஜுளா பின்னர் நான்.

நானும் தங்கை அம்மிணியும் ஒரே தாயின் பிள்ளைகள். தந்தை ஒரு செங்கல் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். அம்மா விவசாயம் செய்யக்கூடியவளாகவும் இருந்தாள்.

எனக்குப் பதினோரு வயது இருக்கும்போது…….,

எனது தந்தை வேலைக்குச் சென்றால் திரும்புவதற்கு சில நாட்கள் ஆகும்.

கோலஞ்சேரிக்குப் பக்கத்தில் கடையிருப்பு என்ற இடத்தில் கொன்னனின் வீட்டில்தான் எனது தந்தை தங்குவார். எனது தந்தை அந்த [கொன்னனின்]வீட்டில் தங்குவதில் எனது அம்மாவிற்கு சில சந்தேகங்கள் எழுந்தன. அந்த சந்தேகங்கள் சில நாட்களுக்குப் பிறகு நிஜங்களாயின.

எனது அப்பாவிற்கும் கொன்னனின் மனைவிக்கும் சில தொடர்புகள் ஏற்பட்டு அது திருமணம் வரை சென்று முடிந்தது.
அப்பா தினசரி இரவு குடித்து விட்டு வந்து அம்மாவை சித்ரவதை செய்வது தொடர்ந்து கொண்டே இருந்தது.

அப்பாவின் சித்ரவதை தாங்க முடியாமல் கடைசியில் அது விவாகரத்து வரை சென்றது. எனது கண்முன்னே வைத்து அம்மா தன் கழுத்தில் தொங்கிய தாலியை அறுத்து அப்பாவின் முகத்தில் விட்டெறிந்தாள். இது எனது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்து விட்டது.

எனது தங்கை அம்மிணியையும் அழைத்துக் கொண்டு, அம்மா வீட்டை விட்டு வெளியேறினாள். அம்மாவுடன் செல்வதற்கு எனது மனம் அனுமதிக்கவில்லை. நான் எனது அப்பாவின் அம்மாவுடன் எனது சிறு வயது வாழ்க்கையைக் கழித்தேன்.

இறைவன் நாடினால் வளரும்.

thanks to : அபூ சுமையா And www.islamkalvi.com

உ.பி., ஆசிரமத்தில் இளம்பெண் மர்மச்சாவு!


முன்னாள் எம்.பி யும் உ.பி மாநில அளவிலான ஒரு கட்சியின் தலைவருமான சட்சிதானந்த் ஹரி சாக்ஷி மஹராஜின் ஆசிரமத்தில் உள்ளூர் பள்ளி ஆசிரியை லட்சுமி (24) மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.


இறந்த அப்பெண்ணின் உடலில் நிறைய காயங்கள் காணப்படுகின்றன என்றும், அவர் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், ஓடிப்போன ஆசிரமத்தின் பாதுகாவலரைத் தேடி வருவதாகவும் ஷியாம் நகர் காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் குமார் தெரிவித்தார்.


பாஜக விலிருந்து தன் அரசியல் வாழ்வைத் துவக்கிய சச்சிதானந்த், சமாஜ்வாதி கட்சிக்குத் தாவி, பின்னர் கல்யான்சிங் துவக்கிய ராஷ்டிரிய கிராந்தி கட்சியில் சேர்ந்து அக்கட்சியின் தலைவராக உள்ளார்.


கடந்த சில நாட்களுக்கு முன் வரும் பாராளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட இருப்பதாக சட்சிதானந்த் கூறியிருந்தார். இவ்வேளையில் இந்த கொலை நடந்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் இஸ்லாம்-17

தொடர்-17: தோப்பில் முஹம்மது மீரான்

செப்பேடு தரும் செய்தி

முதல் சேர வம்சத்தின் கடைசி பெருமாளாகிய சேரமான் பெருமாள் நாயனாருக்குப் பின், இரண்டாவது சேர வம்சத்தை சார்ந்த ஸ்தாணுரவி வர்மா என்ற சேர அரசர் கொல்லம் நகரில் உள்ள ‘தரீசாப் பள்ளி’ என்ற சிரியன் (Syrian) கிறிஸ்தவ தேவாலயத்திற்கு எழுதிக் கொடுத்த மானியமாகும்.

இரண்டாவது ஆவணம் அந்த தேவாலயத்தைக் கட்டிய ‘ஈசோ சபீர்’ என்பவர் பெயருக்கு எழுதிக் கொடுத்த இச்செப்பேடு (Copper Plate) தரீசாப் பள்ளி சாசனம் என்று அறியப்படுகிறது. தென்னக வரலாற்றை எழுதிய ஆசிரியர்கள் அனைவரும் புகழ்பெற்ற இந்த செப்பேட்டை குறிப்பிடாமலிருந்ததில்லை.

தென்னக வரலாற்றில், குறிப்பாக அன்றைய சேர நாட்டு வரலாற்றைப் பொருத்தமட்டில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செப்பேடாகுமிது. அன்று எந்தெந்த சாதி மதத்தினர் இங்கு வாழ்ந்திருந்தனர் என்பதை இச்செப்பேடு மூலம் அறிய முடிகிறது.

தரீசாப் பள்ளி செப்பேட்டின் காலம் கி.பி.824 என்றும், கி.பி.849 என்றும் இரு கருத்துக்கள் நிலவுகின்றன. கி.பி.849க்குப் பின் எழுதப்பட்டதாக யாரும் குறிப்பிடவில்லை. அதனால் கி.பி.849, அல்லது அதற்கு முன் எழுதப்பட்ட மானியம் (grant) என்ற கருத்தின் அடிப்படையில் ஆய்வை மேற்கொள்வோம்.

இந்த செப்பேடு மூலம் மானியம் வழங்கிய மன்னருடைய பெயரிலும் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. மன்னருடைய பெயர் நமக்கு இங்கு முக்கியமல்ல, அவர் எழுதிக் கொடுத்த ஆவணம் தான் முக்கியம். மன்னர் பெயரில் குளறுபடிகள் இருப்பதால், பெரும்பான்மையினரான ஆசிரியர்கள் ஏற்றுக் கொண்ட ‘ஸ்தாணு ரவி வர்ம்மா’ என்ற பெயரையே நாமும் ஒப்புக் கொள்வோம்.

ஸ்தாணு ரவி வர்ம்மாவின் ஆளுகைக்கு உட்பட்ட வேணாட்டின் ஆளுனரான (Governor) அய்யனடிகள் திருவடிகள், ஸ்தாணு ரவி வர்ம்மா அரியாசனம் ஏறிய ஐந்தாவது ஆண்டில் எழுதிக் கொடுத்த இந்த செப்பேட்டில் மன்னருக்காக ஆளுனரே கையொப்பம் போட்டுள்ளார். எந்த ஆண்டில் மானியம் கொடுக்கப்பட்டது என்ற குறிப்பு இதில் இல்லை. மன்னர் ஆட்சி பொறுப்பேற்ற ஐந்தாவது ஆண்டில் எழுதிக் கொடுத்தது என்று காணப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட மானியம் மூன்று செம்பு தகடுகள் (Three Plates) எழுதப்பட்டிருக்கின்றன. முதல் இரண்டு தகடுகளில் தமிழ்மொழியில் வட்டெழுத்திலும், மூன்றாவது தகடில் (Plate) மானியம் வழங்கப்பட்டதற்கான சாட்சிகளின் கையொப்பமும், முதல் இரண்டு தகட்டில் ஈசோ சபீருக்கு என்னென்ன உரிமம் வழங்கப்பட்டன. மூன்றாவது தகடில் பஹ்லவி, கூஃபி, ஈப்ரு (Pahlavi, Kuffic and Hebrew) மொழிகளில் சாட்சிகளின் கையொப்பம் காணப்படுகின்றன.

கொல்லம் நகரை நிர்மானித்து அங்கு ஒரு சிரியா கோயிலை (Syrian Church) எழுப்பிய ஈசோ சபீர் முறையாக செய்து வருகிறாரா, என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பை அஞ்சு வண்ணாத்தாரிடத்திலும் மணிக் கிராமத்தாரிடத்திலும் வழங்கியுள்ளதாக செப்பேட்டில் காணப்படுகிறது. கூடாமல் மக்களிடமிருந்து அரசுக்கு சேரவேண்டிய வரி வசூல் செய்யும் உரிமையையும் இச்செப்பேடு வழங்குகின்றது. இவ்வகையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தரிசாப்பள்ளி செப்பேட்டில் காணப்படும் மூன்று மொழிகளில் போடப்பட்ட சாட்சி கையொப்பங்களைப் பற்றி டி.ஏ. கோபிநாத ராவ் குறிப்பிடுகிறார்.

தொடரும்..

நன்றி: மக்கள் உரிமை வாரஇதழ் - ஜனவரி, 06 - 12, 2006

Saturday, March 28, 2009

RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - பதிப்புரை.

தீவிர ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியராக இருந்த வேலாயுதன் என்ற பிலால் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை புத்தகவடிவில் “இலக்கியச் சோலை” வெளியீட்டகத்தார் வெளியிட்டிருந்தனர்.

அதில் வேலாயுதன் என்ற பிலால் அவர்களின் ஓர் சிறு நேர்காணலும் இடம் பெற்றுள்ளது. வேலாயுதன் என்ற பிலால் அவர்களை மு. குலாம் முஹம்மது அவர்கள் நேரடியாக கேரளம் சென்று சந்தித்து அந்த நேர்காணலையும் இந்த புத்தகத்தில் சிறு இணைப்பாக இடம் பெற செய்துள்ளார். இனி இப்புத்தகத்தின் பதிப்புரையாக மு. குலாம் முஹம்மது அவர்களின் ஒரு சில வரிகளும் வேலாயுதன் என்ற பிலால் அவர்களுடனான நேர்காணலும்.

பதிப்புரை

1996 ன் இறுதியில் வேலாயுதன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட
செய்தியை அறிந்தேன்

அன்பு நண்பர் E .M. அப்துற் றஹ்மான் அவர்களிடம் பிலால் அவர்களைச் சந்திக்க வேண்டும் என்றேன். அவரும் இசைவு தந்தார்.

பிலால் அவர்களைப் பேட்டி கண்டேன். விடியல் (விடியல்வெள்ளி மாத இதழ்)ஜனவரி 1997 -ல் அட்டைப்படக் கட்டுரையாகத் தந்தேன். இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு எனத் தலைப்பிட்டிருந்தேன். என்னுடைய சந்திப்பின் போது இனி நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று நான் கேட்ட போது, என்னுடைய மக்களின் (தலித் பெருங்குடி மக்களின்) விடுதலைக்காகப் போராடப் போகிறேன் என பதில் தந்தார்.

உங்களுடைய வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்து மக்களிடையே புழங்கவிடுங்கள். அதைப் படித்து பலரும் பயன் பெறுவார்கள் என்றேன். அந்தப் பேட்டியையும் இத்துடன் இணைத்துள்ளேன்.

2003 -ல் நான் கேரளா சென்றிருந்த போது பிலால் அவர்கள் தனது வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டிருக்கின்றார்கள் என்ற செய்தியைக் கேளிவிப்பட்டேன். நண்பர் E.M. அப்துற் றஹ்மான் அவர்களே ஒரு பிரதியைப் பெற்றுதந்தார்கள். அதையே தமிழில் தந்திருக்கின்றோம்.

தமிழில் மொழி பெயர்க்கும் பணியை விரைந்து செய்து முடித்தவர் தம்பி முஷம்மில். அவருடைய முதல் முயற்சி இது. இது போல் ஆக்கப்பூர்வமான பணிகள் பலவற்றை அவர் செய்ய இறைவனிடம் இறைஞ்சுகின்றேன்.

வழக்கம்போல் இலக்கியச் சோலையின் இலக்கியப் பணியும் இஸ்லாமியப் பணியும் தொடர்கின்றது.

யா அல்லாஹ்; உன்னுடைய பாதையில் எடுத்து வைக்கும் இந்த முயற்சியை ஏற்றுக்கொள்வாயாக;

நிறைகள் எல்லாம் நிறைந்த அல்லாஹ்வைச் சாரும்; குறைகள் எங்களைச் சாரும்;

வஸ்ஸலாம்
மு. குலாம் முஹம்மது.


இறைவன் நாடினால் அடுத்த பதிவில் வேலாயுதன் என்ற பிலால் அவர்களுடனான நேர்காணல்.





thanks to : அபூ சுமையா And www.islamkalvi.com

இந்தியாவில் இஸ்லாம்-16

தொடர்-16: தோப்பில் முஹம்மது மீரான்

செம்பேடு தரும் சான்றுகள்..

சேரமான் பெருமாள் என்று வரலாற்றில் புகழ் பெற்ற முதல் சேரவம்சத்தின் கடைசி பெருமாளுடைய பெயர் ‘இராஜசேகர வர்மா’ என்பதாகும். இவரது ஆட்சிக் காலம் கி.பி.750க்கும் 850க்கும் இடைப்பட்ட காலம் என திருவிதாங்கூர் ஆர்க்கியாளஜிக்கல் சீரிஸின் (T.A.S) ஆசிரியர் திரு. டி.ஏ. கோபிநாதராவ் (T.A.S Vol.11 Page 9) குறிப்பிடுகிறார். கேரளாவில் சங்கனாச்சேரியின் அருகாமையில் உள்ள ‘வாழப்பள்ளி’ என்ற ஊருக்கு இவர் செப்பேடு ஒன்று எழுதிக் கொடுத்துள்ளார். அந்த செம்பேட்டில் அரபி நாணயமான ‘தினாரை’ சில இடங்களில் குறிப்பிட்டிருப்பதைக் காண முடியும். “திருவாற்றுவாய் முட்டாப்பலி விலக்குவார் பெருமானடி கட்டு நூறுதிநாரத்தண்டப்படுவது….” (T.A.S. Vol.11 Page 13 செப்பேட்டின் 3வது வரி) “…மேனூற்றைம் பதி தூணி நெல்லு மூன்று தினாரமும் - ஐயன் காட்டு

மற்றத்திலிரண்டு வேலி உந்தாமோ” (T.A.S. Vol. 11 Page 14 செம்பேட்டின் 10வது வரி)

சேரமான் பெருமாள் என அறியப்படும் ராஜசேகர வர்மா, முதல் சேர வம்சத்தில் கடைசிப் பெருமாள். இவர் எழுதிக் கொடுத்த முதல் செப்பேட்டில் மேற்குறிப்பிடப்பட்ட வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த செம்பேடு “வாழப்பள்ளி சாசனம்” என்ற பெயரில் அறியப்படுகிறது. அரபி நாணயமான ‘தினார்’ இந்த செப்பேட்டைத் தவிர வேறு எதிலும் குறிப்பிட்டிருப்பதாகத் தெரியவில்லை. எட்டாவது நூற்றாண்டில் எழுதப்பட்டதாக (என்று கூறப்படுகிறது) கூறப்படும் இந்த செப்பேட்டில் அரபி நாட்டு நாணயமான ‘தினாரை’ குறிப்பிட்டிருப்பது கவனத்திற்குரியது.

Those who stop the perpetually endowed bali ceremony (muttappali in the “Thiruvarruvay (temple) should pay to the King (or the god) a time of one hundred dinara…(T.A.S.Page 14 (English Translatio)

கோயிலில் வழக்கமாக நடைபெறும் ‘பலி’ எனும் வழிபாட்டை நிறுத்துவதாக இருந்தால் அரசருக்கு (அல்லது இறைவனுக்கு) ‘நூறு தினாரம்’ பிழை செலுத்தவேண்டும் என்று பொருள்படும்படி முதல் சாசனத்தில் காணப்படுகிறது.

“…..both situated in Uragan and yielding one hundred and fifty tumi of paddy and three dinaras, two “velis’ in the land in Ayyankadu Damodaran’s”

கோயிலுக்கு இனாமாக வழங்கப்பட்ட சில நிலங்களைப் பற்றியும், அந்நிலங்களில் கிடைக்கும் வருவாயைப்பற்றியும் குறிப்பிடுகையில், ஊரகத்திலுள்ள இரு நிலங்களிலிருந்து 1,500 (துணி) நெல்லும் மூன்று தினாரமும் வருவாய் உள்ளன என்று இரண்டாவது சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசர் ஒருவர் கோயிலுக்கு எழுதிக் கொடுத்த மானியமொன்றில் தண்டனையைக் குறிக்குமிடத்திலும், வருவாயை குறிக்குமிடத்திலும் தினாரம் என்ற அரபி நாட்டு நாணயத்தை தனியாக எடுத்துக் கூறுகிறார். அப்படியானால் ‘தினாரம்’ இங்கு நடைமுறையில் இருந்திருக்க வேண்டும்.

8வது நூற்றாண்டில் அரேபியா முழுவதும் முஸ்லிம் ஆட்சியின் கீழ் வந்துவிட்டது கடல் தாண்டியுள்ள சேரநாட்டில் தினாரம் செல்வாக்குப் பெறவேண்டுமேயானால், அரேபியர்களான முஸ்லிம்களின் செல்வாக்கு இங்கு அதிக அளவில் இருந்திருப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் சேரநாட்டு மக்கள் தொகையில் கணிசமான அளவில் எண்ணிக்கை உள்ளவர்களாகவும் இருந்திருக்க வேண்டும். அப்படி கணிசமான எண்ணிக்கை உள்ள குடிமக்களாக முஸ்லிம்கள் இங்கு வாழ்ந்திருப்பார்களேயானால், அந்த அளவிற்கு வளர்ச்சிப் பெற நபிகள் நாயகம்(ஸல்) காலத்திலேயே முஸ்லிம்கள் இங்கு வந்து தங்கியிருக்க வேண்டும் என்பது உறுதியாகிவிட்டது.

இந்த ஆவணத்தின் அடிப்படையில் ஆராய்வோமேயானால், சுலைமான் என்ற பாரசீக வணிகரின் கூற்று உண்மைக்கு மாறானது என்று புலனாகிறது.

சிலர் ‘தினாரம்’ என்ற தங்க நாணயத்தை ‘தங்க நாணயம்’ என்ற பொருளிலும், வேறு சிலர் அது ரோமானியருடைய நாணயம் என்றும் திசை திருப்பி விடுகின்றனர். தினார் அரேபியர்களிடையே பழக்கத்திலிருந்த தங்க நாணயமாகும்.

உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் தினார் என்ற சொல்லுக்கு ஒரு பழைய அரபி தங்க நாணயம் என்று பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோன்று சென்னை பல்கலைக்கழக வெளியீடான ஆங்கில தமிழ் அகராதியிலும் ‘தினாரம்’ என்பதற்கு பழைய அரேபிய தங்க நாணயம் என்றே பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.

தினாறும் திர்ஹமும் எப்படி முத்திரை அடித்து வெளியிடப்படுகின்றன என்பதைப் பற்றி இபுனு கல்தூன் தம்முடைய ‘முகத்திமா’ என்ற பேர் பெற்ற நூலில் விரிவாக விளக்கியுள்ளார். இது அரபி நாட்டு நாணயம் என்றுதான் 14-வது நூற்றாண்டில் வாழ்ந்திருந்த கல்தூனும் குறிப்பிடுகிறார். மேற்கு கடற்கரை துறைமுகமான கொடுங்கல்லூரில், கப்பலில் இறங்கிய முதல் இஸ்லாமிய பிரச்சாரக் குழுவின் தலைவருடைய பெயரும் ‘மாலிக் இபுனு தீனார்’ என்றாகும்.

அரேபியர்களிடையே ‘தினார்’ என்ற பெயர் பழக்கத்தில் இருக்கையில் ‘தினார்’ என்பதை ரோமானிய நாணயம் என்ற முடிவுக்கு எப்படி வரமுடியும். வணிகத்தில் முன்னணியில் நின்றிருந்த அரேபியர்களுடைய நாணயம் ரோம் நாட்டிலும் செல்வாக்கைப் பெற்றிருக்கலாம்.

‘தினார்’ என்ற சொல் அரபி சொல்லாகும். இன்று உலக பொருளாதாரத்தில் அமெரிக்க நாட்டு நாணயமான ‘டாலர்’ எவ்வளவு செல்வாக்கைப் பெற்று பேசப்படுகிறதோ அதுபோன்று அன்றைய பொருளாதாரத்தில் தினாரும் செல்வாக்கு பெற்றிருந்தது.

தொடரும்..

நன்றி: மக்கள் உரிமை வாரஇதழ்
டிசம்பர் 30, 2005 - ஜனவரி 5, 2006

Thursday, March 26, 2009

இந்தியாவில் இஸ்லாம்-15

தொடர்-15: தோப்பில் முஹம்மது மீரான்

மாலிக் இப்னு ஹபீப் கட்டிய பள்ளிவாசல்கள்

மாலிக் இபுனு ஹபீப் இபுனு மாலிக் தம்முடைய மனைவி மக்களோடு கொல்லத்திற்குச் சென்றார். அங்கு ஒரு பள்ளிவாசல் கட்டினார். மனைவியையும் பிள்ளைகளையும் கொல்லத்தில் தங்கவைத்து விட்டு அவர் ஹேலி மாறாலி (ஏழு மலை)க்குப் போனார். அங்கேயும் ஒரு பள்ளிவாசலைக் கட்டினார். பிறகு, ஃபாக்கனூர் (பார்க்கூர்) மஞ்சூர் (மங்கலாபுரம்) காஞ்சர் கூந்து (காசர்கோடு) முதலிய இடங்களுக்குச் செல்லவும் அவ்விடங்களில் ஒவ்வொரு பள்ளிவாசல் கட்டினார். அதன் பின் ஹேலி மாறாலி (ஏழு மலை)க்கு புறப்படவும், ஏறத்தாழ மூன்று மாதங்கள் அங்கு ஓய்வெடுத்துக் கொண்டார். பிறகு அவர் ஜீர்பத்தன் (ஸ்டிகண்டபுரம்) தஹ்ஃபந்தன் (தர்மமடம்) ஃபந்தரீனா (பந்தலாயணி) சாலியாத்து (சாலியம்) ஆகிய இடங்களில் பயணம் மேற் கொண்டு அங்கெல்லாம் ஒவ்வொரு பள்ளிவாசல் நிறுவியபின் சாலியத்தில் ஐந்து மாதங்கள் தங்கினார்.

பிறகு, தமது சிறிய தகப்பனாரான மாலிக் இபுனு தீனாரை சந்திப்பதற்காக கொடுங்கல்லூருக்குச் சென்றார். சில நாட்கள் அவருடன் தங்கியிருந்தபின் தாம் கட்டிய அனைத்து பள்ளிவாசல்களுக்கும் சென்று தொழுகை நடத்தவும், முஸ்லிம் அல்லாதவரைக் கொண்டு நிரம்பிய ஒரு நாட்டில் இஸ்லாத்தின் கொள்கையைப் பரப்பியதில் பூரிப்படைந்து அல்லாஹ்வை புகழ்ந்துவிட்டு மீண்டும் கொடுங்கல்லூருக்கு திரும்பி வந்தார்.

மாலிக் இபுனு தீனார், மாலிக் இபுனு ஹபீப், தோழர்கள், சேவகர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து கொல்லத்திற்குச் சென்றனர். மாலிக் இபுனு தீனாரும் சில நண்பர்களும் நீங்கலாக, ஏனையோர்களை கொல்லத்தில் தங்கவைத்துவிட்டு இவர்கள் ஸஹருக்கு திரும்பிப் போனார்கள், ஸஹரில் வைத்து மறுமை எய்த மன்னரின் கபரிடத்தில் மாலிக் இபுனு தீனாரும் தோழர்களும் விஜயம் செய்தனர்.

அதற்குப் பின் குராசானுக்கு அவர்கள் சென்றனர். அங்குதான் மாலிக் இபுனு தீனார் மரணமடைந்தார். மாலிக் இபுனு ஹபீப் இபுனு மாலிக் சில பிள்ளைகளை கொல்லத்தில் தங்க வைத்துவிட்டு மனைவியுடன் கொடுங்கல்லூருக்கு திரும்பிச் சென்றார். அங்கு அவரும் மனைவியும் இறைவனடி சேர்ந்தனர். மலபாரில் முதல்முதலாக நடந்த இஸ்லாம் மார்க்கப் பிரச்சாரத்தின் வரலாறு இதுவாகும்.

இது எந்த ஆண்டில் நிகழ்ந்தது என்று குறிப்பாக சொல்வதற்கு தகுந்த தடயங்கள் ஏதுமில்லை. ஹிஜ்ரி 200ஆம் ஆண்டிற்குப் பின் நிகழ்ந்திருக்கலாமென்பது பெரும்பான்மையோரின் கருத்தாகும்.

மேற்குறிப்பிட்ட மன்னரின் இஸ்லாம் மத மாற்றம் நபிகள் நாயகத்தின்(ஸல்) காலத்தின் என்றும், ‘சந்திரப்பிளப்பை’ மன்னர் நேரடியாகப் பார்த்ததாகவும், அவர் திருத்தூதரிடத்தில் சென்றதாகவும், திருத்தூதரை சந்தித்த பின் ஒரு முஸ்லிம் குழுவுடன் மலபாருக்கு திரும்பிவரும் வழியில் ஸஹரில் வைத்து இறந்ததாகவும் நிலவிவரும் ஊகம் முற்றிலும் ஆதாரமற்றவையாகும்.

இன்று மக்களிடையே பரவி இருப்பது போல் மன்னரின் கபர் ஸஹரில் அல்ல, ஏமன் நாட்டிலுள்ள ‘ஸஃபரி’யிலாகும். ‘சாமூரிக் கபர்’ என்ற பேரில் அறியப்படும் அந்த இடத்தை பாதுகாக்கப்பட்ட இடமாக அந்த நாட்டு மக்கள் கருதி வருகின்றனர்.

அரசர் காணாமல் போன நிகழ்ச்சி மலபாரிலுள்ள ஹிந்துக்கள் மத்தியிலும் முஸ்லிம்கள் மத்தியிலும் அதிகம் பிரச்சார மிகுந்த கதையாகும். மன்னர் மேல் உலகிற்கு (வான உலகிற்கு) ஏறிச் சென்றதாகவும், ஒரு நாள் இறங்கிவருவார் என்றும் ஹிந்துக்கள் நம்பிவருகின்றனர். இதன் அடிப்படையில் தான் கொடுங்கல்லூர் நகரில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சில விசேஷ தினங்களில் மிதியடியும் தண்ணீரும் தயார் செய்து வைப்பதும் விளக்கு ஏற்றுவதும் ஆகும்.

(திரு.வேலாயுதன் பணிக்கச்சேரி என்ற வரலாற்று ஆசிரியர் “கேரளா 15-ம் 16-ம் நூற்றாண்டுகளில்” என்ற தலைப்பில் மலையாளத்தில் மொழிபெயர்த்த நூலின் 57-71 வரையான பக்கங்களின் தமிழாக்கம்)

சேரமான் பெருமாள் இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டது முதல் இஸ்லாம் இங்கு தோன்றியதாக சிலர் கூறிவருகின்றனர். இங்கு இஸ்லாம் தோன்றியதோடு சேரமான் பெருமாள் கதையை இணைத்து வருவதால் சிலர் பெருமாள் காலத்தையே குழப்பி விடுகின்றனர். ஏதோ ஒரு பெருமாள் என்பதை அனைத்து ஆசிரியர்களும் ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் அந்த பெருமாளுடைய காலம் 10-வது நூற்றாண்டிற்கு பிற்பட்ட காலமாக இருக்கலாம் என்று குழப்புகின்றனர்.

இங்கு சேரமான் பெருமாள் நாயனாரோ, பள்ளி - பாண பெருமாள் என்ற பெளத்த அரசரோ இஸ்லாத்தைத் தழுவியதன் அடிப்படையில் இஸ்லாத்தின் தோற்றத்தையும் அதன் வளர்ச்சியையும் பார்க்க வேண்டியதில்லை, இவர்களுடைய மத மாற்றம் இதற்கு ஒரு காரணமல்ல. இவர்களுடைய மத மாற்றம் இஸ்லாத்தின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் ஒரு முக்கிய திரும்புமுனை என்ற அடிப்படையில் இதை ஆராய்வோமானால் ஆண்டு தேதிகளிலும் பெயர்களிலும் காணப்படும் குளறுபடிகளால் உண்மையை சரிவர ஆராய முடியாது. இவ்விரு பெருமாள்களைப் பற்றித் தனியாக ஆராய்வோம். தற்போது கையிலிருக்கும் மறுக்க முடியாத வரலாற்றுச் சான்றின் அடிப்படையில் உண்மையின் வேர்களைத் தேட வேண்டும்.

தொடரும்..

நன்றி: மக்கள் உரிமை - டிசம்பர், 23 - 29, 2005

சரித்திரப் பார்வையில் மூடர் தினம்! (April Fool)

இறைவனின் நேரிய வழிகாட்டுதல்களும், அறிவுப்பூர்வமான எந்த வித கொள்கைளும் இல்லாமல் தம்முடைய மனோஇச்சைகளையே தங்களின் கொள்கைகளாகவும் வாழ்க்கை நெறியாகவும், கடவுளாகவும் பின்பற்றி வாழக்கூடியவர்களின் கண்டுபிடிப்புகளில் ஒன்று தான் குறிப்பிட்ட தினங்களை முக்கியப்படுத்தி அவைகளுக்கு முக்கியத்துவம் தந்து அந்த நாட்களை கொண்டாடுவது ஆகும்.

இவ்வகையான கொண்டாட்டங்களில் காதலர் தினம், மனைவியர் தினம், அன்னையர் தினம், மூடர் தினம் என அடுக்கிக் கொண்டே போகலாம். இவ்வகையான தினங்களைக் கொண்டாடுவோர் அவற்றுக்காக ஒரு குறிப்பிட்ட காரணத்தையும் கூறுவர். இந்த சிறிய கட்டுரையில் இவர்கள் மூடர் தினம் (ஏப்ரல் ஃபூல்) என கொண்டாடும் தினத்தைப் பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டத்தைப் பார்க்கலாம்.

மூடர் தினத்தின் தோற்றம் குறித்த கருத்துக்கள்: -

மூடர் தினத்தின் தோற்றம் குறித்த பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றது. இருப்பினும் இதன் தோற்றம் குறித்த உறுதியான கருத்து என்று எதுவும் கூறுவதற்கில்லை.

இதன் தோற்றம் குறித்த கருத்துக்களில் மிகவும் பிரபலமாகக் கருதப்படும் சிலவற்றைக் காண்போம்: -

1) பண்டைய அறியாமைக் கால பழக்கம்: -

சிலரது கூற்றுப்படி, பண்டைய காலத்தில் வாழ்ந்த அறியாமைக் கால மக்கள் ஏப்ரல் 1 அல்லது மார்ச் 21 ஆம் தேதியை மையமாக வைத்து வரக்கூடிய 'சம இரவு தினம்' (vernal equinox) என்றழைக்கடும் (பூமியின் வடக்கு அரைக்கோளத்தில்) வசந்த காலத்தின் துவக்க தினத்தை திருவிழா தினமாக கொண்டாடி வந்தனர். இந்த தினத்தில் கேலியும் கிண்டல்களும் அடங்கிய நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வந்தனர்.(1)

2) புதிய வருடப்பிறப்பு அறிமுகமாதல்:-

கி.பி. 1582 ஆம் ஆண்டு கிறிஸ்தவ போப் கிரிகோரி XIII என்பவர் புதிய காலன்டரை அறிமுகப்படுத்தி ஜனவரி 1 ஆம் தேதியை புதிய ஆண்டின் துவக்க நாளாக மாற்றியபோது அதுவரை ஜூலியன் காலன்டர் முறைப்படி ஏப்ரல் ஒன்றாம் தேதியை தங்களின் வருடப்பிறப்பாக கொண்டாடி வந்தவர்கள் இந்த புதிய காலன்டரை ஏற்க மறுத்தனர். அவர்களை கேலி செய்யும் விதமாக இந்த புதிய காலன்டரை தினித்தவர்கள் ஜனவரி முதல் தேதியை வருடப்பிறப்பாக ஏற்க மறுத்தவர்களை கேலியும், கிண்டலும் செய்யும் விதத்தில் அவர்களை மூடர்களாக்குகின்ற விதத்தில் பொய்களையும் போலியான பரிசுப் பொருட்களையும் அனுப்பி வைத்து மகிழ்ந்தனர். இந்த அறிவீனமான செயல் பின்னர் படிப்படியாக ஐரோப்பியா முழுவதும் பரவலாயிற்று. (2)

3) முஸ்லிம்களிடமிருந்து ஸபெயினைக் கைப்பற்றுதல்: -

ஸபெயினை முஸ்லிம்கள் ஆட்சி செய்த போது அவர்களின் படை மிகவும் வலிமை மிக்கதாகவும் எதிரிகள் கண்டு அஞ்சக் கூடியதாகவும் அமைந்திருந்தது. அதைக் கண்டு பொறுக்காத இஸ்லாத்தின் எதிரிகள் முஸ்லிம்களை அழித்துவிட துடித்தனர். இருப்பினும் அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அதற்கான காரணத்தை அவர்கள் ஆராயும் போது முஸ்லிம் படையினர் சிறந்த ஈமான் தாரிகளாகவும் இறையச்சமுடையவர்களாகவும் இருப்பதைக் கண்டனர்.

முஸ்லிம்களை வெல்ல வேண்டுமானால் அவர்களின் நம்பிக்கையைக் சிதைப்பதை விட வேறு வழியில்லை என்பதை உணர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஸ்பெயினில் உள்ள முஸ்லிம்களுக்கு மதுபானத்தையும் சுருட்டுகளையும் இலவசமாக அனுப்பி வைத்தனர். அதைப் பயன்படுத்த துவங்கிய முஸ்லிம்கள் நாளடைவில் தங்களது ஈமானில் உறுதியழந்து பின்னர் படிப்பபடியாக தங்களின் வலிமையிலும் வலுவிழந்தனர்.

இதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சிறிது சிறிதாக முஸ்லிம்கள் வசம் இருந்த ஸ்பெயினின் பகுதிகளைக் கைப்பற்றலாயினர். இறுதியில் முஸ்லிம்களின் கோட்டையாக விளங்கிய கிரினாடாவில் உள்ள பகுதியை ஏப்ரல் முதல் தினத்தன்று கைப்பற்றினர். அந்த நாள் முதல் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் முதல் தேதியை மூடர்களின் தினமாக அவர்கள் கொண்டாடி வருகின்றனர். (3)

இஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல் தினம்!: -

இந்த வகை மூடர் தினத்தின் தோற்றம் குறித்து கூறப்படும் கருத்துக்களில் உண்மையானது எதுவாக இருந்தாலும் முஸ்லிம்கள் இந்த தினத்தைக் கொண்டாடுவதோ அல்லது அந்த தினத்தில் ஒருவரையொருவர் கேலியும், கிண்டலும் செய்து பொய்யான தகவல்களைப் பரிமாறிக்கொள்வதோ இஸ்லாத்தில் அனுமதிக்கபடாதவைகளாகும்.

மூடர் தினத்தை முஸ்லிம்கள் ஏன் கொண்டாடக் கூடாது?

1) ஜாஹிலிய்யாக் (அறியாமைக்) காலத்தின் அனைத்து மூடப்பழக்க வழக்கங்களையும் குழிதோண்டிப் புதைப்பதற்காக வந்தவர்கள் தான் நமது நபி (ஸல்) அவர்கள். நாம் அண்ணலாரின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற வேண்டுமேயல்லாது அறியாமைக்கால மக்களின் பழக்கங்களாகிய பிறரைக் கேலி, கிண்டல் செய்து அவர்களை ஏமாற்றி அதன் மூலம் சந்தோசமடைவதைப் பின்பற்றக் கூடாது.

2) கிறிஸ்தவ பாதிரியாரான போப் கிரிகோரி என்பவர் துவக்கிய புதிய காலன்டரைப் பின்பற்றாதவர்களை கேலி செய்வதற்காக உருவாக்கியதாகக் கருதப்படும் இந்த தினத்தைக் கொண்டாடுபவர்கள் அவர்களின் இத்தீய செயல்களுக்குத் துணைபோவதோடு அல்லாமல் நபி (ஸல்) அவர்களின் 'யார் அந்நிய சமூகத்தவர்களுக்கு ஒப்பாக நடக்கிறாரோ அவரும் அவர்களைச் சார்ந்தவரே!' என்ற எச்சரிக்கையை மீறி செயல்பட்டவரைப் போலாவார்.

3) போதைப் பொருட்களுக்கு முஸ்லிம்களை அடிமையாக்கி அதன் மூலம் அவர்களை மூடர்களாக்கி அவர்களின் மனவலிமையை இழக்கச் செய்து அதன் மூலம் தந்திரமாக ஸ்பெயின் நாட்டை முஸ்லிம்களிடமிருந்து கைப்பற்றி அதைக் கொண்டாடுபவர்களோடு சேர்ந்து ஒரு முஸ்லிமும் கொண்டாடுவாரானால் அவரை விட வேறு ஒரு மூடர் இருக்க முடியுமா? ஏனென்றால் இது தம்முடைய முஸ்லிம் சகோதரர்கள் மூடர்களாக்கப்பட்டதை தாமே கொண்டாடுவது போலாகாதா?

4) இந்த மூடர் தினத்தித்தின் தோற்றம் குறித்த மேலே குறிப்பிடப்பட்ட காரணங்கள் எதுவாக இருந்தாலும் அல்லது இவைகளல்லாத வேறு எந்தக் காரணமாக இருந்தாலும் அவைகள் அனைத்துமே முஸ்லிம்களால் தோற்றுவிக்கப்படவில்லை. மாறாக இஸ்லாத்தை அழிக்கத் துடிக்கும் இஸ்லாத்தின் எதிரிகளால் தோற்றுவிக்கப்பட்டது. எனவே தம்மை முஸ்லிம் எனக் கூறிக்கொள்ளும் எவரும் இத்தகைய தீய செயல்களிலிருந்து விலகியிருப்பதோடல்லாமல் மற்றவர்களுக்கு இதன் தீமைகளை எடுத்துக் கூற முன்வரவேண்டும்

5) இவைகள் எல்லாவற்றிற்கும் மேலாக இந்த தினங்களைக் கொண்டாடுபவர்கள் செய்யும் காரியங்களாவன: -

a. பொய்யான தகவல்களைப் பரிமாறிக்கொள்வது

b. பிறரை ஏமாற்றி அவர் ஏமாந்து துன்பப்படும் போது அதைப் பார்த்து ரசிப்பது

c. போலியான பரிசுப்பொருட்களை பிறருக்கு அனுப்பி அவரை கேலி செய்வது
d. ஒருவரின் நெருங்கிய உறவினர்கள் (தாய், தந்தை அல்லது மனைவி போன்றவர்கள்) இறந்து விட்டதாக வதந்தியைக் கிளப்பி விட்டு அவரை வேதனைப் படுத்தி அதை ரசிப்பது

e. ஒரு நாட்டின் தலைவர் இறந்து விட்டதாக அல்லது மிக மோசமான ஒரு விபத்து ஏற்பட்டு விட்தாக வதந்நியைக் கிளப்புவது

f. இது போன்ற ஏராளமான பொய்யான தகவல்களையும் கேவலத்திற்குரிய செயல்களையும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

இவைகள் அனைத்துமே இஸ்லாத்தில் தடுக்கப்பட்டவைகள் மடடுமின்றி இதைச் செய்பவர்களுக்கு மிக கடுமையான எச்சரிக்கைகள் விடப்பட்டிருக்கின்றது.

பொய் பேசுவதன் தீமைகள்: -

1) பொய்யுரைப்பவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை நம்பாதவர்கள்: -

அல்லாஹ் கூறுகிறான் :

16:105 நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள். (அல்குர்ஆன் 16:105)

2) முனாஃபிக்கின் (நயவஞ்சகனின்) அடையாளங்களில் ஒன்று பொய்யுரைப்பது: -

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும்.. (அவையாவன:) அவன் பேசும்போது பொய் பேசுவான்; அவனிடம் நம்பி எதையும் ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம் : புகாரி.

எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும்; அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான்.. (அல்குர்ஆன் 9:77)

3) பொய் பேசுவது நரகத்திற்கு வழிவகுக்கும்: -

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும்; நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும. ஒருவர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் 'வாய்மையாளர்' (சித்தீக் எனும் பெயருக்கு உரியவர்) ஆகி விடுவார். (இதைப் போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒருவர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் 'பெரும் பொய்யர்' எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி), ஆதாரம்: புகாரி

4) பரிகசிப்பது மற்றும் கேலி செய்வது அறிவீனர்களின் செயல்: -

இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்) மூஸா தம் சமூகத்தாரிடம், 'நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்' என்று சொன்னபோது, அவர்கள் '(மூஸாவே!) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா?' என்று கூறினர்; (அப்பொழுது) அவர், '(அப்படிப் பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்' என்று கூறினார். (அல்குர்ஆன் 2:67)

5) பொய் பேசுபவனுக்குரிய தண்டனைகள்: -

சமுரா இப்னு ஜுன்தப்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பெரும்பாலும் தம் தோழர்களிடம் 'உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா?' என்று கேட்பது வழக்கம். அப்போதெல்லாம், அல்லாஹ் யாரை நாடினானோ அவர் (தாம் கண்ட கனவை) அல்லாஹ்வின் தூதரிடம் எடுத்துரைப்பார். (அதற்கு அல்லாஹ்வின் தூதரும் விளக்கமளிப்பார்கள். ஒரு(நாள்) அதிகாலை நேரம் (ஃபஜ்ருத் தொழுகைக்குப் பின்) நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்:

இன்றிரவு (கனவில்) இரண்டு (வான)வர் என்னிடம் வந்து என்னை எழுப்பி, 'நடங்கள்' என்றனர். நான் அவர்கள் இருவருடன் நடக்கலானேன். நாங்கள் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம் சென்றோம். அங்கு அவரின் தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றிருந்தார்.. அவர் (படுத்திருந்தவருடைய) முகத்தின் ஒருபக்கமாகச் சென்று கொக்கியால் அவரின் முகவாயைப் பிடரி வரை கிழித்தார்; (அவ்வாறே) அவரின் மூக்குத் துவராத்தையும் கண்ணையும் பிடரி வரை கிழித்தார். - அல்லது பிளந்தார் - பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிப்பதற்குள் அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காக ஆம்விடுகிறது.. பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார். நான், 'அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யார்?' என்று கேட்டேன். அவ்விரு(வான)வரும் என்னிடம், செல்லுங்கள், செல்லுங்கள்' என்றனர்.

….

நான் அவ்விருவரிடமும், 'நேற்றிரவு முதல் நான் பல விந்தைகளைக் கண்டுள்ளேன். நான் கண்ட இவைதாம் என்ன?' என்றேன். அதற்கு அவர்கள் என்னிடம், '(நீங்கள் கண்ட காட்சிகளின் விவரங்களை) உங்களுக்கு நாங்கள் தெரிவிக்கிறோம்.

தன்னுடைய முகவாய், மூக்குத் துவாரம், கண் ஆகியவற்றை பிடரிவரை கிழிக்கப்பட்டுக்கொண்டிருந்த மனிதனுக்கு அருகில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் அதிகாலையில் தம் வீட்டிலிருந்து புறப்பட்டு ஒரு பொய்யைச் சொல்ல அது (பல்வேறு வழிகளில்) உலகம் முழுவதும் போய்ச் சேரும்.

அறிவிப்பவர் : சமுரா இப்னு ஜுன்தப்(ரலி, ஆதாரம் : புகாரி (நீண்ட ஹதீஸின் சுருக்கம்)

6) விளையாட்டுக்காகக் கூட பொய் பேசக் கூடாது: -

முஆவியா இப்னு ஹைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'மக்களை சிரிக்க வைப்பதற்காக பேசுபவனுக்கும் பொய் சொல்பவனுக்கும் கேடு உண்டாகட்டுமாக! கேடு உண்டாகட்டுமாக! கேடு உண்டாகட்டுமாக' என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். ஆதாரம் : திர்மிதி

இஸ்லாத்தில் விளையாட்டாகப் பொய் பேசுவது கூட தடுக்கப்பட்டுள்ளது. அது போல பிறரை சந்தோசப்படுத்துவதற்காகவும் பொய் பேசக் கூடாது.

எனவே சகோதர, சகோதரிகளே! இஸ்லாம் கடுமையாக எச்சரித்திருக்கும் இத்தகைய தீய செயல்களான பொய் பேசுதல், பிறரை துன்புறுத்தி சந்தோசம் அடைதல், ஏமாற்றுதல் ஆகியவைகளையே முழு மூச்சாக செயல்படுத்தும் மிக மோசமான மூடர்களின் மூடர் தினத்தை விட்டும் முஸ்லிம்களாகிய நாhம் தவிர்ந்திருப்பதோடு அல்லாமல் பிறருக்கும் இதனுடைய தீமைகளை எடுத்துக் கூறி இதனை நமது சமூக மக்களிடமிருந்து களைவதற்கு முயற்சிக்க வேண்டும்.

அல்லாஹ் அதற்குரிய ஆற்றலையும் மனவலிமையையும் தந்தருள்வானாகவும்.

மகளை கற்பழித்த பிஜேபி தலைவர் கைது (

அமிர்தசரஸ் - தனது மகளை எட்டு ஆண்டுகளாக கற்பழித்து வந்த பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த உள்ளூர் பிஜேபி தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப்பில் உள்ள அஜ்னாலா பகுதியின் பிஜேபி தலைவராக இருப்பவர் அசோக் தனேஜா. இவர் தனது 20 வயது மகளை கடந்த 8 ஆண்டுகளாக கற்பழித்து வந்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில் பஞ்சாப் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

தனது தந்தை கடந்த 8 ஆண்டுகளாக தன்னை கற்பழித்து வந்தார் என்றும், இதைப் பற்றி வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் அந்தப் பெண் புகார் செய்துள்ளார்.

இதனால் பயந்து போய் இருந்ததாகவும், சமீபத்தில் மும்பையில் ஒரு தொழிலதிபர் தனது மகளை 9 ஆண்டுகளாக கற்பழித்து வந்து சமீபத்தில் கைது செய்யப்பட்ட செய்தி தெரியவந்ததைத் தொடர்ந்து தானும் தன் உறவினர்களிடம் கூறி அதன் பின்னர் போலீசில் புகார் செய்ததாக அந்தப் பெண் கூறியுள்ளார்.

Wednesday, March 25, 2009

எங்கிருந்தாலும் பலன் கருதாமல் பணி செய்யும் பண்பாளர்!


அபூசாலிஹ்

ஒரு மனிதன் வெற்றிகரமான முறையில் பணி செய்ய வேண்டு மென்றால் அவனுக்கு அனைத்து நல்ல அம்சங்களும் வாய்த்திருக்க வேண்டும். சோகம் சுமையாகக் கூடாது. கவலைகள் கருக்கொள்ளக் கூடாது. மகிழ்ச்சி தாண்டவமாடும் போது ஒரு எழிலான, அறிவான செயலை செய்வான். தன் கவலைகள் நீங்கினால் மட்டுமே பிறருக்கான பணி செய்யும் மனப்பாங்கு கொண்ட உலகில் இந்த மக்கள் தொண்டருக்கு உள்ள தொண்டுள்ளம் பாராட்டுக் குரியதாக இருக்கிறது.


ஆம் தமுமுக நிறுவனத் தலைவர் சகோ. குணங்குடி ஹனிபா சிறையில் வாடிக் கொண்டிருக்கும் போது கூட அனைத்து சிறைக் கைதிகளுக்காக நடத்தப்படும் உள்ளொளி என்ற மாத இதழின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருவதாக இந்தியா டுடே (ஏப்ரல் 1, 2009) குறிப்பிட்டிருக்கிறது. தமிழக சிறைத்துறை மலரும் மாறுதல் என்ற தலைப்பிட்ட கட்டுரை இதனைக் குறிப்பிடுகிறது.


மறுமலர்ச்சிக்கு வித்திட்ட தமிழக சிறைத்துறையும், எங்கிருந்தாலும் நலப்பணி புரியும் குணங்குடி ஹனிபா அவர்களும் மிகவும் பாராட்டுக்குரிய வர்கள்.

இந்தியாவில் இஸ்லாம்-14

தொடர்-14: தோப்பில் முஹம்மது மீரான்

பொன்னானி ஷெய்க்கு ஷெய்னுத்தீன் மஃதூம்(ரஹ்) அவர்கள் எழுதிய அரபி நூலான “துஹ்ஃபத்துல் முஜாஹிதீன்” என்ற முதல் கேரள வரலாற்று நூலின் இரண்டாம் அத்தியாயத்தின் தமிழாக்கம் இது. இரண்டாம் அத்தியாயம் முழுவதையும் மொழி பெயர்க்கவில்லை. இக்கட்டுரைத் தொடருக்குத் தேவையான பகுதி மட்டுமே இன்று மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. மூல ஆசிரியருடைய அசல் கையெழுத்துச் சுவடியையும், பல பிற மொழிபெயர்ப்புகளையும் வைத்து திரு.வேலாயுதன் பணிக்கச்சேரி என்ற வரலாற்று ஆசிரியர் “கேரளா 15-ம் 16-ம் நூற்றாண்டுகளில்” என்ற தலைப்பில் மலையாளத்தில் மொழிபெயர்த்த நூலின் 57-71 வரையான பக்கங்களின் தமிழாக்கம் (இரண்டாவது அத்தியாயம்).

குடும்பங்களுடன் பயணம் செய்யும் ஒவ்வொரு யூத, கிறிஸ்தவ குழுக்கள் மலபாரிலுள்ள துறைமுகமான கொடுங்கல்லூரில் கப்பலில் இறங்கினர். அன்றைய அரசர் சேரமான் பெருமாள் அவர்களுக்கு தங்குவதற்காக வீடும் தோட்டங்களும் தேவைக்கேற்ப வழங்கினர். அவர்கள் அங்கு நிரந்தரமாக தங்கலாயினர்.

சில வருடங்களுக்குப் பின் அரேபியாவிலிருந்து முஸ்லிம்களான சில புகராக்கள், கண்ணியமிக்கவரும் அறிஞருமான ஒரு ஷெய்க்கின் தலைமையில் இலங்கைக்கு செல்லும் வழியில் கொடுங்கல்லூரில் இறங்கினார். புகராக்களின் வருகையை கேள்விப்பட்ட அரசர், அவர்கள் வருந்தினராக அரண்மனைக்கு வரவழைத்து வரவேற்று கொடுத்தார். அவர்களைப் பற்றிய தகவல்கள் அறிய அரசர் ஆர்வம் காட்டினார்.

பெருமானார்(ஸல்) அவர்களைப் பற்றியும், அவர்கள் போதனை செய்த தூய இஸ்லாத்தைப் பற்றியும் மானிட திறனுக்கப்பாற்பட்ட ‘சந்திரப் பிளப்பை’ பற்றியும் விளக்கமாக அரசருக்கு எடுத்துரைத்தார் ஷெய்க் அவர்கள். பெருமானார்(ஸல்) அவர்களுடைய வரலாற்றையும் அற்புத நிகழ்ச்சிகளையும் ஷெய்க்கிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொண்ட அரசருடைய இதயத்தில் பெருமானார்(ஸல்) அவர்களின் வாய்மை இடம்பெறவும் பெருமானார்(ஸல்) அவர்கள் மீது தனி அன்பும் மதிப்பும் ஏற்பட்டன. தூய இஸ்லாத்தின் பால் கவரப்பட்ட அரசர், அவர்களுடன் அரேபியாவுக்குச் செல்லும் நோக்கத்தோடு இலங்கையிலிருந்து திரும்பி வரும் வழியில் இங்கு இறங்க வேண்டுமென்று ஷெய்க்கிடத்திலும் குழுவினரிடத்திலும் வேண்டினார்.

ஷெய்க் அதை ஏற்றுக் கொண்டார். இந்த விஷயம் மக்கள் தெரிய வேண்டாதென அரசர் அவர்களிடத்தில் கேட்டுக் கொண்டார், ஷெய்க்கும் குழுவினரும் இலங்கை சென்று ஆதம் மலை தரிசனம் செய்துவிட்டு, வாக்களித்தபடி கொடுங்கல்லூரில் வந்து அரசரை சந்தித்தார்கள். மிக இரகசியமான முறையில் பயணத்திற்காக கப்பலும் ஏனைய தயாரிப்புகளும் ஏற்பாடு செய்ய அரசர் ஷெய்க்கிடம் பொறுப்பை ஒப்படைத்தார். அந்த சந்தர்ப்பத்தில் துறைமுகத்தில் வெளிநாட்டு வர்த்தகர்களின் ஏராளமான கப்பல்கள் வந்திருந்தன. அவற்றின் உரிமையாளர்களில் ஒருவரை அணுகி தானும் தம்முடைய புகராக்குழுவும் அரேபியாவிற்கு பயணம் மேற்கொள்ள எண்ணுவதாகவும் அதற்கான வசதிகளை ஏற்படுத்தித்தர இயலுமா என்று ஷெய்க் கேட்டார். கப்பல் உரிமையாளர் அந்த வேண்டுதலை முகமலர்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.

பயண நாள் நெருங்கிய போது குடும்பத்தினரோ, ஊழியர்களோ, அமைச்சர்களோ யாருமே ஏழு தினங்களுக்கு தம் அரண்மனைக்குள் நுழைவதையும் தம்மை சந்திப்பதையும் தடைசெய்து கட்டளைப் பிறப்பித்தார். தமது நாட்டை பல பகுதிகளாக பிரிவினை செய்து எல்லையை வரையறுத்து ஆட்சி முறைகளையும் சட்டங்களையும் வகுத்து ஒவ்வொரு பகுதி மீதான ஆட்சி உரிமையை அரச குடும்பத்திலுள்ள ஒவ்வொரு நபருக்கும் எழுதிவைத்தார். மலபாரிலுள்ள ஹிந்துக்கள் மத்தியில் இந்நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றது. இவர் மலபாரின் ஒட்டுமொத்த ஆட்சியாளராகத் திகழ்ந்தார். மலபாரின் எல்லைகள் தெற்கு கும்ஹுரியும் (கன்னியாகுமரி) வடக்கு காஞ்சன் கூத்தும் (காசர்கோடு) ஆகும்.

அரசு தொடர்பான பொறுப்புக்களை ஒப்படைத்த பின் அவர் ஷெய்க்குடனும் புகராக்குழுவுனனும் சேர்ந்து இரகசியமாக இரவே கப்பல் ஏறி பயணமானார். வழியில் ஃபந்தரீனாவில் (பந்தலாயனி) இறங்கி ஒருநாள் தங்கியபின் தஹ்ஃபத்தனுக்குப் (தர்ம்மடம்) போனார். அங்கு இறங்கி மூன்று தினங்கள் ஓய்வெடுத்த பின் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தார். தஹ் ஃபத்தனிலிருந்து நேரடியாக ஹைருக்கே சென்றுவிட்டார். அரசரும் குழுவினரும் அங்கு இறங்கினர்.

அங்கு தங்கியிந்த சந்தர்ப்பத்தில், மலபாருக்கு வந்து இஸ்லாம் மார்க்க பிரச்சாரம் செய்யவும் பள்ளிவாசல்கள் கட்டவும் திட்டமிட்டிருந்த ஒரு குழு அவருடன் இணைந்தது. அவர்களுக்கு எல்லாவித உதவி ஒத்துழைப்புக்கள் நல்குவதாக அரசர் மகிழ்ச்சியுடன் வாக்களித்தார். அரசருடன் சேர்ந்து மலபாருக்கு வருவதுதான் அவர்களது நோக்கம். ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் அரசர் நோய்வாய்ப்பட்டதால் பயணம் செய்ய முடியாமல் போய்விட்டது. நோய் உச்சக்கட்டத்தை எட்டியபோது, மலபார் பயணத்திற்கு திட்டமிட்டிருந்தவர்களில் முக்கிய நபர்களை ஷரபு இப்னு மாலிக், அவருடைய தாயாரின் சகோதரன் மாலிக் இப்னு தீனார், அவருடைய சகோதர புதல்வரான மாலிக் இப்னு ஹபீப் இப்னு மாலிக் ஆகியோரையும் பிரச்சாரக் குழுவிலுள்ள பிற உறுப்பினர்களையும் அழைத்து அரசர் பின்வருமாறு உபதேசம் செய்தார்: “இந்த நோய் மூலம் நான் இறந்துவிட்டாலும் உங்களுடைய மலபார் பயணத்தை தாமதப்படுத்தவோ, அதிலிருந்து பின்வாங்கவோ செய்யக் கூடாது.”

“தங்கள் நாடு எங்கு இருக்கிறதென்றும், தங்கள் அதிகார எல்லை எவ்வளவு உண்டு என்றும் எங்களுக்குத் தெரியாது. அதனாலேயே நாங்கள் உங்களுடன் பயணம் செய்ய முடிவு எடுத்தோம்.” அவர்களுடைய இந்த பதில் கேட்டபோது அரசர் சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்தபின் மலையாளத்தில் ஒரு கடிதம் எழுதி அவர்களிடம் ஒப்படைத்தார். அக்கடிதத்தில் அவருடைய இராஜியத்தின் பெயரும், குடும்ப உறுப்பினர்கள், அங்குள்ள அரசர்கள் ஆகியோரின் விவரங்கள் விளக்கப்பட்டிருந்தன.

கொடுங்கல்லூரிலோ, தஹ்ஃபத் தனிலோ (தர்ம்மடம்) ஃபந்தரீனா (பந்தலாயனி)விலோ, கவுல் (கொல்லம்)த்திலோ இறங்க வேண்டுமென்றும், தம்முடைய நோய் நிலைமைப் பற்றியோ, தாம் இறந்துவிட்டால் அந்த தகவலையோ மலபாரில் யாரிடத்தில் சொல்லவேண்டாமென்றும் அவர்களிடம் தனியாக நினைவுபடுத்தினார்.

அதிக நாட்கள் செல்லும் முன் அரசர் இம்மையை விட்டு பிரிந்தார். அல்லாஹ் அவர் மீது பெருவாரியாக அருளாசிகள் பொழியட்டும்!

சில வருடங்களக்குப் பின், கண்ணியம் மிகுந்த ஷரபு இப்னு மாலிக்’ மாலிக் இப்னு தீனார், மாலிக் இப்னு ஹபீப், இப்னு மாலிக், அவருடைய துணைவியார் கமரியா, அவருடைய பிள்ளைகள், தோழர்கள் ஆகியோருடன் மலபாருக்கு கப்பல் ஏறி நீண்டநாள் பயணத்திற்குப் பின் அவர்கள் கொடுங்கல்லூரில் கரை இறங்கினார்கள். மன்னர் கொடுத்தனுப்பியிருந்த கடிதத்தை அங்குள்ள அரசரிடத்தில் ஒப்படைக்கவும், மன்னரின் மரணச் செய்தியை இரகசியமாக பாதுகாத்துக் கொள்ளவும் செய்தனர். கடிதத்தின் மூலம் செய்திகள் தெரிந்துகொண்ட அரசர். அவர்களுக்கு தங்குமிடங்களும், தோட்டங்களும் மற்றும் நிலங்களும் கொடுத்தார். அவர்கள் அங்கேயே தங்கினார்கள். காலம் தாழ்த்தாமல் ஒரு பள்ளிவாசலையும் அங்கு (கொடுங்கல்லூரில்) கட்டினார்கள். (இதுதான் இந்தியாவிலுள்ள முதல் பள்ளிவாசல்.)

மாலிக் இப்னு தீனார் அங்கேயே தங்கியிருந்து கொண்டு தம்முடைய சகோதர புதல்வரான மாலிக் இப்னு ஹபீப், இப்னு மாலிக்கை மலபாரின் பிற பகுதிகளில் பள்ளிவாசல் நிறுவவும், இஸ்லாம் மார்க்கப் பிரச்சாரம் செய்யவும் பணித்தார்.

தொடரும்..

மக்கள் உரிமை வாரஇதழ்: டிசம்பர், 09 - 15, 2005 .gallery { margin: auto; } .gallery-item { float: left; margin-top: 10px; text-align: center; width: 33%; } .gallery img { border: 2px solid #cfcfcf; } .gallery-caption { margin-left: 0; }

Tuesday, March 24, 2009

கொள்ளை போகும் குடிநீரும், குடிமக்களின் கடமையும்!

நமது பாரம்பரியச் செல்வங்களான இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியது சட்ட ரீதியாக அரசின் கடமையாகிறது. இந்த வளங்கள் அனைத்தும் பொதுச் சொத்து. எனவே, அவை மக்களின் பயன்பாட்டுக்கு உரியவையே ஒழிய இவற்றை தனியார் உரிமையாக மாற்றக் கூடாது. இந்த அம்சம் உலகின் பல நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறை.

ஆனால் நம் நாட்டில் நிலைமை தலைகீழாக இருக்கிறது.

தமிழகத்தில் தண்ணீரை தனியார் மயமாக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பாக நம்மிடையே இரண்டு முக்கிய உதாரணங்கள் இருக்கின்றன. முதலாவது கேரளாவில் உள்ள பிளாச்சிமாடாவில் உள்ளூர் நிர்வாகம், மக்களால் துரத்தியடிக்கப்பட்டு நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் நிலைகொண்ட கோக கோலா நிறுவனத் தொழிற்சாலை. இந்த ஆலை ஒரு லிட்டர் தண்ணீரை ஒரு ரூபாய்க்கும் குறைவான விலையில் தாமிரபரணியில் இருந்து உறிஞ்சி வாங்கி, ஒரு லிட்டர் தண்ணீரை 13 ரூபாய்க்கு திரும்ப நம்மிடம் விற்கிறது. வாயை மூடிக் கொண்டிருந்தால் எப்படியெல்லாம் கொள்ளை அடிக்க முடியும் என்பதற்கு இது உதாரணம்.

அடுத்ததாக சென்னை மாநகர மக்களின் (மேல்தட்டு, தொழிற்சாலைகள், மத்தியதர வர்க்கம் என்று வாசிக்கவும்) பகாசுர தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள வயல்களின் ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. இதை சட்டப்படியாக்கினால் கோக கோலா ஆலையைப் போலவே தனியார் நிறுவனங்களும், லஞ்சமாக அரசியல்வாதிகளும் சம்பாதிக்கலாம் என்ற என்ற திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. இதற்கு பன்னாட்டு நிறுவனங்களின் மொத்த ஏஜென்டான உலக வங்கி திட்டம் தீட்டி மாநில அரசுக்கு அனுப்பியிருப்பதாகக் கேள்வி.

இவை இரண்டும் தண்ணீரை கூறு போட்டு விற்பதற்கு நடந்த, நடக்கப் போகிற உதாரணங்கள்.

இத்துடன் ஒரு கேலிக்கூத்தையும் மாநில அரசு தற்போது அரங்கேற்றி வருகிறது. கடல் நீரை குடிநீராக்குகிறேன், ஆயிரம் கோடி ரூபாய் கொடுங்கள் என்று மத்திய அரசிடம் முதல் தவணை வாங்கி இருக்கிறது. இந்த நிறுவனத்தையும் தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனமாக அல்லாமல், தண்ணீர் விற்பனை நிறுவனமாக பிற்காலத்தில் மாற்றிவிட திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் வரிப்பணம் ஆயிரம் கோடி ரூபாயில் இந்த நாடகம் அரங்கேறுவதுதான் அவலம். நாட்டிலுள்ள நீர்நிலைகளில் உள்ள குடிப்பதற்கு உகந்த தண்ணீர்தான் கடலில் சென்று கலக்கிறது. இதை சேகரித்து பயன்படுத்துவதை விட்டுவிட்டு, அதை மாசுபடுத்தி கடலுக்குள் கலக்கவிட்டு, பின்னர் அதையே சுத்திகரித்து நமக்குத் தருகிறார்களாம். இந்த நிறுவனத்தால் நமக்கு எந்தப் பயனும் இல்லை. கட்டாயம் காண்ட்ராக்ட் எடுத்தவர்களுக்கும் அரசியல்வாதிக்கும் கொள்ளை லாபம் கிடைக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம்.

பொதுச் சொத்தான தண்ணீரை எப்படி அரசும் தனியாரும் கூட்டாக நம்மிடம் "விற்கிறார்கள்" என்பதற்கு இவை எல்லாம் தெளிவான உதாரணங்கள்.

தண்ணீர் விநியோகம்

இது மட்டுமில்லை. மாபெரும் தண்ணீரை மக்களுக்கு விநியோகிப்பதற்கு தீட்டப்படும் திட்டங்கள் எல்லாமே அதிகாரம்மிக்கவர்கள், வசதிமிக்கவர்களுக்காகத்தான் உருவாக்கப்படுகின்றன. ஆனால் ஏழைகள் தாகத்தில் தவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தத் திட்டங்கள் எல்லாமே வரிப்பணத்தில் மேற்கொள்ளப்பட்டு தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள், பெரும் விவசாயிகளுக்கு பலனளிக்கின்றன.

இவ்வளவு காலம் வளங்குன்றும் வகையிலான பல்வேறு மறைமுகத் திட்டங்கள் அல்லது உள்ளூர் அரசுகளை ஊக்குவித்ததன் மூலம் தண்ணீர் பற்றாக்குறையையும், தண்ணீர் மாசுபாட்டையும் உலக வங்கி வெற்றிகரமாக உருவாக்கி இருக்கிறது. இன்றைக்கு தண்ணீர் பற்றாக்குறையை பன்னாட்டு தண்ணீர் நிறுவனங்களுக்கான சந்தை வாய்ப்பாக மாற்றும் வேலையில் உலக வங்கி ஈடுபட்டு வருகிறது. உலக தண்ணீர் சந்தையின் மதிப்பு ரூ. 40,000,00 கோடி என்று உலக வங்கி மதிப்பிட்டிருக்கிறது.

இதெல்லாம் எவ்வளவு தூரம் உண்மை என்று யோசிப்பவர்கள், கொஞ்சம் உட்கார்ந்து சிந்தித்தால் எல்லாம் புரிந்துவிடும். பத்தாண்டுகளுக்கு முன் பாட்டில் அல்லது கேன் குடிநீர் வாங்கிக் குடிப்பதைப் பற்றி யாராவது யோசித்திருப்போமா? போவோர் வருவோருக்கெல்லாம் தாகத்தைத் தீர்த்த, தண்ணீர் பந்தல் வைத்த பாரம்பரியத்தைச் சேர்ந்த நாம், இன்று காசு கொடுத்து தண்ணீர் வாங்கிக் குடிக்கிறோம். அந்த வகையிலேயே அரசு அடிப்படை உரிமைகளை மறுத்திருக்கிறது. குடிதண்ணீருக்காக ஒவ்வொருவரும் வரி செலுத்தும்போதும்கூட, குடிதண்ணீரை காசு கொடுத்தே வாங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

அடுத்த ஆண்டு வாக்கில் உலகில் 250 கோடி பேர் பாதுகாப்பான குடிநீர் இன்றித் தவிப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதில் 30 சதவீதம் பேர் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இந்த நிலையில் அரசு விநியோகிக்கும் தண்ணீரின் அளவு குறைந்துவிடும். அப்பொழுது உருவாகும் பற்றாக்குறையை பயன்படுத்தி லாபம் சேர்க்க தனியார் நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.

இப்படியாக தண்ணீர் மீதான உரிமையை தனியார் மயமாக்கி, அதை ஒரு விற்பனைப் பொருள் ஆக்குவது வாழ்வதற்கான உரிமையை பறிக்கும் அச்சுறுத்தல்களில் ஒன்று. ஏனென்றால் தண்ணீர் சுழற்சி என்பது வளங்குன்றாத வகையில் இருக்க வேண்டும் என்ற கடப்பாடுகளை மீறி, சந்தைத் தேவைக்கேற்ப சுரண்டப்படுவதால் தண்ணீருக்கான நெருக்கடி அதிகரிக்கவே செய்யும். பண்டை காலங்களில் இருந்தது போல தண்ணீரை பயன்படுத்துவதற்கும், சமஉரிமைப் படி பகிர்ந்து கொள்வதற்குமான உரிமை உள்ளூர் சமூகத்திடமே இருக்க வேண்டும்.

தமிழகத்தில் தண்ணீர் விநியோகத்தை தனியார்மயமாக்குவதன் தொடக்கமாக திருப்பூர் மாநகராட்சியில் தண்ணீர் விநியோகம் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் குப்பை அப்புறப்படுத்தும் பணியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது போல, இந்த நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக 2002 ஆம் ஆண்டு நியூ திருப்பூர் டெவலப்மென்ட் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனத்துக்கு ரூ. 1273 கோடி ரூபாய் ஒப்பந்தம் 30 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை மகிந்த்ரா-மகிந்த்ரா, யுனைடெட் இன்டர்நேஷனல், வெஸ்ட் வாட்டர், பெக்டெல் ஆகிய நிறுவனங்கள் பெற்றுள்ளன. இந்த நிறுவனங்களில் மகிந்த்ராவைத் தவிர மற்ற மூன்றும் பன்னாட்டு நிறுவனங்கள். காட் விதிமுறைப்படி, இந்த நிறுவனத்தின் செயல்பாட்டில் திருப்தியில்லாவிட்டாலும்கூட, ஒப்பந்தத்தை மாநகராட்சி திரும்பப் பெற முடியாது.

திருப்பூர் குடிநீர் விநியோகம் தனியார் மயமாகி உள்ளது முதல் கட்டம். ஓனிக்ஸ்-நீல் மெட்டல் பனால்கா போன்ற குப்பையள்ளும் வியாபாரத்தைப் போலவே, இந்த குடிநீர் விநியோக வியாபாரமும் மற்ற மாவட்டங்களுக்கும் தொற்றுவியாதி போல் விரைவில் பரவக்கூடும்.

தொழிற்சாலைகள் சுரண்டல்

இதுதவிர காலங்காலமாக மக்கள், விவசாயத்தைவிட தனியார் தொழிற்சாலைகளே தண்ணீரை சுரண்டிக் கொழுத்து வருகின்றன. தண்ணீர் பொதுச் சொத்து என்ற பெயரில், பெரும்பாலான நிறுவனங்கள் மிகக் குறைந்த கட்டணத்தில் தண்ணீரை பெற்று வருகின்றன. (ஆனால் பொதுமக்கள் கொட்டிக் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம்)

நீர்வள ஆதார அமைச்சகத்தின் கணக்கீட்டின்படி, தொழிற்சாலைகள் பயன்படுத்தும் தண்ணீரின் அளவு இருபது ஆண்டுகளாக மாறவேயில்லை. ஆனால் மத்திய நீர்வள ஆதார அமைச்சகம் வசதியாக ஒரு விஷயத்தை மறைத்திருக்கிறது. தொழிற்சாலைகள் பயன்படுத்தும் தண்ணீர் என்றால், அவை உறிஞ்சும் தண்ணீரை மட்டும் கணக்கிடுவது முறையற்றது. தொழிற்சாலைகள் அனைத்தும் தண்ணீரை மாசுபடுத்துகின்றன. அந்தத் தண்ணீரை ஆறு, குளம், வாய்க்கால், ஏரி, குட்டை, கடல் என்று பார்க்கும் இடமெல்லாம் திறந்துவிட்டு "பொதுச் சேவை" செய்து கொண்டிருக்கின்றன.

சராசரியாக வெளியேற்றப்படும் ஒவ்வொரு லிட்டர் மாசுபட்ட தண்ணீருக்கு பதிலாகவும் 5-8 லிட்டர் மாசுபடாத தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இதன்படி நாட்டில் பயன்படுத்தப்படும் மொத்த தண்ணீரின் அளவில் 35-40 சதவீதம் தொழிற்சாலைகள் பயன்படுத்துவதாகவே இருக்கும். ஆனால் இதை மறைத்துவிட்டு மக்கள் பயன்படுத்துவது அதிகம், விவசாயம் பயன்படுத்துவது அதைவிட அதிகம் என்று பலரும் பட்டியல் இட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தொழிற்சாலைகளுக்கும் சரி, தனிநபர்களுக்கும் சரி தண்ணீரை உரிய முறையில் சரியாகப் பயன்படுத்துவதை உறுதி செய்ய அரசு விதிமுறைகள் கடுமையாக இருக்க வேண்டும். முதலாவதாக, தண்ணீர் பயன்பாட்டுக் கொள்கை என்பது பொது சுகாதாரம், தண்ணீர் கிடைக்கும்தன்மை சார்ந்தது. இரண்டாவதாக, திறன்மிக்க வகையில் தண்ணீரை பயன்படுத்தும் தொழிற்சாலை, மக்களை ஊக்குவிக்க அரசு முன்வர வேண்டும். தொழிற்சாலைகள் பெறும் தண்ணீரின் அளவுக்கு ஏற்பவும், லாபத்தில் ஒரு பங்கையும் கட்டணமாகச் செலுத்த வேண்டும். அப்படியில்லாமல், மக்களின் வரிப்பணத்தை வாரி தனியார் முதலாளிகளுக்குத் தருவதை எந்தச் சமூகமும் எதிர்த்தே நிற்கும்.

தண்ணீர் உரிமைகளுக்காக போராடுவதுடன், தனிநபராக தண்ணீரை சேகரிப்பதில் நாம் நிறைய பங்காற்ற முடியும்.

ஒவ்வொரு மாதத்துக்கான தண்ணீர் கட்டணத்தை பரிசோதனை செய்யுங்கள். குடிநீர் மீட்டர் சரியாக இயங்குகிறதா என்பதை பரிசோதியுங்கள்.

நீங்கள் நல்ல தண்ணீரை வாட்டர் டேங்கில் ஏற்றுபவராக இருந்தால் எத்தனை முறை மோட்டார் போட்டீர்கள் என்றும், லாரி மூலம் தண்ணீர் வரவழைப்பவர் என்றால் எத்தனை டேங்க் என்றும் கணக்கெடுங்கள்.

குடிநீரையும் காசு கொடுத்து வாங்குகிறீர்களா? அதற்கு ஆகும் கட்டணத்தை கணக்கிடுங்கள்.

இவற்றை எல்லாம் செய்த பிறகு, எப்படி தண்ணீரை குறைவாகப் பயன்படுத்த முடியும் என்று திட்டமிட்டு செயலாற்றுங்கள்.

அன்றாட வேலைகளில் தண்ணீர் சேகரிப்பு

பல் விளக்கும் போது கப்பில் எடுத்து பயன்படுத்தலாம், குழாயை திறந்துவிட வேண்டாம்.

குளிக்கும் போது வாளியில் குளியுங்கள், ஷவர் வேண்டாம்.

பிளஷ் டாய்லெட்டில் தண்ணீரை குறைவாக பயன்படுத்தவும், அதிக தண்ணீரை சேகரிக்கும் தொட்டி வேண்டாம்.

காய்கறிகளை சட்டியில் இட்டு கழுவுங்கள், அப்படியே கழுவ வேண்டாம்.

நடைபாதை, படி, வண்டி ஓடுபாதைகளை விளக்குமாறால் கூட்டுங்கள். தண்ணீரால் கழுவ வேண்டாம்.

செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற, வாகனங்களைக் கழுவ வாளியை பயன்படுத்துங்கள், ஹோஸ் பைப் வேண்டாம்.

[ (22-03-2009) உலக நீர் நாள். இந்த நாளில் நீரை சேகரிப்பது பற்றிய விழிப்புணர்வுடன் நமது நீர் உரிமை, அதற்கு நாம் கொடுக்கும் விலை பற்றி சிந்திப்பது அவசியம். அந்த நோக்கத்தை மேம்படுத்தும் எண்ணத்துடன் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது]

நன்றி:-ஆதி வள்ளியப்பன்

இந்தியாவில் இஸ்லாம்-13

தொடர்-13: தோப்பில் முஹம்மது மீரான்

ஷெய்க்கு ஷெய்னுத்தீன் மஃதூம்(ரஹ்) அவர்களுடைய ‘துஹ்பத்துல் முஜாஹிதீன் பி அப்ஸிஅக்பரில் புர்த்துக் காலிய்யின்’ (இதுதான் நூலின் முழுப்பெயர்) என்ற நூலை ஆதாரம் காட்டி கி.பி.825 க்குப் பின் சேரமான் பெருமாள் மக்கா சென்ற பிறகுதான் இஸ்லாத்தின் வருகை என்று கூறுகின்றனர்.

நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில் “பள்ளி பாண பெருமாள்” என்ற சேரநாட்டு பெருமாள் ஒருவர் மக்காவிற்கு பயணம் மேற்கொண்டார். இந்த பெருமாளுடைய காலம் “இருண்ட காலத்தின் நெரிசலில் சிக்கிக் கொண்டதால் இவரைப் பற்றி அதிகம் தெரிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இவருக்கும் ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்குப் பின் சுந்தரமூர்த்தி நாயனாருடைய நண்பரான சேரமான் “சேரமான் பெருமாள்” என்ற பெயரில் புகழ்பெற்ற சேரநாட்டு கடைசி பெருமாள் அரேபிய பயணம் மேற்கொண்டார். இவருடைய காலம் வரலாற்றில் ஒளி படர்ந்த காலமாகும். அதனால் இவருடைய அரேபியப் பயணமும், இவர் அரேபியப் பயணம் மேற்கொண்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பின் மாலிக் இப்னு தீனார் என்பவருடைய தலைமையில் இஸ்லாமிய பிரச்சாரக் குழு இங்கு வருகை தந்ததும் மக்கள் மத்தியில் விழிப்பை ஏற்படுத்தியது.

இதுதான் இஸ்லாமிய மார்க்க பிரச்சாரத்திற்காக முதன்முதலில் மேற்கு கடற்கரைக்கு வந்த முதல் குழு. இவ்விரு நிகழ்ச்சிகளும் அக்காலத்தில் பிரபலமானதால் தலைமுறையினரிடையே காதுவழி செய்தியாகப் பரவியது. இப்படி கேட்டறிந்த செய்தியைத்தான் ஷெய்க்கு ஷெய்னுத்தீன் மஃதூம்(ரஹ்) அவர்கள் தம்முடைய நூலில் குறிப்பிட்டிருப்பது; பள்ளி பாண பெருமாள் நபிகள் நாயகத்தின் காலத்தின் மக்கா சென்றதற்கும், அரேபியா சென்று இஸ்லாம் மார்க்கம் ஏற்றுக் கொண்டதற்கும் ஆதாரங்கள் 19ம் நூற்றாண்டின் கடைசிப் பகுதிக்குப் பிறகுதான் கண்டுபிடிக்கப்பட்டன. இதுபற்றி பிறகு ஆராய்வோம்.

“ஏக இறை நம்பிக்கை, உணர்ச்சிமீதெழுந்த இறை பக்தி, ஆத்ம தியாகம் ஆத்மீக குருக்களிடம் பக்தி காட்டுவதின் தேவை ஆகியவற்றில் உறுதியாக நிற்பதும், ஜாதி வேற்றுமையில் ஏற்பட்டுள்ள சிறு தளர்வுதான் இப்படிப்பட்ட ஹிந்துமத எழுச்சியின் சில அறிகுறிகள் ஒருவகையில் அல்லது வேறு வகையில் இஸ்லாத்தின் செல்வாக்கு எனக் கருதப்படுகிறது.” (தென் இந்திய வரலாறு (மலையாள மொழிபெயர்ப்பு) கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி பக்.484) என்று திரு கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி குறிப்பிடுகிறார். மேலும் அவர் சொல்வதை கவனிக்கவும்.

“இஸ்லாத்தோடு தென் இந்தியாவுக்குள்ள ஈடுபாடு வடஇந்தியாவை விட பழமையானது”

திரு. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி ஹிந்துமத எழுச்சி என்று குறிப்பிடுவது:

கேரளாவிலுள்ள காலடியில் பிறந்த ஆதிசங்கராச்சாரியாருடைய காலத்தையாகும். அவரது காலம் கி.பி.788-820. கி.பி.825 க்குப் பிறகுதான் இஸ்லாத்தின் வருகை என்றால் கி.பி.820 ல் மறைந்த சங்கராச்சாரியாரை இஸ்லாத்தின் கொள்கைகள் எவ்வாறு கவர்ந்திருக்க முடியும். இதிலிருந்து கி.பி.820 க்கு முன்னரே இஸ்லாம், கேரளப் பகுதிகளில் வளர்ந்து கொண்டிருந்த ஒரு சக்தி என்பது தெளிவாகிறது மட்டுமல்ல, மிக மந்த நிலையில் துவக்க காலத்தில் இங்கு பரவியது என்று குறிப்பிட்டோம்.

எழுத்தறிவோ, செய்தி பரப்பும் சாதனங்களோ எதுவும் இல்லாத காலத்தில், தோன்றிய உடனே எங்கும் பரவியிருக்க முடியாது. மெதுவாக பரவி, அதன் கொள்கைகளால் மக்கள் கவரப்பட்டு வளர்ந்து வரும் வேறு மதங்களின் வளர்ச்சிக்கு இது ஒது ‘தடை’ எனப்படுவதற்கு குறைந்தது ஓர் நூற்றாண்டு காலமாவது தேவை. பிற மத தலைவர்கள் வளர்ந்து வரும் ஒரு மதத்தின் கொள்கைகளை சரிவர ஆராய்ந்து, அக்கொள்கைகள் நல்லதெனப்பட்டு அதை தம் மத கோட்பாடுகளாக மாற்றி தம் மக்களிடம் எட்ட செய்ய ஒரு நெடிய காலமே தேவைப்படும். இதன் அடிப்படையில் பார்ப்போமேயானால் நபி(ஸல்) காலத்திலேயே இஸ்லாம் இங்கு தோன்றிவிட்டது என்று உறுதியாகக் கூற முடியும்.

பொன்னானி ஷெய்க்கு ஷெய்னுத்தீன் மஃதூம்(ரஹ்) அவர்கள் எழுதிய அரபி நூலான “துஹ்ஃபத்துல் முஜாஹிதீன்” என்ற முதல் கேரள வரலாற்று நூலின் இரண்டாம் அத்தியாயத்தின் தமிழாக்கம் இது. இரண்டாம் அத்தியாயம் முழுவதையும் மொழி பெயர்க்கவில்லை. இக்கட்டுரைத் தொடருக்குத் தேவையான பகுதி மட்டுமே இன்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மூல ஆசிரியருடைய அசல் கையெழுத்துச் சுவடியையும், பல பிற மொழிபெயர்ப்புகளையும் வைத்து திரு. வேலாயுதன் பணிக்கச்சேரி என்ற வரலாற்று ஆசிரியர் “கேரளா 15-ம் 16-ம் நூற்றாண்டுகளில்” என்ற தலைப்பில் மலையாளத்தில் மொழிபெயர்த்த நூலின் 57-71வரையான பக்கங்களின் தமிழாக்கம்.

தொடரும்..

எது தேசிய அவமானம் ...சிதம்பரம்

ரோம் பற்றி எரியும்போது பிடில் வாசித்தான் நீரோ மன்னன்' என்ற செய்தியை நாம் அறிந்து வைத்துள்ளோம். அதுபோல் நாடாளுமன்றதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நாடு தகித்துக்கொண்டிருக்கும் நிலையில், ஐ.பி.எல். போட்டிகளை தள்ளிவைக்குமாறு மத்திய அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்று ஐபிஎல் நிர்வாகம் மாற்றி அறிவித்த தேதிகள் அனைத்தும் தேர்தல் காலமாக இருப்பதால், மே 16. க்கு பின்தான் நடத்த அனுமதிக்கமுடியும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறியதையடுத்து, ஐபிஎல் போட்டிகளை இந்தியாவுக்கு வெளியே நடத்த முடிவு செய்தது கிரிக்கெட் வாரியம்.

ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் நடத்தமுடியாதது பற்றி கருத்து தெரிவித்த 'நவீன நீரோ மன்னனும்', தேசப்பற்றை[?] ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்தவருமான திருவாளர் மோடி,
ஐபிஎல் விளையாட்டை இந்தியாவில் நடத்த முடியாதபடி மத்திய அரசு செய்து விட்டது. இது தேசிய அவமானம் என்றுகூறியுள்ளார். இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் திரு ப.சிதம்பரம்,
இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. பாதுகாப்புடன் நடத்த முடியும். ஆனால், முழு அளவிலான பாதுகாப்பை மே 16ம் தேதிக்குப் பிறகுதான் தர முடியும்.உண்மையில், 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம்தான் தேசிய அவமானம்.என்று மோடியை கடுமையாக சாடினார்.

சிதம்பரம் இவ்வாறு சாடுவதால் மோடி போன்ற இந்துத்துவாக்களுக்கு எவ்வித ரோஷமும் வந்துவிடப்போவதில்லை.ஏனெனில், குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் நடத்தப்பட்டபோது, 'நான் எந்த முகத்தை வைத்துக்கொண்டு வெளிநாடு போவேன் என்று ஒப்பாரி வைத்துவிட்டு, அடுத்ததேர்தலிலும், பாசிச மோடியை களமிறக்கிய இந்துத்துவாக்களுக்கு ஏது வெட்கம்! சிதம்பரம் தன் கூற்றில் உண்மையாளராக இருந்தால், குஜராத்தில் மோடியின் ஆட்சியை கலைத்துவிட்டு அங்கே ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்துவதோடு, தேசிய அவமானத்தை ஏற்படுத்திய மோடி வகையறாக்களை சட்டத்தின்முன் நிறுத்தி தண்டிக்கவேண்டும். அதுதான் இந்தியாவின் நலனுக்கு சிதம்பரம் செய்யும் அளப்பரிய பணியாகும்.

Monday, March 23, 2009

இந்தியாவில் இஸ்லாம்-12

தொடர்-12: தோப்பில் முஹம்மது மீரான்

9-ம் நூற்றாண்டில் அல்லது அதற்குப் பிறகுதான் இங்கு இஸ்லாத்தின் வருகை என காட்டுவதற்கு சில வரலாற்று ஆசிரியர்கள் “துஹ்பத்துல் முஜாஹிதீன்” என்ற அரபி நூலின் கீழே கொடுக்கப்பட்ட பகுதியை மேற்கோள் காட்டுகின்றனர்.

“……மலபாரில் முதல்முதலாக இஸ்லாம் மார்க்கம் பிரச்சாரத்தில் வந்த வரலாறு இதுவாகும். எந்த ஆண்டில் நடந்தது என்று திட்டவட்டமாகக் கூறுவதற்கு தகுந்த ஆதாரம் எதுவும் இல்லை. ஹிஜிரி 200க்குப் பிறகுதான் (நடந்து) இருக்க வேண்டும் என்பது பெரும்பான்மையோரின் கருத்து. (துஹ்பத்துல் முஜாஹிதீன் - ஷைகு சைனுத்தீன் மகுதூம், மலையாளம் மொழிப்பெயர்ப்பு - கேரளம் பதினைந்து பதினாறாம் நூற்றாண்டுகளில் - வேலாயுதன் பணிக்கச்சேரி - பக்கம் 70)

“துஹ்பத்துல் முஜாஹிதீன்” என்ற நூலில் வரும் மேல் குறிப்பிட்டுள்ள வாசகங்களையே எல்லோரும் மேற்கோள் காட்டி வருகின்றனர். “மலபாரில் முதன்முதலாக இஸ்லாம் மார்க்கம் பிரச்சாரத்தில் வந்த வரலாறு இதுவாகும்” என்ற முதல் வாசகத்திற்கும், பிறகு வரும் வாசகத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஒரு பாராவின் துவக்கத்தில் மேல்குறிப்பிட்ட முதல் வாசகத்தை முடித்துவிட்டு அதே பாராவிலேயே பிற வாசகங்களையும் கொடுத்துள்ளார்.

அவருடைய மலையாள மொழிபெயர்ப்பு நூல்களில் (வேலாயுதன் பணிக்கச்சேரி பக்.57-70, கே.மூஸ்ஸான் குட்டி மெளலவி பக்.8-14) சேரமான் பெருமாள் (கி.பி.825) மக்கா சென்றதையும், மாலிக் இபுனுதினார் கேரளாவில் வந்து பள்ளிவாசல்கள் கட்டியதைப் பற்றியும் விளக்கமாக கூறிவிட்டு, ‘மலபாரில் முதல்முதலாக இஸ்லாம் மார்க்கப் பிரச்சாரத்தில் வந்த வரலாறு இதுவாகும்’ என்ற அந்த வரலாறை முடிக்கிறார். ஆனால் அன்றைய (கி.பி.1583-ல் இறப்பு) வழக்கமாக இருக்கக்கூடும், அல்லது தவறுதலாகவும் இருக்கலாம், வேறு ஒரு கருத்தை சொல்லும் பாராவின் முதல் வாசகமாக இது வந்துவிட்டது. ஒரு பாராவிலுள்ள கடைசி வாசகம் தவறுதலாக அடுத்த பாராவின் முதல் வாசகமாக அச்சாகிவிட்டது. (அடுத்த இதழில் மொழிபெயர்ப்பு தருகிறேன்)

சேக் சைனுத்தீன் மகுதூம் அவர்களுடைய கருத்துப்படி கி.பி.825-க்குப் பிறகுதான் இஸ்லாம் இங்கு தோன்றி இருக்கவேண்டும் என்று வைத்துக் கொள்வோம். இந்த அறிஞர் வாழ்ந்த காலம் 16வது நூற்றாண்டு. எந்தவித வரலாற்றுத் தடயங்களும் கிடைக்க வாய்ப்பில்லாத காலம். அதனால் தகுந்த ஆதாரம் எதுவும் இல்லை என்பதை ஒப்புக் கொண்ட பின் இஸ்லாம் இங்கு தோன்றிய ஆண்டைப் பற்றி தமக்கு திட்டவட்டமாக சொல்ல இயலாது என்று குறிப்பிடுகிறார். ஹிஜிரி 200க்குப் பிறகுதான் தோன்றியிருக்க வேண்டுமென்பது அவருடைய சொந்தக் கருத்தல்ல. பெரும்பான்மையோரின் கருத்து என்று கூறுகிறார்.

சேக் சைனுத்தீன் வரலாற்று ஆசிரியர் அல்ல, ஒரு மார்க்க அறிஞர். கி.பி.1498 முதல் 1582 வரை போர்ச்சுகீசியர் கேரளாவில் அவிழ்த்து விட்ட நீசச் செயல்களைக் கண்டு குமுறி அவர்களுக்கு எதிராகப் போர் செய்ய ஆயுதம் ஏந்திவர முஸ்லிம்களை ஊக்குவிக்கவும், பிஜப்பூர் சுல்தானான அலி ஆதில்ஷா உடைய உதவி பறங்கிகளுக்கெதிராக சாமூதிரிக்கு கிடைக்க செய்வதற்காகவும் இயற்றியதாகும் இந்நூல். (மகுதூம் நூல்கள் - பேராசிரியர் எ.பி.பி.நம்பூதிரி, ‘மாத்தியமம்’ மலையாளம் ஆண்டு மலர் - 1988 பக்.62)

இது வரலாற்று நூலாக எழுதியது அல்ல. ஆனால் அன்றைய வரலாற்று உண்மைகளை இதிலிருந்து தெரிந்து கொள்ள முடியும். அவருக்குத் தெரிந்தவற்றை எழுதியுள்ளாரே தவிர, இதை ஒரு வரலாற்று நூலாக் எழுதவில்லை என்பதுதான் உண்மை.

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

நன்றி: மக்கள் உரிமை வாரஇதழ் - நவம்பர், 18 - 24, 2005

Sunday, March 22, 2009

இந்தியாவில் இஸ்லாம்-11

தொடர்-11: தோப்பில் முஹம்மது மீரான்

வரலாற்று உண்மையை மறைத்த வரலாற்று ஆசிரியர்கள்

“இஸ்லாத்தைப் பற்றி நபி(ஸல்) போதனை செய்ய துவங்கி அதிக நாட்கள் ஆவதற்கு முன் இந்தியாவின் பல பகுதிகளில் அரபியர்கள் தங்கி, ஏராளம் மதமாற்றங்கள் செய்தனர்”. (A Journey from Madras through countries of Mysore, Cannanur and Malabar - Francies Buchana) என்று பிரான்ஸிஸ் புக்கானன் குறிப்பிடுகிறார்.

நான்காவது கர்நாடகப் போரில் திப்பு சுல்தான் இரத்த சாட்சியான பிறகு, திப்புவின் ஆட்சிக்குட்பட்டிருந்த மைசூர், கர்நாடகா, மலபார் போன்ற இடங்களைப் பற்றி சரிவர படித்து ஒரு அறிக்கை சமர்ப்பிக்க கி.பி.1799-ல் பிரிட்டிஷ் அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரி பிரான்ஸில் புக்கானன் ஆவார். இவர் மேலே குறிப்பிட்டுள்ள இடங்களிலுள்ள ஒவ்வொரு கிராமம் கிராமமாகச் சென்று அங்குள்ள மக்களின் நிலை, கலாச்சாரம், தொழில், விவசாயம், மதம் ஆகியவற்றை மிக நுட்பமாக ஆராய்ந்து அவருடைய அறிக்கையை சமர்ப்பித்தார். அதை நூல் வடிவில் வெல்லஸ்லி பிரபுவுக்கு சமர்ப்பணம் செய்தார்.

இப்படி ஊர் ஊராகச் சென்றிருந்த போது ‘பொன்னானி’க்கும் சென்றிருந்தார். பொன்னானியில் ஒரு ‘தங்களிடம்’ இருந்து கேட்டறிந்த செய்திதான் மேலே தரப்பட்டுள்ளது. இதே ‘தங்களின்’ முன்னோர்கள் கொடுத்த சில அரபி மொழி ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டுதான் முஹம்மது காசிம் பெரிஸ்தா என்ற வரலாற்று ஆசிரியர் மலபார் வரலாற்றை எழுதியுள்ளதாக புக்கானன் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

முஹம்மது காசிம் பெரிஸ்தா போன்ற பெரிய பாரசீக வரலாற்று ஆசிரியர்களுக்கு வரலாற்று ஆவணங்கள் வழங்கிய ‘தங்களின்’ குடும்பத்தாரிடமிருந்து நேரில் கேட்டறிந்து தம் அறிக்கையில் நபி(ஸல்) காலத்திலேயே இஸ்லாம் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் பரவிவிட்டதாக எந்த சந்தேகத்திற்கும் இடமில்லாதபடி ஒப்புக் கொள்கிறார் புக்கானன்.

நம்பிக்கையற்றவர் (Infidels)களுக்கு எதிராக போர்மூலம் இஸ்லாம் மதத்தை பிரச்சாரம் செய்ய வேண்டுமென்று முஹம்மது கஜினி உறுதிமொழி எடுத்துக் கொண்டதாக (இந்திய வரலாறு - ஏ. ஸ்டிதரமேனோன்) சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுவதை மெய்ப்பிப்பதற்காக வேண்டுமென, அமைதியாகவும், ஆரவாரம் இல்லாமலும் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் இஸ்லாம் தோன்றிய வரலாற்று உண்மையை மறைக்கின்றனர் சில வரலாற்று ஆசிரியர்கள்.

மேற்கு கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் இஸ்லாம் புலர்ந்து ஏறத்தாழ 9நூற்றாண்டு காலம் வரையிலும், குறிப்பாக சொல்லப்போனால் 1491-ல் வாஸ்கோடகாமா கொடுங்கல்லூர் துறைமுகத்தில் கப்பல் இறங்கும் வரை இப்பகுதிகளில் உள்ள முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் தமிழகத்திலோ, கேரளாவிலோ எந்தவித கிளர்ச்சியோ, போராட்டங்களோ ஜாதிக் கலவரங்களோ, அரசுக்கெதிரான போரிலோ ஈடுபடவில்லை என்பது வரலாற்று உண்மை. தாய் நாட்டிற்காக இராணுவ சேவை செய்து வந்தனர். இங்குள்ள மக்களோடு ஒன்றியும், இங்குள்ள கலாச்சாரத்தோடு இணைந்தும் ஆட்சியாளர்களுக்கும் உறுதுணையாக வாழ்ந்து வந்ததால் இங்குள்ள ஆட்சியாளர்களின் பேருதவியோடு இஸ்லாம் இப்பகுதிகளில் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வந்தது.

இஸ்லாம் மார்க்கத்திற்கு சில நூற்றாண்டுகளில் கேரளக் கரையில் அதிக பிரச்சாரம் கிடைத்தது. இங்கு ஹிந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கு பிறகு சிறப்பாக விளங்குவது முஸ்லிம் சமுதாயமாகும். இஸ்லாம் மார்க்கத்திற்கு கிடைத்த வளர்ச்சி பல கோணங்களிலும் கேரள அரசர்கள் கடைப்பிடித்து வந்த மத சகிப்புத்தன்மை காரணமாகும். கோழிகோட்டு சாமூதிரிகள் எல்லா வகையிலும் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பும் உற்சாகமும் ஊட்டினர்.

சாமூதிரிகளின் கீழில் அரசாங்கம் இருந்த போது கோழிக்கோட்டில் சொல்லத் தகுந்த ஒரு சக்தியாக விளங்கினர் முஸ்லிம்கள். அவர்கள் மன்னர்களுடைய நம்பிக்கையைப் பெறவும், நாட்டு விவகாரங்களில் பெரும் செல்வாக்கு உடையவர்களாகவும் விளங்கினர். சாமூதிரிகள் தங்கள் எதிர்காலத்தை எண்ணி முஸ்லிம்களுக்கு தனி சலுகைகளும் உதவிகளும் செய்து வந்தனர்.

சாமூதிரிகளுடைய கப்பல் படைத்தலைவர்களான புகழ்பெற்ற குஞ்சாலி மரைக்காயர்கள், போர்ச்சுகீசியரின் நாட்டைப் பிடிக்கும் திட்டங்களுக்கு எதிராக அயராது தொடர்ந்த வீரமிக்க போர்கள் கேரள வரலாற்றில் முக்கியமான ஒரு பகுதியாகும். மாப்பிள்ளைகள் என அழைக்கப்படும் மலபார் முஸ்லிம்கள், சாமூதிரிக்காக எதுவும் செய்யத் துணிந்தவர்கள். கடற்படையில் போதிய அளவு முஸ்லிம்கள் இல்லாவிட்டால் ஹிந்து சமுதாயத்தில்பட்ட மீனவ குடும்பங்களிலிருந்து ஒன்றிரண்டு நபர் வீதம் முஸ்லிம்களாக வளர்க்க சாமூதிரிகள் உத்தரவிட்டனர். கோழிக்கோட்டில் உள்ள மக்கள் தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கைப் பெருக ஒருவேளை இந்தக் கட்டளை ஒரு காரணமாக இருக்கலாம் என்று ஏ. ஸ்டிதரமேனோன் (கேரள வரலாறு - பக்கம் 99) குறிப்பிடுகிறார்.

சாமூதிரி போன்ற மன்னர்களின் உதவியாலும், ஊக்குவிப்பாலும் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் இஸ்லாம் தழைத்தோங்கி வளர்ந்த உண்மையை, மக்கள் கவனங்களிலிருந்து திசை திருப்புவதற்காகவே முஹம்மது இபுனு காசிமையும் அவருக்குப் பிறகு வந்தவர்களையும் வாளேந்தி வந்து இஸ்லாத்தைப் பரப்பியவர்கள் என்ற இழிவான பழியை இவர்கள் மீது சுமத்தி, இந்திய வரலாற்றின் முன் வரிசையில் குற்றவாளிகளாக நிறுத்தி வைத்துள்ளனர்.

- தோப்பில் முஹம்மது மீரான்

தொடரும்..

நவம்பர், 11 - 17, 2005

Saturday, March 21, 2009

இந்தியாவில் இஸ்லாம்-10

தொடர்-10: தோப்பில் முஹம்மது மீரான்

மேதை அல்பிருணியின் இந்திய வருகையும் - சர்ச்சையும்

இஸ்லாம் உலகில் வேருன்றி இரு நூற்றாண்டுகள் கடந்த பின் இந்தியாவிலாகட்டும் உலகின் வேறு எந்தப் பகுதிகளிலாகட்டும், பயணம் செல்லும் அரபு நாட்டைச் சார்ந்த ஒரு முஸ்லிமுக்கு, ஒரு முஸ்லிமுடைய தோற்றம் எவ்வாறு இருக்குமென ஒரு முன்மதிப்பீடு இருக்கும். அதற்கு நேர் மாற்றமாக இருப்பின் முஸ்லிம் அல்லவென்று கருதப்படுவது இயல்புதானே. இன்று கேரளாவையோ, தமிழ்நாட்டையோ சார்ந்த, உருதுமொழி பேசத் தெரியாத முஸ்லிம் ஒருவர், வேட்டி கட்டிக் கொண்டு தொப்பி அணியாமல் வடமாநிலம் ஒன்றுக்கு செவ்வாரேயானால் அங்குள்ளவர்கள் இவரை ஐயப்பாடோடுதான் நோக்குவார்கள் என்ற துக்ககரமான உண்மையை யாரறிவார்.

மாலிக்காபூர், மதுரையை நோக்கி படையுடன் வரும் வழியில் கண்ணனூர் என்ற இடத்தில் தமிழ் முஸ்லிம்களை சந்திக்கிறார். தாங்கள் முஸ்லிம்கள் என்று கூறியபோதும், தோற்றத்தில் தென்பட்ட சந்தேகத்தால் முஸ்லிம்கள் என்று அவரால் நம்ப முடியவில்லை. பிறகு ‘கலிமா’ பலமுறை சொல்ல வேண்டினார். முஸ்லிம்கள் கலிமா பலமுறை சொல்லி கேட்ட பிறகுதான் முஸ்லிம் என்று நம்பிக்கைக் கொண்டார். இருந்தும் அம்முஸ்லிம்களை அரை முஸ்லிம் (Half-Mussalman) என்றே அமீர் குஸ்று குறிப்பிடுகிறார்.

கி.பி.1311ல் இது நடந்தது. இதற்கும் ஆறு நூற்றாண்டுகளுக்கு முன் இங்குள்ள முஸ்லிம்களின் தோற்றம் எவ்வாறு இருந்திருக்கக் கூடுமென்று ஊகிக்கலாமே?

கஜனி முஹம்மதுடைய ஆட்சியின் போது இந்தியாவிற்கு வந்து 40ஆண்டுகள் இங்கு தங்கி, இந்தியாவைப் பற்றி தெரிந்தவர் அல்பிருணி (கி.பி.973-1048) என்ற மேதை. அவருடைய ‘அல்பிருணி பார்த்த இந்தியா’ என்ற நூலில் கேரளாவைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

“மலபார்: கோவா முதல் கொல்லம் வரையிலுமாகும். அதன் நீளம் 300 பர்சக் (1பர்சக் 3 அரை மைல்) மலபாரிலுள்ள முக்கிய நகரங்களான கோவா, பாக்கனூர், மங்கலாபுரம், ஏழிமலை, பந்தலாயினி, கொடுங்கல்லூர் முதலிய இடங்களிலுள்ள மக்களெல்லாம் புத்த மதத்தினராவார்கள்…” (பயணிகளும் வரலாற்று ஆசிரியர்களும் - வேலாயுதன் பணிக்கச்சேரி பாகம் 1 பக்கம் 103-104)

கி.பி.943ல் வந்த “மசூதி” கொங்கணியில் உள்ள சவுன் நகரத்தில் 10,000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வாழ்ந்திருந்ததாகக் கூறுகிறார். ஆனால் அவருக்குப் பின் வந்த அல்பிருணி, அப்பகுதிகளில் முஸ்லிம்களே இல்லை என்று கூறுகிறார். இவற்றில் எதை ஏற்றுக் கொள்ள முடியும்?

ஹிந்து மதம் கேரளாவில் அதன் முழு வளர்ச்சியடைந்த காலமாகும். பத்து மற்றும் பதினொன்றாம் நூற்றாண்டுகள். புத்த மதம் நலிந்து போன காலமது. இருந்தும் அல்பிருணி மலபாரில் உள்ளவர்களெல்லாம் புத்த மதத்தினர் என்று குறிப்பிட்டதை ஏற்று ஏதேனும் வரலாற்று ஆசிரியர் இவருடைய கூற்றின்படி கொல்லம் முதல் கோவா வரையிலும் பரந்து கிடக்கும் பகுதிகளில் ஹிந்துக்களோ, கிறிஸ்தவர்களோ, யூதர்களோ, முஸ்லிம்களோ இல்லை என்று குறிப்பிடவில்லையே. பிற்கால வரலாற்று ஆசிரியர்களும் பிருணியுடைய இக்கூற்றுக்கு எந்த விலையும் கற்பிக்கவில்லையே.

சில வேளை அல்பிருணி குறிப்பிட்டுள்ள மலபார் பகுதிகளுக்கு அவர் விஜயம் செய்திருக்க மாட்டார். யாரிடமிருந்தேனும் கேட்டுத்தெரிந்து கொண்ட அறிவை வைத்து எழுதியிருக்கக் கூடும். இல்லை, வடபகுதியில் தாம் பார்த்த முஸ்லிம்களைப் போலல்லாமல், தலைமுண்டனம் செய்து மேல் துண்டால் உடம்பைப் போர்த்தி திரிந்த முஸ்லிம்களைப் பார்த்து புத்த மதத்தினர் என்று தவறாக எண்ணி அப்படி எழுதியிருக்கலாம். அல்பிருணி எழுதியதுதான் உண்மை என்ற முடிவுக்கு வருவோமேயானால் 11-ம் நூற்றாண்டு வரையிலும் மலபார் பகுதிகளில் புத்த மதத்தினனர்களைத் தவிர முஸ்லிம்களோ பிற மதத்தினரோ இல்லை என்றுதானே அர்த்தம்(?)

இஸ்லாம் மேற்கு கிழக்கு கடற்கரைகளில் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நிசப்தமாகவும், பல ஆண்டுகளுக்குப் பின் (கி.பி.712) சிந்து மார்க்கமாக ஓசை எழுப்பிக் கொண்டும் இந்தியாவுக்குள் நுழைந்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். காலோசையின்றி இஸ்லாம் இங்கு பிரவேசித்தது யார் கவனத்தையும் ஈர்க்கவில்லை. அதுவன்றி, திட்டமிட்டே இந்த ‘பிரவேசிப்பை’ மூடிமறைத்தனரோ?

கி.பி.712ல் முகம்மது இபுனு காசிமும் அவருக்கு முன் உமர் இபுனு கத்தாப்(ரலி) அவர்கள் காலத்தில் (634-643) தானா பகுதியில் கப்பலில் இறங்கியவர்களையும் வரலாற்று ஆசிரியர்கள் எடுத்துக் கூறுகின்றனர். இஸ்லாம் இந்தியாவின் தென்பகுதியில் கடற்கரை நகரங்களில் நெடுகிலும் சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் வடபகுதிகளிலும் வேகமாக பரவிய உண்மையை மறைக்கவும், 9-ம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் இஸ்லாம் மேற்கு கிழக்கு கடற்கரைப்(West Coast) பகுதியில் ஆங்காங்கே தோன்றியது என்ற தவறான கருத்தை ஆணி அடித்து உண்மைப் படுத்தும் நோக்கோடு இஸ்லாத்தின் ஆரம்ப வருகையே நாட்டை ஆக்கிரமித்து ரண ஆறுகள் ஓடச் செய்வதற்காகத்தான் என்று களங்கமற்ற இந்திய மனதில் நஞ்சை கலப்பதற்காகவே இபுனு காசிமின் வருகையை மிகைப்படுத்திக் காட்டுகின்றனர்.

இந்தியாவின் வடபகுதிகளைப் பற்றிய வரலாறு 6, 7, 8 நூற்றாண்டுகளில் ஒளி மிக்கதாக இருக்கும்போது தென்னிந்தியாவிலுள்ள மேற்கு கிழக்கு கடற்கரைப் பகுதி உள்ளிட்ட இடங்களில் பெருமாள் ஆட்சிகள் நடத்தும் வரலாற்றில் இம்மூன்று நூற்றாண்டுகள் இருண்டுபோனது எப்படி? ஏன்?

இருண்ட காலமெனக் கூறி ஆராய்ச்சிக்கு உட்படுத்தாமல் ஆவணங்கள் எதுவும் இல்லை என்ற காரணம் சொல்லி உதாசீனமாக ஒதுக்கி வைக்கப்பட்ட இக்காலக் கட்டத்தில் எழுதப்பட்டது எனக் கருதப்படும் சில கல்வெட்டுகளைப் பற்றியும் செப்பேடுகள் பற்றியும் சில மன்னர்களைப் பற்றியும் சுந்தரமூர்த்தி நாயனார், ஆதி சங்கராச்சாரியார் போன்ற மதத் தலைவர்களைப் பற்றியும் அவர்களுடைய வாழ்க்கை போதனைகள் முதலியவைப் பற்றிய தெளிவான தகவல்கள் எவ்வாறு கிடைக்கப் பெற்றன?

இப்படிப்பட்ட தகவல்கள், திரட்டிய வழியில், அதேகாலக்கட்டத்தில் தோன்றிய வளர்ந்த இஸ்லாத்தைப் பற்றியும் இங்குள்ள முஸ்லிம்களைப் பற்றியும் தகவல்கள் ஏன் திரட்ட தவறிவிட்டன? முஸ்லிம்களை சம்பந்தப்பட்ட இடங்கள் வரும்போது இருண்ட காலமெனக் கூறி ஒரு திரையைப் போடுவது எதனால்?

- தோப்பில் முஹம்மது மீரான்

தொடரும்….

அக்டோபர் 28 - நவம்பர் 03, 2005

பிரிட்டனுக்குள் நுழைய மோடிக்கு விசா வழங்கக் கூடாது

லண்டன்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை "ஏற்றுக்கொள்ள முடியாத அரசியல் பிரதிநிதி' என அறிவித்து, அவர் பிரிட்டனில் நுழைவதற்கான விசா அனுமதியை பிரிட்டிஷ் அரசு நிராகரிக்க வேண்டும் என்று அந்த நாட்டில் வசிக்கும் இந்திய முஸ்லிம்கள் வலியுறுத்தியுள்ளனர்.

லண்டனில் வருகிற மே மாதம் இந்தியர்கள் மாநாட்டுக்கு டெü ஜோன்ஸ் பைனான்சியல் நியூஸ் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இதில் பங்கேற்பதற்கான அழைப்பை நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

இதுதொடர்பாக பிரிட்டிஷ் உள்துறைச் செயலர் ஜேக் ஸமித்திற்கு, பிரிட்டனில் உள்ள இந்திய முஸ்லிம்கள் கவுன்சில் தலைவர் கே. முகமது முன்னாப் ஸீனா அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

குஜராத்தில் கடந்த 2002 முதல் முதல்வராக உள்ள நரேந்திர மோடி அந்த மாநிலத்தைச் சேர்ந்த முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

குஜராத்தில் நிகழ்ந்த மதக் கலவரங்களுக்கு அவர்தான் மூலகாரணம். அவர் பிரிட்டனுக்கு வர அனுமதித்தால், மத நல்லிணக்கத்துக்கு ஆபத்து ஏற்படும்.

இதே காரணத்துக்காக, கடந்த 2005-ல் நரேந்திர மோடி அமெரிக்காவில் நுழைவதற்காக வழங்கப்பட்ட விசா திரும்பப் பெறப்பட்டது. எனவே, அமெரிக்காவைப் போல, பிரிட்டனும் மோடிக்கு விசா வழங்காமல் நிராகரிக்க வேண்டும். மேலும், மோடியின் லண்டன் பயணத்தை ரத்து செய்யுமாறு இந்திய அரசிடம் பிரிட்டன் அறிவுறுத்த வேண்டும்.

Thursday, March 19, 2009

சாமியார் ஒருவர் கொடுத்த அட்வைஸ் மகள்களை 10 வருடமாக கற்பழித்த காமவெறி தந்தை கைது

மும்பை: நெஞ்சை உறைய வைக்கும் வகையில், தனது இரு மகள்களை கடந்த பத்து வருடங்களாக கட்டாயப்படுத்தி, அடைத்து வைத்து கற்பழித்து வந்த காமக் கொடூர தந்தையை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சமீபத்தில்தான் ஆஸ்திரியாவில் ஜோசப் பிரிட்ஸல் என்பவரை அங்குள்ள போலீஸார் கைது செய்தனர். அவர் மீதான குற்றம் என்னவென்றால், தனது மகளை 25 ஆண்டுகளாக வீட்டின் இருட்டறையில் அடைத்து வைத்து கற்பழித்தார் என்பதே.

சமீபத்தில்தான் இந்த வழக்கு அங்குள்ள கோர்ட்டி்ல விசாரணைக்கு வந்தது. அப்போது தனது தந்தை செய்த கொடுமைகளை பல மணி நேரம் வாக்குமூலமாக அளித்தார் அந்த அப்பாவி பெண்.

இந்த நிலையில் மும்பையில் இப்படி ஒரு அசிங்கமான சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார் 61 வயதாகும் ஒரு தொழிலதிபர். இந்த கொடும் குற்றத்திற்கு அவரது மனைவியும் துணை போயுள்ளார் என்பதுதான் நெஞ்சை பதற வைக்கும் செய்தியாக உள்ளது.

அந்த தொழிலதிபர் தனது 21 வயது மகளை கடந்த பத்து வருடங்களாக கற்பழித்து வந்துள்ளார். மேலும் 15 வயதாகும் 2வது மகளையும் கடந்த சில மாதங்களாக இதே செயலுக்காக பயன்படுத்தி வந்துள்ளார்.

தனது தங்கையையும் தந்தை கேவலப்படுத்த ஆரம்பித்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மூத்த மகள் தனது தாய் வழி பாட்டியிடம் நடந்ததைக் கூறி கதறியுள்ளார். இதையடுத்து இந்த அசிங்கமான செயல் வெளிச்சத்திற்கு வந்தது.

ஹஸ்முக் ரத்தோட் என்ற மடச் சாமியார் ஒருவர் கொடுத்த அட்வைஸ்படிதான் இந்த அசிங்கமான செயலை செய்து வந்துள்ளார் அந்த தொழிலதிபர். அந்த கேடிச் சாமியார்தான், உங்களது மகள்களை கற்பழித்தால் குடும்பம் விருத்தி அடையும் என கூறினாராம்.

தனது மூத்த மகளை 11வயதிலிருந்து கற்பழித்து வந்துள்ளார் அந்தத் தந்தை. மேலும் சாமியாரின் பேச்சைக் கேட்டு தனது இளைய மகளையும் கற்பழிக்க ஆரம்பித்தார். இதில் கொடுமை என்னவென்றால், அந்த சாமியாரும், தொழிலதிபரின் 2வது மகளை சிலமுறை கற்பழித்துள்ளார் என்பதுதான்.

தற்போது போலீஸார் அந்த காமக் கொடூர தந்தை, அத்தனையும் தெரிந்தும் அமைதியாக இருந்து வந்த அவரது மனைவி ஆகியோரைக் கைது செய்துள்ளனர்.

காங்கிரஸ் குடும்பத்தில் கோட்சேவின் சிந்தனையாளரா?


இந்துக்கள் நல்லவர்கள்.நாட்டின் நலனில் அக்கறை உள்ளவர்கள் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.அதே நேரத்தில், இந்துத்துவாக்கள் எனப்படுபவர்கள் தங்களின் சுயநலத்திற்காக, பதவி அரசியலுக்காக எதையும் பேசவும், எழுதவும், செய்யவும் தயங்கமாட்டார்கள். இப்படிப்பட்ட இந்த கும்பலில், காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்து, அகிம்சையை போத்தித்த காந்தியின் பெயரை தன்பெயரோடு ஒட்டிக்கொண்டு மதவாத பா.ஜ.க வில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் வருண்காந்தி என்பவர் பா.ஜ.க சார்பாக நாடாளுமன்ற வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.


மேற்படி வருண்காந்தி தேர்தல் பிரச்சாரத்தின்போது, இது எனது கை. காங்கிரஸின் சின்னம் அல்ல. இது பா.ஜ.கவின் பலம். இந்துக்களுக்கு எதிராக யாராவது விரலை நீட்டினாலோ, இந்துக்கள் பலவீனமடைந்து விட்டதாக, தலைமை இல்லாமல் போய்விட்டதாக நினைத்தாலோ, ஓட்டுக்காக இந்துதலைவர்கள் காலில் விழுவார்கள் என்று நினைத்தாலோ, பகவத் கீதையின்மீது சத்தியம் செய்து அத்தகையவர்களின் கையை வெட்டுவேன் என்று பேசியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வருணின் இந்த பேச்சை காங்கிரஸ் மட்டுமல்ல பா.ஜ.க. சேர்ந்த முக்தார் அப்பாஸ் நக்வி, ஷானவாஸ் ஹுசைன் உள்ளிட்டோர்கூட கண்டித்துள்ளனர்.


மேலும், வருணின் பேச்சை ஆய்வு செய்த தேர்தல் கமிஷன், ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவின் கீழ் வருணின்மீது வழக்கு தொடுக்க காவல்துறைக்கு உத்தவிட்டதையடுத்து இ.பி.கோ.153 [ஏ],மற்றும் 188 .பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. வருண்காந்தி கைது செய்யப்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இதில் வருன்மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் கம்பி எண்ணுவதோடு, தேர்தலிலும் போட்டியிடமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


இது ஒருபுறமிருக்க, வருணை போன்றவர்கள் இவ்வாறு பொது இடத்தில் பேசும் துணிச்சல் எங்கிருந்து கிடைத்தது எனில், கடந்த காலங்களில் மட்டுமல்ல வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மத துவேஷத்தோடு பேசி வரும் இந்துத்துவாக்களின்மீது நடவடிக்கை எடுக்கப்படாததுதான்.

*ரத யாத்திரை என்ற பெயரில் செல்லுமிடமெல்லாம் முஸ்லிம்விரோத கருத்துக்களை பேசி ரத்த யாத்திரை நடத்திய அத்வானிமீது நடவடிக்கை இல்லை.

*தனது பேச்சுக்களாலும், 'தலையங்கங்களாலும்' மும்பையில் சுமார் மூவாயிரம் முஸ்லிம்கள் கொள்ளப்பட காரணமான பால்தாக்கரே மீது நடவடிக்கை இல்லை.

*வட இந்தியர்களுக்கெதிரான தொடர் துவேஷத்தை கடைபிடிக்கும் ராஜ்தாக்கரே மீது நடவடிக்கை இல்லை.

*திரிசூலத்தில் உள்ள மூன்று சூலங்களின் ஒருமுனை முஸ்லிம்களையும், மறுமுனை கிறிஸ்தவர்களையும்,மற்றொரு முனை நாத்திகர்களையும் கருவறுக்கும் என்று பேசிய பிரவீன் தொகாடியா மீது நடவடிக்கை இல்லை.

*ராமர் பாலம் விஷயத்தில் எந்தெந்த அதிகாரிகள் ஈடுபடுகிறார்கள் என்று கணக்கெடுத்து வருகிறோம்.ராமர் பாலத்தை காக்க எங்கள் உயிரையும் கொடுக்க தயங்கமாட்டோம். எவரது உயிரையும் எடுக்கவும் தயங்கமாட்டோம் என்று பேசிய உமாபாரதி மீது நடவடிக்கை இல்லை.

*ராமர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார் என்று கருத்து சொன்னதற்காக, தமிழக முதல்வரின் தலையை கொண்டுவருபவர்களுக்கு சன்மானம் என்று அறிவித்த சாமியார் வேதாந்தி மீது நடவடிக்கை இல்லை.


இப்படி இந்துத்துவாக்களின் மத,மனிதநேய,சமூகத்திற்கெதிரான பேச்சுக்களை அடுக்கிகொண்டே போகலாம். இவ்வாறு அவர்கள் பேசும்போது உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், வருணுக்கு இவ்வாறு பேசும் துணிவு வந்திருக்காது. என்ன செய்ய! நம்ம நாட்டு சட்டம் ஏழைகள்/பலவீனர்களிடத்தில், ஐ.எஸ்.ஐ. தரச்சான்றிதல் பெற்ற 'முறுக்கு கம்பி' போல் விறைப்பாக நடந்து கொள்வதும், அதிகார வர்க்கம் விசயத்தில் 'நாணல்'போல வளைவதும் வாடிக்கைதானே! சட்டம் வருணுக்கு கருணை காட்டுமா அல்லது கடமையை செய்யுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.