Thursday, October 22, 2009

நர்ஸை கடத்தி கற்பழித்த 2 வண்டலூர் பூங்கா ஊழியர்கள்

சென்னை: போலீஸ்காரர்கள் போல் நடித்து நர்ஸை கடத்திச் சென்று கற்பழித்த வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த 32 வயதான நளினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நர்சாக பணியாற்றி வருகிறார். திருமணமான இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 18ம் தேதி இரவு நளினி தாம்பரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக ஆட்டோவில் சென்றார். ஆட்டோவை சரவணன் என்பவர் ஒட்டினான்.

தாம்பரத்தைத் தண்டியும் அவன் ஆட்டோவை படுவேகமாக ஓட்டினான். அதை நிறுத்துமாறு நளினி கூறினார். ஆனால், சரவணன் கேட்கவில்லை. தொடர்ந்து படுவேகத்தில் ஓட்டிய சரவணன் ஊரப்பாக்கம் நோக்கி சென்றான்.

இதனால் பயந்து போன நளினி ஆட்டோவிலிருந்து குதித்துவிடுவதாக எச்சரித்தார். இதையடுத்து வேகத்தை குறைத்த சரவணன், ஆட்டோவை தாம்பரம் நோக்கி திருப்பினான்.

இரவு 9 மணி அளவில் ஆட்டோ வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே வந்த போது இரண்டு பேர் ஆட்டோவை வழிமறித்தனர். தங்களை போலீஸ் என அவர்கள் கூறினர்.

இதை நம்பிய நளினி, ஆட்டோ டிரைவர் தன்னை தாம்பரத்தில் இறக்கிவிடாமல், ஊரப்பாக்கம் வரை கடத்தி வந்த தகவலை தெரிவித்தார்.

இதையடுத்து ஆட்டோ டிரைவரை மிரட்டி அஙிகிருந்து அனுப்பிய அந்த இருவரும் நளினியை போலீஸ் நிலையத்திற்கு செல்லலாம் என்று கூறி, தங்களது மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றனர்.

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கார் நிறுத்துமிடம் எதிரே உள்ள வனப் பகுதிக்கு தேவியை கொண்டு சென்ற அவர்கள் இருவரும் நளினியை மானபங்கம் செய்தனர்.

நளினி உதவிகேட்டு கதறியும் பலனில்லாமல் போனது. இதையடுத்து இருவரும் தப்பிச் சென்றுவிடவே, அந்த இருட்டில் வனப் பகுதியில் இருந்து நளினி தட்டுத்தடுமாறி தாம்பரம் வந்து சேர்ந்தார்.

இது குறித்து நளினி நேற்று முன்தினம் சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டிடம் புகார் செய்தார். இதைடுத்து இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் தலைமையில் தனிப்படை அமைத்து வழக்கை விசாரிக்க ஜாங்கிட் உத்தரவிட்டார்.

போலீசார் நடத்திய விசாரணையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் பயாலஜிஸ்ட்டாக பணிபுரியும் பாஸ்கர் (49), டிரைவராகப் பணிபுரியும் வெள்ளைச்சாமி (49) ஆகிய இருவரும் தான் இந்த கடத்தல், கற்பழிப்பில் ஈடுபட்டத தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். இருவரும் வண்டலூர் பூங்காவில் உள்ள குடியிருப்பில் தான் வசித்து வருகிறார்கள்.

கைதான இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது போல இன்னும் எத்தனை பெண்கள் இவர்களிடம் சிக்கி பாதிக்கப்பட்டனர் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

ஆட்டோ டிரைவர் சரவணனையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஹஜ் யாத்ரீகர்களுடன் உறவினர்கள் தொடர்புகொள்ள இணையதள வசதி

image


ஹஜ் புனித யாத்திரை செல்லும் இந்தியாவைச் சேர்ந்த முஸ்லிம் யாத்ரீகர்களுடன் அவர்களது உறவினர்கள் தொடர்புகொள்வதற்கு இணையதள வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை 200 பேர் அடங்கிய முதலாவது அணியினரின் ஹஜ் யாத்திரையை கொடியசைத்து தொடக்கிவைத்த பிறகு, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியது:

ஹஜ் யாத்திரை செல்லும் இந்திய யாத்ரீகர்களை தொடர்புகொள்வதற்காக, மெக்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கணினிகள் நிறுவப்பட்டுள்ளன. இந்திய ஹஜ் கமிட்டி இணையதளத்தின் மூலம், ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ள இந்திய யாத்ரீகர்கள் எங்குள்ளனர் என்பதை அவர்களது உறவினர்கள் அறிந்து கொள்ளலாம்.

சவூதி அரேபியாவில் இந்திய ஹஜ் யாத்ரீகர்கள் தங்கியிருக்கும் போது அவர்களுடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் கணினி வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இந்திய ஹஜ் கமிட்டி மூலம் 1,15,000 யாத்ரீகர்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்கின்றனர். இவர்கள் தவிர, இந்தியாவிலிருந்து தனியார் பயண ஏற்பாட்டாளர்கள் மூலம் 45,000 பேர் ஹஜ் யாத்திரை மேற்கொள்கின்றனர்.

இந்தியா முழுவதிலும் உள்ள 19 மையங்களிலிருந்து இந்த மாதம் 20 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 20 ஆம் தேதி வரை இவர்கள் ஹஜ் புனித யாத்திரையை மேற்கொள்கின்றனர். இந்த 19 மையங்களில் புதிதாக இடம் பெற்றுள்ள ராஞ்சி (ஜார்கண்ட்), மங்களூர் (கர்நாடகம்) ஆகிய மையங்களும் அடங்கும்.

ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்காக இந்தியாவிலும், சவூதி அரேபியாவிலும் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை மத்திய அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

ஜெட்டா, மெக்கா, மதினா, மினா, முன்னாவ்வரா உள்ளிட்ட இடங்களில் இந்திய ஹஜ் யாத்ரீகர்களுக்கு தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதற்கும், ஏற்கெனவே உள்ள வசதிகளை மேம்படுத்துவதற்கும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் இதர அமைப்புகளுடன் மத்திய வெளியுறவு அமைச்சகம் ஒருங்கிணைந்து செயலாற்றி வருகிறது.

2004 ஹஜ் யாத்திரையின் போது அறிமுகப்படுத்தப்பட்ட ரொக்கம் மற்றும் பொருள்கள் இழப்புக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கும் திட்டம் தொடரும்.

பன்றிக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க அரசின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சவூதி அரேபியாவில் உள்ள இந்திய மருத்துவக் குழுவினர் எந்த நிலைமையையும் சமாளிக்க ஆயத்த நிலையில் உள்ளனர்.

நமது நாட்டைச் சேர்ந்த யாத்ரீகர்களுக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம்.

ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவுவதற்காக, நிர்வாக மற்றும் மருத்துவ அலுவலர்கள் 600 பேரை மத்திய அரசு பணியில் ஈடுபடுத்தியுள்ளது. இவர்கள் மெக்கா, மதினா, ஜெட்டா, மினா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தங்கியிருந்து, இந்திய ஹஜ் யாத்ரீகர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுப்பர் என்றார் கிருஷ்ணா.

இந்த நிகழ்ச்சியில் தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், தில்லி வருவாய்த் துறை மற்றும் ஹஜ் விவகாரங்களுக்கான அமைச்சர் ராஜ்குமார் செளகான், இந்தியாவுக்கான சவூதி அரேபியத் தூதர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

18 இளம்பெண்களை கற்பழித்து கொலை செய்த ஆசிரியர் கைது

திருமண ஆசை காட்டி 18 இளம்பெண்களை கற்பழித்து, அவர்களுக்கு சயனைடு மாத்திரையை, கருத்தடை மாத்திரை என்று கொடுத்து கொலை செய்த ஆசிரியர் ஒருவரை மங்களூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம் தட்சின கன்னடா மாவட்ட மக்களை கலக்கிய இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

கர்நாடக மாநிலம் தட்சின கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா பரிமாரு கிராமத்தைச் சேர்ந்த அனிதா (வயது 22). இவர் கடந்த ஜுன் மாதம் 17-ந் தேதி காணாமல் போனார். அந்த பெண்ணை கண்டுபிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது.

காணாமல் போன அனிதாவின் செல்போனில் இருந்து யார், யாருக்கு பேசப்பட்டு இருக்கிறது என்பதை கவனமாக ஆய்வு செய்தனர். அப்போது ஆச்சரியப்படும் வகையில் ஏற்கனவே காணாமல் போயிருந்த சில பெண்களுக்கு அனிதா தொடர்பு கொண்டிருந்தது தெரியவந்தது. அந்த பெண்களின் செல்போன்களை தொடர்பு கொண்டபோது, அதில் ஒரு பெண்ணின் செல்போனை ஒருவன் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவன் அந்த செல்போனை மோகன்குமார் என்ற ஆனந்த் (வயது 46) என்பவனிடம் வாங்கியதாக தெரிவித்தான். உடனே போலீசார் மங்களூர் அருகே ஒரு வீட்டில் பதுங்கி இருந்த மோகன்குமாரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவன் அனிதாவை திருமண ஆசை காட்டி கற்பழித்து கொலை செய்தது தெரியவந்தது. மேலும் அவனிடம் துருவி, துருவி விசாரணை நடத்தியதில், கடந்த 5 ஆண்டுகளில் அவன் 18 பெண்களை கொலை செய்த திடுக்கிடும் தகவல் வெளியானது. தனது உடல் பசிக்காவும், பணத்துக்காகவும் அவர்களை கொன்றதை ஒப்புக்கொண்டான்.

அவனை கைது செய்து நடத்திய விசாரணையில், இளம்பெண்களை தனது வலையில் விழ வைத்தது எப்படி? என்ற தகவல் வெளியாகி உள்ளது. 30 வயதுக்கு மேலும் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களை நோட்டமிட்டு, வரதட்சணை இல்லாமல் அவர்களை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறுவான். இதில் மயங்கிய பெண்களை வெளிïருக்கு அழைத்துச் சென்று, ஓட்டல் அறைகளில் தங்க வைத்து தனது காமப்பசியை தீர்த்துக் கொள்வான்.

பின்னர், நாம் பாதுகாப்பற்ற `செக்ஸ்' உறவு வைத்துக்கொண்டதால், திருமணத்திற்கு முன்பு கர்ப்பம் ஆகிவிடக்கூடாது என்று கூறி கருத்தடை மாத்திரை சாப்பிடும்படி வற்புறுத்துவான். ஆனால், கருத்தடை மாத்திரைக்கு பதிலாக, சயனைடு மாத்திரை கொடுத்து கொடூரமான முறையில் கொலை செய்து இருக்கிறான்.

மோகன்குமார், 23 ஆண்டுகள் பல்வேறு இடங்களில் பள்ளிக்கூட ஆசிரியராக பணிபுரிந்து இருக்கிறான். கடந்த 2003-ம் ஆண்டில் ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்தபிறகுதான், இப்படி காமக்கொடூரனாக மாறி இருக்கிறான். ஏற்கனவே 3 பெண்களை திருமணம் செய்த அவன், முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்ட தகவலும் விசாரணையில் தெரியவந்தது.

கைதான மோகன்குமாரிடம் இருந்து 8 சயனைடு பொட்டலங்கள், 4 செல்போன்கள் மற்றும் கொலை செய்யப்பட்ட அனிதாவிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tuesday, October 13, 2009

யார் பத்தினி? ‘மாமா’க்கள் மோதல்!

யார் பத்தினி - மாமாக்கள் லடாய்!

ரஜினிகாந்த் கூற்றுப்படி இரண்டு வேளை உணவுக்காக விபச்சாரம் செய்த புவனேஸ்வரியை கைது செய்தது காவல்துறை.இதைன்பிறகு அவர் குறிப்பிட்டதாக கூறி சில நடிகைகளின் விலை விவரங்களையும் அவர்கள் புகைப்படங்களையும் வெளியிட்டது தினமலர். தொடர்ந்து செய்தித்தாள் படிப்பவர்களுக்கு இந்த செய்தி புதியதாக இருக்காது, செய்தியில் உள்ள புதிய தகவல் அவர்தம் கட்டணவிவரம்தான். பெயரை மட்டும் குறிப்பிடாமல் இந்த செய்தி எல்லா பத்திரிக்கைகளிலும் வந்தபடிதான் இருக்கிறது. ஸ்ரீபிரியா தன்னை ஒரு நடிகர் ஏமாற்றியதற்காக தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தபோது பாராமுகமாய் இருந்துவிட்டதைப்போல இன்னொரு வரலாற்றுத் தவறை செய்துவிடக்கூடாது என முடிவு செய்துவிட்ட நடிகர்சங்கம் உடனடியாக உலக நாயகன்.. மன்னிக்கவும் உலக சாதனையாளர், முதல்வர் கலைஞரை சந்தித்தார்கள். திரௌபதிக்கு சேலை கொடுத்த கிருஷ்ண பரமாத்மாவைப்போல நவயுக திரௌபதிகளுக்கு வன்கொடுமை சட்டத்தைத்தந்து அருள்பாலித்தார் கருணாநிதி.

சத்துணவு பணியாளர்கள் மாதக்கணக்கில் போராடியும் பார்க்க முடியாத முதல்வருக்கு நடிகர்களுக்கென ஒதுக்க எப்போதும் நேரமிருக்கிறது. அவர்கள் முறையிட்டவுடன் தினமலர் செய்தியாசிரியர் கைது செய்யப்படுகிறார். நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகு ஷகிலா உள்ளிட்ட நடிகர் நடிகைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் அவர் தவறவில்லை.

இதனிடையே நடந்த நடிகர்சங்க கூட்டத்தில் தங்கள் சுயரூபத்தை காட்டினார்கள் நடிகர்கள். அவர்கள் பேசியதைப்பார்த்தால் மறுநாள் தினமலர் பத்திரிக்கையே இருக்காதோ என சந்தேகம் பலருக்கு வந்திருக்கும். ஒரு விருதுக்காக ஊரையே எழுதித்தரும் பட்டத்துராஜா ஒருவர் கூப்பிடுதூரத்தில் இருக்கும்போது அவர்களுக்கு அப்படிச்செய்ய அவசியமிருக்காது.

ஜூன் மாதம் ஆனந்த விகடனுக்கு தான் அளித்த பேட்டியில் இலங்கைப் பிரச்சினையை பற்றி ‘ஆஃப் த ரெக்கார்ட்’ ஆக தன் கருத்துக்களை கவனமாக பேசிய சத்யராஜ் இந்த முறை அப்படியெல்லாம் பயப்படவில்லை, தினமலர் பொறுப்பாசிரியர் ஒரு வேசிமகன் என யாரெல்லாம் ஒத்துக்கொள்கிறீர்கள் என் கேள்வி எழுப்பினார். வேசிமகனுகான அடையாளங்களை சுலபமாக கண்டறியும் திறன் கொண்ட திரையுலகம் ஒட்டுமொத்தமாக கை உயர்த்தியது.

தான் பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய எந்திரம் செய்யும்படி சொல்லும் காட்சி வைத்ததால்தான் சென்னை மாநகராட்சி அப்படி ஒரு கருவி வாங்கியதாக உளறிய விவேக் எனும் கோமாளி இன்னும் ஒருபடி மேலே போய் பத்திரிக்கையாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படம் கேட்டார். சாதாரணமாகவே நடிகைகளை உள்ளடையுடன் ஆடவிடும் துறையில் இருப்பவரின் புத்தி பத்திரிக்கையாளர்களின் குடும்ப பெண்களுக்கு கிராபிக்ஸில் உள்ளாடை அணிவிக்கும் வகையில் சிந்திப்பதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

நடிகர்கள் உணர்ச்சிவயப்பட்டெல்லாம் அப்படிப்பேசவில்லை, அவர்கள் இயல்பே அப்படிதான் இல்லாவிட்டால் சக நடிகனுக்கு தனது படத்து வசனத்தின் மூலம் சவால் விட மாட்டார்கள். நடிகர்களின் யோக்கியதை மக்கள் எல்லோரும் அறிந்ததுதான், தாம் எவ்வளவு தூரம் கேவலமானவர்கள் என மக்களுக்கு தெரிவிக்கும் ஒரு வாய்ப்பாக இந்த கூட்டத்தை பயன்படுத்திக்கொண்டார்கள். தனது கட் அவுட்டுக்கு தன் செலவில் ( அல்லது தன் அப்பா செலவில்) பாலாபிசேகம் செய்யும் இவர்கள் நியாயமான முறையில் கோரிக்கை வைக்கமாட்டார்கள். அதன் வெளிப்பாடுதான் முதல்வரை சந்தித்து முறையிடுவது.

நடிகையை அவமானப்படுத்தி செய்தி வெளியிட்டதற்காக நடிகர்சங்கம் போராடுவதுதான் நமக்கு நெருடலாக இருக்கிறது. தமிழாசிரியர்களை இவர்கள் அவமானப்படுத்திய படங்கள் எத்தனை எத்தனை ?. கேரளப் பெண்களை ஒரு படத்திலேனும் இவர்கள் நாகரீகமாக காட்டியதுண்டா ? நடிகர்களைப்பற்றியோ தயாரிப்பாளர்களைப்பற்றியோ புகார் சொன்ன நடிகைகளின் குற்றச்சாட்டுக்களுக்கு இவர்கள் எடுத்த நடவடிக்கை என்ன ? தினமலர் ரமேஷை அக்கா தங்கையோடுதான் பிறந்தாயா என கேட்கும் ஸ்ரீபிரியா, பதின்வயது சிறுமிகளைக்கூட முத்தக்காட்சிகளில் நடிக்கவைக்கும் தன் சக ‘ கலைஞர்களை’ நோக்கி இந்த கேள்வியை எழுப்பியிருப்பாரா?

பஸ்டாண்டில் விபச்சாரத்திற்கு ஆள் பிடிப்பவன் புரோக்கர் என்றால், நடிகைகளின் அவயங்களை காட்டி படத்தை விற்கும் இவர்களை எப்படி அழைப்பது ? இவர்கள் எடுக்கும் நெருக்கமான காட்சிகள் ஒன்று நடிகையின் ஒப்புதல் பெற்ற பாலியல் அத்துமீறலாக இருக்கும் அல்லது நடிகையை கட்டாயப்படுத்தி செய்யப்படும் பாலியல் அத்துமீறலாக இருக்கும். இதைப்பற்றி கொஞ்சமும் வெட்கப்படாமல் கதைக்கு தேவையான கிளாமர் இருப்பதாக சொல்லும் இந்த மாமா கூட்டம் நடிகைகளின் மான அவமானத்தைப்பற்றி கவலைப்பட தகுதியுடையதுதானா ?. இவர்களுக்கும் புவனேஸ்வரிக்கும் என்ன வேறுபாடு?, இவர்கள் சொல்லும் நியாயத்தை அவரும் சொல்லக்கூடும், ஏனெனில் அவரும் விரும்பி வருவோரைத்தான் தொழிலுக்கு அனுப்புகிறார். அல்லது கஸ்டமர் கேட்பதை தருவதாககூட ஒரு நியாத்தை சொல்லலாம், ரசிகன் விரும்புவதைத்தான் படமாக எடுக்கிறோமென இயக்குனர்கள் சொல்வதைப்போல.

மற்றொருபுறம் பத்திரிகையாளர்கள் தங்களை ஒரு குடும்பம் என கூறிக்கொள்வதை தவறாக புரிந்துகொண்ட கலாநிதி மாறன் தனது தினசரியில் நடிகர்களின் கூட்டத்தை முழுப்பக்க செய்தியாக போடுகிறார், பின்னே அவர் குடும்ப சண்டையில் இப்படித்தானே நடந்துகொண்டார் ???. பொதுவாக பத்திரிக்கைத்துறையையே நடிகர்கள் திட்டியதால் இவர்கள் ஒன்று கூடினார்கள், நடிகர் சங்கம் தினமலரை மட்டும் திட்டியிருந்தால் இந்த ஒற்றுமையும் இருந்திருக்காது, ஜெயா ஆட்சியில் நக்கீரன் கோபாலை கைவிட்டதுபோல இப்போதும் நடந்துகொண்டிருப்பார்கள்.( கோபால் கைதை எதிர்த்து நடந்த கூட்டத்தின் புகைப்படத்தில் ராமின் படத்தை ஜாக்கிரதையாக தவிர்த்த ஹிண்டுவின் வீரம் அவ்வளவு சீக்கிரம் மறக்கக்கூடியதா என்ன ?? )

இரண்டு தரப்பும் ஒரு விசயத்தில் கவனமாக இருக்கிறார்கள். தங்கள் வசமுள்ள எதிர்தரப்பின் தவறுகள் பற்றிய தகவல்களை இருவருமே வெளியிடவில்லை. அதனால்தான் வெறும் வசவுகளோடும் வாய்சவாடல்களோடும் நிறுத்திக்கொள்கிறார்கள். ஏனெனில் ஆபாசம் இருவருக்குமே பொதுவான ஒரு மூலதனம், அதில் கைவைக்க இரண்டு வியாபாரிகளும் விரும்பமாட்டார்கள்.

நடிகைகள் தங்களை விபச்சாரிகள் என சொன்ன பத்திரிக்கைக்கு எதிராக போராடுவது கிடக்கட்டும்.. தங்களை விபச்சாரிகளை விட கேவலமாக நடத்தும் ( அல்லது திரையில் அப்படிக்காட்டும் ) திரையுலகிற்கு எதிராக முதலில் சிந்திக்கட்டும். இல்லவிட்டால் எப்போது இந்த மாதிரி செய்தி வந்தாலும் அது மக்களுக்கு ஒரு நினைவூட்டலாகவே அமையும்.

-நன்றி வில்லவன் , வினவு


Saturday, October 10, 2009

ரூ.20 கோடி கொடுத்தால் துணைவேந்தர்!

சென்னை: ரூ.10 கோடி முதல் ரூ.20 கோடி கொடுத்தால் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவியைப் பெற்றுவிடலாம் என்ற மோசமான நிலை நிலவுவதாக சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், ஐஐடி கான்பூர் தலைவருமான மு.அனந்தகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இந்தியத் தொழிலக கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) சார்பில் தேசிய அறிவுசார் ஆணையம் குறித்த யஷ்பால் கமிட்டியின் பரிந்துரைகள் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை [^]யில் நடந்தது.

இதில் பேசிய அனந்தகிருஷ்ணன்,

பல்கலைக்கழகங்கள், பட்டதாரிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள் அல்ல. சிறந்த சிந்தனைத் திறன் உடைய பட்டதாரிகளையும், ஆய்வு மாணவர்களையும் உருவாக்கும் இடம்.

பல்கலைக்கழகங்களில் உள்ள பாடதிட்டங்கள், தேர்வு முறைகள், கற்பிக்கும் முறை ஆகியவற்றை மறுசீரமைக்க வேண்டும்.

தனியார் கல்வி நிறுவனங்களில் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இல்லாமல், இளநிலை பட்டம் முடித்தவர்களே பாடம் நடத்தும் சூழல் உள்ளது. பி.எச்டி. முடித்தவர்கள் சொற்ப எண்ணிக்கையில் தான் பணியாற்றுகின்றனர்.

உயர்கல்வி யில் 15க்கும் மேற்பட்ட கவுன்சில்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் அங்கு முறைகேடுகளும், குளறுபடிகளும்தான் நடக்கின்றன.

யார் வேண்டுமானாலும் பணம் கொடுத்து துணைவேந்தராகலாம் என்ற நிலை உருவாகிவிட்டது. ரூ.10 கோடியோ, ரூ.20 கோடியோ கொடுத்தால் போதும், துணைவேந்தராகிவிடலாம்.

துணைவேந்தர்களை நியமனம் செய்வதில் அரசியல் தலையீடுகள், குறுக்கீடுகள் இருக்கக் கூடாது. பல்கலைக்கழகங்கள் செயல்பட அரசு நிதி மட்டும் ஒதுக்க வேண்டும். அவை தன்னாட்சியுடன் இயங்க வேண்டும்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி, எம்.எஸ். படிப்புக்கு ரூ.1.5 கோடி கொடுத்து சேரும் நிலை உள்ளது என்றார் அனந்தகிருஷ்ணன்.

Wednesday, October 7, 2009

திரையில் செய்தால் கலைச்சேவை; அறையில் செய்தால்...?


ஒரு காலத்தில் மக்களின் பொழுது போக்கு சாதனமாக நாடகங்களும், தெருகூத்துகளும் இருந்தன. அந்த கால கட்டத்தில் நாடகத்தில் பெண் வேடத்திற்கு ஒரு ஆண்தான் தேர்ந்தெடுக்கப்பட்டு பெண் வேடமிட்டுவருவார். பின்னாளில் பெண் வேடத்திற்கு நேரடியாக பெண்ணே வரும் நிலை வந்தது. ஆனாலும் நாயகனுக்கும்-நாயகிக்கும் இடைவெளி இருந்தது. இது ஆரம்பகால சினிமாக்களிலும் பார்க்கலாம். டூயட் பாடும் நாயகனும்-நாயகியும் ஆளுக்கொரு மரத்தை சுற்றிவருவார்கள். நாளடைவில் 'தொட்டுவிட தொட்டுவிடதொடரும்' என்று ஆரம்பித்து நாயகனும்-நாயகியும் தொட்டு பிறகு பட்டு, பிறகு கட்டிப்பிடித்து, பிறகு கட்டி உருள ஆரம்பித்து விட்டார்கள். இன்றைய இந்திய சினிமாவில் 99 சதவிகித ஆபாச காட்சிகள் அரங்கேறுவதை பார்க்கிறோம். ஒரு காலத்தில் அசிங்கமாக கருதப்பட்டவைகள் இன்று மக்களால் அங்கீகரிக்கப்பட்டவைகளாக மாறிவிட்டது. இதை நாம் இங்கே குறிப்பிடுவதற்கு காரணம் திரையில் ஆபாசத்தை விதைத்து இளைய சமுதாயத்தை வழிகெடுக்கும் இந்த திரை கூத்தாடிகளுக்கு பெரிய செயற்கரிய சாதனை செய்தது போன்று, மத்திய மாநில அரசுகளின் பாராட்டுக்கள்-கேடயங்கள்- விருதுகள். இது போக 'நடிக்கும்' இவர்களுக்கு சமூகத்தில் கிடைக்கும் அந்தஸ்த்தோ அளவிடமுடியாதது. நமது தெருவில் வசிக்கும் ஒரு பெண் இன்று பக்கத்துவீட்டுக்காரனுடன் கொஞ்சுகிறாள். நாளை அடுத்த வீட்டுக்காரனுடன் கொஞ்சுகிறாள், நாளை மறுநாள் எதிர் வீட்டுக்காரனுடன் கொஞ்சுகிறாள். இவளை சமூகம் என்னபெயர் சொல்லி அழைக்கும் என்பதை நாம் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. இதே காரியத்தை ஒரு பெண் திரையில் செய்தால்..? சரி விஷயத்திற்கு வருவோம்.

புவனேஷ்வரி என்ற ஒரு நடிகை விபச்சார வழக்கில் கைது செய்யப்படுகிறார். இவர் ஏற்கனவே ஒரு முறை கைது செய்யப்பட்டவர் என்பதால், ஏன் காவல்துறை என்னை மட்டும் குறிவைத்து பிடிக்கிறது என்று சாடியதோடு சில நடிகைகள் இதே தொழிலை[?] செய்வதாக புவனேஸ்வரி கூறியதாக பத்திரிக்கைகளில் செய்தி வெளியாக ஆடிப்போனது கனவு தொழிற்சாலை. உடனடியாக படை திரண்டு கமிஷனரிடம் மனு; கண்டனக்கூட்டம் என்று கனலை கக்க தொடங்கிவிட்டது. மறுபுறமோ விபசார வழக்கில் கைதான புவனேஸ்வரி கோர்ட்டில் ஆஜராக வரும்போது பர்தாவுடன் வந்தது முஸ்லீம் சமுதாயத்தைச் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.

காசுக்காக அனைத்தையும் 'துறக்கும்' இந்த கழிசடைகள் கைது செய்யப்பட்டவுடன் மட்டும் அனைத்தையும்'மூடுவது' ஏன் ? இந்த விபசாரிகள் பர்தா அணிந்து கோர்ட்டுக்கு செல்வதால் , வழக்கமாக பர்தா அணியும் ஒரு முஸ்லீம் பெண் தன் சொந்த வழக்கு விஷயமாக கோர்ட்டில் பர்தாவோடு நிற்கும் போது, இது அந்த மாதிரி 'கேஸோ' என்று பார்க்கும் நிலை உருவாகிறது. எனவே விபச்சாரிகள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும்போது பர்தா அணிவதை தடுக்கவேண்டும் என்று பலமுறை முஸ்லிம்கள் கூறியும் அரசு கண்டுகொள்வதாக இல்லை. இந்நிலையில்,
கொதித்தெழுந்த இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மகளிர் பிரிவு பெண்கள் திரண்டு சென்று கமிஷனரிடம், நடவடிக்கை எடுக்கக்கோரி மனு கொடுத்துள்ளனர். அதோடு இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எங்கள் அமைப்பு சார்பாக மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறியதாக பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது. எனவே அரசு இனியேனும் விழித்துக்கொண்டு முஸ்லீம் சமுதாயத்தின் கோரிக்கையின் மீது உரிய நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும். அதோடு சினிமாவால் சீரழியும் சமூகத்தை பாதுகாக்க, 'சென்சாரின் கத்திரியை' தீட்டவேண்டும். மேலும் விபசாரத்தின் மீதான தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்பதே கண்ணியம் காக்கும் மக்களின் ஆசையும் வேண்டுகோளுமாகும்.

இந்திய குடிமகனே இதை முதலில் படி ……

ஒவ்வொரு இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள விபரம்

மாத சம்பளம் ருபாய் 12,000 (பன்னிரண்டு ஆயிரம்)

அரசியல் செலவினங்களுக்கு ருபாய் 10,000 (பத்தாயிரம்)

அலுவலக செலவினங்களுக்கு ருபாய்14,000 ( பதினாலாயிரம)

போக்குவத்து செலவினங்களுக்கு ருபாய் 48,000 நாற்பத்தெட்டு ஆயிரம்

பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு ஒரு நாளைக்கு ருபாய் 500 (ஐநூறு)

முதல வகுப்பு ஏ சி இரயில் பயணம் முற்றிலும் இலவசம்எதனை முறை வேண்டுமானாலும் பயணிக்கலாம் .

முதல வகுப்பு விமான பயணம் நாற்பது முறை செல்லலாம் உடன் மனைவி அல்லது பி ஏ வை அழைத்து வரலாம்

டெல்லியில் தங்கும் விடுதி இலவசம்

மின்சாரம் 50,000 (ஐம்பது ஆயிரம) ் யுநிட் வரை இலவசம்
ஒரு லட்சத்து எழுபது ஆயிரம் உள்ளூர் தொலைபேசி அழைப்புகள் இலவசம்
ஆக மொத்தம் ஒரு எம் பி க்கு ஒரு மாதத்தி்ற்கு ருபாய் 260,000 இரண்டு லட்சத்து அறுபது ஆறாயிரம் ருபாய் செலவாகிறது
மொத்தம் உள்ள ஐநூற்றி முப்பது நான்கு எம்பி க்களுக்கு ஐந்து வருடதிற்ற்கு 854,40,00000 (எட்நூற்றி ஐம்பத்து நாலு கோடியே நாற்பது லட்சம்) செலவாகிறது (எம் பி என்ற தகுதியை விட வேறெந்த தகுதியும் தேவைல்லை )
இவை அனைத்தும் நம் நாட்டு மக்களின் வரிப்பணம்
ஆனால் நம் நாட்டு மக்களின் இன்றைய நிலை
file-3
file-2
file-1

Monday, October 5, 2009

மனைவியை கடத்திய கூலிப் படை-டிஎஸ்பி உடந்தை: கணவர் புகார்

Kanimoli and Rahman
சென்னை: கலப்பு மண காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணை கூலிப் படைக் கும்பல் கடத்திச் சென்றுள்ளது. இந்தக் கடத்தலில் மதுரையைச் சேர்ந்த டிஎஸ்பி ஒருவருக்கும் தொடர்புள்ளதாக புகார் தரப்பட்டுள்ளது.

பரமக்குடியைச் சேர்ந்த மன்சூர் ரகுமான் (22) தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த கனிமொழி (19) என்ற பெண்ணை காதலித்து திருமணம் [^] செய்து கொண்டார்.

இருவரும் சென்னையில் வசித்து வந்தனர். இந் நிலையில் தனது மனைவியை கூலிப்படையினர் கடத்திச் சென்றுவிட்டதாக போலீஸ் கமிஷனரிடம் புகார் [^] தந்துள்ளார் ரகுமான்.

அவர் தந்துள்ள புகாரில்,

எங்களது காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு [^] இருந்தது. இதனால் திருமணத்துக்குப் பின் இருவரும் அந்தமான் சென்றுவிடேடாம். பின்னர் வழக்கறிஞர் ஒருவரின் துணையுடன் சென்னை வந்தோம்.

இங்கு வந்த பின் கூலிப்படை கும்பல் எங்களை மதுரைக்கு கடத்திச் சென்றது. அங்கு வைத்து எனது மனைவியை என்னிடமிருந்து பிரித்து விட்டனர்.

எனது உயிருக்கும், குடும்பத்தினருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கு மதுரையை சேர்ந்த போலீஸ் டி.எஸ்.பி. ஒருவரும் இந்தக் கடத்தலுக்கு உடந்தையாக உள்ளார்.

எனவே இவர்கள் மீது நடவடிக்கை [^] எடுத்து என் மனைவியை மீட்டுத் தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

Sunday, October 4, 2009

பெண்களின் சதவிகிதம் குறைவு?

சென்ற மாதம் ராஜஸ்தானில் ஒரு பெண்ணை ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 சகோதரர்கள் திருமணம் செய்துக்கொண்டார்கள் என்ற அதிர்ச்சிகரமான நம்பத்தகுந்த செய்தி. அதுக்கு அவர்கள் சொல்லும் காரணம் பெண்கள் குறைவாக இருப்பதாகவும், பெண் கிடைப்பதில் (அது எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும்) மிகுந்த சிரமமாக இருப்பதாகவும் சொன்னார்கள். இந்த நிலை தமிழகத்திலும் உருவாக வாய்ப்பிறுக்கிறது என்பதுதான் வேதனை

இது பற்றி எஸ்.ஐ.ஆர்.டி (SIRD – State Institute of Rural Development) என்ற ஒரு தன்னார்வ தொண்டு அமைப்பு தீவிர விசாரனையில் இறங்கியது, அது வெளியிடும் ஒவ்வொரு தகவலும் அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது அதன்படி, தமிழகத்தில் நடப்பு ஆண்டில் 1000 ஆண்களுக்கு நிகராக 952 பெண்களே இருக்கிறார்கள், 1969 ல் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததாகவும் (அதற்காகதான் முன்னோர்கள் 1 க்கும் மேற்பட்ட கல்யாணம் செய்துக்கொண்டார்களோ?) இந்த் கணக்கீடு வரும் ஆண்டுக‌ளில் பெண்க‌ளின் எண்ணிக்கை மேலும் குறைந்து 469 ஆகும் என்ற‌ அதிர்ச்சிக‌ர‌மான‌ த‌க‌வ‌லை வெளியிட்டுள்ள‌து.

இத‌ற்கு அவ‌ர்க‌ள் கூறும் கார‌ண‌ங்க‌ள் கருவில் இருக்கும் குழந்தை ஆணா/பெண்ணா என்று தெரிந்துக்கொண்டு அந்த உயிரை கருப்பையிலேயே வைத்து அழித்துவிடுவது, இன்று குழந்தையின் வளர்ச்சியை பற்றி தெரிந்து அதற்கு தகுந்தார்போல மருந்துவகைகள் கொடுத்து ஆரோக்யமான பிரசவத்திற்கு வழிவகை செய்யும் தற்போதைய ஸ்கேன் செய்யும் முறை இன்று ஸ்கேன் செய்தவுடன் கருவில் இருக்கும் குழந்தை ஆணா/பெண்ணா என்று சொல்லப்படுகிறது, அதை வைத்து பெண் என்றால் மேற் சொன்ன முறையின் மூலம் கரு அழிக்கப்படுகிறது. ஸ்கேன் வசதி இல்லாத காலத்தில் குழந்தை பிறந்தவுடன் அது பெண்ணாக இருந்தால் கள்ளிப்பால் கொடுத்து கொன்றுவிடுவார்கள்

எஸ்.ஐ.ஆர்.டி என்ற தன்னார்வத்தொண்டின் தொண்டர்கள் நிறைய அடித்தட்டு கிராமங்களுக்கு சென்று களப்பணி செய்து நிறைய மக்களுக்கு பெண்குழந்தைகளின் மகத்துவத்தை பற்றி எடுத்துச்சொல்லிக்கொண்டிருக்கிறார்கள், இதன் மூலம் ஓரளவேனும் இந்த பெண் சிசு கொலை குறைய வாய்ப்பிருக்கிறது என்று ஆய்வரிக்கை சொல்லுகிறது.

100% கருத்தரித்தலின் போது 45% ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருப்பதால் (அ) ஒரு குழந்தை பிறந்து 2 மாதத்தில் மறு கருத்தரிப்பு (அ) பொருளாதார, வேலை சூழ்நிலையால் குழந்தை பிறப்பு தள்ளிவைப்பு இந்த காரணங்களால் கருக்கலைப்பு செய்யப்படுகிறது, 12% பெண் குழந்தை என்று தெரிந்து க‌ரு கொலை செய்ய‌ப்ப‌டுகிற‌து, மீதி 43% விரும்பி குழ‌ந்தை பெற்றுக்கொள்ள‌ப்ப‌டுகிற‌து. தற்போது அரசின் கடுமையான தண்டனை சட்டத்திற்கு பிறகு இரண்டு வெவ்வேறு உறுதிமொழி பத்திரங்களில் என்ன குழந்தை என்று சொல்லமாட்டோம் என்று மருத்துவரும், என்ன குழந்தையானாலும் ஆரோக்யமா இருந்தால் சரி அது என்ன குழந்தை என்று மருத்துவரை நச்சரித்து கேட்க மாட்டோம் என்று பெற்றோரும் கையெழுத்திட்ட பிறகே கர்பினிப்பெண் ஸ்கேன் செய்ய அனுமதிக்கப்படுகிறாள்.

ஒரு வாரத்தில் தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளில் 15% பெண் சிசுக்கள் அழிக்கப்படுவதால் அந்த 15% எப்பவும் வெற்றிடமாகவே இருக்கிறது, இந்த கணக்கீடு பிற்காலத்தில் பற்றாக்குறை 1000 க்கு 952 என்று நிற்கிறது. பெண் சிசு கொலைக்கு சொல்லப்படும் முதல் காரணம் வறுமை, வரதட்சணை. இந்த இரண்டு "வ" க்கும் ஆண் பிள்ளைக்கு சாதகமானதே அதனாலே ஆண் குழந்தை என்றாலே போற்றி பெருமிதம் கொள்கிறார்கள், இளைஞர்கள் வரதட்சணை வாங்கமாட்டோம் என்ற உறுதிமொழியில் உறுதிப்பட இருக்கவேண்டும்.

இந்த இடத்தில் நான் ஒன்றை மிகப்பெருமையா சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், என்னுடை நண்பர்கள் சேர்ந்து எடுத்த முடிவான வரதட்சணை வாங்க மாட்டோம் என்று உறுதி செய்து அதன் படி நடத்தியும் காட்டிருக்கிறோம்.

வளைகுடா நாடுகளில் பெண் குழந்தை என்றால் (அது எந்த நாட்டின் குழ‌ந்தைக‌ளாக‌ இருந்தாலும்) வாரி அணைத்து கொஞ்சி ம‌கிழ்வார்க‌ள், இந்த‌ நில‌மை ந‌ம்நாட்டிலும் வ‌ர‌வேண்டும், பெண் என்ற‌ பொக்கிஷம் பாதுகாத்து போற்றப்படவேண்டும்!


இந்தியாவின் தலைமகளின் சிக்கனம்?

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் பிரதீபா பாடீலுடன் அவரது உறவினர்கள் சுமார் 100 பேரும் சென்றுள்ளனர். தற்போது இவர்களின் செலவுக்கு யார் பணம் கொடுப்பார்கள் என்ற கேள்விக்கு விடை தெரியாமல் குஜராத் மாநில அரசு அதிகாரிகள் விழித்து வருகின்றனர்.


எந்த அரசு கொடுத்தா என்ன ? மொத்தத்தில் அது வரி மூலம் வசூலிக்கப்பட்ட மக்கள் பணம் தானே



உலகம் போற்றும் அணு விஞ்ஞானியாக இருந்து குடியரசுத் தலைவராக மாறிய அப்துல் கலாம் எளிமைக்கு பெயர் போனார். ஆடம்பர மாளிகை போல் இருந்த ஜனாதிபதி மாளிகை ஒரு சாதாரண இடமாக மாற்றியவர். மிக மிக சிக்கனமாக செயல்பட்டவர் கலாம்.

அது யார் தப்பு? அவர் ஒரு இளிச்சவாயராக இருந்தால் மத்தவங்களா பொறுப்பு.



அவரை அடுத்து தற்போது குடியரசுத் தலைவராக பிரதீபா பாடீல் இருந்து வருகிறார். அடுத்த மாதம் 13ம் தேதி நடக்கவிருக்கும் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் அவரது மகன் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.

அதனாலென்ன ஜனாதிபதி பதவிக்கு வரவங்க புனிதமாதான் இருக்கனும்னு நினைக்கிறது பழைய பஞ்சாங்க காலம் .



இந்நிலையில் தற்போது குஜராத் மாநிலத்தில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதீபா, தன்னுடன் 100 உறவினர்களையும் அழைத்து சென்று இருக்கிறார்.

100 பேர் மட்டும்தானே ....
எவ்வளவு பெருந்தன்மை பாருங்க

இவர்களுக்கு அங்குள்ள அரசு விருந்தினர் விடுதிகளில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
சோம்நாத் கோவில், காந்தி பிறந்த போர்பந்தர், கிர் காடு மற்றும் துவாரகா கோவில் ஆகியவற்றுக்கு செல்ல இருக்கிறார் பிரதீபா.
மகாராஷ்டிராவை சேர்ந்த இவர்களுக்காக குஜராத்தில் உள்ளூர் பகுதிகளை சுற்றி பார்க்க ஏசி பஸ் மற்றும் கார்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே, குடியரசுத் தலைவருடன் வரும் இந்த மெகா உறவினர் கூட்டத்தின் செலவுகளை யார் ஏற்பார்கள் என்பதை இதுவரை குடியரசுத் தலைவர் மாளிகை சொல்லவில்லையாம்.
குடியரசுத் தலைவரின் அலுவலர்கள் கூட, வந்திருப்பவர்களின் தனி செலவுகளுக்கு பணம் கொடுப்பது பற்றி எதுவும் வாய் திறக்கவில்லை என்றார்.


டிஸ்கி : அப்துல்கலாம் அவர்கள் ஜனாதிபதியாக இருந்தபொழுது, ஒரு முறை அவருடைய உடன்பிறந்த அண்ணன், தன் தம்பியை பார்க்க வந்து சில நாட்கள் ஜனாதிபதி மாளிகையில் தங்கினார். அவருக்கான செலவுகளுக்கு ஆன பணத்தினை தன் சொந்த காசில் இருந்து அப்துல்கலாம் அவர்கள் அரசுக்கு கட்டினார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

வாழ்க ஜனநாயகம்!