Tuesday, June 8, 2010

முஸ்லிம்கள் - விடுதலைப்புலிகள்

பாலஸ்தீனத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இஸ்ரேலிய பாசிசம் நடத்தும் இனவெறிக்கு நிகரான போக்கை மேற்கொள்வதில் விடுதலைப்புலிகள் என்ற பயங்கரவாத அமைப்பு எப்போதும் முன்னணி வகிக்கின்றது. ஆனால் சர்வதேச அளவில் இஸ்ரேலுக்கு எதிராக வரும் கண்டனங்கள் போன்று விடுதலைப்புலிகளுக்கு எதிரான கண்டனங்கள் உலகில் ஒலிக்கவில்லை. முஸ்லிம்களுக்கு எதிரான வெறியாட்டத்திற்கு இவர்களுக்கு 'தமிழீழம்' என்ற முகமூடி தேவைப்பட்டது - பயன்பட்டது. கடந்த 25 ஆண்டுகளில் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இந்த வெறியர்கள் நடத்திய கொலையாட்டங்கள் வெளி உலகிற்கு ஒரு நாள் நிச்சயம் தெரியவரும்.


ஆகஸ்ட் மாதம் அங்கு நடந்த - விடுதலைப் புலிகள் நடத்திய - அதனால் உயிரிழந்த முஸ்லிம்களை நினைவுக் கூறுவோம். அவர்களின் மறுமை வாழ்வுக்காக துஆ செய்வோம். இணைய ஆசிரியர்

மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் (யாழ்ப்பாணம்) அமைப்பினால் 08.05.1991 அன்று வெளியிடப்பட்ட அறிக்கை இலக்கம் 7 இலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பகுதியின் தமிழ் மொழிபெயர்ப்பு

பக்கம் 16

2.5 காத்தான்குடி

இந்திய அமைதி காக்கும் படை நிலைகொண்டிருந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் காத்தான்குடி முஸ்லிம்களுடன் நல்லுறவைக் கொண்டிருந்ததுடன், பிரச்சினையான சமயங்களில் அங்கு அடைக்கலம் பெற்றும் வந்தனர். டிசம்பர் 1989ல் இப்பகுதி புலிகளின் கட்டுப்பாட்டில் வந்த போது, முதல் இரண்டு வாரங்கள் அவர்களது நடைமுறைகள் மிகவும் சிறப்பான முறையில் அமைந்திருந்தது. அப்போது முஸ்லிம்களின் நம்பிக்கையும் உயர்மட்டத்தில் இருந்தது. ஆயினும் இதன் பின்னர் நிலைமைகள் படிப்படியாக கீழ்மட்டங்களுக்கு வீழ்ச்சியடையத் தொடங்கின. புலிகளால் கோரப்பட்ட அதிகளவு கப்பம் பெருமளவு வணிகத்திலேயே தங்கியிருந்த மக்களை பெரிதும் சுமைக்குள்ளாக்கியது. முஸ்லிம்களின் சுயாதீனமான நடவடிக்கை எதற்கும் பாதகமான அணுகுமுறைகளை புலிகள் ஆரம்பித்தனர். சிறியளவு புலி ஆதரவாளர்களுக்கான எதிர்ப்புகளும் அதற்கான பதில் நடவடிக்கைகளும் காணப்பட்டன.

ஆயினும் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட முஸ்லிம் தலைமைத்துவம் புலிகளை உரிய முறையில் அணுகி தொடர்ந்த தலையீட்டின் ஊடாக விடயங்களைச் சரிப்படுத்தி வந்தது. சம்மேளனமானது 'புலிகள் முஸ்லிம்களுக்கு மதிப்பளித்து அவர்களது சுய நிர்ணய உரிமையை புலிகள் ஏற்றுக் கொள்ளாத வரை அவர்களுடன் தொடர்பு வைத்திருப்பது இகழ்வுக்குரியது' எனும் நிலைப்பாட்டைக் கொண்டிருந்த கடும்போக்குடைய இளைஞர்களிடமிருந்து குறிப்பிடத்தக்களவு அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சம்மேளனம் ஏனைய முஸ்லிம் தலைவர்களுடன் இணைந்து புலிகளை பொறுப்புணர்வுடன் நடக்க வைக்கத்தக்க நட்புறவான அழுத்தத்தை தொடர்ந்து ஏற்படுத்திய போதிலும், முஸ்லிம்களின் அனைத்து சுயாதீன கருத்து வெளியீட்டு வகைகளையும் உடைக்கத் தக்கதாக புலிகளால் தடைசெய்யப்பட்டது.

யோகி கிழக்குக்கு வருகை தந்த போது, உள்ளூர்த் தலைமைகள் சம்மேளனத்தின் மீதான தடை ஏற்படுத்தியுள்ள பாதகமான சூழ்நிலை குறித்து அவருக்கு விளக்கினர். அவர்கள் புலிகளை எதிர்க்கவோ புலிகளின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கவோ முஸ்லிம்கள் எவ்விதத்திலும் முயற்சிக்கவில்லை என்றும், யோகி இத்தடையை உத்தியோகபூர்வமாக நீக்கினாலும் அவர்கள் வழமை போன்று செயற்பட முடியும் என்றும் விளக்கினர். யோகி இத்தடையை நீக்கினார் எனினும் முஸ்லிம்களின் ஏனைய கோரிக்கைகள் மீது பாராமுகமாகவே செயற்பட்டார். ஓரளவு வழமையான நிலைகளும் உறவும் தொடர்ந்தன. காத்தான்குடியின் மூத்த தலைமுறையோடு அடிக்கடி நட்புறவான தொடர்புகளைக் கொண்டவர்களாக புலிகளின் பிராநதியத் தலைவர்களான நியூற்றன், கரிகாலன், டேவிற் மற்றும் ரஞ்சித் அப்பா ஆகியோர் காணப்பட்டனர்

ஜூன் யுத்தம்: யுத்தத்தின் ஆரம்பத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்தின் நேரடி தரைவழிப் பாதைகள் மூடப்பட்டதாலும், தமிழ் வர்த்தகர்களும் அவர்களது லொறிகளும் மாவட்டத்திற்கு வெளியே செல்ல முடியாததாலும், காத்தான்குடி வர்த்தகர்கள் கல்முனையிலிருந்து பொருட்களை முக்கியமாக உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொண்டதாலும், மட்டக்களப்பு மாவட்ட மக்களிடையே காத்தான்குடியின் முக்கியத்துவம் அதிகரித்ததோடு, காத்தான்குடி முழு மாவட்டத்துக்குமான உணவு மூலமாக மாறியது. வெளியில் வசிக்கும் மக்கள் உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்ய கூட்டம் கூட்டமாக காத்தான்குடிக்கு வருகை தந்தனர்.

ஜின்னா ஹாஜியார் காத்தான்குடியின் மஞ்சந்தொடுவாய் எல்லைப் பகுதியில் வசிக்கும் அரிசி ஆலை உரிமையாளர் ஆவார். அவர் ரஞ்சித் அப்பாவை அறிந்திருந்தார். யுத்தம் உக்கிரமான பொழுதில் ரஞ்சித் அப்பாவிடம் ஜின்னா ஹாஜியார் அப்பாவித்தனமாக 'காத்தான்குடி மக்களுக்கு தீங்குகள் ஏற்படாமல் நீங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டிருந்தார். அச்சமயம் சிங்கள பொலிசாருடன் சேர்த்து முஸ்லிம் பொலிசாரும் பெரும் எண்ணிக்கையில் புலிகளால் கொல்லப்பட்டிருந்தும், காத்தான்குடியின் பொது நிலைப்பாடு இதை யுத்த அடிப்படையில் நியாயப்படுத்தத் தக்கதாகவே அமைந்திருந்தது.

ஜூன் 26ம் திகதி புலிகள் காத்தான்குடிக்குள் பெரும் எண்ணிக்கையில் பிரவேசித்து ஊரடங்கை பிரகடனப்படுத்தி பிரதான வீதியின் இருபுறங்களிலும் அமைந்திருந்த கடைகளை களவாடத் தொடங்கியது மக்களைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. விடயத்தை அறியாமல் பிரதான வீதிக்கு வந்த ஒருவர் கொல்லப்பட்டார். மாவட்டத்தில் தமிழ் கிராமங்களையும் உள்ளடக்கியாதாகத் தொடர்ந்த ஒன்றாகவே இக் களவுகள் காணப்பட்டாலும், பள்ளிவாயல் ஒன்றின் வருமானத்துக்காய் இயங்கிய அப் பள்ளிவாயலின் அருகில் காணப்பட்ட 3 கடைகள் புலிகளால் எரியூட்டப்ட்டமை முஸலிம்களை மிகவும் பாதித்தது. புலிகள் அங்கிருந்து சென்ற உடனேயே விரைந்த மக்களால் பள்ளிவாயல் தீயிலிருந்து பாதுகாக்கப்பட்டது. தொடர் கடைத்தெருக் களவாடல்கள் மாவட்ட மக்களின் உணவு விநியோகத்தை முற்றாகவே முடக்கியது.

உள்ளூர் முஸ்லிம் தலைமைகள் ரோமன் கத்தோலிக்க திருச்சபை அதிகாரிகளுடன் நட்புறவான பிரதிநிதுத்துவப்படுத்தலைக் கொண்டிருந்தனர். களவாடலின் ஒரு வார நிறைவில் புலிகளின் உள்ளுர்த் தலைவர்களான நியுற்றன் மற்றும் ரஞ்சித் அப்பா ஆகியோர் காத்தான்குடிக்கு வந்து 15 மூத்தோருடன் சந்திப்பொன்றை மேற்கொண்டனர். இதில் தவறுக்காக மன்னிப்பையும் கோரியிருந்தனர். மேலும் எதிர்காலத்தில் புலிகளின் நன்னடத்தைக்கான உறுதியையும் அளித்திருந்தனர்.

முஸ்லிம்கள் சற்றே நம்பிக்கையுடன் காணப்பட்ட போதும், அதற்கு பெரும் ஊறு விளைவிக்கும் வகையில் புலிகள் காத்தானகுடிக்குத் தெற்கே 3 மைல் தூரத்திலுள்ள குருக்கல்மடத்தில் ஜூலை 12ம் திகதி 68 முஸ்லிம்களைப் படுகொலை செய்தனர். கொல்லப்பட்ட அனைவரும் காத்தான்குடியைச் சேர்ந்தோர் ஆயினும், இதற்கான காரணத்தை கண்டறியும் பாங்கில், புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறிய முஸ்லிம் ஒருவர் கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் அமைந்திருந்த புலிகளின் மறைவிடத்தை இராணுவத்துக்கு காட்டிக்கொடுத்தமைக்குப் பழிவாங்கவே இப்படுகொலைகள் இடம்பெற்றன எனும் கதை ஒன்று அப்போது நிலவியது.

ஆகஸ்ட் 3 மனிதப் படுகெலைகள்: விபரங்கள் 4ம், 5ம் இலக்க அறிக்கைகளில் உள்ளன, இப்படுகொலைகள் முஸ்லிம்களிடம் புலிகளுடன் எவ்வாறானதொரு தொடர்பையும் வைத்திருக்க முடியாது எனும் மனநிலையைத் தோற்றுவித்தன. இவையும் ஜூலை 12 படுகொலைகள் போன்றே எவ்வித அடிப்படையும் அற்றவை. சம்மேளன செயலாளரால் யார் இக்கொலைகளைச் செய்தது என்பதில் நிறைந்திருந்த குழப்பத்தை தணிக்கும் முகமாக ஒரு அறிக்கை விடுக்கப்பட்டது. மக்களிடம் ராணுவமே பொறுப்பு என்ற கதைகளும் காணப்பட்டன ஆயினும் உள்ளுர்த் தலைவர்கள் புலிகள் அவ்விடத்தில் காணப்பட்டதையும், அவர்களே பொறுப்பென்பதையும் விபரித்தனர்

ஆகஸ்ட் 3 பள்ளிவாயல் படுகொலைக்கு சற்று முன்னர் ஜின்னா ஹாஜியாரின் வீட்டுக்குச் சென்ற ரஞ்சித் அப்பா அவரின் மருமகன் எங்கே என்று கேட்டுள்ளான். மருமகனின் சிறிய மகன் தந்தை குளியலறையில் இருப்பதாகக் கூறினார். ரஞ்சித் அப்பா அங்கு அடிக்கடி வருபவர் ஆகையால் எதையும் வித்தியாசமாக அவர்கள் உணரவில்லை. மருமகன் ரஞ்சித் அப்பாவை சந்திக்க வெளியே வந்ததும் அவனால் மனையியினதும் மகனினதும் முன்னிலையிலேயே சுட்டுக்கொல்லப்பட்டார். பின்னர் ரஞ்சித் அப்பாவின் தலைமையில் வந்திருந்த புலிகள் அணி இரு பள்ளிவாயல்களுக்குச் சென்று இரவு 8.30 அளவில் 102 பேரைச் சுட்டுக் கொன்றது. இப்படுகெலைகள் முஸ்லிம்களின் தொழுகையின் மிகப் புனிதமான சுஜூது நிலையில் இருந்தோர் மீது மேற்கொள்ளப்பட்டது.

சுஹதாக்கள் விபரம்


03 ஆகஸ்ட் 1990 அன்று காத்தான்குடி 1ம் குறிச்சி மீரா ஜும்ஆப் பள்ளிவாயல் மற்றும் ஹுஸைனியாப் பள்ளிவாயல் ஆகியவற்றில் இசாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் விபரம்

எம். எஸ். எம். அக்ரம் (06)
எம். எஸ். எம். தல்ஹான் (08)
எஸ். ஏ. எம். இம்தியாஸ் (09)
எம். சீ. எம். றிஸ்வான் (10)
எம். ஐ. ஜரூன் (10)
எஸ். செய்யது அஜ்மல் (10)
எம். ஐ. அஸ்றப் (11)
எம். ஐ. எம். ஆரிப் (12)
எம். கமர்தீன் (12)
எம். ஐ. எம். அஜ்மல் (12)
ஏ. எல். மக்கீன் (12)
எம். எஸ். எம். பௌசர் (12)
ஏ. எல். அபுல்ஹசன் (12)
வை. எல். எம். ஹரீஸ் (12)
எம். எஸ். எம். ஜவாத் (13)
எம். எஸ். பைசல் (13)
எம். பீ ஜவாத் (13)
யூ. எல். எம். அனஸ் (13)
ஏ. எல் அப்துல் சமத் (14)
எச். எம். பௌசர் (14)
ஏ. ஜௌபர் (14)
எம். எஸ். எம் சகூர் (14)
ஏ. சமீம் (14)
பீ. எம். முஹம்மத் பஸ்லூன் (15)
எம். இஸ்ஸதீன் (15)
எம். எம். எம். பைசல் (15)
எம். வை. இனாமுல் ஹசன் (16)
எம். இக்பால் (16)
எஸ். எம். சித்தீக் (16)
எம். ஐ. ஜௌபர் (17)
கே. எல். முஹம்மத் றாபி (17)
எம். எம். எம். ஜௌபர் (17)
எஸ். சுல்பிகார் (17)
யூ. எல். முஹைதீன் (17)
எம். ரீ. ஜௌபர் (17)
எஸ். ஏ. எம் ஐன்சாத் (18)
எச். கே. எம். ஆரிப் (18)
ஐ. றபீக் (18)
எம். எஸ். அப்துல் முத்தலிப் (18)
எம். ஏ. எம். அமீன் (20)
ஏ. எல் சலாஹுதீன் (20)
எம். எம். அஸ்றப் கான் (20)
எம். எஸ். ஏ. சுஹைப் (20)
ஏ. எல் சலாஹுதீன் (20)
எம். ஐ. ஹுசைன் (20)
எம். எம். ஜுனைத் (21)
எம். அப்துல் நவாஸ் (21)
எம். ஏ. பௌசர் (21)
எம். ஐ. ஹசன் (22)
எம். ஆர். அப்துல் சலாம் (23)
எஸ். எல். எம். ஜுனைத் (23)
எம். எஸ். அப்துல் றஹீம் (25)
ஏ. பீ. எம். யாசீன் (26)
எம். எல். எம். தாஹிர் (27)
எம். ஐ. அப்துல கபூர் (28)
யூ. எல். எம். இப்றாஹீம் (28)
எம். ஐ. கமால்தீன் (30)
ஏ. பாறூக் (30)
ஏ. றம்ளான் (30)
ஏ. நூர்தீன் (30)
ஏ. கே. ஹாறூன் (31)
எஸ். எச். எம். நஸீர் (32)
எம். சம்சுதீன் (33)
எம். பீ. எம் ஜுனைத் (34)
வீ. எம். இஸ்மாயில் (37)
எம். ஏ. சீ. எம். புஹாரி (35)
எம். சீ. எம். பரீத் (35)
பீ. எம். எம். இப்றாஹீம் (35)
எம். ஐ. ஏ. அஸீஸ் (37)
எஸ். ஏ. மஜீத் (37)
எம். உமர் லெப்பை (38)
எம். ஹனீபா (38)
எம். பீ. ஏ. சமத் (38)
எம். எம். இஸ்மாயில் (40)
ஏ. சீ. எம். நஸ்றுதீன் (40)
எச். எம். எம். சமசுன் (40)
எம். ஏ. எம். அப்துல் காதர் (40)
எம். எஸ். எம். சஹாப்தீன் (41)
கே. எம். ஏ. அஸீஸ் (42)
கே. எல். எம். றஹ்மதுல்லா (42)
எச். எம். மீராலெப்பை (43)
எம். ஏ. தம்பிலெப்பை (45)
என். எம். இஸ்மாயில் (45)
பீ. எம். அப்துல் காதர் (45)
எம். எம். ஹனீபா (46)
ஏ. ஆர். ஆதம் பாவா (47)
எம். எஸ். அப்துல் முத்தலிப் (47)
எம் லெப்பைத்தம்பி (48)
ஏ. எம். சலாஹுதீன் (48)
எம். ஐ. ஆதம்லெப்பை (52)
ஏ. சரீபுதீன் (52)
ஆர். எம் அன்வர் (53)
எம். எம். காசிம் (54)
எம். எம். அசனார் (55)
எம். ரீ. எம். அசனார் (55)
ஏ. எல். கச்சி முஹமமத் (56)
ஏ. ஆதம் லெப்பை (57)
ஏ. எம். முஹம்மத் முஸ்தபா (59)
எஸ். எம். ஹயாத்து கலந்தர் (60)
ஏ. எம். கலந்தர் லெப்பை (60)
எம். எம். சஹாப்தீன் (60)
ஏ. பக்கீர் முஹைதீன் (65)
எம். எல். முஹம்மத் முத்து (70)
எஸ். எம். எம். முஸ்தபா (72)
12 ஆகஸ்ட் 1990 அன்று ஏறாவூர் சதாம் ஹுசைன் கிராமத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மிலேச்சத்தனமாக வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் விபரம்.

ஏ. றஹ்மத்தும்மா (40) பெண்
எம். பீ. ஹிதாயா (16) பெண்
எம். பீ. சரீனா (14) பெண்
எம். பீ. ஹபீபா (12) பெண்
ஏ. உசனார் (30) ஆண்
யூ. லாபிர் (03) ஆண்
எம். எல். சீனி முஹம்மத் (47) ஆண்
எஸ். எம். அஸ்மி (11) ஆண்
எம். மஹ்மூத் லெப்பை (70) ஆண்
சாஹிறா உம்மா (65) பெண்
எஸ். எம். காசிம் லெப்பை (37) ஆண்
எம். எஸ். நதீமா (27) பெண்
சீ. ஏ. எம். இஸ்மாயில் (46) ஆண்
வீ. ரீ. கதீஜா பீவி (30) பெண்
எம். எல். றமீஸ் (16) ஆண்
எம். எல். சமீமா (10) பெண்
எம். எல். எப். றிஸ்னா (05) பெண்
எம். ஐ. எம். சானாஸ் (05 மாதம்) பெண்
எஸ். எம். வெள்ளைத்தம்பி (70) ஆண்
ஏ. பீ. வெள்ளை உம்மா (65) பெண்
ஏ. எல். புஹாரி (30) ஆண்
வீ. ரீ. பரீதா (25) பெண்
ஏ. றிபாகா (01) பெண்
எஸ். ஏ. ஆயிஸா (25) பெண்
எம். ஜனூபா (20) பெண்
எஸ். சனூஸியா (01) பெண்
வீ. ஆமினா (40) பெண்
எம். எஸ். மதீனா உம்மா (23) பெண்
எம். எஸ். ஜிப்ரியா (12) பெண்
எம். எஸ். றமீஸா (10) பெண்
எம். எஸ். றம்சுலா (07) பெண்
எம். எஸ். சஹீலா (04) பெண்
எம். எஸ். மஹ்ரிபா (25) பெண்
எஸ். எல் நஜீபா (04) பெண்
எஸ். எல். நஸ்ரின் (06) பெண்
எம். பீ. பொன்னி உம்மா (65) பெண்
எம். பீ. மஹ்மூத் (55) ஆண்
ரீ. கே. சிமிலத்தும்மா (70) பெண்
ரீ. கே. சின்னலெப்பை (75) ஆண்
ஏ. ஆமினா (65) பெண்
எம். எப். நசார் (18) ஆண்
ஏ. செல்லத்தும்மா (45) பெண்
வை. ஐ. அலியார் (50) ஆண்
ஐ. எம். ஹம்சா (25) ஆண்
எம். எச். நிபாஸ் (14) ஆண்
ஐ. இஸ்மாயில் (45) ஆண்
எல். காதர் (18) ஆண்
எம். சீ. வெள்ளைத்தம்பி (50) ஆண்
வை. எம். சரீப் (30) ஆண்
கே. பீ. கச்சி முஹம்மத் (50) ஆண்
எம். ஐ. பாறூக் (35) ஆண்
எம். எல். தாஹிர் (25) ஆண்
ஏ. எல். அமீனா உம்மா (57) பெண்
எம். ஐ. குழந்தை உம்மா (40) பெண்
எம். ஐ. எம். ஜாபிர் (23) ஆண்
எஸ். ஐ. எம் முஹைதீன் பாவா (50) ஆண்
எம். ஐ. சீனி முஹம்மத் (75) ஆண்
ஏ. ஹயாத்து முஹம்மத் (50) ஆண்
ஐ. ஜுனைத் (40) ஆண்
எம். எஸ். ஐதுரூஸ் (11) ஆண்
வீ. கே. காசிம் லெப்பை (38) ஆண்
வீ. கே. கச்சி உம்மா (40) பெண்
எம். ஐ. காதர் அலி (35) ஆண்
சீ. ஏ. அனீஸா உம்மா (45) பெண்
சீ. ஏ. சுலைஹா (50) பெண்
யூ. எம். இஸ்மாயில் (58) ஆண்
யூ. சர்வான் உம்மா (38) பெண்
எம். ஐ. எஸ். லரீபா (17) பெண்
எம். எல். எம். சித்தீக் (15) ஆண்
எம். ஐ. சபீரா (06) பெண்
எம். ஐ. எம். தாஹிர் (06) ஆண்
யூ. ஐ. எஸ். உம்மா (40) பெண்
எச். எம். ஜெமீலா (20) பெண்
எச். எம். ஜனூரா (18) பெண்
எச். எம். ஹிதாயா (08) பெண்
எச். எம். பஸ்மி (03) ஆண்
எச். எம். இஸ்மாயில் (30) ஆண்
ஏ. எம். ஆமினா உம்மா (20) பெண்
எம். ஐ. பர்சானா (02) பெண்
எம். ஐ. பர்சான் (01) ஆண்
எச். கே. அஹ்மத் லெப்பை (81) ஆண்
ஏ. எல். நயிமுதீன் (12) ஆண்
ஏ. எல். பாத்தும்மா (10) பெண்
ஏ. எல். அன்சாரா (1 மாதம்) பெண்
ஜே. எம். நௌபர் (11) ஆண்
பீ. எம். நூர்ஜஹான் (16) பெண்
பீ. எம். ஹாஜறா (24) பெண்
யூ. எல். ஏ. சதார் (13) ஆண்
ஆர். ஹிதாயா (10) பெண்
எம். கே. முஹம்மத் லெப்பை (20) ஆண்
வீ. கே. நஜீமா (30) பெண்
ஏ. எஸ். பைரூஸ் (8 மாதம்) ஆண்
எஸ். எல். ஹபீபா (19) பெண்
எம். எல். ஜுனைத் (47) ஆண்
ஜே. பரீதா (16) பெண்
ஏ. ரீ. றாவியா உம்மா
ஆர். பைரூசா (19) பெண்
ஆர். எம். சித்தீக் (08) ஆண்
யூ. எம். சீனத்தும்மா (37) பெண்
எம். வை. எம். பசீர் (03) ஆண்
எஸ். எல். சுலைமாலெப்பை (40) ஆண்
எஸ். எல். சுலைஹா உம்மா (35) பெண்
எம். வை. எம். சபீர் (26) ஆண்
ஜே. சுலைமாலெப்பை (38) ஆண்
ஆர். எப். றம்சியா (06) பெண்
எம். என். எம். நியாஸ் (17) ஆண்
எம். சீ. எம். தாஹிர் (20) ஆண்
யூ. எல். ஜமால்தீன் (35) ஆண்
எச். எம். அப்துல் சமது (23) ஆண்
எம். எல். ஹனீபா (60) ஆண்
எம். இஸ்மாயில் (28) ஆண்
ஏ. அப்துல் மஜீத் (1 வாரம்) ஆண்
எம். எல். மரியம் பீவி (28) பெண்
ஏ. எல் சமீர் (10) ஆண்
யூ. எல். எப். மர்ழியா (35) பெண்
நன்றி: காத்தான்குடி இணையம்.

Monday, June 7, 2010

உயிரைக் குடித்த பேஸ்புக்

இளைஞர்கள் மத்தியில் சமூக இணையதளமான பேஸ்புக் பிரபலமானது. இதனைப் பயன்படுத்தி பலர் மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் இந்த இணைய தளத்தின் காரணமாக ஒரு கொலை

ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது அந்த அரசாங்கத்தை மட்டுமல்லாது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

ஆஸ்திரேலியாவைச் சார்ந்த 18 வயது இளைஞி நோனா பிளோமிசாப். இவர் பேஸ்புக்கில் தனது முழு விபரங்களையும் வெளியிட்டு தனது நண்பர்களுடன் தொடர்பு வைத்திருந்தார். இவரைத் தொடர்பு கொண்ட கிறிஸ்டோபர் ஜேம்ஸ் என்ற 20 வயது இளைஞர் தான் மிருக நலச் சங்கத்தில் வேலை செய்வதாக தெரிவித்தார். இவரது பேஸ்புக் இணையதளத்திலும் இவ்வாறே குறிப்பிட்டிருந்தார். நோனாவும் மிருக நலத்தில் ஆர்வம் கொண்டிருந்ததால் ஜேம்ஸூடன் நட்பு வைத்திருந்தார். நோனாவின் மதிப்பைப் பெற்ற ஜேம்ஸ் நோனாவுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி தன்னோடு சுற்றுலா வருமாறு அழைத்துச் சென்றிருக்கிறார்.

சுற்றுலா சென்று இரண்டு நாட்கள் கழித்து மே 14ம் திகதி சிட்னியின் கடற்கரையோரத்தில் நோனா பிணமாக கிடந்தார். சடலத்தை கைப்பற்றியுள்ள காவல்துறையினர் கிறிஸ்டோபர் ஜேம்ஸை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக பொதுமக்கள் பேஸ்புக்கில் தங்களைப் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டாம் என ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறான சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வந்தாலும் பேஸ்புக்கின் மீதான கவர்ச்சி குறைந்தபாடில்லை. இணையம் மூலம் ஏற்படுகின்ற நட்பை நம்பி நம்மைப் பற்றிய முழுமையான தகவல்களை வெளியிடாமல் வைத்திருப்பது பாதுகாப்பானது.

Sunday, June 6, 2010

காணாமல்போன பர்ஸ் திரும்ப கிடைத்தது 69 ஆண்டுகளுக்கு பிறகு

வாஷிங்டன்:உரிமையாளரை தேடி அலைந்த பர்ஸ் இறுதியில் 69 ஆண்டுகளுக்குப் பிறகு உரிமையாளரிடம் தஞ்சமடைந்தது.

ரோபர்ட் பெல் என்பவர்தான் இந்த அதிர்ஷ்டசாலி. இரண்டாம் உலகப்போரில் கலந்துக் கொண்ட அமெரிக்காவைச் சார்ந்த ராணுவ வீரரான பெல்லுக்கு கடந்த 69 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல்போன பர்ஸ் தான் தற்பொழுது கிடைத்துள்ளது.

1941 ஆம் ஆண்டு சிகாகோ வொக்கேஷனல் ஸ்கூலில் ஹைட்ராலிக் ரிப்பேர் பயிற்சிக்குச் சென்ற பொழுதுதான் பெல்லிற்கு பர்ஸ் தொலைந்து போனது.

கப்பல் படை வீரனுடைய யூனிஃபார்மில் பெல்லும் அவருடைய காதலியும் போஸ் கொடுக்கும் புகைப்படமும், அவருடைய சமூக பாதுகாப்பு அட்டை உள்ளிட்ட ஆவணங்களும் அதில் இருந்தன.

1966 ஆம் ஆண்டே பெல்லின் பர்ஸ் போப் ஜோர்டான் என்பவருக்கு கிடைத்தது. ஆனால் உரிமையாளரை கண்டறிவதற்காக ஜோர்டான் நடத்திய முயற்சிகள் வீணானது.

கடந்த ஆண்டு ஜோர்டான் பத்திரிகையாளர் ஜோஸஃப் க்ரைக்கிற்கு இந்த பர்ஸை ஒப்படைத்தார். சமூக பாதுகாப்பு பிரிவின் உதவியுடன் க்ரைக் இறுதியில் உரிமையாளரை கண்டுபிடித்தார்.

பர்ஸ் திரும்பக் கிடைத்ததை பெல்லால் நம்ப இயலவில்லை. பின்னர் அதனை தனது மகனிடம் பர்ஸில் உள்ள புகைப்படங்களை காட்டி மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Tuesday, June 1, 2010

நாகர்கோவில்: மகளை கர்ப்பமாக்கி, கொலை செய்த தந்தை கைது!

நாகர்கோவில்: தனது மகளையே கர்ப்பமாக்கி, அவரை கொலையும் செய்த தந்தை கைது செய்யப்பட்டார்.

குமரி மாவட்டம் அருமனை பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் புரூஸ்வெல்ட். அவரது முதல் மனைவியின் மகள் ஜாஸ்மின் (16), மார்த்தாண்டத்தில் ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். பிளஸ்-2 செல்ல இருந்தார்.

கடந்த 29ம் தேதி காலை புரூஸ்வெல்ட்டும், அவரது 2வது மனைவி ஐடாவும், ஐடாவின் சொந்த ஊரான திருவரம்பு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினர்.

அப்போது வீட்டின் பின்புறக் கதவு திறந்து கிடந்தது. உள்ளே உள்ள குளியலறையில் உள்ள நீர் தொட்டியில் ஜாஸ்மின் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தார்.

வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. போலீஸ் மோப்ப நாய்களை திணறச் செய்ய வீட்டின் உள்புறம் முழுவதும் மிளகாய்ப் பொடி தூவப்பட்டிருந்தது.

போலீசார் ஜாஸ்மினின் உடலைக் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் ஜாஸ்மின் 4 மாத கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது.

மேலும் கொலை செய்யப்படும்போதும் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

போலீஸ் விசாரணை நடத்தியபோது மாணவியின் தந்தை புரூஸ்வெல்ட் மீதே சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை உரிய முறையில் போலீசார் விசாரித்தபோது, தனது மகளையே பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதையும், கொலை செய்ததையும் ஒப்புக் கொண்டார்.

இது குறித்து போலீசார் கூறுகையில்,

ஓய்வு பெற்ற ராணுவ வீரரான புரூஸ்வெல்ட் கன்னமாமோடு அருகே உள்ள பி.எஸ்.என்.எல். டவரில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார். அவரது முதல் மனைவி இறந்ததையடுத்து ஐடா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவருக்கு முதல் மனைவி மூலம் பிறந்தவர் தான் ஜாஸ்மி்ன்
புரூஸ்வெல்டின் தந்தை, தனது சொத்துக்களை ஜாஸ்மின் பெயருக்கு தனது சொத்துக்களை எழுதி வைத்து விட்டார்.

வீட்டில் ஐடா இல்லாதபோது புரூஸ்வெல்ட் வேறு ஒரு பெண்ணுடன் உறவு கொண்டிருந்ததை ஜாஸ்மின் பார்த்து விட்டார். இதையடுத்து புரூஸ்வெல்ட தனது மகள் என்று பாராமல் ஜாஸ்மினையும் மிரட்டி, தனது ஆசைக்கு இணங்க வைத்து, தகாத உறவு வைத்துள்ளார்.

இதனால் ஜாஸ்மின் கர்ப்பமானார். அவர் 4 மாதம் கர்ப்பமானதால் வயிறு பெரிதானது. இதனால் அவரை பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப முடியாத நிலையும், கருக்கலைப்பு செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டது.

ஜாஸ்மின் கர்ப்பமானது வெளியில் தெரிந்தால் அவமானமாகிவிடும் என்பதால் அதிலிருந்து தப்பிக்க அவரை கொலை செய்ய புரூஸ்வெல்ட் முடிவு செய்தார்.

இந் நிலையில் கடந்த 28ம் தேதி இரண்டாவது மனைவி ஐடாவின் ஊரான திருவரம்புக்கு புரூஸ்வெல்ட் சென்றார். ஊருக்குப் புறப்படும்போதே மகள் ஜாஸ்மினுக்கு தூக்க மாத்திரைகள் கலந்த பாலை குடிக்க வைத்தார்.

திருவரம்பு சென்றதும் தனக்கு அவசர வேலை இருப்பதாகக் கூறிவிட்டு புரூஸ்வெல்ட் கிளம்பினார். அங்கிருந்து நேராக தனது வீட்டுக்கு வந்தார்.

தூக்க மாத்திரை கலந்த பாலை குடித்ததால் ஜாஸ்மின் மயங்கிக் கிடந்தார். அந்த நிலையிலும் அவரை பாலியல் பலாத்காரம் செய்த புரூஸ்வெல்ட், பின்னார் கயிற்றால் ஜாஸ்மினின் கழுத்தை இறுக்கி, தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்தார்.

இது கொள்ளை சம்பவம் போல தெரிவதற்காக பீரோவையும், சூட்கேசையும் உடைத்து பொருட்களை சிதறடித்துவிட்டு, மிளகாய் பொடியையையும் தூவினார்.

15 பவுன் நகைகளையும், ரூ. 5,000 பணத்தையும் தனது ஷூவுக்குள் மறைத்துவிட்டு, மனைவியின் ஊருக்குச் சென்று, மாலையில் அவருடன் ஒன்றும் தெரியாதவர் போல திரும்பி வந்துள்ளார்.

இதையெல்லாம் அவரே வாக்குமூலமாகத் தந்துள்ளார் என்றனர் போலீசார்.

Sunday, May 23, 2010

சென்னை: ஆபாச படத்தில் நடித்த 9ம் வகுப்பு மாணவி

பெரம்பூர் திரு.வி.க. நகரில் ஒரு கும்பல் இளம்பெண்களை ஏமாற்றி கடத்தி வந்து அறையில் அடைத்து ஆபாச படம் எடுப்பதாக போலீசுக்கு புகார் வந்தது. இதற்கு ஆட்டோ டிரைவர் ஒருவர் உடந்தையாக இருப்பதாகவும் கூறப்பட்டது.


இதையடுத்து செம்பியம் இன்ஸ்பெக்டர் ரவிகுமரன் திரு.வி.க. நகரில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது போலீசைப் பார்த்ததும் 4 பேர் தப்பி ஓடி விட்டனர்.

அங்கிருந்த இளம் பெண்ணை போலீசார் மீட்டனர். அவரை வைத்து ஆபாச படம் எடுத்த ஆட்டோ டிரைவர் முரளி என்பவரை போலீசார் கைது செய்தனர்.

போலீஸ் விசாரணையில் இந்த கும்பல் இதுபோல் பல பெண்களை ஆபாச படம் எடுத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. மீட்கப்பட்ட இளம்பெண் 9-ம் வகுப்பு மாணவி ஆவார். தப்பி ஓடிய 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Monday, May 17, 2010

சிறப்புக் கொள்ளையடிக்கும் மண்டலங்கள்

E-mail

முக்கியமான கட்டுரை

பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். சிறப்பு பொருளாதார மண்டலம் என்றால் என்ன என்பதற்கு ஒரு உதாரணம்; தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி கிடைத்த ஒரு புள்ளிவிவரப்படி, 2005-08 வரையிலான மூன்று ஆண்டுகளில் நோக்கியா நிறுவனம் தமிழகத்தில் இட்ட முதலீடு ரூ. 338 கோடி. ஆனால் தமிழக அரசிடம் இருந்து நோக்கியா பெற்ற வரிச் சலுகை ரூ. 638 கோடி ரூபாய்க்கு மேல். சிறப்புப் பொருளாதார மண்டலங்களால் தமிழகத்துக்குக் கிடைத்த லாபம் (!) இதுதான்.

இந்தியாவைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முதலும் முதன்மையுமான செய்தி என்னவென்றால் இந்தியா என்ற ஒரு நாடு எப்போதும் இருந்தது இல்லை. ஐரோப்பிய எண்ணங்களின்படி அரசியல், சமுதாய, மத ஒற்றுமை கொண்டதாகச் சொல்லப்படுகின்ற இந்தியா என்று எந்த நாடும் கிடையாது; நாம் அதிகமாகக் கேள்விப்படுகிற இந்தியா என்ற நாடும், இந்தியாவின் மக்கள் என்பவர்களும் நடப்பில் இல்லாத ஒரு விஷயமே ஆகும்" என்கிறார் சர் ஜான் ஸ்டிராச்சி. இதே கருத்துப்பட பல அரசியலறிஞர்கள் பல்வேறு நூல்களில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.

காலனி ஆட்சிக்காலத்தில் ஏகாதிபத்திய நாடுகள் மூன்றாம் உலக நாடுகளை நேரடியாக அடிமைப்படுத்தி ஆண்டன. இந்தியாவை இங்கிலாந்து ஆண்டது. ஆனால், இப்போது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்களது பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளை ஆட்சி செய்கின்றன.

மறைமுகமான ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்காக காட் அமைப்பு 1995இல் உலக வணிக அமைப்பாக மாற்றப்பட்டு, வளரும் நாடுகளின் மீது ஏகாதிபத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்கா உலக வங்கி, பன்னாட்டு நிதியம் மூலம் பல கட்டுப்பாடுகளை விதித்தது.

இன்று உலகில் முதன்மையாக உள்ள 200 பன்னாட்டு நிறுவனங்களில் 83 அமெரிக்காவில் உள்ளன. ஆக, உலக வணிக அமைப்பு எனும் போர்வையில் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் மூன்றாம் உலக நாடுகளின் அரசியல், பொருளாதாரம், சமூகம், பண்பாடு ஆகியவற்றின் மீது ஆளுமை செலுத்தி வருகின்றன.

காட் ஒப்பந்தப்படி அரசுகள் தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் தங்கள் நாடுகளின் பொருளாதாரத்தை, சந்தையை மாற்றியமைக்க வேண்டும். தனியார்மயமாக்கல் என்பது மூன்றாம் உலக நாடுகளில் உள்ள அரசுத் துறைகளை, பொதுத் துறைகளைத் தனியார்முதலாளிகள் வசம் ஒப்படைக்க வைப்பதாகும்.

தாராளமயமாக்கல் என்பது ஒப்பந்தங்களில் கையழுத்திட்ட நாடுகளில் எவ்வகைத் தடையும் இன்றி பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களைத் தாராளமாகக் கொட்டி விற்பனை செய்வதாகும். உலகமயமாக்கல் என்பது தனியார்மயமாக்கப்பட்ட தாராளமயச் சந்தையை உலகம் முழுக்க விரித்துச் செல்வதாகும். இந்த உலகமயமாக்கல் என்பது முதலாளித்துவம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளச் செய்த மிகப்பெரிய தந்திரம்.

உலகமயப் பொருளாதாரத்தின் ஒரு கூறே சிறப்புப் பொருளாதார மண்டலம் என்பதில் இரண்டாம் கருத்து இருக்க முடியாது. 1986களில் இந்தியா தொழில் துறைக்கு புதிய வேகமளிக்கும் வகையிலும் அந்நியச் செலாவணியை அதிகரிக்கும் எண்ணத்துடனும் ஏற்றுமதிச் செயல்பாட்டு மண்டலங்கள் (Export Processing Zones) ஏற்படுத்தப்பட்டன. இதன்மூலம் எதிர்பார்த்த பலன் கிடைக்காத காரணத்தால் அதிலிருந்து மீள, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க உருவாக்கப்பட்டத் திட்டமே சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்.

பகுத்தறிவு, மத எதிர்ப்பு பேசிய கும்பல் பா.ஜ.கவோடு கூட்டணி அமைத்து வெற்றியும் பெற்று, வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில் வணிக அமைச்சராக இருந்த மறைந்த முரசொலி மாறனால் 01-4-2000ல் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பது குறித்து முன்மொழியப்பட்டது. அதுவரை செயற்பட்டு வந்த ஏற்றுமதிச் செயற்பாட்டு மண்டலங்கள் சிறப்புப் பொருளாதார மண்டலங்களாக மாற்றப்பட்டன. 10-05-2005 அன்று நாடாளுமன்ற ஒப்புதலும், 2006ஆம் ஆண்டு பிப்ரவரியில் சட்ட நெறிமுறைகளும் உருவாக்கப்பட்டன.

சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டம் (சி.பொ.ம.சட்டம்) - 2005இன் சுருக்கம்:

இந்தியாவிலுள்ள இந்திய நிறுவனங்கள் மட்டுமன்றி வெளிநாட்டு நிறுவனங்களும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைத்துக் கொள்ளலாம். சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உள்ள தொழிற்சாலைகள் தன்சான்று (Self Certification) அடிப்படையில் ஏற்றுமதி - இறக்குமதி செய்து கொள்ளலாம். அரசின் இசைவு பெறத் தேவையில்லை.

எந்த இசைவும் பெறாமல் நூற்றுக்கு நூறு விழுக்காடு வெளிநாட்டு முதலீடு பெறலாம். இம்மண்டலத்தில் செயற்படும் நிறுவனங்கள் ஆண்டுக்கு 250 கோடி வரை வெளிநாட்டு வணிக வங்கிக் கடன்களை பெற்றுக் கொள்ளலாம். அரசின் இசைவு தேவையில்லை.

பல பொருள்களை உருவாக்கும் (Multi Product Zone) சிறப்புப் பொருளாதார மண்டலம் இருப்பின் குறைந்த அளவு 2,500 குறுக்கப் ((Acre) பரப்பில் அமைய வேண்டும். 3,500 குறுக்கம் வரை ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்குக் கையகப்படுத்தலாம்.

சிறப்புக் காரணங்களுக்காக வரம்பற்ற பரப்பளவிலும் இம்மண்டலங்கள் அமைக்கலாம். வேளாண் நிலம் உள்ளிட்ட எந்த நிலமானாலும் கையகப்படுத்திக் கொள்ள இந்திய அரசு - மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் உண்டு.

மண்டலங்களை நிறுவும் அல்லது அதில் வணிகத்தில் ஈடுபடும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு 100%, அதைத் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு 50% வரிவிலக்கு வழங்கப்படும். இறக்குமதி செய்ய உரிமம் தேவையில்லை. உற்பத்தி வரி, இறக்குமதி வரி கிடையாது; மத்திய விற்பனை வரியோ சேவை வரியோ கிடையாது. மற்ற இறக்குமதிப் பொருள்களைப் போல் இம்மண்டலத்திற்கு இறக்குமதியாகும் பொருள்கள் சுங்க ஆய்வுக்கு உட்படுத்தப்படாது.

சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தயாரிப்புப் பணி நடைபெறாத பரப்பு மொத்தப் பரப்பளவில் 75% வரை இருக்கலாம். இங்குள்ள குடியிருப்பு, மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள், பொழுதுபோக்கிடங்கள், குடிநீர், கழிவுநீர், போக்குவரத்து ஆகிய கட்டுமானப் பணிகளுக்குப் பத்து ஆண்டுகளுக்கு முழு வருமான வரிவிலக்கு உண்டு. ஒப்பந்த முறையில் தொழிலாளர்களை அமர்த்திக் கொள்ளலாம்; அவர்களுக்கு பணிநிலைப்போ பிற சட்ட உரிமைகளோ இல்லை; பெண்கள் உள்ளிட்ட தொழிலாளர்களை 24 மணி நேரமும் பணியில் அமர்த்திக் கொள்ளலாம் என மேலும் பல அதிகாரங்கள், சலுகைகள் அள்ளி வீசப்பட்டுள்ளன.

இந்தியாவிலுள்ள வணிகர்கள் அரசிடம் வரிச்சலுகைகளைக் கேட்டுப் போராடியும் கிடைக்காத நிலையில், எங்கிருந்தோ வந்து நாட்டைச் சுரண்டிக் கொழுக்கும் பன்னாட்டு முதலாளிகளுக்கு வரிவிலக்குகளை வாரி வழங்குவது என்ன ஞாயம்?

தொழிலாளர் நிலை

இம்மண்டலங்களில் தொழிற்சங்கம் வைக்கும் உரிமையில்லாததால் 8 மணி நேரத்திற்கு மேலும் வேலை வாங்குவதும் விரும்பினால் தொழிலாளியை வேலையை விட்டு நீக்குவதும், மிகக் குறைந்த ஊதியம் அளிப்பதும் நடக்கிறது. ஐ.நா.வின் உலகத் தொழிலாளர் அமைப்பு உலகம் முழுவதும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உழைப்புச் சுரண்டலை ஈவிரக்கமின்றிக் கடுமையாக நடைமுறைப்படுத்துகின்றன என்றும் அதனால் பல தொழிலாளர்கள் மனநோயாளிகளாக மாறியுள்ளனர் என்றும் அறிவித்துள்ளது.

உலகமயமாக்கலால், புதிய தொழில்நுட்பத்தால் தொழிலாளர்கள் மனச்சோர்வு, மன அழுத்தம் போன்ற நோய்களுக்கு உட்படுகின்றனர். அமெரிக்கா, ஜெர்மனி, பின்லாந்து, போலந்து, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் உலகத் தொழிலாளர் அமைப்பு நடத்திய ஆய்வில் பத்தில் ஒருவருக்கு மனஉளைச்சல் நோய் ஏற்பட்டு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது தெரிகிறது. இதை வலியுறுத்தி உலகத் தொழிலாளர் அமைப்பு அறிவுரை வழங்கியும் இந்தியா காதில் போட்டுக் கொள்ளவில்லை.

ரூ. 50 கோடிக்கு மேல் முதலீடு செய்யும் எந்தவொரு தொழிலுக்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை (Environment Impact Assessment Notification) தயாரிக்க வேண்டும். வளங்குன்றா வளர்ச்சிக்குப் பொருத்தமான வகையில் இயற்கை வளங்களைக் கையாளுவதை முறைப்படுத்தவே 1986இன் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டப்படி 29 வகையான தொழில்களை உள்ளடக்கி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை வெளியிடப்பட்டது. இவை மட்டுமன்றி குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக மூலதனமிடப்படும் தொழில்களுக்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை (1994) தயாரிக்க வேண்டும் என்று 1997 ஏப்ரல் 10இல் திருத்தப்பட்டது. பட்டியலில் உள்ள 29 வகை தொழில்களுக்கும் பொது விசாரணை நடத்துவது கட்டாயம் ஆக்கப்பட்டது.

இப்படி இருக்கையில், பல கோடிகளுக்கு மேல் முதலீடு செய்யப்படும் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்குச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை தேவையில்லை என்று மத்திய அரசு தளர்த்தியுள்ளது வெட்கக்கேடானது; வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. "நிலம் என்பது அரசமைப்புச் சட்டப்படி மாநில அதிகாரத்திற்கு உட்பட்டது. ஆயினும், தொழில்வளர்ச்சி கருதி இந்தியாவின் எந்த இடத்திலும் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்காக நிலத்தைக் கையகப்படுத்தும் இறையாண்மையுள்ள உரிமை இந்திய அரசுக்கு உண்டு" என சி.பொ.ம சட்டம் கூறுகின்றது. இது அடிப்படையில் மாநில அரசுகளுக்கு எதிரானது.

இந்தியாவில் 200க்கும் மேற்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தொடங்கப்பட உள்ளன. மகாராஷ்டிராவில் 63, கர்நாடகாவில் 36, அரியானாவில் 34, ஆந்திராவில் 29, தமிழ்நாட்டில் 27, குஜராத்தில் 20, உ.பி.யில் 9, பஞ்சாபில் 7 என 225 மண்டலங்கள் தொடங்கப்படவுள்ளன. இவை 367 ஆக உயர்த்தப்பட்டு 94 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் 18 மாதங்களில் செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 237 மண்டலங்களுக்கு இசைவளிக்கப்பட்டு பல ஆயிரக்கணக்கானக் குறுக்க நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

சிறப்புப் பொருளாதார மண்டலம் ஒவ்வொன்றுக்கும் அனைத்து அதிகாரங்களும் கொண்ட ஒரு வளர்ச்சி ஆணையர் உண்டு. அவரது உத்தரவின்றி உள்ளே யாரும் உள்ளே செல்ல முடியாது. மாநில அரசு அதிகாரிகள்கூட செல்ல முடியாது. ஆக, ஒவ்வொரு மண்டலமும் மாநில அரசுக்குக் கட்டுப்படாத தன்னாட்சிப் பகுதிகள்தான். ஆனால், இதை "சுதந்திர வர்த்தக மண்டலம்" என்கிறது இந்திய அரசு. உண்மைதான்! சுரண்டிக் கொழுக்கும் இந்திய முதலாளிகளுக்கும், பன்னாட்டு முதலாளிகளுக்கும் இந்த மண்டலங்கள் "சுதந்திர வர்த்தக மண்டலங்கள்"தான்.

கடந்த சூலை 2006 வரை 67 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு மத்திய அரசு தந்த சலுகைகளால் உண்டான இழப்பு ரூ. 1,75,000 கோடி என சர்வதேச நிதி நிறுவனம் கூறியுள்ளது. முன்பு செயல்பட்டு வந்த 28 மண்டலங்களால் மட்டும் ரூ. 90,000 கோடி இழப்பு என இந்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது. "ஒரு லட்சம் கோடி மூலதனத்தைப் பெற ரூ. 90,000 கோடி வருவான வரியை இழக்க வேண்டுமா?" என நிதியமைச்சகம் அரசிடம் வினா எழுப்பியுள்ளது. 1998இல் தலைமைத் தணிக்கை அறிக்கை கூறியதாவது : "ஏற்றுமதி மண்டலங்கள் பெற்ற சலுகையால் சுங்கவரி இழப்பு ரூ. 7,500 கோடி உருவானது. நமக்கு வந்த வெளிநாட்டுச் செலாவணியோ ரூ. 4,700 கோடி மட்டுமே".

மற்ற மாநிலங்களில்...

டெல்லி அரசு ரிலையன்சு நிறுவன மின்திட்டத்திற்காக 25,000 குறுக்க வேளாண்நிலத்தை உழவர்களிடமிருந்து பறித்து அம்பானிக்கு வழங்கியுள்ளது. ஒரிசாவில் தென்கொரிய போஸ்கோ நிறுவனம் அமைக்கவுள்ள பலநோக்குச் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்காக ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் 1,601 குறுக்க நிலத்தை அரசு வழங்கியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் சி.பொ.ம. எதிர்த்துப் போராடும் பழங்குடி மக்கள் மீது, அரசே "சல்வா ஜீடும்" எனும் ஆயுதமேந்திய குண்டர்படை துணையுடன் தாக்குதல் நடத்தி வருகிறது.

மேற்கு வங்கம் நந்திகிராமில் 14,500 குறுக்க வேளாண்நிலங்களையும் சிங்கூரில் 999.1 குறுக்க வேளாண் நிலங்களையும் கையகப்படுத்தி டாடா நிறுவனத்திற்கும் இந்தோனேசியவைச் சார்ந்த சலீம் குழு நிறுவனத்திற்கும் வழங்க முயற்சித்ததை எதிர்த்துக் கடுமையான போராட்டங்கள் நடந்தன. 06.01.2007 அன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் உழவர்கள் சிலர் கொல்லப்பட்டனர்; பல வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன; பலர் அடித்து நொறுக்கப்பட்டனர்.

நவம்பர் 2007இல் நந்திகிராம் பகுதியில் உண்மை நிலையை அறியச் சென்ற நர்மதா பாதுகாப்பு இயக்கத் தலைவி மேதா பட்கர் தாக்கப்பட்டார். புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் சுமித் சர்க்கார், ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்டவர்த்தன், இதழாளர் பிரஃபுல் பித்வாய் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அறிவுத்துறையினர் நவம்பர் 13இல் "மேற்கு வங்க அரசை வன்மையாகக் கண்டித்து நந்தி கிராம் மக்களுக்கு ஆதரவாக நாங்கள் என்றும் இருப்போம்" என்று அறிக்கை விடுத்தனர்.

தமிழகத்தில்...

தமிழகத்தில் 27 இடங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய உழவர்களிடமிருந்து வேளாண் நிலங்களை மிகக் குறைந்த தொகைக்குக் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம் என்பது "தகவல் தொழில்நுட்பப் பூங்கா" என்ற பெயரைப் பயன்படுத்திக் கொள்கிறது. ஜெயங்கொண்டத்தில் மின் உருவாக்கத் திட்டம் உட்பட நாங்குநேரி, ஓசூர், மதுரை உட்படப் பல்வேறு இடங்களில் உழவர்களிடமிருந்து நிலங்களைப் பறிக்கும் வேலையை தமிழக அரசு செய்து வருகிறது.

மதுரை விமான நிலையத்திற்கு அருகில் உள்ள சின்ன உடைப்பு, பரம்புப்பட்டி, வளையங்குளம், வளையப்பட்டி, சோளங்குருணி ஆகிய பகுதிகளில் நிலம் கையகப்படுத்துதல் நடந்தேறி வருகிறது. இப்பகுதிகளில் சகாரா நிறுவனம் பல ஆயிரம் குறுக்க நிலங்களை மிகக் குறைந்த விலையில் வாங்கி வைத்துள்ளது. சிறீபெரும்புதூருக்கு அருகே நோக்கியா கைபேசி குழுமத்திற்காகச் சிறப்புப் பொருளியல் மண்டலம் அமைத்துத்தர தி.மு.க. அரசு முடிவெடுத்து அதற்குரிய வேலைகள் நடந்து வருகின்றன.

சென்னை - எண்ணூர் 2,500 குறுக்கம், ஓசூர் 3,600 குறுக்கம் மற்றும் நாங்குநேரி, துரைப்பாக்கம், கோவை என தமிழகத்தின் பிறபகுதிகளிலும் இதே வேலை நடைபெறுகிறது. ஆக, 11,000 குறுக்க விளைநிலங்களைப் பிடுங்கி சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு வழங்க உள்ளது தமிழக அரசு. 27 தனித்தனித் தன்னாட்சிப் பகுதிகள் உருவாகின்றன என்பதே இதன் பொருள். இந்த இடங்களில் தமிழக அரசின் அதிகாரம் செல்லாது.

தெலுங்கானா பிரிவினை குறித்துப் பேசும் தமிழக முதல்வர் மு.கருணாநிதிக்கு, தமிழகத்தில் ஏற்கனவே 27 தன்னாட்சிப் பகுதிகள் உருவாகி வருகின்றன என்பது தெரியாதா? அங்கு தமிழக அரசின் எந்தச் சட்டமும் செல்லுபடியாகாது என்பதும் தெரியாதா? மாநிலத் சுயாட்சி கேட்கும் இவர், இதற்கு என்ன சொல்லப் போகிறார்?

புதுச்சேரியில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப் புகழ்மிக்க ஊசுட்டேரின் வடபுறத்தில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளான கரசூர், சேதராப்பட்டு, துத்திப்பட்டு ஊர்களில் உள்ள வேளாண் நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனால் வேளாண் தொழில் அடியோடு ஒழிந்துபோகும், ஊசுட்டேரிக்கு நீர்வரத்து குறைந்து போகும். மேலும், துறைமுக விரிவாக்கம் என்ற பெயரில் நடைபெறும் கொள்ளையில் தேங்காய்த்திட்டு மக்கள் அலைக்கழிக்கப் படுகின்றனர். இங்கு வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்கத் தேவையான அனைத்து உதவிகளையும் புதுச்சேரி அரசு செய்யும் எனக் கூறியுள்ளது. இம்மண்டலத்திற்காகவே இப்பகுதியை ஒட்டியுள்ள தொண்டமாநத்தம் எனும் ஊரில் துணை மின்நிலையம் அமைக்கப்பட உள்ளது.

புதுச்சேரியில் பல தொழிற்பேட்டைகள் நலிந்து வருகையில், "வளர்ச்சி" என்ற பெயரில் நல்ல விளைச்சல் தரும் நிலங்களைக் கையகப்படுத்தி வெளிநாட்டு நிறுவனங்களுக்குக் கொடுப்பது மேலும் சீரழிவையே கொண்டுவரும். பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட புதுச்சேரியைச் சேர்ந்த பல்வேறு சுற்றுச்சூழல் - பொதுநல அமைப்புகள் இதை எதிர்த்துப் போராடி வருகின்றன. புதுச்சேரி அரசுக்கு நிதிநெருக்கடி எற்பட்டுள்ளதால் தற்போதைக்கு சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதற்கெல்லாம் நேர்மாறாக சீனாவில் சிறப்புப் பொருளாதார மண்டலம் செயல்பட்டு வருகிறது. சீனாவில் நிலத்தைப் பயன்படுத்தும் உரிமை மட்டுமே தனியார் முதலாளிகளுக்கு மாற்றித் தரப்படுகிறது. நிலம் அரசிடமே இருக்கும். தொழிற்சாலைகளுக்கு மட்டுமே சீனாவில் நிலம் ஒதுக்கப்படுகையில் இந்தியாவில் தங்கும் விடுதி, வணிகவளாகம், பெரிய உணவு விடுதி, மீதமுள்ள நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி விற்றல் ஆகியவற்றுக்கு இசைவு அளிக்கப்படுகிறது. சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க விளைநிலங்களை பயன்படுத்த சீன அரசு தடைவிதித்துள்ளது.

சிறப்பு பொருளாதார மண்டலத்தை ஏன் எதிர்க்க வேண்டும்?

இந்தியத் தொழிற்சாலைகளை மூடச் செய்கிறது.

பெரு முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் துணை போகிறது.

விளைச்சல் தரும் வேளாண் நிலத்தையும் கையகப்படுத்துகிறது.

மண்ணின் மைந்தர்களின் நிலத்தைப் பிடுங்கிக் கொண்டு அவர்களை விரட்டுகிறது.

நிலத்தின் மீதான உரிமையைப் பறிக்கிறது.

வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கிறது, வறுமையை அதிகரிக்கச் செய்கிறது.

இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கிறது.

சுற்றுச்சூழலைச் சீரழிக்கிறது. அந்நியச் செலவாணியை மந்தமாக்கி உள்ளது.

நாட்டை மீண்டும் அடிமைப்படுத்தத் துணை போகிறது. இதனால்தான் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை எதிர்க்கிறோம். இவற்றை சிறப்புப் கொள்ளையடிக்கும் மண்டலங்கள் என்பதே சரியாக இருக்கும்.

புதுவை சீனு.தமிழ்மணி

நன்றி : சூழல் இதழ் எண்கள் 98, 99/2006, இதழ்கள்/பூவுலகின் நண்பர்கள் புதுச்சேரி, சிறப்புப் பொருளாதார மண்டலம் (தொகுப்பு - அ.சி. சின்னப்பத் தமிழர்)/ சவால்களை முறியடிக்கத் தமிழ்த்தேசியமே - கி. வெங்கட்ராமன், சிந்தனையாளன் பொங்கல் மலர் 2007/ க. முகிலன் கட்டுரை (பூவுலகு ஜனவரி 2010 இதழில் வெளியான கட்டுரை) இனியவன், N.Amzath Khan, DUBAI.U.A.E

Tuesday, February 16, 2010

பார்பண ஹிந்து மதமும் வர்ணாசிரம தீண்டாமை கொடுமையும் ஒரு ஆய்வு.

ஏன் சிறுபான்மையான பார்ப்பனர்கள் நடுத்தரவர்க்கமாகவும், பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியினர் ஏழைகளாகவும் இருக்கின்றனர்? ஏன் சிறு அளவில் கூட பார்ப்பனர்கள் விவசாயிகளாக இல்லை? ஏன் பார்ப்பனர்களும், முதலியார்களும், செட்டியார்களும், வெள்ளாளக் கவுண்டர்களும் தங்களை உயர்ந்த சாதி என்று இன்னமும் கருதுகிறார்கள்? ஏன் பெரும்பான்மையான தலித் மக்களை தாழ்ந்த சாதி என்று இவர்கள் கூறிவருகிறார்கள்

காரணம் எதுவாக இருந்தால் என்ன? எதற்கு இந்த ஆராய்ச்சி என்ற அடுத்த கேள்வியும் இருக்கிறது. சாதி என்பது இந்த நாட்டையும் சமூகத்தையும் கெடுத்து, முடமாக்கி, சீரழித்துக் கொண்டிருக்கும் ஒரு சாபக்கேடு மட்டுமல்ல, ஒழுக்கக் கேடுகளிலெல்லாம் தலையாய ஒழுக்கக்கேடு என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ளவேண்டும். அதன்பால் மென்மையான அணுகுமுறையைக் காட்ட முடியாது. அதை ஈவு இரக்கமின்றி ஒழிக்க வேண்டும். எப்படித் தோன்றியது யார் காரணம் என்ற ஆராய்ச்சி அதற்காகத்தான். அதற்காக மட்டும்தான்.


இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களை முடமாக்கி வைத்திருக்கும் சித்தாந்தம் ஹிந்து மதம், சாதி வர்ணாசிரம முறை அவற்றின் புனிதம் போன்ற கருத்துகள்; இன்னமும் அவற்றை நியாயப்படுத்துவது மட்டுமல்ல, சூத்திரன் தொட்டால் சாமி தீட்டாகி விடும் என்று சுப்ரீம் கோர்ட் வரை போய் வாதாடுபவர்கள். இவர்களை என்ன செய்யலாம்? கருத்தை கருத்தால் வெல்ல வேண்டுமா,அல்லது இவர்கள் மீது வேறு எதையாவது பிரயோகிக்கலாமா.

“பரப்பயலுக்கு அவ்வளவுதான் புத்தி” என்று இந்தக் கணம் வரை உயர்சாதியினர் என்று தம்மைக் கூறிக்கொள்வோர் பேசி வருவதில் பலருக்கு உறுத்தல் இல்லை. “மேல் சாதிகளை”ச் சேர்ந்த படித்த அறிவாளிகளைப் பொருத்தவரை அது முதியவர்களின் அறியாமை, அல்லது சம்பிரதாயப் பிடிப்பு இன்ன பிற, இன்னபிற. ஆனால் “பாப்பார புத்தி” என்று ஒரு சூத்திரனோ தலித்தோ போகிற போக்கில் சொல்லி விட்டால் கூட உடனே சுர் என்று வந்து விடுகிறது.

தி.மு.க அரசு 2006 ஆம் ஆண்டில் தொடங்கிய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில், ஒன்றரை ஆண்டுக்காலம் முறையாகப் பயின்ற 207 மாணவர்கள் பணி நியமனம் பெற இயலாமல் கடந்த 2 ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர். பார்ப்பன சாதியைச் சார்ந்த சிவாச்சாரியார்கள் மற்றும் பட்டாச்சாரியார்கள் என்ற பிரிவினரைத் தவிர்த்து, பிற சாதியினரை அர்ச்சகராக்குவது ஆகமவிதிகளுக்கும், இந்துமத சம்பிரதாயங்களுக்கும் எதிரானது என்று மதுரையைச் சேர்ந்த பட்டர்கள் சிலர் உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்றிருப்பதே இதற்குக் காரணம்.

இந்தத் தடையாணையின் விளைவாக, அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் முடங்கிவிட்டன. சைவ / வைணவக் கோயில்களில் வடமொழி மற்றும் தமிழில் வழிபாடு நடத்துவதற்கு முறையாகப் பயிற்றுவிக்கப்பட்டு, தேர்வில் வெற்றி பெற்று, தீட்சையும் பெற்றிருக்கும் இந்த மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளாகச் சான்றிதழும் வழங்கப்படவில்லை. 2009 நவம்பரில் இம்மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததனர் இதன் தொடர்ச்சியாக 2010 ஜனவரியில்தான் இவர்களுக்கான சான்றிதழே வழங்கப் பட்டிருக்கிறது. எனினும் உச்ச நீதிமன்றத் தடையாணை காரணமாக இவர்கள் யாரும் இதுவரை அர்ச்சகராக நியமிக்கப் படவில்லை.

பார்ப்பன சாதியில் பிறந்த பட்டாச்சாரியார்கள் அல்லது சிவாச்சாரியார்கள் தவிர வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் கருவறையில் உள்ள சிலையைத் தீண்டினால், சிலை தீட்டுப்பட்டுவிடும் என்றும், சிலையிலிருந்து கடவுள் வெளியேறிவிடுவார் என்றும் கூறுகின்ற தீண்டாமைக் கருத்துக்கு எதிரான இந்த வழக்கு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

1970 இல் பெரியார் அறிவித்த கருவறை நுழைவுக் கிளர்ச்சியைத் தொடர்ந்து, 1971 இல் அர்ச்சகர் வேலையில் நிலவிவந்த வாரிசுரிமையை ஒழிக்கும் சட்டமொன்றைத் திமுக அரசு கொண்டு வந்தது. இதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் “அர்ச்சகர்கள் எனப்படுவோர் இந்து அறநிலையத்துறையால் நியமிக்கப்படுபவர்கள் என்பதால், அதில் வாரிசுரிமை கோர முடியாது என்றும் தகுதியான நபர்களை அரசு தெரிவு செய்யலாம்” என்றும் கூறிய உச்சநீதிமன்றம், “அவ்வாறு அர்ச்சகராக நியமனம் செய்யப்படுபவர்கள், குறிப்பிட்ட பார்ப்பன உட்சாதியிலிருந்துதான் தெரிவு செய்யப்பட வேண்டும்“ என்றும் வலியுறுத்தியது.

“இதனை மீறி அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவது, அரசியல் சட்டம் வழங்கியுள்ள இந்து மத உரிமையில் தலையிடுவதாகும் “என்று கூறி, சாதியையும் ஆலயத் தீண்டாமையையும் அங்கீகரித்துத் தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம். 1972 இல் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான், 2006 இல் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வண்ணம் திமுக அரசு பிறப்பித்த அரசாணைக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் இடைக்காலத்தடை விதித்திருக்கிறது.

ஆணாதிக்கத்தை நிலைநாட்டி வந்த உடன்கட்டை ஏறுதல், பால்ய விவாகம், பலதார மணம் போன்ற சமூகக் கொடுமைகளும், சாதி ஆதிக்கத்தை நிலைநாட்டி வந்த தேவதாசி முறை, தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலில் நுழையவிடாமல் தடுத்தல் போன்ற அநீதிகளும் “இந்து மத உரிமை“ என்ற பெயரில்தான் நியாயப்படுத்தப்பட்டு வந்தன. மக்கள் போராட்டங்கள் மற்றும் சமூக நிர்ப்பந்தத்தின் விளைவாக இத்தகைய இந்து மத உரிமைகள் இன்று கிரிமினல் குற்றங்களாக்கப்பட்டு விட்டன. எனினும் ஆலயத் தீண்டாமை எனும் குற்றம், ஆகமவிதிகளின் பெயரால் மூடிமறைக்கப்பட்டு, அரசியல் சட்டத்தாலும் உச்ச நீதிமன்றத்தாலும் நியாயப்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வழக்கு 207 மாணவர்கள் பணி நியமனம் பெறுவது தொடர்பான வழக்கு மட்டுமல்ல; ஆலயத் தீண்டாமையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வழக்கு. சமூக நடவடிக்கைககளில் தீண்டாமை குற்றமாக்கப்பட்டிருந்தாலும், அர்ச்சகர் நியமனத்தைப் பொருத்தவரை தீண்டாமை என்பது இந்துமத உரிமையாகவே அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் பார்வையில், இந்த 207 மாணவர்களின் ஒரே தகுதிக் குறைவு அவர்களது பிறப்புதான். குறிப்பிட்ட பார்ப்பன உட்சாதியில் பிறந்தவர்கள் என்ற காரணத்தினாலேயே இன்று பல்வேறு கோயில்களில் பணி செய்து வரும் அர்ச்சகர்கள் பலர், அவர்களே கூறுகின்ற ஆகம விதிகளின் அடிப்படயில் தகுதியற்றவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. திருமணமாகாதவர்கள், திருமணமாகி மனைவியை இழந்தவர்கள் போன்றோர் சாமி சிலையைத் தீண்டக்கூடாது என்று ஆகம விதிகள் கூறுகின்றன. ஆனால் அத்தகைய பலர் அர்ச்சகர்களாகப் பணி செய்து வருகின்றனர்.

அவர்களில் தேவநாதன் போன்ற “ நல்லொழுக்க சீலர்களும்“ அடக்கம். 207 மாணவர்களுக்கு தேர்வு நடத்தி அவர்களுக்குத் தகுதி இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்த தமிழக அரசு, தேவநாதன் உள்ளிட்டு இன்று பணியில் இருக்கும் அர்ச்சகர்கள் யாருக்கும் அத்ததகைய தேர்வு எதையும் நடத்தவில்லை. வழிபாட்டு முறைகள் தெரிந்தவர்களா, ஒழுக்கமானவர்களா என்று கண்காணிக்கும் அதிகாரம் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு இருந்தும்கூட, அவ்வாறு யார் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டதும் இல்லை. இவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரே தகுதி சாதி மட்டும்தான்.

மாதச் சம்பளம் வழங்குவதுடன், அர்ச்சனைத்தட்டில் பக்தர்கள் போடுகின்ற பணத்தை எடுத்துக்கொள்ளவும் அர்ச்சகர்களுக்கு உரிமை வழங்கியிருக்கிறது தமிழக அரசு. இந்து அறநிலையத்துறையின் உள்துறைப் பணியாளர்களாக இருந்து கொண்டு, மாதம் பல ஆயிரங்களை வருவாயாக ஈட்டும் மதுரைக் கோயில் பட்டர்கள்தான், அறநிலையத்துறை கொண்டு வந்த சட்டத்துக்கு எதிராக இன்று உச்சநீதிமன்றம் சென்றிருக்கிறார்கள். சிதம்பரம் கோயிலை அறநிலையத்துறை மேற்கொள்ளலாமென்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து ஒரு ஆண்டு கடந்த பின்னரும், இந்தக் கணம் வரை தில்லைக் கோயில் தீட்சிதர்கள், நகைகளையும், கணக்குகளையும், நிர்வாகத்தையும் அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கவில்லை. அரசும் அவர்கள் மீது நடவடக்கை எடுக்கவில்லை