பெங்களூர்: கடைக்கு வந்த இளம்பெண்ணின் முகத்தில் 'மயக்க ஸ்பிரே' தெளித்து, ஆபாச புகைப்படம் எடுத்த கடைக்காரரை பொது மக்கள் தர்ம அடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்தனர்.
பெங்களூர் மூடலப்பாளயா பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. மோகன் என்ற 35 வயது ஆசாமி, தனது கடைக்கு பொருள் வந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்து உட்காரச் செய்துள்ளார்.
பி.காம் படிக்கும் அந்த 21 வயது இளம்பெண் அசந்த நேரத்தில் 'மயக்க ஸ்பிரே'யை முகத்தின் அருகே அடித்துள்ளார்.
பெண் மயங்கியவுடன் ஆடைகளை களைந்து ஆபாசப் படங்கள் எடுத்ததாகக் கூறப்படுகிறது.
சற்று நேரத்தில் நினைவு திரும்பியதும் நிலைமையை உணர்ந்து அதிர்ந்த இளம் பெண்ணிடம், 'ரூ.1 லட்சம் கொடு இல்லையெனில் ஆபாசப் படங்களை இன்டர்நெட்டில் வெளியிட்டு விடுவேன்' என மிரட்டியுள்ளார் அந்தக் கடைகாரர்.
மிரண்டுபோய் வீட்டிற்கு வந்த பெண் பெற்றோரிடம் நடந்ததை கூறினாள். இதையடுத்து பெண்ணின் உறவினர்கள், அப் பகுதி பொதுமக்கள், கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் எல்லோரும் ஒன்று சேர்ந்து சென்று கடைக்காரரை வீதியில் இழுத்துப்போட்டு தர்மஅடி கொடுத்தனர்.
பின்னர் சந்திரா லேஅவுட் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment