Showing posts with label கோகோ கோலா. Show all posts
Showing posts with label கோகோ கோலா. Show all posts

Tuesday, June 29, 2010

மென்டோஸ் மிட்டாயும் கோகோ கோலாவும் கலந்தால்

மென்டோஸ் மிட்டாய் நாம் அறிந்த ஒன்று. சிறுவர்கள் விரும்பி சாப்பிடுவர். பிரேசில் நாட்டில் ஒரு சிறுவன் இந்த மிட்டாயை சாப்பிட்டு விட்டு கோகோ கோலா அருந்திய சில நிமிடங்களில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனான். இதே மாதிரி மரணம் முன்பு பிரேசில் நாட்டில் மற்றொரு சிறுவனுக்கும் ஏற்பட்டது. மென்டோஸ் மிட்டாயை கோகோ கோலா/ பெப்சி பானத்துடன் கலந்தால் என்ன நடக்கிறது என்பதை பின்வரும் ஒரு எளிய ஆனால் அதிர்ச்சிகரமான சோதனை விளக்குகிறது.

எனவே மென்டோஸ் (போலோ) மிட்டாய் சாப்பிட்ட உடன் கோகோ கோலா அல்லது பெப்சி பானம் அருந்த வேண்டாம். எச்சரிக்கையாக இருங்கள்.

இப்போது வேதனையை உண்டாக்கும் சோதனையை கவனிப்போம்.







என்ன பயங்கரம்? இந்த சோதனை நமது வயிறுக்குள் நடந்தால் என்னவாகும் என்பதை சற்றே கற்பனை செய்து பாருங்கள். நினைத்தாலே குலை நடுங்குகிறது.

இது சற்றே பழைய சங்கதியாக இருந்தாலும், தெரிந்து கொள்ளாதவர்கள் தெரிந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்தப் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகள் இந்த இரண்டு வகைகளையும் விரும்பி சாப்பிடுவதால் அவர்களுக்கு பெற்றோர்கள் எடுத்துக் கூற வேண்டும். அதாவது ஒரு சமயத்தில் ஏதாவது ஒன்றை சாப்பிடலாம். அடுத்ததடுத்து வேண்டாம்.
நன்றி : http://sattaparvai.blogspot.com/2010/06/blog-post_29.html