Showing posts with label சிலி. Show all posts
Showing posts with label சிலி. Show all posts

Tuesday, January 13, 2009

இஸ்ரேல் தூதரகத்திற்கு செருப்பு மரியாதை!

நாசகார ஆயுதங்களின் மூலமாக மனிதகுலத்தினை அச்சுறுத்தி வரும் ஏகாதிபத்திய சக்திகளுக்கு மிகவும் கேவலமான அனுபவம் சமீபகாலமாக ஏற்பட்டு வருகிறது.


அணுஆயுதங்களை ஏராளமாக குவித்து வைத்திருக்கும் அமெரிக் காவும், அமெரிக்காவின் ஏவல் நாய் என வரலாற்றில் வர்ணிக்கப்படும் யூத இனவெறி இஸ்ரேலும் காலணி மரியாதைக்கு இலக்கானது.


ஈராக்கை குதறிய கொடூரன் ஜார்ஜ் புஷ் மீது ஈராக்கின் இளம் பத்திரிகை யாளர் முன்ததர் அல் ஜைதி தனது காலணிகளை வீசி கௌரப்படுத்தி னார். அப்பாவி மக்களின் மீது பேரழிவு ஆயுதங்களை வீசிய சீரழிவின் நாயகன் ஜார்ஜ் புஷ் மீது காலில் போடும் செருப்புகளை வீசி அவரை வரலாறு காணாத அவமானத்தில் ஆழ்த்தினார்.


தற்போது காஸாவில் படுகொலை களை நிகழ்த்திவரும் இனவெறி இஸ்ரேலின் ஈனச் செயலைக் கண் டித்து உலகெங்கும் கண்டன ஆர்ப் பாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


குறிப்பாக சிலி நாட்டில் இஸ்ரேலிய தூதரகத்தில் நிகழ்ந்த ஆர்ப்பாட்டத் தில் தலைநகர் சாண்டியாகோ-வில் உள்ள இஸ்ரேலியத் தூதரகம் செருப்பு களால் நிரம்பி வழிந்தது.


பழைய செருப்புகள் அடங்கிய குப்பைக் கூடைகளை மலைபோல வீசியதால் இஸ்ரேல் தூதரகம் முடை நாற்றம் வீசுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.