Showing posts with label சென்னை. Show all posts
Showing posts with label சென்னை. Show all posts

Tuesday, January 12, 2010

செல் பேசியபடி பஸ் ஓட்டிய 31 டிரைவர்கள் சஸ்பெண்ட்

Bus

சென்னை: செல்போன் பேசியபடி பேருந்துகளை இயக்கிய 31 அரசு பஸ் டிரைவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

செல்போன் பேசியபடி பேருந்துகளை இயக்குவதால் தொடர் விபத்துகள் ஏற்பட்டதையடுத்து அரசு போக்குவரத்து கழகங்களுக்கு முதல்வர் கருணாநிதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

அரசு பஸ் டிரைவர்கள் செல்போன் பேசியபடி பேருந்துகளை இயக்குவதால் தொடர் விபத்துகள் ஏற்பட்டதையடுத்து அரசு போக்குவரத்து கழகங்களுக்கு முதல்வர் கருணாநிதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

இதன்படி அரசு பஸ் டிரைவர்கள் பணியின்போது செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது. இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதைக் கண்காணிக்க கிளை மேலாளர்கள், கண்காணிப்பாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் திடீரென்று அரசு பஸ்களில் ஏறி டிரைவர்களை சோதனையிட்டு வருகின்றனர்.

இந்த சோதனைகளில் தமிழகம் முழுவதும் ஏராளமான அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள் செல்போன் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முதல் முறை அவர்கள் எச்சரித்து அனுப்பப்பட்டனர்.

ஆனாலும் டிரைவர்கள் பணியின்போது செல்போனை கொண்டு செல்வது நிற்கவில்லை.

இதையடுத்து 226 டிரைவர்களிடமிருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவர்களுக்கு நோட்டீசும் தரப்பட்டது.

இந் நிலையில் செல்போன் பேசிக்கொண்டே பஸ்சை ஓட்டிச்சென்ற 31 டிரைவர்கள் மீது போக்குவரத்துக் கழகம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்னர்.

இதில், சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக டிரைவர்ள் 2 பேரும், விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த 6 பேரும், கோவை போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த 7 பேரும், சேலம் போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த 2 பேரும் அடங்குவர்.

மேலும் வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 6 மண்டலங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 63 டிரைவர்கள் பிடிபட்டனர். இவர்களது செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ன.

இந்ச செல்போன்களை அதிகாரிகள் சோதனையிட்டபோது 6 டிரைவர்கள் பணியில் இருந்தபோது செல்போனில் பேசியிருந்தது தெரியவந்ததால் அவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மற்றவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் தரப்பட்டுள்ளது.

கோவையில் பிடிபட்ட 62 டிரைவர்களில் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கும்பகோணம் போக்குவரத்து கழகத்திலும் செல்போன் வைத்திருந்த 52 டிரைவர்கள் பிடிப்பட்டனர்.

இதில் ஒருவர் மட்டும் செல்போனை பயன்படுத்தியதால் அவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

பணியின்போது டிரைவர்கள் செல்போனை பயன்படுத்தினால் அது பற்றி பயணிகள் புகார் செய்யலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது. 94450-30516, 93833-37639 ஆகிய எண்களில் பயணிகள் புகார் தரலாம்.

சென்னையில் இது தொடர்பான எண்கள் அடங்கிய ஸ்டிக்கர் எல்லா பஸ்களிலும் ஒட்டப்பட்டு வருகின்றன.

Tuesday, November 10, 2009

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி

சென்னை: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொன்று தற்கொலை என நாடகம் போட்ட மனைவியையும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்களையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை, ஆவடி வீட்டுவசதி வாரியக்குடியிருப்பில் வசித்து வந்தவர், சுதாகர் (38) ரியல் எஸ்டேட் புரோக்கர். இவரது மனைவி ஷீலா (32). இவர்களுக்கு நிவேதிதா (8) என்ற மகளும், விஜய் (2) என்ற மகனும் உள்ளனர்.

கடந்த மாதம் 26-ந் தேதி சுதாகர் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி ஷீலா ஆவடி போலீஸ் நிலையத்திற்கு அதிகாலை 3 மணிக்கு போன் செய்து எனது கணவர் சுதாகரை யாரோ மர்ம ஆசாமிகள் கொலை செய்து விட்டு போகும் போது வீட்டின் கதவை வெளிப்புறம் தாழ்ப்பாள் போட்டுவிட்டு சென்றதாக கூறினார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் தலைமையிலான போலீசார் சுதாகரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பிரேத பரிசோதனையில் சுதாகர் கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
பிணத்தை மனைவியிடம் ஒப்படைத்த போலீசார் இறுதிச் சடங்கு முடியும் வரை மவுனம் காத்தனர். எனினும், சுதாகரின் மனைவியை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது ஷீலா அதிகநேரம் செல் போனில் யாரோ ஒருவருடன் பேசுவது தெரியவந்தது. உஷாரான போலீசார் ஷீலா உபயோகப்படுத்தும் செல்போனின் விவரங்களை சேகரித்தனர்.

அதில், தினமும் இரவில் மணிக்கணக்கில் ராஜேஷ் (24) என்பவருடன் அவர் பேசியது தெரியவந்தது. ராஜேஷை பற்றி விசாரித்த போது, அவர் சுதாகரின் அக்காள் மகன் என்பதும் அவருக்கு சுதாகர் கார் வாங்கி கொடுத்து டிராவல்ஸ் நிறுவனம் வைத்து கொடுத்ததும் தெரிய வந்தது. பின்னர் இருவருக்குள்ளும் ஏற்பட்ட பிரச்சிணை காரணமாக காரை திரும்ப வாங்கிக் கொண்டு சுதாகர் ராஜேஷைத் துரத்தியதும் விசாரணையில் தெரிந்தது.

குண்டாக - அசிங்கமாக இருப்பார்...

இதையடுத்து இருவரிடமும் துருவி, துருவி போலீசார் விசாரித்தபோது கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். இதுகுறித்து ஷீலா போலீசாரிடம் கொடுத்த வாக்கு மூலம்:

எனது கணவர் சுதாகர் எனக்கு மாமன் முறை ஆகும். ரியல் எஸ்டேட் தொழிலில் கைநிறைய சம்பாதித்தார். உடல் பருமன் ஆகி குண்டாக இருப்பார். இதனால், வெளியில் அவருடன் செல்வதற்கு எனக்கு அசிங்கமாக இருக்கும். மேலும் உடல் பருமனாக இருப்பதால் அவரால் என்னுடன் உல்லாசமாக இருக்க முடியவில்லை.

அவரது அக்கா மகன் ராஜேஷிற்கு கார் ஓட்ட தெரியும் என்பதால் அவனுக்கு வங்கியில் கடன் பெற்று ஒரு கார் வாங்கி கொடுத்து டிராவல்ஸ் நிறுவனம் வைத்து கொடுத்தார்.

மாமி மாமி என்று பாசமாக இருப்பார் ...

ஒருநாள் கடைக்கு செல்லவேண்டும் என்று என் கணவரிடம் கூறினேன். அவரோ ராஜேஷுடன் காரில் அனுப்பி வைத்தார். அவனும் என்னை மாமி மாமி என்று பாசமாக அழைத்தான். அவனது அன்பில் நான் மயங்கினேன்.

என்னை விட 8 வயது குறைந்த ராஜேஷுடன் உல்லாசமாக இருக்க முடிவு செய்தேன். ஒருநாள் தலைவலிக்கிறது என்று பாசாங்கு செய்தேன். அவனும் தைலம் தேய்த்தான். இதுதான் சந்தர்ப்பம் என்று அவனை இழுத்து அணைத்துக் கொண்டேன்.

அன்று முதல் தினசரி உல்லாசமாக இருப்போம். இந்த கள்ள உறவு என் கணவருக்கு தெரிந்து விட்டது. அவர் இருவரையும் கண்டித்தார். இதைத் தொடர்ந்து தினமும் எனக்கும் அவருக்கும் சண்டை வந்தது. என்னால் ராஜேஷை பார்க்காமல் இருக்க முடியவில்லை.

ஒருநாள் நான் உணர்ச்சி வசப்பட்டு, இனி என் கணவன் உயிருடன் இருந்தால் நாம் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பில்லை என்று கண்ணீர் மல்க கூறினேன். இதைக் கேட்டு மனமுடைந்த ராஜேஷ் விரைவில் சுதாகருக்கு முடிவு கட்டிவிட்டு உன்னுடன் காலமெல்லாம் வாழ்வேன் என்று கூறினான்.

சம்பவத்தன்று நாங்கள் எதிர்பார்த்தது போல் வீட்டிற்கு வந்த சுதாகர் உடனடியாக அசந்து தூங்கி விட்டார். இந்த தகவலை செல்போன் மூலம் ராஜேஷிற்கு நான் கூறினேன்.

அதன்படி ராஜேஷ் நைலான் கயிற்றுடன் எங்கள் வீட்டிற்கு வந்தான். பின்னர் இருவரும் சேர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சுதாகரின் காலை டவலால் கட்டிபோட்டோம். ராஜேஷ் நைலான் கயிற்றால் இறுக்க நான் கணவர் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு பிடித்துக் கொண்டேன். சிறிது நேரத்தில் எனது கணவர் துடித்து, துடித்து செத்தார்.

பிணத்தை வைத்துக் கொண்டு உல்லாசம்...

சுதாகர் இறந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு நாங்கள் இருவரும் படுக்கை அறையில் உல்லாசமாக இருந்தோம். பின்னர், வெளிப்புறமாக தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு ஒன்றும் தெரியாதது போல் ராஜேஷ் அவனது வீட்டிற்கு சென்று படுத்துவிட்டான்.

மறுநாள் சுதாகரை எழுப்புவது போல் நடித்தேன். அவர் பிணமாக இருந்தார். அழுது புலம்பி ஊரை கூட்டினோம். எல்லோரும் நம்பினார்கள். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் அல்லது அவரே தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று நம்ப வைத்தோம். ஆனால் போலீசார் எங்களை கண்காணித்து பிடித்துவிட்டனர் என்று கூறியுள்ளார் ஷீலா.

ஷீலா, ராஜேஷை போலீஸார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Thursday, October 22, 2009

நர்ஸை கடத்தி கற்பழித்த 2 வண்டலூர் பூங்கா ஊழியர்கள்

சென்னை: போலீஸ்காரர்கள் போல் நடித்து நர்ஸை கடத்திச் சென்று கற்பழித்த வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த 32 வயதான நளினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நர்சாக பணியாற்றி வருகிறார். திருமணமான இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 18ம் தேதி இரவு நளினி தாம்பரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக ஆட்டோவில் சென்றார். ஆட்டோவை சரவணன் என்பவர் ஒட்டினான்.

தாம்பரத்தைத் தண்டியும் அவன் ஆட்டோவை படுவேகமாக ஓட்டினான். அதை நிறுத்துமாறு நளினி கூறினார். ஆனால், சரவணன் கேட்கவில்லை. தொடர்ந்து படுவேகத்தில் ஓட்டிய சரவணன் ஊரப்பாக்கம் நோக்கி சென்றான்.

இதனால் பயந்து போன நளினி ஆட்டோவிலிருந்து குதித்துவிடுவதாக எச்சரித்தார். இதையடுத்து வேகத்தை குறைத்த சரவணன், ஆட்டோவை தாம்பரம் நோக்கி திருப்பினான்.

இரவு 9 மணி அளவில் ஆட்டோ வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே வந்த போது இரண்டு பேர் ஆட்டோவை வழிமறித்தனர். தங்களை போலீஸ் என அவர்கள் கூறினர்.

இதை நம்பிய நளினி, ஆட்டோ டிரைவர் தன்னை தாம்பரத்தில் இறக்கிவிடாமல், ஊரப்பாக்கம் வரை கடத்தி வந்த தகவலை தெரிவித்தார்.

இதையடுத்து ஆட்டோ டிரைவரை மிரட்டி அஙிகிருந்து அனுப்பிய அந்த இருவரும் நளினியை போலீஸ் நிலையத்திற்கு செல்லலாம் என்று கூறி, தங்களது மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றனர்.

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கார் நிறுத்துமிடம் எதிரே உள்ள வனப் பகுதிக்கு தேவியை கொண்டு சென்ற அவர்கள் இருவரும் நளினியை மானபங்கம் செய்தனர்.

நளினி உதவிகேட்டு கதறியும் பலனில்லாமல் போனது. இதையடுத்து இருவரும் தப்பிச் சென்றுவிடவே, அந்த இருட்டில் வனப் பகுதியில் இருந்து நளினி தட்டுத்தடுமாறி தாம்பரம் வந்து சேர்ந்தார்.

இது குறித்து நளினி நேற்று முன்தினம் சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டிடம் புகார் செய்தார். இதைடுத்து இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் தலைமையில் தனிப்படை அமைத்து வழக்கை விசாரிக்க ஜாங்கிட் உத்தரவிட்டார்.

போலீசார் நடத்திய விசாரணையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் பயாலஜிஸ்ட்டாக பணிபுரியும் பாஸ்கர் (49), டிரைவராகப் பணிபுரியும் வெள்ளைச்சாமி (49) ஆகிய இருவரும் தான் இந்த கடத்தல், கற்பழிப்பில் ஈடுபட்டத தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். இருவரும் வண்டலூர் பூங்காவில் உள்ள குடியிருப்பில் தான் வசித்து வருகிறார்கள்.

கைதான இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது போல இன்னும் எத்தனை பெண்கள் இவர்களிடம் சிக்கி பாதிக்கப்பட்டனர் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

ஆட்டோ டிரைவர் சரவணனையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Sunday, August 23, 2009

சென்னையில் முதலில் குடியேறியவர்கள் முஸ்லீம்களே!

சென்னை: மயிலாப்பூர் என்றால் உடனே நினைவுக்கு வருவது பிராமண சமூகத்தினர்தான். ஆனால் ஒரு காலத்தில் அங்கு பெரும்பான்மையாக வசித்தவர்கள் முஸ்லீம்கள் என்கிறார் ஆற்காடு இளவரசர் நவாப் முஹம்மது அப்துல் அலீ. இதை நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறார் அவர்.

பதிமூன்றாம் வது நூற்றாண்டின் தொடக்கத்திலேயே சென்னை நகரில் முஸ்லீம்கள் குடியேறி விட்டனர். மெட்ராஸ் முஸ்லீம்கள் மற்றும் மசூதிகள் என்ற பெயரில் ஒரு ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை இயக்கியிருப்பவர் எஸ்.அன்வர். இந்த டாக்குமென்டரி குறித்து அன்வரும், ஆற்காடு நவாப்பும் செய்தியாளர்களிடம் கூறுகையில், வெனிஸ் நகரத்து வியாபாரியான மார்க்கோபோலா, தனது சுற்றுலா கையேட்டில் அந்தக் காலத்து சென்னை நகர வாழ்க்கை குறித்து தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

அதில், 13வது நூற்றாண்டில் மயிலாப்பூர் பகுதியில் முஸ்லீம்கள் பெருமளவில் வாழ்ந்ததாக அவர் கூறியுள்ளார்.

போர்ச்சுகீசியரான டுவார்ட் பார்போசா தனது நூலில் கூறுகையில், 16வது நூற்றாண்டின் தொடக்கத்தில், மயிலாப்பூரில் உள்ள புனித தாமஸின் கல்லறையை (இப்போது சாந்தோம்) அங்குள்ள முஸ்லீம்கள்தான் பாதுகாத்து, பராமரித்து வந்தனராம்.

மதரஸா பட்டனம் என்பதுதான் உருமாறி மதராஸ் என்று வந்திருக்கலாம் என்றும் ஒரு கருத்து உள்ளது.

அதேபோல இன்று அழைக்கப்படும் சைதாப்பேட்டை முன்பு சைதாபாத் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்துள்ளது. அங்கு 18வது நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆற்காடு நவாப் சதாத்துல்லா கான் ஒரு மசூதியைக் கட்டி அந்தப் பகுதிக்கு சைதாபாத் என்று பெயரிட்டார்.

அதேபோல சென்னையின் முதல் மசூதியைக் கட்டியவர் ஒரு இந்து வியாபாரி என்பது சுவாரஸ்யமான விஷயம். அவரது பெயர் காசி வீரண்ணா. மூர் தெருவில் 1670களில் அவர் ஒரு மசூதியைக் கட்டினார். காசி வீரண்ணாவுக்ுக கோல்கண்டா சுல்தான்களுடன் நல்ல தொடர்பு இருந்தது.

ஆங்கிலேயர்கள் நமது நாட்டுக்கு வந்தபோது நமது நாட்டில் நிலவிய சமூக நல்லிணக்கத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. காரணம், அப்போது மக்கள் மத ரீதியாகவ பிரிந்து கிடக்கவில்லை. அனைவரும் ஒன்றாக, நல்லிணக்கத்துடன் வசித்து வந்தனர்.

உதாரணத்திற்கு, முஸ்லீம் மன்னர்கள் இந்துக்களை உயர் அதிகாரிகளாக வைத்திருந்தனர். விஜய நகர மன்னர்கள், முஸ்லீம்களை உயர் பதவிகளில் வைத்திருந்தனர்.

இந்தியாவின் ஆத்மாவாக அப்போதே மதச்சார்பின்மை இருந்து வந்துள்ளது. அப்போது அனைத்து மதத்தினரும் சம உரிமைகளுடன், சம அந்தஸ்துடன் வாழ்ந்து வந்துள்ளனர்.

Tuesday, August 11, 2009

கடல் உள்வாங்கியது:பட்டினப்பாக்க பதட்டம்

சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் கடலில் ஏற்படும் திடீர் மாற்றத்தினால் கடந்த சில மாதங்களாகவே பொதுமக்கள் பீதி அடைந்து காணப்பட்டனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் போலீசார், சென்னையில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதால் சுனாமி வரும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

இதனால் இங்கு வசித்த மக்கள் அலறியடித்துக் கொண்டு சாலை வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். பட்டினப்பாக்கம் பகுதி கடலில் கடந்தசில மாதங்களாகவே இருந்து வந்தகடல் கொந்தளிப்பு இன்று காணப்பட வில்லை. சுனாமி எச்சரிக்கையையும் மீறி சில வாலிபர்கள் கடலின் தன்மையை நோட்டமிட்டப்படி இருந்தனர்.

வழக்கமான கொந்தளிப்புடன் காணப்படும் கடல் இன்று சுமார் 200 அடி தூரம் வரை உள்வாங்கி காணப்பட்டது. இங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்தின் பின் பகுதியை தொட்டபடி நிற்கும் கடல் அலைகள் இன்று பல அடி தூரத்துக்கு அப்பால் நகர்ந்து சென்றது.

பின்னர் சிறிது நேரத்திலேயே கொந்தளிப்பு இல்லாமல் வழக்கமான இடத்துக்கு கடல் அலைவந்து சென்றது. 10 நிமிடத்துக்கு ஒரு முறை இது போன்ற மாற்றங்கள் காணப்பட்டது. ஆனால் சுனாமி ஏதும் ஏற்பட வில்லை. தொடர்ந்து கடல் மாற்றத்தால் அந்த பகுதியில் பீதி காணப்படுகிறது.