Showing posts with label திருச்சி. Show all posts
Showing posts with label திருச்சி. Show all posts

Sunday, August 9, 2009

திருச்சியில் மாணவன் நரபலி?-ஒருவன் சரண்

திருச்சி: திருச்சியில் குளத்தில் பள்ளி மாணவன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தான். அவன் நரபலி தரப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

திருச்சி எடமலைப்பட்டிபுதூரைச் சேர்ந்த துப்புறவுத் தொழிலாளி முருகேசனின் மகன் மணிகண்டன் (13). ஆறாம் வகுப்பு படித்து வந்த இந்தச் சிறுவன் சில நாட்களுக்கு முன் இரட்டைமலை ஒண்டிகருப்புசாமி கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றான்.

ஆனால், இரவாகியும் வீடு திரும்பாததால் பல இடங்களில் தேடிய பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். இந் நிலையில் நேற்று அருண்குமார் (24) என்பவர் நீதிமன்றத்தில் திடீரென சரணடைந்தார்.

அவர் தனது வாக்குமூலத்தில் மணிகண்டனை எடமலைப்பட்டிபுதூர் ரயில்வே தண்டவாளம் அருகே கொன்று போட்டு விட்டதாகக் கூறினார். இதையடுத்து போலீசார் அப் பகுதியில் உடலைத் தேடினர்.

அப்போது கருமண்டபம் கொல்லங்குளத்தில் மணிகண்டனின் உடல் கழுத்து அறுபட்ட நிலையில் மிதந்தது.

அவன் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இவரை அருண்குமார் நரபலி கொடுத்தாரா அல்லது வேறு யாராவது நரபலி தந்துவிட்டு வழக்கை திசை திருப்ப அருண்குமாரை சரணடைய வைத்துள்ளார்களா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.