Aramex is organizing an emergency donation campaign, with support from Majid Al Futtaim Group in the UAE, to collect and deliver aid supplies to the afflicted people in Gaza.
Needed materials: First Aid kits, medical emergency supplies, chronic illness medication, personal hygiene products, non-perishable foods, new clothes, tents and blankets.
Please ensure the validity date is at least 6 months for food and at least 1 year for medicine.
Aramex collection bins are located at the following locations:
In the UAE*: Mall of Emirates, Deira City Centre, Sharjah City Centre, and Ajman City Centre.
In Jordan, at Aramex offices at the following locations:
- Khalil El Salem Street, Khalda - Amman
- Bader Shaker Al-Sayyab, Near Social Security Building - Amman
- Ameer Mohammad Street, Zarqa
- Malik Faisal Street, Irbid
- Royal Jordanian Building, Haya Roundabout, Aqaba
Aramex Media Bookshops in:
- Thaqafa Street, Shmeisani
- Cozmo, 7th Circle
- Marhaba, Intercontinental Hotel
- Shop & Ship, 4th circle
Act now, every donation counts.
* Donations in the UAE are accepted starting January 1st until January 11th 2009.
more details : www.aramex.com
Showing posts with label பலஸ்தீன. Show all posts
Showing posts with label பலஸ்தீன. Show all posts
Sunday, January 4, 2009
Wednesday, December 31, 2008
ஒரே நாளில் 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களைக் கொன்று குவித்த பயங்கர வாத இஸ்ரேல்!


உலகின் ஒரே வந்தேறி ஆக்கிரமிப்பு நாடான இஸ்ரேலின் வன்கொடுமைகள் எல்லை மீறியது. டிசம்பர் 27, 2008ல் இஸ்ரேலின் வான்படை தாக்குதலில் அந்த ஒரே நாளில் மட்டும் 205 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பெண்கள் குழந் தைகள் கொல்லப்பட்ட கொடூரம் கண்டு உலகமே அதிர்ந்தது. 60 ஆண்டுக்கு முன்பு அமெரிக்க குழந்தையான இஸ்ரேல் என்ற அந்த முறையற்ற குழந்தை ஜனித் தது. பல நூற்றாண்டுகளாக உலகம் முழுவதும் விரட்டப்பட்ட அவர்களிடம் எந்த பகைமையும் காட்டாது சமாதானத் துடன் வாழ்ந்து வந்த ஒரு தூய சமூகத் தினரை வதைத்து அவர்களது நிலப் பரப்பை முற்றிலும் அபகரித்து தாங்கள் ஒரு இழிமக்கள் கூட்டம்தான் என்பதை நிரூபித்தார்கள். எவ்வித உரிமைகளும் வழங்காது மேற்குலகின் வக்கிரப் புத்தி யுடன் கூடிய நிதி மற்றும் ராணுவ உதவியுடன் அப்பாவிகளை வதைத்தனர்.

இப்பூமி கிரகத்தின் முதல் பயங்கர வாத நாடு இஸ்ரேல். மோசமான பயங்கர வாதிகள் யூதர்கள் என்ற இழிபெயரே அவர்களுக்கு நிலைத்து விட்டது. முஸ்லிம்களின் மூன்றாம் புனிதத்தலம் அமைந்துள்ள தியாக பூமியாம் பாலஸ் தீனத்தை முழுமையாக மீட்கும் நாள் எந்நாளோ என உலக முஸ்லிம்களும் நீதி விரும்பும் அனைத்து மக்களும் ஏங்கித் தவித்தனர். உரிமை வேண்டி போராடிய இயக்கங்களுடன் இரக்கமற்ற முறையில் போர் தொடுத்தனர் யூத கோழைகள். போரின் கொடுமைக்கு அஞ்சி நாட்டை விட்டு ஓடும் அப்பாவி மக்களைக் கூட யூதவெறிக் கூட்டம் விட்டு வைத்ததில்லை. அகதி முகாம் களைக் கூட, அதிலுள்ள குழந்தைக் கொழுந்துகளைக் கூட கொத்துக் குண்டுகளால் குதறிய கொடுமை இந்த உலகமே கனவிலும் நினைத்துப் பார்க் காதது. ஆம்புலன்ஸ்களைக் கூட குண்டு களால் துளைத்தது. இத்தனைக் கொடு மைகள் இழைத்த இஸ்ரேலைத்தான் அமெரிக்காவும் பிரிட்டனும் பிற ஐரோப் பிய நாடுகளும், ஏன் மன்மோகனின் அமெரிக்க காதல் அரசும் தலைமேல் தூக்கிப் பிடித்து வருகின்றன. கொண்டாடி, கூத்தாடி வருகின்றன.

இத்தகைய இக்கட்டான நிலையிலும் பாலஸ்தீன மக்களின் தலைவர்கள் சர்வதேச சமூகத்தின் ஆத ரவு வேண்டி நின்றனர். யாசர் அராஃபத் போன்ற வர்களுக்கு தார்மீக ரீதி யிலான ஆதரவினை வழங்கிய இந்தியா போன்ற நாடுகள் கூட அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ஆதரவு அணியில் இணைந்து விட்ட நிலையில் பாலஸ் தீன மக்களின் உரிமைப் போருக்கான சர்வதேச ஆதரவு என்பது அரசாங் கங்களின் மட்டத்தில் அறவே இல்லை என்ற நிலையில் உலகெங்கும் உள்ள வெகு ஜன மக்களின் ஆதரவு என்ற உயிர்க் காற்றை மட்டுமே பெற்று பாலஸ்தீன மக்களின் சுதந்திர தாகம் உலகெங்கும் ஒரு ஏக்கப் பிரச்சாரமாக வெளிப்பட்டி ருக்கிறது.
இந்நிலையில், 2006ஆம் ஆண்டு ஹமாஸ் என்ற விடுதலைப் போராளி களின் இயக்கம் தேர்தல் பாதைக்கு திரும்புவதாக அறிவித்தது. முதலில் உள்ளாட்சித் தேர்தல்கள் குதித்து பெருவாரியான வெற்றியைப் பெற்றது. அதோடு நாடாளுமன்றத் தேர்தலில் ஈடுபட்டு நாடாளுமன்றத்தில் அதிக இடங்களைப் பெற்று முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. இஸ்மாயில் ஹனியா, பாலஸ்தீனத்தின் பிரதமரானார்.
போராளி அமைப்பு, தேர்தல் பாதைக்கு பிரவேசம் செய்து பெருவாரியான வெற் றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்ததைப் பாராட்டவோ, வரவேற்கவோ பரந்த மனம் இல்லாத போலி ஜனநாயக தத்துவ வாதிகளான மேற்குலக அரசுகள் ஹமாஸை அங்கீகரிக்க மறுத்தன. சிறப் பான முறையில் ஆட்சி செய்த ஹமாஸ் அரசை செயல்பட விடாமல் முடக்கும் சதிச்செயலை ஃபத்தாஹ் அமைப்பை பகடைக்காயாகப் பயன்படுத்தி அமெரிக் காவும் இஸ்ரேலும் செய்தன. பாலஸ்தீன அதிபர் என்று அழைக்கப்படும் மஹ்மூத் அப்பாஸ் அமெரிக்காவுடனும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கோண்டி என்ற கண்டலீசா ரைஸுடனும் அதிக மாக உறவு பாராட்டத் தொடங்கினார். பாலஸ்தீனத்தின் நிதி ஆதாரம் முடக்கப் பட்டது. அரசு அதிகாரிகளுக்குக் கூட மாதாந்திர ஊதியம் வழங்க முடியா அவலத்தை ஹமாஸ் தலைமையிலான அரசு சந்தித்தது. பிற்போக்கு ஆக்கிர மிப்பு சக்திகளின் தீய நோக்கத்தை முறியடிக்கும் விதமாக சவூதி அரேபிய மன்னர் அப்துல்லாஹ் ஒரு சமாதான முன்முயற்சியை மேற்கொண்டார். அதனடிப்படையில் சொந்த சகோதரர் களுக்கு இடையில் பிளவு ஏற்பட்டிருந்த நிலையை ஒழித்துக்கட்ட வேண்டும் என விரும்பினார்.ஃபத்தாஹ்வின் அப்பாஸும், ஹமாஸின் தலைவர் ஹாலித் மிஷாலும், இஸ்மாயில் ஹனியா வும் சவூதி அரேபியாவுக்கு வரவழைக் கப்பட்டனர். உணர்ச்சிமிகு சந்திப்பில் எங்கள் மூத்த சகோதரரின் (மன்னர் அப்துல்லாஹ்வின்) கட்டளைக்கு கீழ்ப் படிவோம், சமாதானத்தைப் பேணுவோம் சகோதரச் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என உள்ளம் உருக உறுதிமொழி மேற்கொண்டனர். இது வரலாற்றுச் சிறப்புமிக்க மக்கா ஒப்பந்தம் என அழைக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத் தின்படி ஹமாஸுடன் பத்தாஹ் கூட்டு அமைச்சரவை அமைக்க முடிவெடுக்கப்பட்டது. சவூதியிலிருந்து பாலஸ்தீனத்திற்கு இரு பிரிவு தலைவர் களும் போய் சேர்ந்த சில நாட்களில் பிளவும் பிணக்கும் தோன்றின. இது எதிரிகளுக்கு கொண்டாட்டத்தைக் கொடுத்தது. மஹ்மூத் அப்பாஸ் அமெரிக்காவின் அடியொற்றி நடந்தார். ஹமாஸ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க தொடர்ந்து முயன்று வந்தது. ஹமாஸின் முயற்சிகளுக்கு முட்டுக் கட்டைகள் போடும் விதமாக பொருளாதாரத் தடையை விதித்து அமெரிக்கா தனது வக்கிரப் புத்தியைக் காட்டியது. பொருளாதாரத் தடையால் உயிர் காக்கும் மருந்துகள், எரிபொருள், உணவு, மின்சாரம் என அனைத்தையும் இழந்து பெரும் துயரத்தைச் சந்தித்தனர் காஸா பகுதி மக்கள். நிவாரணப் பொருட்களை சுமந்துகொண்டு சர்வதேச உதவிக் குழுக்கள் படகுகளில் வந்த போது அவர்களை வலுக்கட்டாயமாக இஸ்ரேல் அனுமதி மறுத்தது. பொறுமை இழந்த ஹமாஸ் போராளிகள் போர் நிறுத்தம் முடிவுக்கு வருவதாக அறிவித்தனர்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடை யிலான சமாதானப் பேச்சுவார்த்தையை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு எகிப்து முன்னெடுத்தது. இந்த ஆண்டு ஜூன் 19ஆம் தேதி ஹமாஸுக்கும் இஸ்ரேலுக் கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது. இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் இந்த மாதம் 19ஆம் தேதி ஆறு மாதம் கடந்துவிட்ட நிலையில் தொட ருமா? என கேள்விகள் எழுந்தபோது போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட மாட்டாது; போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது என அறிவித்தது. கடந்த நவம்பர் 4ம் தேதி இஸ்ரேல், எல்லைகளை மூடியது. சொல்லொணாத் துயரங்களை விளைவித்தது. 15 லட்சம் மக்கள் இன்று காஸாவில் வாழ்வாதார உதவிகள் ஏதுமின்றி வாடி வருகிறார்கள். உணவு, உயிர்காக்கும் மருந்துகள் ஏதுமின்றி தவிக்கும் நிலையில் ஹமாஸ் மற்றுமொரு இண்டிஃபாதாவை (மக்கள் போர்) அறிவித்திருக்கிறது.
அபூசாலிஹ் - tmmk.in
Subscribe to:
Posts (Atom)