Showing posts with label பெண் டாக்டர். Show all posts
Showing posts with label பெண் டாக்டர். Show all posts

Saturday, February 13, 2010

5 பேரை திருமணம் செய்து கொடுமைப்படுத்திய பெண் டாக்டர் கைது

கும்பகோணம்: ஐந்து கல்யாணம் செய்து அத்தனை பேரையும் நட்டாற்றில் விட்ட செக்ஸ் கொடுமை காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூர் எம்.வி.நகர் 8-வது மெயின்ரோடு, 8-வது தெருவை சேர்ந்தவர் வின்சென்ட் (33). இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கண்காணிப்பாளராக வேலை பார்த்தார்.

அதே மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தவர் கண் டாக்டர் சாந்தி (44). இருவருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இந்நிலையில் 2 பேரும் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர்.

இந்த நிலையில், வின்சென்ட் கும்பகோணம் கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் [^] கொடுத்தார். அதில், டாக்டர் சாந்தி தன்னை மோசடியாக செக்ஸ் வலையில் சிக்க வைத்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பணத்தையும் மற்றும் 26 பவுன் தங்க நகையும் பறித்து கொண்டார் என்றும், அத்துடன் தன்னை அடியாட்களை வைத்து சித்ரவதை செய்தார் என்றும் கூறப்பட்டிருந்தது.

புகாரின் பேரில் கும்பகோணம் போலீசார் வழக்கு பதிவு செய்து டாக்டர் சாந்தியை நேற்று கைது செய்தனர்.

இதுகுறித்து வின்சென்ட் கூறுகையில்,

கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துதவதமனையில் பணிபுரிந்தபோது டாக்டர் சாந்தி இரட்டை அர்த்தப் பேச்சால் என்னை மயக்கினார். நானும் அவரது வலையில் விழுந்து அவரது வீட்டிற்கு சென்றேன். அங்கு நாங்கள் 2 பேரும் மது அருந்திவிட்டு உல்லாசமாக இருப்போம்.

பின்னர் பல்வேறு காரணங்களை கூறி நகை, பணத்தை பறித்துக் கொண்டார். எங்களது உறவை அறிந்த மருத்துவமனை நிர்வாகம் எங்களை வெளியேற்றியதால் வேலூருக்கு சென்று அங்கு என்னை ஒரு வீட்டில் வைத்து என்னை இஷ்டப்படி சாந்தி நடத்தினார்.

இந்த நிலையில், வேலூரில் படிக்கும் ஒரு மாணவரோடு அவருக்குத் தொடர்பு எற்பட்டது. இதனால் என்னை ஒதுக்கிவிட முடிவு செய்து என்னை அடித்து துன்புறுத்தினார் என்றார்.

திருச்சியைச் சேர்ந்தவர் சாந்தி. இவரது தந்தை தியாகராஜன் பிரபலமான டாக்டர் ஆவார். வின்சென்ட்டையும் சேர்த்து மொத்தம் ஐந்து பேரை சாந்தி கல்யாணம் செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தஞ்சாவூர் மருத்துவ கல்லூரியில் படித்தபோது மலேசியாவை சேர்ந்தவரும், அதே கல்லூரியில் படித்தவருமான குணசேகரனுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

அவர்களுக்கு 14 வயதில் ஒரு மகன் உள்ளான். ஆரம்பத்தில் டாக்டர் சாந்தி திருச்சி கே.கே.நகரில் கண் மருத்துவமனை நடத்தி வந்தார். இந்நிலையில் டாக்டர் குணசேகரனுக்கும், சாந்திக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக குணசேகரன் மலேசியாவிற்கு சென்று விட்டார்.

இதையடுத்து திருச்சியை சேர்ந்த டாக்டர் சுபாஷ் சந்திரபோசுடன் சாந்திக்கு காதல் ஏற்பட்டது. அந்த காதல் 2001 முதல் 2005 வரை நீடித்தது. பின்னர் அவரையும் கழற்றிவிட்டு, தன்னுடன் மருத்துவ கல்லூரியில் படித்த கும்பகோணத்தை சேர்ந்த டாக்டர் பாலமுருகனை காதலித்து கணவன்-மனைவியாக வாழ்ந்தார்.

அப்போது கும்பகோணம் ஸ்டேட் பாங்க் காலனியில் வீடு எடுத்து டாக்டர் சாந்தி தங்கினார். சில நாட்களில் பாலமுருகனுக்கும், சாந்திக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

இந்த பிரச்சினைக்கு பிறகு பெங்களூரை சேர்ந்த ஆனி என்ற டாக்டருடன் பழக்கம் ஏற்பட்டு இருந்த நிலையில்தான் வின்சென்ட்டை 5-வது காதலராக வலையில் சிக்க வைத்துள்ளார்.

டாக்டர் சாந்தியின் 2வது கணவராக இருந்தவரான டாக்டர் சுபாஷ் சந்திரபோஸ் கூறுகையில், என்னுடன் டாக்டர் சாந்தி, சுமார் 5 ஆண்டுகள் பழகி என்னிடம் பணத்தை ஏமாற்றியதோடு என்னையும் போலீசில் சிக்க வைத்து விட்டார்.

ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பிரச்சனையை உண்டாக்குவது தான் சாந்தியின் வேலை. அவரின் செக்ஸ் டார்ச்சர் வெளி உலகிற்கு தெரிந்தால் தான் அப்பாவிகளுக்கு நல்லது என்றார்.