எங்களை வெறியூட்டி களத்தில் இறக்கிய நம்பியாரின் கூட்டத்திற்கோ எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. எங்களுக்கு ஊக்கம் கொடுத்துவிட்டு அவர்கள் தப்பித்துக் கொண்டார்கள்.
40 நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். இந்த மருத்துவமனை வாழ்க்கையில் எனக்கு ஒரு உற்ற துணையாக ஒருவள் இருந்தாள். அவள் வேறு யாருமில்லை நான் ஆர்.எஸ்.எஸ்ஸில் சாகா பயற்சிப் எடுக்கும் பொழுது பக்கத்தில் சாந்தா என்ற ஒரு பெண்ணுடன் பழகிவந்தேன். அந்தப் பழக்கம் காதலாக உருவானது. அவள் ஒரு தேவர் இனத்தைச் சார்ந்த ஆர்.எஸ்.எஸ். குடும்பத்தில் பிறந்த பெண்.
மருத்துவமனையில் எனது காலின் நிலைமை மிக மோசமாக இருந்தது. காலைத் துண்டித்து மாற்ற வேண்டும் என்று டாக்டர் சொல்லிவிட்டார். தனிமையான வாழ்க்கை அப்போதுதான் எனது மனதில் துக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் காலை முறித்தால் பிழைப்பிற்கு வழியில்லாமல் கஷ்டப்படுவேன் என்ற எண்ணத்தில் காலை துண்டித்து எடுக்க நான் சம்மதிக்கவில்லை.
உடனே நான் ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்து ஒரு ஆர்.எஸ்.எஸ். காரனான எனது தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவனிடம் உதவி தேடினேன். அவன் என்னை ஒரு நாட்டு வைத்தியரிடம் அழைத்துச் சென்றான். கடுமையான முயற்சியின் போது சிறிது நாளில் எனது காலும் சரியானது. உடனே நான் எனது வீட்டிற்குத் திரும்பினேன். அப்பொழுது ஆர்.எஸ்.எஸ். காரர்கள் என்னை அமைப்பிலிருந்து வெளியேற்றியிருந்தார்கள்.
சாந்தா என்ற அந்த ஆர்.எஸ்.எஸ். உயர் குடும்பத்தைச் சார்ந்த பெண்ணுக்கும் எனக்கும் தொடர்புகள் அதிகமாயின.
நான் தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்தவனாக இருப்பதால் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் இதைக் கடுமையாக எதிர்த்தார்கள். அப்போது தான் எனக்குத் தெரிந்தது:
இந்துக்கள் எல்லோரும் சமமானவர்; இந்து மதத்தை நாம் நன்றாக பேணிக் காப்போம்; என்ற இவர்களது கோஷம் வெறும் பொய்யானது என்று.
இதிலிருந்து ஆர்.எஸ்.எஸ்ஸிற்காக வேலை செய்வதை நான் தவிர்க்கலானேன். ஆர்.எஸ்.எஸ்ஸில் உயர் ஜாதி இனத்தைச் சார்ந்தவர்கள் சொகுசாக வாழ தாழ்த்தப்பட்ட மக்களான நாங்கள் பல இன்னல்களுக்கும், துன்பங்களுக்கும் ஆட்பட்டு எங்களது சொந்த வாழ்க்கையைப் பற்றியே சிந்திக்காமல் ஏமாந்தவர்களானோம்.
இறைவன் நாடினால் வளரும்.
No comments:
Post a Comment