வயதுக்குவராத பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த பிரபல கேரள சாமியார் சந்தோஷ் மாதவனுக்கு 16 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ. 2 லட்சம் அபாராதமும் விதித்து எர்ணாகுளம் கூடுதல் அமர்வு நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரள மாநிலத்தில் மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் பதினைந்து வயதுக்குட்பட்ட இரண்டு சிறுமிகளை பலாத்காரம் செய்த வழக்கு உட்பட மூன்று வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சாமியாருக்கெதிரான நேரடி சாட்சிகள், சிடிக்கள் மற்றும் புகைப் படங்களின் அடிப்படையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். முக்கிய நான்கு சாட்சிகளில் மூன்று பேர் வழக்கிலிருந்து பின்வாங்கிய நிலையில் ஒரு பெண்ணின் உறுதியான சாட்சியத்தின் அடிப்படையில் இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
நான் ஒரு நிரபராதி என்றும் எனவே தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்த ஆபாச சாமியார், தனக்கெதிராக போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு தன்னை குற்றவாளியாக்கியிருப்பதாகவும் கடந்த ஒரு வருடமாக ஜெயிலில் அனுபவித்த தண்டனையே மிக அதிகம் என்றும் நீதிபதிகளிடம் மன்றாடியிருக்கின்றார்.
கடந்த 2008 மே 13 ம் தேதி கைது செய்யப்பட்ட இந்த சாமியார் முதலில் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக தேடப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார். ஹவாலா, நில மோசடி, ஏமாற்று போன்ற பல வழக்குகளில் தொடர்புடையவராக பின்னர் கண்டறியப்பட்டார். இவர் மீது மேலும் பல வழக்குகள் விசாரிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment