ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் போலீஸ் பயிற்சி மையத்தில் சமையல் வேலை செய்து வருபவர் உமா (28) (பெயர் மாற்றம்) இவரை அங்குள்ள சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் மிரட்டி கற்பழித்தார். இதனால் அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இது பற்றி அங்குள்ள சில போலீஸ்காரர்கள் அவரிடம் விசாரித்தபோது சப்- இன்ஸ்பெக்டர் கற்பழித்ததை கூறினாள்.
இந்நிலையில் அவர் அங்குள்ள குளியல் அறையில் குளிப்பதை ஒரு போலீஸ்காரர் தனது செல்போனில் படம் பிடித்தார். பின்னர் அதை அவரிடம் காட்டி, இதை சி.டி.யில் பதிவு செய்து வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி கற்பழித்தார். பின்னர் அவரது நண்பர்கள் 9 பேரை அங்கு வரவழைத்தார். அவர்கள் கும்பலாக சேர்ந்து அவளை கற்பழித்தனர்.
இதில் அவர் மயங்கி விழுந்ததால் போலீசார் அவளை போட்டு விட்டு தப்பி ஓடினார்கள்.
இது பற்றி அவள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணாவை சந்தித்து புகார் கொடுத்தார். ராமகிருஷ்ணா உத்தரவின் பேரில் உமாவை கற்பழித்த போலீசாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் உமாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இது பற்றி உமா கூறும்போது, செல்போனில் என்னை நிர்வாண படம் எடுத்து மிரட்டி கற்பழித்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக்கு நியாயம் கிடைக்கும் வரை ஓயமாட்டேன் என்றார்.
No comments:
Post a Comment