இவர்களுக்கு இந்துமதி(19), இலக்கியா(16), இனிதா(12) என்ற மூன்று மகள்கள் உள்ளனர். தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்த இந்துமதி கடந்த ஆறு மாதமாக வேலைக்கு செல்லவில்லை. நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் இந்துமதி தனது தந்தையிடம் கூறிவிட்டு தோட்டத்திற்கு சென்றவர் வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் மகளை தேடி தோப்பிற்கு சென்றபோது, இந்துமதி ஆடைகள் கிழிந்த நிலையில் மயங்கி கிடந்தார்.
இந்நிலையில் கடலூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, இந்துமதி ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர் கூறினார்.டி.எஸ்.பி.,க்கள் ஸ்டாலின், அரிகிருஷ்ணன், முதுநகர் நகர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஏழுமலை, சப்- இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கவிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
அங்கு கிழிந்த குடை ஒன்றும், இந்துமதியின் காலணி, அவர் பயன்படுத்திய செல்போனின் "பேட்டரி' கிடந்தது. மோப்ப நாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. பச்சையாங்குப்பம் கிழக்குத் தெரு வழியாக ஜெ.கே., கம்பெனி சாலை வரை சென்றுத் திரும்பியது.கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து, இந்திமதி எதற்காக செல்போன் பேட்டரியை மட்டும் எடுத்து சென்றார் அவருக்கு ஏதேனும் மிரட்டல் போன் வந்ததா. என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment