Tuesday, January 12, 2010

புத்தாண்டின் பெயரால் நடந்த விபரீதங்கள்


-இனியவன்

வருடா வரும் புத்தாண்டு தினக் கொண்டாட்டம் என்ற பெயரில் குடித்து விட்டு கூத்தடிப்பதையும், நடன நிகழ்ச்சி என்ற பெயரில் ஆண், பெண், இருவரும் இணைந்து உரசி ஆடும் ஆபாசக் கூத்துக்களையும் நடத்திக் கொண்டிருப்போர் இந்த வருடமும் தங்கள் பணிகளை சிறப்பாக செய்தனர்.டிசம்பர் 31 அன்று கடந்த வருடங் களைப்போல் இந்த வருடமும் விபத்துக்கள் அசம் பாவிதங்கள் ஏதும் நடந்து விடக்கூடாது என்று காவல்துறையும் தங்கள் பங்குக்கு குடித்துவிட்டு வாக னம் ஓட்டாதீர்கள், பொது இடங்களில் ஆபாசமாக நடந்துக் கொள்ளாதீர்கள் என்று பரவலாக எச்சரிக்கை செய்தும், கோரிக்கை வைத்தும் கூட அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தவிர்க்க முடிய வில்லை.

காரணம் புத்தாண்டு என்றாலே அதைக் குடித்து விட்டுத்தான் கொண்டாட வேண்டும் என்று இளைஞர்கள் எண் ணிக் கொண்டிருப்பதுதான். இதற் கேற்றாற் போல் தமிழக அரசும் வீதிக்கு வீதி மதுக்கடைகளையும், பார்களையும் திறந்து சமூக சேவை செய்து கொண் டிருக்கிறது.

இதனால் பாட்டிலும், கையுமாய் இளை ஞர்கள் புத்தாண்டை கோலகலமாய் கொண்டாடினர். குடித்துவிட்டு பைக்கில் சாகசங்கள் செய்வது, தெருக்களில் ஆவேசமாக கத்தியபடி செல்வது என்ற புத்தாண்டு சாகசங்களால் சென்னையில் மட்டும் வாகன விபத்துகளில் 125 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க் கப்பட்டனர். 4 பேர் விபத்துக்களில் பலியாகி உள்ளனர்.

புத்தாண்டு தினத்தன்று சாலை விதிமுறைகளை மீறியதாக சென்னையில் மட்டும் சுமார் 4000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருவான்மியூர் கடற்கரையில் நள்ளிரவில் குடித்துவிட்டு கும்மாளமிட்ட இளைஞர்கள் பலர் அங் கேயே மட்டையாகி விட, காலை யில் வாக்கிங் செல்ல வந்தவர்கள் கடற்கரை முழுவதும் ஆங்காங்கே போதையில் மூர்ச்சையாகி டி சர்ட், ஜீன்ஸாடு படுத்துக் கிடந்தவர்களின் முகத்தில் தண்ணீர் தெளித்துப் பார்த்து எழுந்திருக்காமல் போகவே வாக்கிங்க செல்ல வழியில்லாமல் திரும்பச் சென்றுள்ளனர்.

இளைஞர்கள் குடித்துவிட்டு போட்ட பாட்டில்களை பொறுக்க மட்டும் பெருங்கூட்டம் கூடியிருக்கிறது. அது மட்டுமில்லாமல் குடித்துவிட்டு குழு மோதல்களும் பல இடங்களில் ஏற்பட் டிருக்கின்றன. புதுவையில் குடித்துவிட்டு கும்மாளமிட்ட இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டு ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். சென்னையில் நைஜிரிய வாலிபர் ஒருவர் இதேபோல் புத்தாண்டு பார்ட்டியில் வீட்டில் வைத்து கொல்லப்பட்டுள்ளார்.

போதை தலைக்கேறி புத்திப்பிசகிப் போய் புத்தாண்டை வரவேற்கிறோம் என்று இளைஞர்கள் அடிக்கும் கூத்துக் களைபற்றி தமிழகத்தின் எந்த அரசி யல் கட்சிகளும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. தமிழ்ப் புத்தாண்டைக் கூட எந்த கோலாகலமும் இன்றி கழிக்கும் தமிழர்கள் ஆங்கிலப் புத்தாண்டை ஏன் இவ்வளவு கொண்டாட்டங்களோடு வரவேற்கிறார்கள். குடிக்கலாச்சரத்தை ஊக்குவிக்கும் மேலைநாட்டு மோகத்தில் தமிழ்ச்சமுதாயம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவும் வீழ்ந்துதான் போயிருக்கிறது.

இதில் முஸ்லிம் இளைஞர்களும் விதிவிலக்கல்ல, சமுதாய அமைப்புகளின் தாக்கங்களால் முஸ்லிம் சமுதாயம் இந்த புத்தாண்டு குடிக்கலாச்சாரத்தில் இருந்து விலகி இருந்தாலும் மார்க்கம் அறியாத முஸ்லிம் இளைஞர்கள் புத்தாண்டு கொண்டாடங்களில் பங்கேற்பதை பரவலாக காணமுடிந்தது, முஸ்லிம்கள் நிறைந்து வாழும் மண்ணடி பகுதியில் கூட இளைஞர்கள் மோட்டர் பைக்குகளில் சீறிச் செல்வதை காண முடிந்தது.

இந்துத்துவ அமைப்புகள் புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவில் கோவில்களை திறக்ககூடாது என்று கோஷமிட்டதோடு சரி. கோவையில் ஒரு சில இந்து அமைப்பு கள் நட்சத்திர ஒட்டல்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர் அவ்வளவுதான். டாஸ்மாக்கில் குடிப் பவர்களைப் பற்றி எந்த கவலையும் இல்லை.

விநாயகர் சதுர்த்தி போன்ற கலவரங் களை உண்டாக்கும் நிகழ்ச்சிகளை தமி ழகம் முழுக்க நடத்தும் சங்பரிவார்கள் புத்தாண்டு என்ற பெயரில் கும்மாளமிடும் இந்து இளைஞர்கள் நல்வழியில் செல்ல ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை.

இந்து ஆன்மிக அமைப்புகள் உட்பட அனைத்து சமூக இயக்கங்களும் ஒன்றிணைந்து முயற்சித்தால்தான் தமிழகத்தில் குடிக் கலாச்சாரத்தை ஒழிக்க முடியும். வரும் ஆண்டுகளிலாவது குடி இல்லாத, வன்முறை இல்லாத, விபத்தில்லாத ஆங்கில புத்தாண்டு மலருமா?

No comments: