மதுரையில்,மாணவிகளை திட்டமிட்டு ஏமாற்றி,செல்போனில் ஆபாச படம் எடுத்த 3வாலிபர்கள் பிடிபட்டனர். தொலைந்து போன செல் போன் போலிசரின் கையில் சிக்கியதால் இந்தக் குற்றம் கண்டுபிடிக்கப்பட்டது.
மதுரை ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலையத்தில்,கீழே கிடந்ததாக கூறி ஒருவர் செல்போன் ஒன்றினை ஒப்படைத்தார். அந்தச் செல்போன் யாருடையது என்று அறிய அதை ஆய்வு செய்து பார்த்த போலிசார் திடுக்கிட்டனர்.
ஏனெனில், அந்தச் செல்போன் முழுவதும் இளம்பெண்களின் ஆபாச படங்கள் நிரம்பி இருந்தன. இதைத் தொடர்ந்து, யாரோ செல்போனில் இளம் பெண்களை ஆபாச படம் எடுத்து பரவ விட்டிருக்க வேண்டும் என்று முடிவு செய்த போலிசார் அந்த நபரை பிடிக்க வலைவிரித்தனர்.
அந்தச் செல்போன் நிருவனத்துடன் ரகசியமாக தொடர்பு கொண்டு விசாரித்ததில், அந்தப் போனின் சொந்தக்காரர் ஜெய்ஹிந்துபுரதைச் சேர்ந்த வாலிபர் என்பது தெரிய வந்துள்ளது.அவரைப் பிடித்து மேலும் துருவித்துருவி விசாரித்ததில், பிடிபட்ட வாலிபரும், அவரது 3 நண்பர்களும் சேர்நது இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
இதன் அடிப்படையில், ஜெய்ஹிந்துபுரம் ராமையா தெருவைச் சேர்ந்த பப்லு (வயது21), புலிப்பாண்டியைச் சேர்ந்த ஜெகதீஷ் என்கிற ஜெகதீஷன்(21), முத்துப்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன்(21),ஆகியோரை போலிசார் கைது செய்தனர்.
இவர்கள் கைதானதை அறிந்து, இவர்களது கூட்டாளிகளான ராஜாவும்,திலீப் என்கிற கார்த்திக்கும் தப்பி ஓடிவிட்டனர். இவர்களை போலிசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
அவர்களிடம் போலிசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
கல்லூரி மற்றும் பள்ளி செல்லும் மாணவிகளை இவர்கள் குறிவைத்து பின் தொடர்ந்து செல்வார்கள்.அவர்களிடம் நைசாக பேசி,காதல் வலை விரிப்பார்கள். இதை நம்பி ஏமாறும் மாணவிகளை ஆபாசப் படம் எடுப்பார்கள்.அதைக் காட்டி அவர்களுடன் உல்லாசமாக இருக்க மிரட்டுவார்கள் என்றும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
மேலும், அந்த ஆபாச படங்களை எல்லாம் ஒரு ’சிப்’ ஆக தயாரித்து உள்ளனர். அவற்றை ’சி.டி’க்களாக் தயாரித்து விற்பனை செய்து இருக்கலாம் என்று போலிசார் சந்தேகிக்கிறார்கள்.
இது போக, பஸ் நிறுத்தத்தில் கல்லூரி மற்றும் பள்ளி செல்ல காத்து நிற்கும் மாண்விகளை அவர்கள் காரில் கடத்திச் சென்றதும் போலீஸ் வசாரணையில் தெரிய வந்துள்ளது.
போலீசார், 4 பிரிவுகளின் கீழ் அந்த வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்து, மாஜிஸ்திரேட்டு உத்தரவின் பேரில் அவர்கள் 3பேரையும் சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment