Showing posts with label அமெரிக்கா. Show all posts
Showing posts with label அமெரிக்கா. Show all posts

Sunday, July 18, 2010

பெற்ற மகனுடன் செக்ஸ் உறவு கொண்ட அமெரிக்க தாய் கைது.

நியூயார்க்: பெற்ற மகனுடனேயே செக்ஸ் உறவு வைத்துக் கொண்ட 36 வயது அமெரிக்கப்
பெண்ணை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.அமெரிக்காவின் மிச்சிகனைச் சேர்ந்தவர் அய்மி ஸ்வோர்ட். இவருக்கு தற்போது வயது 36 ஆகிறது. இவருக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் பிறந்தவுடனேயே தத்து கொடுத்து விட்டார் அய்மி. இந்த நிலையில் சிறுவனுக்கு 14 வயதான நிலையில் அவனைத் தேடிக் கண்டுபிடித்து அழைத்துக் கொண்டார்.

தற்போது 16 வயதாகும் அச்சிறுவனை கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் ரீதியாக தவறாகப்
பயன்படுத்தியதாக அய்மி மீது குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிறந்தவுடன் தத்து கொடுக்கப்பட்ட தனது மகனை 14 வயது பையனாக அய்மி பார்த்தபோது
மகன்-தாய் உணர்வுகளை அய்மி வெளிப்படுத்தவில்லை. மாறாக, ஒரு பாய் பிரண்டை
பார்க்கும் கேர்ள் பிரண்டின் உணர்வுகள்தான் அவரிடம் ஏற்பட்டதாக அய்மியின்
வழக்கறிஞர் மிச்சல் ரிபிட்வர் கூறியுள்ளார்.

இந்த உணர்வு காரணமாக கடந்த 2 வருடங்களாக தனது மகனுடனேயே செக்ஸ் உறவு வைத்து வந்துள்ளார் அய்மி. தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள அய்மிக்கு மன நல ஆலோசனை வழங்கப்படவுள்ளது. அய்மிக்கு 9 முதல் 30 வருடங்கள் வரை தண்டனை கிடைக்கும் எனத் தெரிகிறது.

Sunday, August 30, 2009

அமெரிக்காவில் 8 மாதத்தில் 84 வங்கிகள் திவால்

நியூயார்க்: அமெரிக்காவில் கடந்த 8 மாதங்களில் மட்டும் 84 வங்கிகள் திவால் ஆகி மூடப்பட்டுள்ளன.

தொடர்ந்து நீடித்து வரும் நிதி நெருக்கடியை இது காட்டுகிறது. வெள்ளிக்கிழமையன்று அஃபினிட்டி வங்கி, மெய்ன்ஸ்ட்ரீட் வங்கி, பிராட்போர்ட் வங்கி ஆகியவை மூடப்பட்டன.

கடந்த ஆண்டில் வெறும் 25 வங்கிகள் தான் மூடப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு அதை விட மூன்று மடங்கு வங்கிகள் இதுவரை மூடப்பட்டுள்ளன.

இதுதவிர எந்த நேரத்திலும் மூடப்படும் அபாயம் உள்ளதாக 416 வங்கிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனவாம்.

அமெரிக்காவின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்புவதற்கான அறிகுறிகள் காணப்பட்டாலும் கூட சிறிய வங்கிகளால் தாக்குப் பிடியாத நிலையே அங்கு காணப்படுகிறது.

Sunday, August 9, 2009

7 மாதங்களில் அமெரிக்காவில் வேலையிழந்தோர் 10 லட்சம்!

சிகாகோ: அமெரிக்காவில் இந்த ஜூலை மாதம் மட்டுமே 97343 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 6 மாதங்களில் இந்த அளவு பணியாளர்கள் நீக்கப்படுவது இதுவே முதல் முறை. மேலும் அடுத்த காலாண்டிலும் இந்த நிலை தொடரும் என அமெரிக்க புள்ளியியல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தச் செய்தி உலகப் பொருளாதார நிபுணர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. சர்வதேசப் பொருளாதாரம் வீழ்ச்சியிலிருந்து மீண்டு வருவதாக கருத்து பரப்பப்பட்டு வரும் சூழலில், மீண்டும் பெருந்தொகையிலான வேலையிழப்புகள் நடந்திருப்பது, எதிர்காலம் குறித்த பயத்தை உண்டாக்கியிருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து கிடப்பதால், பல நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாதமும் வேலையிழப்போர் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் சற்றே இந்த நிலையில் மாற்றம் தெரிவது போன்ற தோற்றம் தெரிந்தது. ஆனால் அடுத்த ஒரே மாதத்தில் நிலைமை தலைகீழாகிவிட்டது. கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு 97343 பணியாளர்கள் பலவேறு நிறுவனங்களிலிருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவரங்களை அமெரிக்க அரசே அரவித்துள்ளது. அடுத்த மாதம் இந்த எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டக் கூடும் என அச்சம் தெரிவித்துள்ளது அமெரிக்கா.

2009-ம் வருடம் துவங்கி இந்த 7 மாதங்களில் மட்டும் அமெரிக்காவில் பணியிழந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்குகிறது. 2008-ல் முதல் 7 மாதங்களில் 579260 பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.

இந்த இரு ஆண்டுகளிலும் இதுவரை 20 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோமொபைல் மற்றும் ஐடி துறையில்தான் அதிக பணியாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

Saturday, August 8, 2009

அமெரிக்கா: மேலும் மூன்று வங்கிகள் மூடல்!

நியூயார்க்: அமெரிக்காவில் மேலும் மூன்று வங்கிகளை மூட அந்நாட்டு நிதித்துறை உத்தரவிட்டுள்ளது.

இவற்றுடன் சேர்த்து அமெரிக்காவில் இதுவரை மூடப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.

பொருளாதார வீழ்ச்சி காரணமாக வங்கித் துறை அமெரிக்காவில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. வங்கிகள் தொடர்ந்து செயலிழந்து வருகின்றன. லேஹ்மன் பிரதர்ஸ் தொடங்கி பல பிரபல வங்கிகள் சீட்டுக்கட்டு மாளிகை போல சரிந்தன. 69 வங்கிகள் இதுவரை மூடப்பட்டன.

இப்போது பர்ஸ்ட் ஸ்டேட் வங்கி (First State Bank), பர்ஸ்ட் கம்யூனிட்டி வங்கி (Community First Bank) மற்றும் கம்யூனிட்டி நேஷனல் வங்கிகளும் (Community National Bank) மூடப்பட்டுள்ளன. இவை ப்ளோரிடா மற்றும் ஓரகானை மையமாகக் கொண்டு இயங்கி வந்தன.

இந்த வங்கிகளுக்கு ரிஸீவராக அமெரிக்காவின் பெடரல் டெபாஸிட் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை நியமித்துள்ளது அமெரிக்கா.

இவற்றில் பர்ஸ்ட் ஸ்டேட் வங்கி மற்றும் கம்யூனிட்டி நேஷனல் வங்கிகளை ஸ்டெர்ன்ஸ் வங்கிக் கிளைகளாக செயல்பட வைக்க பெடரல் டெபாஸிட் இன்ஷூரன்ஸ் முடிவு செய்துள்ளது.

கம்யூனிட்டி பர்ஸ்ட் வங்கியை ஹோம் பெடரல் வங்கியுடன் இணைக்கிறார்கள்.

இந்த காலாண்டில் 305 வங்கிகள் பெரும் பிரச்சினைகளுக்கு உள்ளாகும் எனக் கணித்துள்ள பெடரல் டெபாஸிட் இன்ஷூரன்ஸ், வருகிற 2013-ம் ஆண்டுக்குள் இன்ஷூரன்ஸ் தொகையாக 70 பில்லியன் டாலர்கள் வரை செலவாகும் எனத் தெரிவித்துள்ளது.

Saturday, March 14, 2009

அமெரிக்காவில் உள்ள ரோமன் கத்தோலிக்க மத குருக்களுக்கு எதிராகக் கூறப்படும் செக்ஸ் குற்றச் சாட்டு

அமெரிக்காவில் உள்ள ரோமன் கத்தோலிக்க மத குருக்களுக்கு எதிராகக் கூறப்படும் செக்ஸ் குற்றச் சாட்டுகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 18 சதவீதம் அதிகரித்துள்ளதாக கத்தோலிக்கத் திருச்சபையின் அறிக்கை ஒன்று கூறுகிறது.

2008ஆம் ஆண்டு கூறப்பட்ட இத்தகைய குற்றச் சாட்டுகள் தொடர்பாக கத்தோலிக்கத் திருச்சபை 436 மில்லியன் அமெரிக்க டலார்கள் செலவு செய்யப்பட்டதாகவும், இந்தத் தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தக் குற்றச்சாட்டுகளில் பாதிக்கப் பட்டவர்களில் ஐந்தில் ஒருவர் 10 வயதுக்குட்பட்டவர்கள் என்று அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள சுமார் 200 தேவாலய நிர்வாகப் பகுதிகளில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகளின்போது தெரிய வந்துள்ளது.

2008ஆம் ஆண்டு சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுகள் கடந்த ஆண்டைவிட அதிகரித்தாலும் நஷ்ட ஈடாக வழங்கப்பட்ட தொகை 2007ஆம் ஆண்டை விட 29 சதவீதம் குறைந்துள்ளதாகவும், 2007ஆம் ஆண்டு சுமார் 500 பேருக்கு 660 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்ட ஈடாக வழங்கப் பட்டதெனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Wednesday, January 28, 2009

இஸ்லாமிய நாடுகளுக்கு அமெரிக்கா தவறிழைத்துள்ளது என்பதை ஏற்கிறேன் - ஒபாமா

வாஷிங்டன்: அமெரிக்காவை தங்களது விரோதியாக கருதவேண்டாம் என்று இஸ்லாமிய நாடுகளுக்கு நேசக்கரம் நீட்டியுள்ளார் பராக் ஒபாமா.

அமெரிக்கா என்றாலே இஸ்லாமிய நாடுகளில் வெறுப்பு நிலவுகிறது. இதை மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார் ஒபாமா.

மத்திய கிழக்கு நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு முதல்முதலாக பேட்டி அளித்த ஒபாமா முஸ்லிம் நாடுகளுடன் சமாதானமாக செயல்படுவதையே அமெரிக்கா விரும்புகிறது என்றார்.

'எனது குடும்பத்தில் முஸ்லிம் உறுப்பினர்களும் உள்ளனர். இஸ்லாமிய நாடுகளில் நான் வசித்தவன். இஸ்லாமிய நாடுகளுக்கு விரோதியாக அமெரிக்கா செயல்படுகிறது என்ற கருத்தை மாற்றிக் கொள்ளவேண்டும். அதை புரியவைப்பதே எனது பணி. பரஸ்பர நலன், மரியாதை அடிப்படையில் புதிய கூட்டாளி உறவை ஏற்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம். இதை அரேபிய, இஸ்லாமிய நாடுகள் ஏற்றால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்' என்று பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்னைக்குத் தீர்வு காணவேண்டும் என்பதில் அமெரிக்கா திடமாக உள்ளது. இப்படிச் செய் என்று கட்டளையிடுவதற்கு பதிலாக மற்றவர் சொல்வதை காது கொடுத்து கேட்பதே நல்லது என்று அமெரிக்கா கருதுகிறது.

பதவியில் அமர்ந்து 100 நாள் ஆனதும் இஸ்லாமிய நாடு ஒன்றின் தலைநகரிலிருந்து இஸ்லாமிய நாடுகளிடம் நேரடியாக நான் பேச விரும்புகிறேன்
எவற்றை அழித்தோம் என்பதை விட என்ன செய்தோம் என்பதை வைத்தே நாம் மதிப்பிடப்படுகிறோம். (முஸ்லிம்களை அழித்தோம் என்பதற்கான ஒப்புதல் வாக்கு மூலமோ...?)
பின்லேடன், ஜவாஹிரி போன்றவர்கள் செய்வது அழிவுவேலைதான். இதனால் மரணமும் அழிவும்தான் விளையும் என்பதை முஸ்லிம் நாடுகளுக்கு புரிந்துவிட்டது. (புஷ்ஷும் அவரது கூலிப்படைகளும் லட்சக்கணக்கான மக்களை அநியாயமாக் கொன்றது மட்டும் ஆக்க வேலையோ...?) முஸ்லிம் நாடுகள் முன்னேற்றம் அடைய தன்னாலான அனைத்தையும் அமெரிக்கா செய்யும். (......!!!!! ....?) அமெரிக்கா தவறிழைத்துள்ளது என்பதை ஏற்கிறேன். (உண்மையை ஒப்புக்கொண்டவரை சரி! பரிகாரம் என்ன..?) பல ஆண்டுகளுக்கு முன் இஸ்லாமிய நாடுகளுடன் அமெரிக்கா வைத்திருந்த நட்புறவு மீண்டும் உருவாக பாடுபடுவேன் என்றார் ஒபாமா.