Showing posts with label பாலஸ்தீனம். Show all posts
Showing posts with label பாலஸ்தீனம். Show all posts

Wednesday, December 23, 2009

பலஸ்தீன் பெண்கைதி தொடந்து 100 நாட்களுக்கும் மேலாக தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

ரமல்லா – இஸ்ரேலிய ரமேல் சிறையில் தமது இளைய மகள் கடந்த நூறு நாட்களுக்கும் மேலாகத்

தொடர்ந்து தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக பெண் கைதி வஃபா அல் பெஸ்ஸின் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.

மனிதாபிமான அமைப்புகள் தலையிட்டு, தமது மகள் மீது இஸ்ரேலிய சிறை நிர்வாகம் மேற்கொண்டுவரும் நியாயமற்ற வதைச்செயல்களை நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அப்பெண் கைதியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடும்ப அங்கத்தவர்கள் சென்று கைதியைச் சந்திப்பது, கைதி தன் வழக்கறிஞரைச் சந்திப்பது முதலான அனைத்தையும் தடுத்துள்ளதன் மூலம் வெளி உலகத்துடன் எவ்வகையிலும் தொடர்புகொள்ளவே முடியாமல் இஸ்ரேலிய சிறை நிர்வாகம் தமது மகளைத் துன்புறுத்துவதாக அப் பெண்ணின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

பெய்ட் ஹனூன் கடவையருகில் வைத்து 2005 ஜூன் மாதம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் கடத்திச் செல்லப்பட்ட வஃபா, இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் கோர்ட்டினால் 12 ஆண்டுகள்- 14 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். பெரும்பாலும் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தனது தண்டனைக் காலத்தில் நான்கரை ஆண்டுகளைத் தற்போது அவர் நிறைவு செய்துள்ளார்.

நன்றி: PIC

free palestine

Tuesday, January 13, 2009

காஸா துயரம் துடிக்கும் உயிர்களைக் காப்பாற்றத் தடை! வெடிக்கும் மருத்துவர்கள்!!

ஜோர்டானைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் டாக்டர் முஹம்மத் அல் ஹாலிதி. அவர் மனம் இப்போது போல் எப்போதுமே வேதனை அடைந்திருக்காது. பாலஸ்தீனில் மக்கள் படும் துயரங்களைக் கண்டு வேதனையடைந்த ஹாலிதி, அவர்களுக்கு உதவுவதற்காக பல்லாயிரம் மைல்களைக் கடந்து பயணம் செய்தார்.

இஸ்ரேலின் தரைவழி தாக்குதல், வான்வழி தாக்குதல், கடல்வழி தாக்கு தலை சந்தித்து சொல்லொ ணாத் துயரங்களை அனுபவித்து வரும் அந்த அப்பாவி மக்களைக் காப்பாற்றலாமே என்ற தவிப்பில் அவர் பயணம் செய்தார். காஸா எல்லையை நெருங்கினார். ஆனால் எகிப்தின் அதிகாரிகள் டாக்டர் முஹம்மத் அல் ஹாலிதியை தடுத்தனர். 14 நாட்களுக்கு மேலாக வேதனையில் வாடிவரும், கொடும் காயங்களால் அலறும் மக்களைக் காப்பாற்றச் சென்ற அவர், எகிப்திய அதிகாரிகளால் தடுக்கப் பட்டார்.

ஒரு நாள், இரண்டு நாள், மூன்று நாள் என காத்திருந்தார். காஸா - எகிப்திய எல்லையில் மூன்று நாள் காத்திருந்தும் பலனில்லை. தயவு செய்து என்னை காஸாவிற்குள் செல்ல அனுமதியுங்கள் என கெஞ்சினார். “நான் என்னுடைய சொந்த பொறுப்பில் செல்கிறேன், என்னுடைய உயிருக்கு நானே பொறுப்பு, தயவு செய்து எல்லை களைத் திறந்து விடுங்கள், அங்கே ஏராளமான குழந்தைகளும், முதியவர் களும், பெண்களும் மருத்துவ உதவி யின்றி இறந்து கொண்டிருக்கிறார்கள்’’ என கெஞ்சுகிறார்.

இந்த டாக்டர் மட்டுமல்ல. உலகெங் கிலுமிருந்து வந்த நூற்றுக்கணக்கான டாக்டர்களும் இவ்வாறு காஸா எல்லை யில் நுழைய முடியாமல் தவிக்கிறார்கள். மலேஷியா, இந்தோனேஷியா, துருக்கி, கிரீஸ் முதலிய நாடுகளிலிருந்து டாக்டர் கள் மனம் பதைபதைக்க நின்றனர்.

“காஸாவுக்கு செல்லும் யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் தர முடியாத நிலையில் இருக்கிறோம்’’ என எகிப்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹாத்தம் அல் ஜபலி கூறினார்.

“அங்கு தாக்குதல் நிறுத்தப்படட்டும், பிறகு நாங்கள் உங்களை உள்ளே அனுமதிப்போம்’’ எனக் கூறி நிர்தாட் சண்யமாக மறுத்து விட்டார். அவர் மறுத்துக் கொண்டி ருக்கும் போது காஸாவில் 800 பேருக்கும் மேல் பலியாகி இருந்த னர். 220க்கும் மேற் பட்ட பெண்களும், 100க்கும் மேற்பட்ட குழந்தை களும் பலியாகி இருந்தனர். மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படு காயம் அடைந்திருந்தனர்.

எகிப்து, ரஃபா எல்லையைத் திறந்து வைத்திருந்தது. காஸாவிலிருந்து மக்களுக்கு உலகைப் பார்க்கும் ஒரே கண்ணாடியாக ரஃபா எல்லை மட்டுமே அமைந்திருந்தது. அந்தப் பகுதி வழி யாகவே படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அவசர சிகிச்சை செய்தால் பிழைக்க வாய்ப்புண்டு என்ற நிலையில் உள்ளவர்கள் ஏராளமானவர்கள் இறந்து போன செய்தியறிந்து எல்லையிலுள்ள நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் வேதனையில் ஆழ்ந்தனர். சில நூறு மீட்டர் தூரம் மட்டுமே உள்ள பகுதியில் ஏராளமானவர்கள் அவதியில் இருக்கும் நிலையில் நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே, இது வெட்கக்கேடாக இருக்கிறது என வேதனைப்படுகிறார் முஹம்மத் அல் ஹாலித்.

இஸ்ரேலின் அத்துமீறல்களையும், அராஜகங்களையும் மவுனமாக பார்த்துக் கொண்டு மட்டுமே இருக்க முடிகிறது.

எது எப்படியாயினும் ஒருநாள் நாங்கள் காஸாவில் நுழையத்தான் போகிறோம் என உறுதிபடக் கூறுகிறார் டாக்டர் முஹம்மத் அல் ஹாலிதி.

பிணங்கள் விழும்போது இஸ்ரேலில் விருந்து!

பிணங்கள் விழும்போது இஸ்ரேலில் விருந்து!
நியூயார்க் மேயரை உலுக்கும் முஸ்லிம்கள்!

கொலைகார கொடூர நாடான இஸ்ரேலைக் கண்டித்து உலகெங்கும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்து வரும்போது எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றினாற் போன்ற ஒரு செயலை நியூயார்க் நகர மேயர் மைக்கேல் ப்ளூம்பெர்க் செய்திருக்கிறார்.

நியூயார்க் மேயர் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டார். இஸ்ரே லியப் பிரதமர் யஹுத் உல்மர்ட் டையும், பாதுகாப்புத்துறை அமைச்சர் யஹுத் பராக்கையும் சந்தித்து உரையாடினார். இஸ்ரே லில் உள்ள அஸ்ஹெலான், ஸ்டெராட் என்ற இரு நகரங் களுக்கும் சென்று அங்கு ஹமாஸ் போராளிகளின் ராக்கெட் வீச்சினால் பாதிக்கப்பட்ட இஸ்ரே லிய ராணுவத்தினருக்கு ஆறுதல் கூறினார். “நான் நிறைய பேச விரும்புகிறேன்; அமெரிக்கர்கள் அனைவரும் இஸ்ரேலுக்கு ஆதர வாகவே இருக்கிறார்கள்; இஸ்ரேல் எதைச் செய்தாலும் நன்மைக்காகவே செய்யும். இஸ்ரேல் தனது பாதுகாப்புக் காக காஸாவில் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது; இதில் தவறு இல்லை’’ என்று தெரிவித்தார்.

இது செய்தி ஊடகங்களில் வெளி யானதைத் தொடர்ந்து நியூயார்க் மக்களின் ஆத்திரம் கரையுடைத்த வெள்ளமென பொங்கியது. அமெரிக்க முஸ்லிம் கூட்டமைப்பு என்ற அமைப் பின் ஒருங்கிணைப்பில் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன.

சமாதானம் நாடும் நியூயார்க் மக்களை மைக்கேல் ப்ளூம்பெர்க் அவமானப்படுத்தி விட்டார் என்று கூறிய அந்த அமைப்பினர் நூற்றுக் கணக்கானவர்கள் நியூயார்க்கின் சிட்டி ஹால் முன்பு திரண்டனர். ஆவேசம் அடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் நியூ யார்க் நகர மேயர் மைக்கேல் ப்ளூம் பெர்க்கின் படத்தின் மீது காலணி களை வீசி மரியாதை(!) செய்தனர்.

போர் எதிர்ப்பு தொழிலாளர் அமைப்பு இந்த காலணி மரியாதையில் முக்கியப் பங்கு வகித்தது.

மைக்கேல் ப்ளூம்பெர்க் ஓர வஞ்சனை கொண்டவராக நடந்துள்ளார். ராக்கெட் வீச்சினால் தாக்கப்பட்ட இஸ்ரேலிய நகரங்களுக்கு சென்ற அவர் காஸாவின் எந்தப் பகுதிக்காவது சென்றாரா? எந்த பாலஸ்தீன மக்களை அல்லது தலைவரையாவது சந்தித் தாரா? இது அவரது ஒருதலைப்பட்ச மான ஆளுமையைக் காட்டுகிறது. இவர் அனைத்து நியூயார்க்கர்களுக்கும் பொதுவானவர். இஸ்ரேலிய தரப்புக்கு மட்டும் அவர் ஆதரவாகப் பேசக் கூடாது.

நாங்கள் இந்நாட்டு குடிமக்கள். நாங்கள் நியூயார்க் நகரத்தின் மேம் பாட்டுக்காக வரி செலுத்துகிறோம். அவரைத் தேர்ந்தெடுத்தவர்கள் நாங் களே என்று கூறும் முஸ்லிம் கூட்ட மைப்பின் தலைவர் ஹாஜி கான், ப்ளூம் பெர்க் நியூயார்க் திரும்பியதும் அவரை நேரில் சந்தித்து தங்கள் கண்டனங் களை தெரிவிப்போம் என்றார்.

நியூயார்க்கில் 10 லட்சம் முஸ்லிம் கள் வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது

நியூயார்க்கில் 10 லட்சம் முஸ்லிம் கள் வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

Saturday, January 10, 2009

ஐ.நா. தீர்மானத்தை அலட்சியப்படுத்தும் அயோக்கிய இஸ்ரேல்!

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலிய பயங்கரவாதம் பதினைந்து நாட்களாக தொடர்ந்து வரும் நிலையில், உலக நாடுகளில் முஸ்லிம்கள் மட்டுமல்லாது மனிதநேயத்தை விரும்பக்கூடிய மக்கள் அனைவரும் இஸ்ரேலிய தீவிரவாதத்தை கண்டித்து ஆர்பாட்டங்கள் நடத்திவரும் நிலையில், காசாவில் நடந்துவரும் போர் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதம் நடைபெற்றது.

மூன்று நாட்கள் நடந்த விவாதத்தில் அரபு நாடுகளுக்கும்-மேற்கத்திய நாடுகளுக்கும் கடும் வார்த்தைப்போர் நடந்துள்ளது. உறுப்புநாடுகளில் அமேரிக்கா நீங்கலாக ஏனைய நாடுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. அமெரிக்கா வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.இறுதியாக கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகிறது.

* காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தவேண்டும்.

*காசா பகுதியிலிருந்து இஸ்ரேலிய துருப்புகள் வாபஸ் பெறப்படவேண்டும்.

*காசா பகுதியில் நிரந்தர போர்நிறுத்தம் ஏற்பட ஆவன செய்யவேண்டும்.

* பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருந்துகள், எரிபொருட்கள் கிடைக்க ஆவன செய்யவேண்டும்.

சட்டமும் கட்டளையும் சாமான்யனைத்தான் காட்டுப்படுத்தும் என்பது உலக அளவில் எழுதப்படாத சட்டமாக உள்ளது. அதற்கு சான்று; அமெரிக்காவும், இஸ்ரேலும்தான். ஈராக்கை ஆக்கிரமிக்கும்போது ஐ.நா.விடம் அமெரிக்கா அனுமதி பெறவில்லை. அதுபோல காசா விசயத்தில் ஐ.நா.வின் மேற்கண்ட தீர்மானத்தை அலட்சியம் செய்துவிட்டு அயோக்கிய இஸ்ரேல் தன்னுடைய தீவிரவாத தாக்குதலை இந்த நிமிடம் வரை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது.

எங்கள் இறைவனே! மூமீன்களின் பாதுகாவலனே! உனது உதவியை எம்மக்களுக்கு அளித்திடு ரஹ்மானே!

Wednesday, January 7, 2009

என்ன பாவம் செய்தன இந்த பிஞ்சுகள்!

அன்பர்களே,

ஹமாஸ் நிலைகள் மீதுதான் நாங்கள் தாக்குதல் நடத்துகிறோம் என்று அரபு நாடுகளையும், மேற்கத்திய நாடுகளையும் நம்பவைத்து அவர்களின் மவுனத்தை தனக்கு சாதகமாக்கி கோர தாண்டவமாடிவருகிறது இஸ்ரேல். ஒரு பாவமும் அறியா பச்சிளம் பாலகர்கள் பலியாவது தொடர்கதையாக உள்ளது. பழிவாங்கும் இஸ்ரேலும், பார்த்துக்கொண்டு இருக்கும் முஸ்லீம் நாடுகளும் இந்த உலகில் வேண்டுமானால் தப்பிக்கலாம் ஆனால் மறுமையில் இந்த பிஞ்சுகளிடம் இறைவன்,
நீங்கள் என்ன பாவம் செய்ததால் கொலை செய்யப்பட்டீர்கள் எனவினவும்போது,
எங்கள் இறைவா! உனது நாட்டப்படி பாலஸ்தீன மண்ணில் பல கனவுகளோடு பிறந்தோம் பெற்றோரின் அரவணைப்பில் சுகம் காணவேண்டிய எங்களை யூத ஓநாய்கள் குதற வந்தபோது குரல் கொடுத்தோம் எங்களை காத்துக்கொள்ள! ஓடிவந்தனர் ஹமாஸ் வீரர்கள். அந்தோ பரிதாபம் அவர்களும் நிராயுதபாணிகளாய்!! இறுதில் நாங்களும் எங்களை காக்கவந்த ஹமாஸ் வீரர்களும் யூத ஓநாய்களின் ரத்தப்பசிக்கு இரையானோம்.
எங்கள் இறைவா! நாங்கள் கதறியபோது, உன்னால் செல்வமும் அதிகாரங்களும் வழங்கப்பட்ட ஏனைய முஸ்லீம் நாடுகள் வேடிக்கை பார்த்தது! தங்கள் அரியாசனத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டு!! என்று இந்த பிஞ்சுகள் கூறினால், இறைவனின் தண்டனையிலிருந்து காப்பாற்றுபவர் யார்? இதை முஸ்லீம் நாடுகள் உணரவேண்டும்.
மேலும் இறைவன்சூரத்துன் நிசாவில்,
பலகீனமான ஆண்களையும், பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக போர் செய்யாமல் இருக்க உங்களை தூண்டியது எது?
என்று கேட்கிறான்.
இதற்கு என்ன பதிலை முஸ்லீம் அதிகார வர்க்கம் வைத்துள்ளது என்பதை அவர்களே தீர்மானிக்கட்டும்.
thanks to :நிழல்களும் நிஜங்களும்