Showing posts with label புஷ். Show all posts
Showing posts with label புஷ். Show all posts

Sunday, January 4, 2009

சிங்கம் இல்லாத ஊரில் நரி நாட்டாமை

அடித்தவனை விட்டுவிட்டு அழுபவனை அரட்டும் அறிவிலி.
அன்பர்களே,
'சிங்கம் இல்லாத ஊரில் நரி நாட்டாமை'என்பதுபோல சிங்கங்கள்[முஸ்லீம் நாடுகள்]உறங்கிகொண்டிருப்பதால் சாயம் பூசிய நரி புஷ் உலக சட்டாம்பிள்ளையாக வலம்வந்து கொண்டிருக்கிறது. பாலஸ்தீன முஸ்லிம்கள்மீது யூத வந்தேறிகள் தாக்குதலை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில்,நேற்று வானொலி ஒன்றில் ஊளையிட்ட[சாரி]பேட்டியளித்த புஷ் பாலஸ்தீனத்தில் இப்போது ஏற்பட்டுள்ள மோதலுக்கும்,ரத்தகலரிக்கும் ஹமாஸ்தான் காரணம் என்று திருவாய் மலர்ந்துள்ளார்.



#ஹாசாபகுதியை கைப்பற்றியதில் இருந்து ஹமாஸ் ஆயிரக்கணக்கான பீரங்கிகளையும்,ராக்கெட்டுகளையும் தயாரித்துள்ளது.#



இராக் மீது ஆக்கிரமிப்பு நடத்த இராக் அதிபயங்கர அணுஆயுதங்கள் வைத்துள்ளதாக வாய்கூசாமல் புளுகிய புஷ் அதேபாணியில் ஹமாஸ் ஆயுதங்களை குவித்துள்ளதாக அலறுகிறார். உண்மையில், பீரங்கிகளும்,ராக்கெட்டுகளும் ஹமாஸிடம் இருந்திருந்தால் உலக வரைபடத்திலிருந்து இஸ்ரேல் என்றோ அழிக்கப்பட்டிருக்கும்.



#ஈரானும், சிரியாவும் தூண்டியதால்தான் இஸ்ரேல்மீது ஹாமாஸ் தாக்குதல் தொடுத்தது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கை பாதுகாப்பு பதில் நடவடிக்கைதான்#



நல்லவேளை! ஈரானும்,சிரியாவும்தான் ஹமாசுக்கு ஆயுதம்கொடுத்து இஸ்ரேலை தாக்கசொன்னது என்று சொல்லாமல்விட்டீரே அதுவரை சந்தோசம். ஹமாசின் தாக்குதலுக்கு பதிலடி என்றுகூறும் புஷ்ஷே!
ஹமாஸ் தாக்குதலில் எந்த அப்பாவி இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டார்கள் எத்துனை குழந்தைகள் கொல்லப்பட்டார்கள் எத்துனை யூதர்களின் வழிபாட்டுத்தலங்கள் தரைமட்டமாக்கப்பட்டது என்று பட்டியலிட தயாரா? பாலஸ்தீன குடியிருப்புகள் மீதும், மஸ்ஜித்மீதும், பச்சிளம் பாலகர்கல்மீதும் தாக்குவதுதான் பதிலடியா? உமக்கு திராணி இருந்தால் உமது கள்ளகுழந்தை இஸ்ரேலை தரைப்படை தாக்குதலுக்கு வரசொல்லுங்கள்.
#மஹ்மூத் அப்பாஸ் ஹமாசை கண்டித்துள்ளார்#



ஒரு காலத்தில் ஹமாசை போல வீரியமாக களமிறங்கி இஸ்ரேலை கதிகலங்கவைத்த யாசிர் அரபாஅத்[அல்லாஹ் அவரை பொருந்திகொள்வானாக] அவர்களை சமாதானம் எனும் வஞ்சக வலைவிரித்து கவுத்தியதுபோல இப்போது மஹ்மூத்அப்பாசை கவுத்துகிறீர்கள். இதை அவர் உணரும் நாள் என்நாளோ?
புஷ்ஷே! தினமும் உதித்துகொண்டிருக்கும் சூரியன் நினைத்ததாம் நமக்கு முடிவென்பதே இல்லை என்று! ஆனால் அதையும் முடித்துவைக்கும் இறைவனை நம்புபவர்கள் நாங்கள்!! எனவே, எமது சொந்தங்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் இஸ்ரேல் பதில்சொல்லும் காலம் விரைவில் வரும் இன்ஷா அல்லாஹ்.
thanks to :நிழல்களும் நிஜங்களும்

Wednesday, December 17, 2008

புஷ்ஷை நீங்களும் செருப்பால் அடித்து சந்தோசப்படலாம்

அஸ்ஸலாமு அலைக்கும்,
வாய்ப்பு கிடைக்கவில்லை என்று ஏங்கிய உள்ளங்களுக்கு ஒரு சிறு ஆறுதல்...
இந்த Games இல் புஷ்ஷை செருப்பால் அடித்து சந்தோசப்படலாம்...
Links http://www.sockandawe.com/ http://www.kroma.no/2008/bushgame/www.bushbash.flashgressive.de

இதுவரை 63 லட்சதிக்கு மேலான செருப்புகள் இந்த game இல் புஷ்ஷின் மீது அடித்துள்ளார்கள். நீங்கள் எத்தனை அடிக்க போகிறீர்கள்? :-)

Tuesday, December 16, 2008

நாயே,ஈராக்கியர்களின் அன்பளிப்பு

நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளியாகியுள்ள செய்தியின்படி, புஷ் - ஷை நோக்கி செருப்புகளை வீசிய அந்த இளம் தொலைக்காட்சி செய்தியாளர், அரபு மொழியில்,

· “நாயே,

ஈராக்கியர்களின் அன்பளிப்பு இது
வழியனுப்பு முத்தம் இது ...”
என்று சொன்னபடி முதலாவது செருப்பையும்,
“இது எம் விதவைகள், அநாதைகள், கொலையுண்டவர்களுக்காக” என்று இரண்டாவது செருப்பையும் வீசியிருக்கிறார்

Monday, December 15, 2008

அமெரிக்க அதிபர் புஷ் க்கு செருப்பு அடி படம்

அமெரிக்க அதிபர் புஷ் க்கு செருப்பு அடி. படம். பாக்தாத்தில் அவமானம் - புஷ் மீது ஷூ வீச்சு

இந்த சம்பவத்தால் புஷ் அதிர்ச்சி அடைந்தார். அவரது முகம் பேயறைந்தது போல மாறியிருந்ததைக் காண முடிந்தது. பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத் வந்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது எகிப்தைச் சேர்ந்த டிவி நிருபர் ஒருவர் தனது இரு ஷூக்களையும் சரமாரியாக வீசி எறிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் ஜார்ஜ் புஷ் கடைசி முறையாக ஈராக்குக்கு விஜயம் செய்தார். தலைநகர் பாக்தாத் வந்த அவர் பிரதமர் நூரி அல் மாலிக்கை சந்தித்துப் பேசினார். பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு கடைசி முறையாக ஈராக் வர வாய்ப்பு கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைவதாக அவர் மாலிக்கியிடம் தெரிவித்தார்.பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். முதலில் மாலிக்கி பேசினார். பின்னர் புஷ் பேசத் தொடங்கினார். அப்போது திடீரென அரபி மொழியில் சத்தமாக கத்தியபடி ஒரு நிருபர் எழுந்தார்.ஈராக் மக்கள் உனக்கு அளிக்கும் கடைசி குட்பை முத்தம் இதுதான், நாயே என்று கோபமாக கூறியபடி தனது ஷூக்களை அடுத்தடுத்து புஷ்ஷை நோக்கி ராக்கெட் போல வீசினார். முதல் ஷூ பாய்ந்து வந்தபோது புஷ் தலையைக் குணிந்து தப்பினார். அந்த ஷூ பின்னால் உள்ள சுவரின் மீது பட்டு விழுந்தது.2வது ஷூ வீசப்பட்டபோது அதைப் பிடிக்க ஈராக் பிரதமர் மாலிக்கி முயன்றார். ஆனால் முடியவில்லை. இருப்பினும் அந்த ஷூவும் புஷ்ஷை உரசியபடி சென்று விழுந்தது.இந்த சம்பவத்தால் புஷ் அதிர்ச்சி அடைந்தார்.அவரது முகம் பேயறைந்தது போல மாறியிருந்ததைக் காண முடிந்தது. இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புப் படையினர் சுதாரித்துக் கொண்டு அந்த நிருபரை மடக்கிக் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.அவர் எகிப்து நாட்டைச் சேர்ந்த டிவி நிறுவன செய்தியாளர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. மத்திய கிழக்கு நாடுகளில் ஒருவர் மீது செருப்பு அல்லது ஷூவை தூக்கி வீசினால் அது மிகப் பெரிய அவமானமாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பி்ன்னர் நிலைமை சகஜமானது. அதன் பிறகு புஷ் பேசுகையில், அரசியல் கூட்டத்தின்போது நடப்பதைப் போல இப்போது நடந்து விட்டது. மக்களின் கவனத்தைக் கவர செய்யப்படும் செயல் இது. அந்த நபரின் (செய்தியாளர்) கவலை என்ன என்று எனக்குத் தெரியவில்லை. ஏன் இப்படி நடந்து கொண்டார் என்பதும் எனக்குப் புரியவில்லை என்றார் புஷ். பதவி விலகிச் செல்லும்போது பாக்தாத்தில் புஷ்ஷுக்குக் கிடைத்த இந்த வரவேற்பு அமெரிக்காவிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.