Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Saturday, March 21, 2009

பிரிட்டனுக்குள் நுழைய மோடிக்கு விசா வழங்கக் கூடாது

லண்டன்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை "ஏற்றுக்கொள்ள முடியாத அரசியல் பிரதிநிதி' என அறிவித்து, அவர் பிரிட்டனில் நுழைவதற்கான விசா அனுமதியை பிரிட்டிஷ் அரசு நிராகரிக்க வேண்டும் என்று அந்த நாட்டில் வசிக்கும் இந்திய முஸ்லிம்கள் வலியுறுத்தியுள்ளனர்.

லண்டனில் வருகிற மே மாதம் இந்தியர்கள் மாநாட்டுக்கு டெü ஜோன்ஸ் பைனான்சியல் நியூஸ் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இதில் பங்கேற்பதற்கான அழைப்பை நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

இதுதொடர்பாக பிரிட்டிஷ் உள்துறைச் செயலர் ஜேக் ஸமித்திற்கு, பிரிட்டனில் உள்ள இந்திய முஸ்லிம்கள் கவுன்சில் தலைவர் கே. முகமது முன்னாப் ஸீனா அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

குஜராத்தில் கடந்த 2002 முதல் முதல்வராக உள்ள நரேந்திர மோடி அந்த மாநிலத்தைச் சேர்ந்த முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

குஜராத்தில் நிகழ்ந்த மதக் கலவரங்களுக்கு அவர்தான் மூலகாரணம். அவர் பிரிட்டனுக்கு வர அனுமதித்தால், மத நல்லிணக்கத்துக்கு ஆபத்து ஏற்படும்.

இதே காரணத்துக்காக, கடந்த 2005-ல் நரேந்திர மோடி அமெரிக்காவில் நுழைவதற்காக வழங்கப்பட்ட விசா திரும்பப் பெறப்பட்டது. எனவே, அமெரிக்காவைப் போல, பிரிட்டனும் மோடிக்கு விசா வழங்காமல் நிராகரிக்க வேண்டும். மேலும், மோடியின் லண்டன் பயணத்தை ரத்து செய்யுமாறு இந்திய அரசிடம் பிரிட்டன் அறிவுறுத்த வேண்டும்.

Saturday, February 21, 2009

பொறுப்பை மறந்த மக்கள் பிரதிநிதிகள்[?]

நமது ஜனாயக நாட்டில் மக்கள் தத்தமது கோரிக்கைகளை சட்டமியற்றும் அவைகளில் எடுத்தியம்புவதற்காக, பாராளுமன்றத்திற்கு/ சட்டமன்றத்திற்கு பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து அனுப்புகிறார்கள். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு அரசு, ஊதியம்- மானியம்- சலுகைகள் என்று மக்களின் வரிப்பணத்திலிருந்து வழங்குகிறது. மக்களின் வரிப்பணத்திலிருந்து தங்களை வளப்படுத்திக்கொண்ட சில பிரதிநிதிகள் மக்களை மறந்து, தாம் அங்கம் வகிக்கும் அவையின் கண்ணியத்தை மறந்து அவையை கலவரகாடாக்கி அவையை நடக்கவிடாமல் செய்து அவையின் மாண்பை குலைப்பதை பார்க்கிறோம்.
சமீபத்தில் உ.பி., ஆந்திரா மற்றும் ஒரிஸ்ஸாவில் சட்டமன்றத்தில் நடந்த கலவரத்தை உதாரணமாக கூறலாம். அவ்வளவு ஏன்? நம்முடைய தமிழகத்தில், எதிர்கட்சியினர் ஏதேனும் ஒரு காரணத்தை சொல்லி வெளியேறுகிறார்கள். அல்லது வெளியேற்றப்படுகிறார்கள். இலங்கை தமிழர் பிரச்சினையில் தொடர்ந்து எதிர்கட்சியினரின் வெளிநடப்பு தொடர்கிறது. இலங்கை தமிழர்மீது கொண்டுள்ள அக்கறை பாராட்டத்தக்கதே! ஆனால் உங்களை நம்பி தேர்ந்தெடுத்து அனுப்பிய மக்கள் பிரச்சினையை புறந்தள்ளி, 'வெளிநடப்பு' என்ற கொள்கையை கடை பிடிப்பது நியாயமா?


மேலும், அரசு தவறு செய்யும்போது சரியான முறையில் வாதங்களை எடுத்துவைத்து வாதாடவேண்டிய பொறுப்புள்ள எதிர்கட்சித்தலைவர் ஜெயலலிதா சட்டமன்றத்துக்கு 'கையெழுத்து' போட மட்டுமே செல்கிறார் எனில், இவர்களை தேர்ந்தெடுத்த மக்கள்தான் பரிதாபத்திற்குரியவர்கள்.


மேலும், நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கக்கூடிய பாராளுமன்றத்தில் ஏதேனும் பிரச்ச்சினைகளை எழுப்பி அவையை ஸ்தம்பிக்க செய்வதிலேயே சில உறுப்பினர்கள் குறியாக உள்ளனர். இரு நாட்களாக இலங்கை பிரச்சினையை மையமாக வைத்து, ம.தி.மு.க., பா.ம. க. எம்பிக்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். வேறு சில கட்சிகள் வேறு பிரச்சினைகளை எழுப்பியதை தொடர்ந்து அவையை நடத்தமுடியாத நிலைக்கு தள்ளப்பட்ட சபாநாயகர் திரு. சோம்நாத் சட்டர்ஜி கடும் கோபத்துடன்,


உங்களின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. இப்படியே போனால் அவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கவேண்டிய நிலை வரும். அவை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உங்களுக்கு 'அலவன்ஸ்' தருவது மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதாகும் என்று கூறியுள்ளார்.

சட்டர்ஜி அவர்களின் கூற்று நிதர்சனமான உண்மையாகும். கோடிகளை செலவு செய்து நடத்தப்படும் அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் உறுப்பினர்களுக்கு அந்த மாத சம்பளம் உள்ளிட்ட அத்துணை சலுகைகளையும் ரத்து செய்தால்தான் கொஞ்சமேனும் திருந்துவார்கள். இவை எல்லாவற்றிற்கும் மேலாக வாக்களிக்கும் மக்கள், தேர்தல் நேரத்தில் வாக்கு கேட்டுவரும் இவர்களிடம் கடந்த பதவிகாலத்தில் அவை நடந்த நாட்கள் எத்தனை, அதில் இவர்கள் கலந்துகொண்ட நாட்கள் எத்தனை,தொகுதி நலன்பற்றி அவையில் இவர்கள் எழுப்பிய பிரச்சினைகள் என்ன? அவையில் இவர்களின் தனிப்பட்ட நடவடிக்கை என்ன? என்பதையெல்லாம் கேட்டு பரிசீலித்து வாக்களிக்கவேண்டும். இல்லையேல், ஒன்று ஓய்வெடுப்பார்கள்; அல்லது ஒன்றுக்கும் உதவாமல் வெளிநடப்பு செய்வார்கள் அல்லது சபையை நடக்கவிடாமல் செய்வார்கள். மக்கள் விழித்து கொண்டால் சரி!

Wednesday, January 14, 2009

'நரமாமிசபட்சினி' நரேந்திரமோடிக்கு உச்சநீதிமன்றம் குட்டு!


மறக்கமுடியுமா?

மோடியின் ஆசீர்வாதத்தோடும்,ஆசியோடும் நடைபெற்ற முஸ்லீம் இனபடுகொலையை!
மாபாவிகள் எம் சகோதரிகளின் மானத்தை பறித்த அந்தநாளை!

எம் சொந்தங்கள் கரிக்கட்டையாக கொளுத்தப்பட்டதை!
வயிற்றில் உள்ள பிஞ்சையும் வயிற்றை கிழித்து கொளுத்திய கொடுமையை! பயங்கரவாதிகள் நாங்கள் தான் செய்தோம் மோடியின் ஆசியோடு செய்தோம் என்று பகிரங்கமாக சொல்லியதை!

தடயங்கள் அழிக்கப்பட்டதை! சாட்சிகள் மிரட்டப்பட்டதை! வழக்குகள் குழியில் புதைக்கப்பட்டதை!

இருப்பினும், உண்மையை ரெம்ப காலம் ஒழிக்கமுடியாது என்ற நியதிக்கேற்ப சில மனிதநேயர்களின் முயற்சியால் புதைக்கப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், தோண்டப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. இந்த வழக்கில் முஸ்லிம்களுக்கு நீதி கிடைத்துவிடக்கூடாது என்பதிலே ஆரம்பம்முதலே குறியாக இருப்பவர் குஜராத் காவல்துறை தலைவர் பாண்டே என்பவர்.

இதற்கிடையில், இந்தவழக்கில் பாண்டே குறுக்கீடு செய்வதாக கூறி உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்தவழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிமார்க்கண்டேய கட்ஜூ - மோடி அரசின் நிருவாகத் திறமையின்மையைக் குறிப்பிட்டுக் கூறினார். குஜராத்தில் நடந்தப்பட்ட கொலைகளும், வன்கொடுமைகளும் இந்திய நாட்டுக்கே அவமானத்தை உண்டாக்கிவிட்டன என்றார். குஜராத்தில் சிறுபான்மையின மக்களுக்கு என்ன கொடுமைகள் இழைக்கப்பட்டன என்பதை நாம் அறிவோம். அந்தக் கொடுமைகள் இந்திய நாட்டுக்கு அவமானமானவை என்று நீதிபதி குறிப்பிட்டார்.
காவல்துறைத் தலைவரின் தலையீடு எதிர்மாறான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தால் அவரை மாற்றவேண்டும் என நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதி குறிப்பிட்டார். தீர்ப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) வழங்கப்பட்டது.

ஏற்கனவே,திருவாளர் மோடியை 'ரோம் பற்றி எரிந்தபோது பிடில் வாசித்துக்கொண்டிருந்த நீரோ மன்னனோடு'ஒப்பிட்டு உச்சநீதிமன்றம் கண்டித்தது குறிப்பிடத்தக்கது.

தர்மத்தின்[முஸ்லிம்களின்]வாழ்வுதனை சூது[இந்துத்துவாக்கள்]கவ்வும்; மறுபடியும் தர்மம்[முஸ்லிம்கள்]வெல்லும். அன்று இந்த மோடிகள் 'குமுதம்-அரசு' சொன்னதுபோல, இருக்குமிடம் தூக்கு மேடையாக இருக்கும். இன்ஷா அல்லாஹ்!

தேங்க்ஸ் டு :நிழல்களும் நிஜங்களும்

Tuesday, January 13, 2009

நந்திகிராம் இடைத்தேர்தலில் படுதோல்வி:இடதுசாரிகளுக்கு இது ஒரு பாடம்!


நந்திகிராம் இடைத்தேர்தலில் படுதோல்வி:
இடதுசாரிகளுக்கு இது ஒரு பாடம்!

சர்ஜுன்

மார்க்சிஸ்டுகள் நீண்டகாலம் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் மேற்கு வங்காள மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத் தேர்தலில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி தோல் வியை சந்தித்திருக்கிறது. தேர்தல்களில் வெற்றி தோல்வி சகஜம், எனினும் மார்க்சிஸ்டுகளின் கோட்டையான மேற்கு வங்காளத்தில் தற்போதைய அரசியல் சொல்லிக் கொள்ளும் படியாக எந்தவித வளர்ச்சியும் இல்லாத திரிணா மூல் காங்கிரஸ் கட்சியிடம் இடதுசாரி கள் தோல்வி அடைந்திருப்பது ஒரு அரசியல் அவலம் என்பதை இடது சாரிகள் உணர்ந்து கொள்ள வேண்டும். மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங் கிரஸ் கட்சி அங்கு தங்களை எதிர்த்துப் போட்டியிட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை 39 ஆயிரம் வாக்கு கள் வித்தியாசத்தில் தோற்கடித்திருக் கிறது.


நந்திகிராம் என்ற பகுதியைப் பற்றி வாசகர்களுக்கு அதிகம் விளக்கத் தேவையில்லை. ஏனெனில் சிறப்புப் பொருளாதார மண்டலம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக நந்திகிராமில் உள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்து வதற்காக அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்தியது மாநில அரசு. தங்களது வாழ்வாதாரமாக விளங்கும் விளை நிலங்களை விட்டுத்தர மாட் டோம் என நந்திகிராமில் வாழும் அந்த பாமர மக்கள் போராடினர். ஏழைப் பாட்டாளிகளுக்காகப் பாடுபடுவதற் காகவே இயக்கம் கண்டோம் எனக் கூறியவர்கள் உரிமை காக்க போராடிய மக்களை மூர்க்கத்தனமாக நசுக்கினார் கள். ஆளும் கட்சியாக இருப்பதால் காவல்துறையினரை வைத்து காட்டுத் தனமாக நந்திகிராம் மக்களைத் தாக்கினார்கள். இதில் பல உயிர்கள் பலியாயின.


காவல்துறையினர் பொதுமக்களைத் தாக்குவதா? பொறுக்க முடியுமா காம்ரேடுகளுக்கு? காவல்துறையினர் தாக்க பார்த்துக் கொண்டிருப்பதா? பொறுமை இழந்த கம்யூனிஸ்ட் தொண் டர்களும் அப்பாவி மக்களைத் தாக்கினர்.


தாக்கப்படுபவர்கள் பல்வேறு முனை களிலும் வஞ்சிக்கப்படும் அப்பாவி மக்களாயிற்றே? பரிதாபத்துக்குரிய முஸ்லிம் சமூகத்தினராயிற்றே என அவர்கள் பார்க்கவில்லை. அவர்கள் தான் மதச்சார்பின்மை பேசும் மாவீரர் களாயிற்றே. பாதிக்கப்பட்டவர்களை மேலும் மேலும் தாக்கும் வேலையைத் தொடர்ந்து செய்தார்கள். ஏழைப் பாட் டாளிகளின் கண்ணீருக்கு தற்போது விடை கிடைத்திருக்கிறது. கடந்த மே மாதம் நந்திகிராமில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி படுதோல்வியை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து ஜனவரி 5ஆம் தேதி 2009ஆம் ஆண்டு நந்திகிராமில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தனது கூட்டணிக் கட்சியான சி.பி.ஐ.யிடம் தொகுதியை ஒதுக்கியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. நந்திகிராமில் மார்க் சிஸ்ட்களால் நிகழ்த்தப்பட்ட அரசு வன்முறையில் கொடூரமாக கொல்லப் பட்ட ஷேக் இம்தாதுல் என்ற ஒரு விவசாய இளைஞனின் தாயாரிடம் இடது சாரிகள் தோல்வியைத் தழுவினார்கள்.


எந்தக் காவல்துறையின் அராஜகத்தை நம்பி அவர்கள் நந்திகிராமில் வெறியாட் டம் போட்டார்களோ, அந்த காவல்துறையின் அராஜகம்தான் அவர்களை படு தோல்வி பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டி ருக்கிறது.


காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலியானவரின் தாயாரையே அந்தத் தொகுதி மக்கள் தேர்ந்தெடுத்து இடதுசாரிகளின் நோக்கம் தவறு என்பதை தங்கள் வாக்குச் சீட்டுகளின் மூலம் காட்டினார்கள்.


இதற்கு முன்பு நந்திகிராமின் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த முகமது இல்யாஸ் மீதான லஞ்ச ஊழல் புகார்கள் நிரூபிக்கப்பட்டதால் பதவி இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பதவி இழந்ததால் நந்திகிராமில் இடைத் தேர்தல் நடைபெற்றது. ஃபெரோஸா பீவியை எதிர்த்துப் போட்டியிட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பரமானந்த் படுதோல்வியை சந்தித்திருக்கிறார்.


நந்திகிராம் விவகாரத்தில் காம்ரேடு கள் மறந்துபோன கொள்கையை நந்தி கிராம் மக்கள் இந்தத் தேர்தல் முடிவு களின் மூலம் நினைவூட்டியுள்ளார்கள்.


இதில் இடதுசாரிகள் பாடம் கற்றுக் கொள்வார்களா?

thnaks :tmmk.in

Thursday, January 8, 2009

அதிகாரிகள் மீது அவதூறு ஜெயலலிதாவுக்கு தமுமுக கண்டனம்

பத்திரிக்கை அறிக்கை

அதிகாரிகள் மீது அவதூறு

ஜெயலலிதாவுக்கு தமுமுக கண்டனம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர்
எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கை:




அதிமுகவின் பொதுச் செயலாளராகவும், ஆர்.எஸ்.எஸ்ஸின் அறிவிக்கப்படாத தலைவராகவும் செயல்பட்டுவரும் ஜெயலலிதா அரசின் உயர் பொறுப்புகளில் இறுக்கும் முஸ்லிம் அதிகாரிகள் மீது அவதூறு சுமத்துவதே வழக்கமாக வைத்து உள்ளார். திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு பதிவு இயந்திரங்களில் அதிமுக வுக்கு எதிராக சதி செய்யப்பட்டுள்ளதாகவும், இது செய்தவர்கள் இந்திய ஆட்சி பணி அதிகாரி சையத் முனீர் ஹோடாவும், இந்திய காவல் பணி அதிகாரி ஜாபர் சேட்டும் என்று வஞ்சம் துனிக்கும் அவதூறை நெஞ்சம் அஞ்சாது கூறியுள்ளார் ஜெயலலிதா. இதை தமுமுக வன்மையாக கண்டிக்கிறது.


இடைத் தேர்தல் பணிகள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் நேரடி கட்டுப் பாட்டில் நடப்பவை என்பது எல்லோரும் அறிந்ததே. சென்னை மெட்ரோ ரயில் கார்பரேஷன் பொறுப்பில் இறுக்கும் முனீர் ஹோடாவும், உளவுத்துறை ஐ.ஜி யான ஜாபர் சேட்டும் திருமங்கலம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக சதி செய்தனர் என்ற அபாண்ட குற்றசாட்டு ஜெயலலிதாவின் வக்கிரபுத்தியை வெளிப்படுத்துகிறது. தேர்தல் ஆணையம் இதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு முன் சையத் முனீர் ஹோடாவை தேசத் துரோகி என்று அநாகரிகமாக விமர்சனம் செய்துள்ளார் ஜெயலலிதா.


அதிகார துறையில் மீச் சிறுபான்மையாக இருக்கும் சிறுபான்மை முஸ்லிம் அதிகாரிகளை ஜெயலலிதா தொடர்ந்து இழிவுபடுத்துவது கண்டனத்திற்குரியது. இனியாவது அவர் இதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

Saturday, January 3, 2009

தோட்டாக்கள் துளைக்க முடியாத உண்மைகள் - 2


கார்கரே கொலையைக் குறித்த காவல்துறையின் விளக்கத்தை கார்கரேயின் குடும்பம் உட்பட மக்கள், அப்படியே நம்பாமல் சந்தேகப் படுவதற்குப் பல காரணங்கள் உண்டு. முதன்முதலாகக் கார்கரே தாஜ் ஹோட்டலிலும் காந்தே மற்றும் ஸலஸ்கர் இருவரும் தாஜிற்கு அடுத்துள்ள மெட்ரோவிற்கருகில் வைத்தும் கொல்லப் பட்டதாகவே காவல்துறை கூறியிருந்தது. பின்னர், மூவரும் ஒரே இடத்தில் வைத்து ஒன்றாகவே கொல்லப்பட்டதாகக் காவல்துறையே மாற்றிக் கூறியது.
மும்பைத் தாக்குதல் தொடங்கிய வேளையில், கார்கரே தாதரிலுள்ள தனது வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்தார். காந்தே அன்று ஆஃப் டூட்டியில் இருந்தார். தாக்குதல் நிகழ்வை முதலாவதாக அறிந்த ஸலாஸ்கர், நேரடியாகத் தாஜ் ஹோட்டலுக்குத்தான் முதலில் வந்து சேர்ந்தார். தாஜ் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்த ஸலாஸ்கரை ஜாயிண்ட் கமிஷனர் ராகேஷ் மரியா கொலாபா காவல்நிலையத்திற்கு வரும்படி கன்ட்ரோல் ரூம் வழியாக ஆணையிட்டிருக்கின்றார். தாஜிலிருந்து கொலாபா காவல்நிலையத்திற்குப் புறப்பட்ட ஸலாஸ்கருக்கு, ரமேஷ் மரியாவிடமிருந்து மீண்டும் அழைப்பு வந்தது - தீவிரவாதிகளின் தாக்குதலில் அடிஷனல் கமிஷனர் சதானந்த் தத்தா காயமடைந்திருப்பதாகவும் உடனடியாக ஸலாஸ்கர் காமா மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றும் அந்த அழைப்புக் கூறியது. காமாவுக்குச் செல்லும் வழியில் ஸலாஸ்கர் கார்கரேயைச் சந்தித்தார். காந்தேயும் இவர்களுடன் இணைந்தார். அச்சமயம் ACP பிதோனாய் குவாலிஸ் வண்டியில் அங்கு வந்து சேர்ந்தார். குவாலிஸ் வண்டியினைத் தங்களுக்குத் தர வேண்டும் என காந்தே கேட்டுக் கொண்டார். இதன் பின்னர் நடந்ததாகக் காவல்துறை கூறிய கதை கீழ்கண்டவாறு:"வண்டியை ஸலஸ்கர் ஓட்டினார். அவருக்கு அருகில் காந்தே உட்கார்ந்திருந்தார். ஜாதவும் மற்ற இரு கான்ஸ்டபிள்களும் கடைசி வரிசையில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தனர். இரண்டாவது வரிசை இருக்கையில் கார்கரே அமர்ந்திருந்தார். காமா மருத்துவமனைக்குப் புறப்பட இருந்த வேளையில் இவர்களுக்கு மீண்டும் அழைப்பு வந்தது. "செயின்ட் சேவியர் கல்லூரிக்கு அருகில் வைத்து, தீவிரவாதிகள் வண்டி ஒன்றைக் கடத்துவதற்கு முயற்சி செய்தனர்" என அந்த அழைப்பு கூறியது. அந்நேரம் ஓர் ஆள் அவர்களின் வண்டியின் குறுக்காக பாய்வதைக் கண்டனர். தற்பொழுது காவல்துறையின் கஸ்டடியில் உள்ள அஜ்மல் கஸப்தான் அவன். ஸலஸ்கர் தன் கையிலுள்ள கைத்துப்பாக்கியால் கஸபை நோக்கிச் சுட்டார். கஸ்பின் கையில் காயம் ஏற்பட்டது. திடீரென கஸபுடன் இருந்த இஸ்மாயில் இருளிலிருந்து கொண்டு தாறுமாறாக சுட்டான். வண்டியில் இருந்த கார்கரே உட்பட அனைவருக்கும் குண்டடி பட்டது. அனைவரையும் வண்டியிலிருந்து வெளியே இழுத்துப் போட்டுவிட்டு, கஸபும் இஸ்மாயீலும் அவ்வண்டியில் தப்பியோடினர்; பின்னர் பிடிபட்டனர்." காவல்துறை கூறும் இக்கதை, நம்பமுடியாத ஒன்றுக்கொன்று பொருந்தாதவை என்பது சிறு குழந்தைக்கும் தெரியும். கார்கரேக்கு மாலேகோன் குண்டுவெடிப்பு வழக்கில் கொலை மிரட்டல்கள் தொடர்ந்து இருந்ததால், அவருடன் ஆயுதமேந்திய இரு போலீசார் நியமிக்கப் பட்டு, எந்நேரமும் உடன் இருந்தனர். ஆனால், இவர்கள் இல்லாமலேயே கார்கரே முதலில் CSTக்கும் பின்னர் காமா மருத்துவமனைக்கும் சென்றுள்ளார். தீவிரவாதிகள் தாக்குதல் நடைபெறுவதற்கு முந்தைய தினம், அப்பொழுது உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பாட்டீல் தலைமையில் நடந்த காவல்துறை உயரதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில், "மாலேகோன் குண்டு வெடிப்பு விசாரணையில் ஈடுபட்டிருப்பதால் மிகக் கவனமாக இருக்க வேண்டும்" என கார்கரேக்குப் பாட்டீல் முன்னெச்சரிக்கை கொடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்தே கார்கரேக்குப் பாதுகாப்பாக இரு போலீசார் நியமிக்கப் பட்டனர். இருப்பினும் அந்தப் பாதுகாப்பு அதிகாரிகள் துணையின்றி, கார்கரே தீவிரவாதிகளை எதிர்கொள்ள தனியாகச் சென்றது எப்படி? கார்கரே சி.எஸ்.டிக்கு வந்தபோது, ATSஇல் முன்னர் தலைவராக இருந்த பி.கே. ரகுவன்ஷி CSTயில் இருந்தார். இருப்பினும் இவரோ கார்கரேயின் பாதுகாப்பு அதிகாரிகளோ சம்பிரதாய விசாரிப்புக்காகக்கூட கார்கரே அருகில் செல்லத் தயாராகவில்லை. காந்தேயும் ஸலஸ்கரும் கார்கரேயுடன் காமாவுக்குப் புறப்படும் பொழுது, அவர்களது வண்டியில் ரகுவன்ஷி ஏறவில்லை; கார்கரேயின் பாதுகாப்பு அதிகாரிகளும் உடன் செல்லவில்லை.காமா மருத்துவமனைக்குத் தனியாகச் செல்லுமாறு யாராவது கார்கரேயிடம் கோரிக்கை/உத்தரவு விடுத்திருந்தனரா?அச்சமயம் கார்கரேக்குத் தொடர்ச்சியப் பல தொலைபேசி அழைப்புகள் வந்திருந்ததை அவரது இறுதியான அசைவுகளை வெளிப்படுத்தும் வீடியோ காட்சிகளிலிருந்து உறுதியாகக் கூறலாம். அந்நேரம் காவல்துறை கண்ட்ரோல் அறையில், ஜாயின்ட் கமிஷனர் ராகேஷ் மரியாதான் இருந்தார். இதே மரியாதான் தற்பொழுது மும்பைத் தாக்குதல் வழக்கை விசாரிக்கின்றார். கஸபை விசாரணை செய்த ஒரேயொரு அதிகாரியும் இவர்தான். கார்கரே கொல்லப்பட்ட நிகழ்வில் ஒரே சாட்சி அருண் ஜாதவ், மீண்டும் நடந்த சம்பவத்தை விவரிக்கும்போது கதையில் மாற்றம் வருகிறது. "தீவிரவாதிகள் கார்கரேயின் மீதும் மற்றவர்கள் மீதும் தாறுமாறாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். காந்தே, ஸலஸ்கர், கார்கரே முதலானவர்களை வண்டியிலிருந்து வெளியே தூக்கி வீசிவிட்டு, காரைக் கடத்திக் கொண்டு தப்பிச் சென்றனர். அதே காருக்குள் காயம் அடைந்திருந்த நான், இறந்தவன் போன்று வண்டியின் சீட்டிற்கு கீழே மறைந்து கிடந்தேன்" என்பதாக ஜாதவ் கூறுகிறார். "தீவிரவாதிகள் அவ்வண்டியை விட்டு மற்றொரு வண்டியைக் கடத்தித் தப்பிச் செல்வதுவரை நான் அவ்வண்டியின் சீட்டிற்கு கீழே கிடந்தேன். தீவிரவாதிகள் சென்ற பிறகு வயர்லெஸ் மூலமாக காவல்துறை கண்ட்ரோல் அறைக்குத் தகவல் கொடுத்தேன்" என்பது ஜாதவ் தரும் விவரணம். ஸலஸ்கரின் பாதுகாப்பு அதிகாரியான கான்ஸ்டபிள் ஜாதவின் கையில் ஒரு கைத்துப்பாகி கூடவா இல்லாமல் இருந்தது?தீவிரவாதிகள் முதலில் கடத்திச் சென்ற குவாலிஸ் வண்டியின் பின்சீட்டிற்குக் கீழே, தீவிரவாதிகளுக்குத் தெரியாமல் கிடந்த ஜாதவ், தீவிரவாதிகளைப் பின்பக்கமிருந்து சுட்டுத் தள்ளியிருக்கலாமே?இக்கேள்விக்கு ஜாதவின் பதிலைக் கேளுங்கள்:"என் கைவசமிருந்த கைத்துப்பாக்கியைக் காமா மருத்துவமனையில் வைத்து நான் வேறோர்(?) அதிகாரிக்குக் கொடுத்து விட்டேன்".எவரும் நம்ப முடியாத பதில்!.ஜாதவைப் போன்ற என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட், இதுபோன்ற இக்கட்டான சூழலில் தனது கைத்துப்பாக்கியை மற்றொருவருக்கு கொடுப்பது என்பது மட்டுமல்ல, கலாஷ்நிக்கோவ் துப்பாக்கிகளுடன் நிற்கும் தீவிரவாதிகளை எதிர்கொள்வதற்கு அனுபவமிக்க ஓர் என்கவுண்டர் அதிகாரி வெறுங்கையுடன் செல்வது என்பது உலகமகா காமடியாகும். அதுமட்டுமல்ல, காமா மருத்துவமனைக்கு எதிரில் நடந்த துப்பாக்கிச் சூட்டால் காயம் பட்டதாகக் கூறும் ஜாதவ், அதற்கு முன்பு காமா மருத்துவமனைக்கு எப்பொழுது சென்றார்?. காமா மருத்துவமனைக்கு முன்பாக வண்டியிலிருந்து இறங்கும் முன்னரே தீவிரவாதி இஸ்மாயில் தாறுமாறாகச் சுட்டதாகவும் கையில் குண்டடி பட்டிருந்த கஸபும் இஸ்மாயீலும் கார்கரே முதலானவர்களை வண்டியிலிருந்து இழுத்து வெளியே போட்டு விட்டு வண்டியைக் கடத்திச் சென்றதாகவும் அந்நேரம், தான் வண்டியின் பின் இருக்கையின் கீழே குண்டடி பட்டு இறந்தது போன்று கிடந்ததாகவும் இதே ஜாதவ் வாக்குமூலம் கொடுத்துள்ளார். சம்பவம் நடந்த சமயத்தில் காமா மருத்துவமையின் முன்பாக வண்டியிலிருந்து கீழே இறங்காத ஜாதவ், எப்பொழுது காமா மருத்துவமனையில் வைத்து மற்றொரு அதிகாரிக்குத் தனது கைத்துப்பாக்கியைக் கொடுத்தார்?. ஜாதவின் கைத்துப்பாக்கியைப் பெற்றுக் கொண்ட அந்த மர்ம அதிகாரி யார்?ஸலஸ்கரின் பாதுகாப்பு அதிகாரியான ஜாதவிற்கு, ஸலஸ்கருடன் செல்லும் சாதாரண வேளைகளில்கூட கையில் துப்பாக்கி இருக்க வேண்டியது கட்டாயமாகும். இருப்பினும் தீவிரவாதிகளை எதிர்கொள்ளச் செல்லும் வேளையில், கையில் துப்பாக்கி இல்லாமல் சென்றார் என்பது உச்சகட்ட நகைப்பாகும்.கொல்லப்படுவதற்குச் சில மணித்துளிகளுக்கு முன்னர், கார்கரே மாலேகோன் வழக்கின் பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் ரோஹிலி சாலினியுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தியிருந்தார். மாலேகோன் வழக்குத் தொடர்பான மேலதிக விஷயங்கள் குறித்து அடுத்தநாள் விரிவாகப் பேசிக் கொள்ளலாம் என இருவரும் தீர்மானித்திருந்தனர். கிட்டத்தட்ட அதே நேரம், பூனே காவல்துறைக்கு ஒரு மொட்டை தொலைபேசி மிரட்டல் வந்தது. "அடுத்த இரு தினங்களுக்குள் கார்கரே குண்டுவெடிப்பில் கொலை செய்யப்படுவார்" என அம்மிரட்டல் கூறியது. அம்மிரட்டலை விடுத்தவர் தூய மராட்டி மொழியில் பேசியுள்ளார். கார்கரே கொல்லப்பட்டார்; நாட்களுக்குள் அல்ல, சில மணிநேரங்களுக்குள்ளேயே! கார்கரேயின் அருகில் செல்வதற்கோ அவருடன் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் குவாலிஸ் வண்டியில் அவருடன் ஏறிச் செல்வதற்கோ தயாராகாத முன்னாள் ATS தலைவர் ரகுவன்ஷி உடனடியாக மீண்டும் ATS தலைவராகப் பதவியேற்றார்.இன்ஷா அல்லாஹ் தொடரும்...
தோட்டாக்கள் துளைக்க முடியாத உண்மைகள் - 1
தேங்க்ஸ் டு : சத்யமார்க்கம்

Wednesday, December 31, 2008

'திருடப்போனவனுக்கு தேள்கொட்டிய கதை


தலைமை அலுவலகத்தில் ரூ.2.6 கோடி மாயம்

டெல்லி: டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ. 2.6 கோடி பணம் மாயமாகியுள்ளது. இது கட்சிக் கணக்கில் வராத, எந்த வழியில் வந்தது என்பதற்கு ரசீது இல்லாத பணம் ஆகும். இதனால் போலீசிடம் புகார் தர பாஜக தயக்கம் காட்டி வருகிறது.

டெல்லி அசோகா சாலையில் பாஜகவின் தலைமை அலுவலகம் உள்ளது. அங்குள்ள ஒரு அறையில் பணத்தை இருப்பு வைத்திருப்பது வழக்கம்.

அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ. 2.6 கோடி பணத்தைக் காணவில்லை என்று பாஜகவின் தலைமை காசாளர் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமைதான் பணம் திருட்டுப் போனது தெரிய வந்தது. அதற்கு முதல் நாள் கிருஸ்துமஸ். அன்று அலுவலகம் திறக்கப்படவில்லை. அதை பயன்படுத்திக் கொண்டு யாரோ பணத்தை திருடிச் சென்றுள்ளதாக தெரிகிறது.
24ம் தேதிதான் அந்தப் பணம் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. கட்சி நிர்வாகிகள் பலரும் தலைமைக் கழக அலுவலக வளாகத்தில் தங்கியுள்ளனர்.

இந்த நிலையி்ல் பணம் திருட்டுப் போயுள்ளது பாஜக வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த பல வருடங்களாகவே நலின் தாண்டன் என்ற கட்சியின் மூத்த நிர்வாகிதான் பண விவகாரத்தை கையாண்டு வருகிறார். இவர்தான் தலைமைக் காசாளராகவும் இருக்கிறார். அவர்தான் பணம் திருட்டுப் போனதைக் கண்டுபிடித்துத் தெரிவித்துள்ளார்.

பணம் வைக்கப்படும் அறைக்குப் போகும் அனுமதி பெற்ற ஒரு சிலரில் இவரும் ஒருவர். கட்சிக்காரர்கள் யாரேனும்தான் இதை செய்திருக்க முடியும் என சந்தேகிக்கப்படுகிறது. காரணம், அலுவலகத்தின் பூட்டுக்கள் எதுவும் உடைக்கப்படவில்லை. அதேசமயம், பணம் வைக்கப்பட்டிருந்த சிறிய அறையின் கதவு மூடப்படவில்லை.

இதற்கிடையே, இந்தப் பணத்தை இதுவரை கட்சிக் கணக்கில் சேர்க்கவில்லையாம். தேர்தலுக்காக இது வசூலிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. எந்த வகையில் இந்தப் பணம் திரட்டப்பட்டது என்தற்கும் கட்சியிடம் ரசீது இல்லை. (இனிமேல் உருவாக்கினால் தான் உண்டு). கணக்கில் இல்லாத பணம் என்பதால் (கிட்டத்தட்ட பிளாக் மணி மாதிரி) போலீஸாரிடம் போக பாஜக தயக்கம் காட்டுவதாகத் தெரிகிறது.

தற்போது தனியார் துப்பறியும் நிறுவனம் ஒன்றை அமர்த்தி விசாரணை மேற்கொண்டுள்ளதாம் பாஜக தலைமை.

பணம் காணாமல் போனது தொடர்பாக பாஜக வட்டாரத்தில் எந்தத் தகவலும் தெரிவிக்க மறுக்கின்றனர். கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத்திடம் இதுகுறித்து கேட்டபோது, கருத்து கூறுவதற்கில்லை என்று மறுத்து விட்டார்.

டெல்லி போலீஸார் இந்த விவகாரம் குறித்துக் கூறுகையில், நாங்களும் கேள்விப்பட்டோம். இருப்பினும் முறையான புகார் வராமல் நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறுகின்றனர்.

தற்போது பாஜக தலைமை அமர்த்தியுள்ள துப்பறியும் நிறுவனம், தாண்டனை குறி வைத்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. அவருக்குத் தெரியாமல் பணம் திருட்டுப் போயிருக்க வாய்ப்பில்லை என்றும் அவர்கள் கருதுகின்றனர்.

மேலும், கட்சித் தலைமை அலுவலகத்தில் தங்கியிருப்பவர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. பணம் வைக்கப்படும் அறைக்குப் போக அனுமதி பெற்றவர்களிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

தாண்டன் பல வருடங்களாகவே காசாளராக இருந்து வருகிறார். இதை விட பெரிய தொகையை அவர் நிர்வகித்துள்ளார். எனவே அவரை சந்தேகப்படக் கூடாது என்று கட்சிக்குள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் அவர் வாங்கும் சம்பளத்தை பார்த்தால், அவரிடம் இருக்கும் இன்னோவா காரும், அவரது ஆடம்பர வீடும், செலவுகளும் இடிக்கிறதே என்று அவர் மீது சந்தேகப்படுவோர் சுட்டிக் காட்டுகின்றனர்.

சமீபத்தில் கட்சியின் தலைமை அலுவலக ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டு போர்க்கொடி உயர்த்தினர். அதுதொடர்பாக தாண்டனுக்கும், அலுவலக செயலாளர் ஷியாம் ஜாஜுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதையெல்லாம் மனதில் வைத்தே விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tuesday, December 30, 2008

ஒற்றுமையே தீர்வு!



உண்மைகள் உறங்குவதற்கும் அசத்தியமும் அட்டூழியமும் அதிகாரங்களில் வீற்றிருப்பதற்கும் அநியாயமாக ஒரு சமூகம் அடக்கி ஒடுக்கப்படுவதற்கும் தங்களது உரிமைகள் என்ன என்பதைக் குறித்தும் அதனை அடைவதற்கான வழிமுறைகள் யாவை என்பதைக் குறித்தும் போதிய அறிவின்றியும் அதற்காக ஒன்றுபட்டு போராடும் போராட்ட குணமின்றியும் இருப்பதே அச்சமூகம் பின்தங்கிக் கிடப்பதற்கு முழு முதற்காரணமாகும். விழிப்புணர்ச்சி என்பதும் ஒன்றிணைந்து உரிமைக்காக உழைத்தல் என்பதும் ஒன்றோடொன்று கலந்ததாகும். இரண்டில் எந்த ஒன்றில் வீழ்ச்சி ஏற்பட்டாலும் உண்மை உறங்கும்; அக்கிரமம் கோலோச்சும்; உரிமைக்குரியவர் அநியாயமாக அடக்கி ஒடுக்கப்படுவர். இவ்விரண்டில் இரண்டுமே இல்லாதிருந்தால்.....?


80 களிலிருந்து 2000 க்கு இடைப்பட்ட 20 ஆண்டுகால இடைவெளியில் இந்திய முஸ்லிம்களின் நிலையினை எடுத்துப் பார்த்தால் கிட்டத்தட்ட மேற்கண்ட இரண்டுமே இல்லாமல், அநியாயக்காரர்களால் படுபயங்கரமாக அடக்கி ஒடுக்கப்பட்டுக் கிடந்ததைக் கண்டு கொள்ளலாம். இதனைத் தெளிவாக படம் பிடித்துக் காண்பித்ததுதான் இந்திய முஸ்லிம்களின் அரசியல், அதிகார, கல்வி, பொருளாதார நிலை குறித்த சச்சார் கமிட்டியின் அறிக்கை.

இந்திய அரசியல்-அதிகார அமைப்புக்கும் தங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பது போன்று, தங்களை எவர் ஆண்டால் என்ன? யார் அதிகாரத்தில் இருந்தால் என்ன என்று, இந்திய முஸ்லிம் சமூகம் அசட்டையாக இருந்ததன் விளைவு, நாட்டில் வெடிக்கும் அனைத்து குண்டுகளுக்கும் மூலாதாரியாக வேறு சக்திகள் இயங்கினாலும் கார்க்கரேக்கள் மூலம் அவை வெளிச்சத்துக்கு வந்தாலும் சாமர்த்தியமாக அவை மறைக்கப்பட்டு குற்றவாளிக் கூண்டில் நிரபராதியான இந்த முஸ்லிம் சமூகம் அடைக்கப்பட்டு நாட்டை விட்டு அந்நியப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

காலம் கடந்தெனினும் இன்று, மாநிலங்களிலிருந்து தேசியம்வரை, அரசியல் விழிப்புணர்ச்சியும் அதனை அடைவதற்கான வழிமுறைகளைக் குறித்துச் சிந்திக்கும் போக்கும் சமூகத்தில் கொஞ்சங் கொஞ்சமாக வேரூன்றி வருகிறது.

இதற்கான வெளிப்படையான உதாரணங்களாக சமீபத்தில் தமிழகத்தில் உருவான ஐ.டி.எம்.கே, தமுமுகவின் மக்கள் முன்னேற்றக் கழகம் போன்ற முஸ்லிம் அரசியல் இயக்கங்களும் தென்னகத்தை மையமாக வைத்து உருவாக நினைக்கும் பாப்புலர் 'ஃப்ரண்ட ஆஃப் இந்தியா'வின் அரசியல் பிரவேசமும் தேசிய அளவில் செயல்படப் போகும் ஜமாஅத்தே இஸ்லாமியின் அரசியல் பிரவேச அறிக்கையும் சான்றுகளாக அமைந்துள்ளன.

முஸ்லிம்கள் அரசியல் விழிப்புணர்ச்சி அடைந்தால் மட்டும் போதாது. அதனை அடைய, "அரசியலில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஓரணியில் திரண்டால் மட்டுமே அற்புதங்களை நிகழ்த்திக் காட்ட இயலும்!". இதனை ஒரு தாரக மந்திரமாகக் கையில் எடுத்துக் கொண்டு செயலாற்ற இந்த அமைப்புகள் முன்வர வேன்டும். என்றாலே உரிமைகளை மீட்டெடுப்பதிலும் அடக்கி ஒடுக்கப் படுவதிலிருந்து சமுதாயத்தை முழுமையாகப் பாதுகாப்பதிலும் வெற்றி பெற இயலும்.

இந்தத் தாரக மந்திரம் சரியாகப் பின்பற்றப் படுமானால், தமிழக அரசியல் கட்சிகள் பெருமளவில் முஸ்லிம்களை அணுகி மன்றாட வேண்டிய நிலையினை முஸ்லிம் சமுதாயத்தால் ஏற்படுத்த இயலும்.


கடந்த 1967 இல் தமிழகத்தில் நடந்த நான்காவது சட்டசபைத் தேர்தலின்போது இஸ்லாமியர்களிடையே ஏற்பட்ட மார்க்க மற்றும் அரசியல் ரீதியிலான ஒற்றுமை ஏற்படுத்திய விளைவுகளை ஒரு சிறந்த உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.



தமிழகத்தில் முஸ்லிம்களின் மக்கள்தொகை மொத்த மக்கள் தொகையில் 6% என அரசு பதிவேடு கூறுகிறது.



கடந்த 1967 இல் காயிதே மில்லத் இஸ்மாயில் அவர்களின் தலைமையில் அமைந்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மூலம் தமிழக முஸ்லிம்கள் ஓரணியில் திரண்டனர். காயிதே மில்லத் அவர்கள் அண்ணாதுரையுடன் கைகோர்த்து தி.மு.கவுடனான வலுவான அரசியல் கூட்டணியை அமைத்தார்.



அதனைத் தொடர்ந்து 1967 தேர்தல் களத்தில் 137 இடங்களைத் திமுக கைப்பற்றி பெரும் வெற்றி பெற்றது. 1962 இல் நடந்த இதற்கு முந்தைய தேர்தலில் இதே திமுக வெறும் ஏழு இடங்களை மட்டுமே பெற்றிருந்தது குறிப்பிடத் தக்கது.



1967 தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து திருச்சியிலிருந்து பிரசுரமாகும் "மறுமலர்ச்சி" செய்தித்தாள் தேர்தல் முடிவுகளைப் பற்றிய தனது ஆய்வுகளை மேற்கொண்டது.



அதில், 58 தொகுதிகளில் திமுக எம்.எல்.ஏக்கள் வெற்றி பெற்றதற்கான காரணிகள் அத்தனையும் ஆதாரப்பூர்வமாக நிரூபணம் ஆகின. அதாவது மேற்கண்ட தொகுதிகளில் மூவாயிரம் முதல் பத்தாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது திமுக.



மேற்கூறிய அதே தொகுதிகளில், முஸ்லிம்களின் ஓட்டுக்கள் அனைத்தும் பெருவாரியாக திமுகவிற்கு அளிக்கப்பட்டிருந்ததும், அதுவே திமுகவின் அரசியல் வரலாற்றில் அண்ணாதுரையின் தலைமையில் முதன் முறையாக திமுக பெருவாரியான இடங்களைக் கைப்பற்றக் காரணமாயிருந்ததும் நிரூபிக்கப்பட்டன. தேர்தல் களத்தில் 80% தொகுதிகளில் வெற்றியினை நிர்ணயிப்பது வெறும் 5% முதல் 10% வரையிலான ஓட்டுக்களே என்பதும் அதுவே ஒரு வேட்பாளரின் தலைவிதியை நிர்ணயிக்கக் கூடியதுமாகும் என்பதும் சிறுபிள்ளைக்குக்கூடத் தெரியும் ஒரு விஷயமாகும்.



அரசியல் ரீதியில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஓரணியில் நின்றால் தமிழக அரசியலை நிர்ணயிக்கக்கூடிய பெரும் சக்தியாக முஸ்லிம்கள் விளங்க முடியும்.



தமிழக முஸ்லிம்களின் சக்தி என்னவென்பதைத் திமுகவின் மூத்த தலைவர்கள் அனைவரும் நன்கு அறிவர். அதிலும் குறிப்பாக திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் கண்களுக்கு தமிழக முஸ்லிம்களுக்கான அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ள தமுமுக- வினை தம் பக்கம் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்ற ஆவல் மிகுந்து காணப்படுகிறது.



இந்தியா விடுதலை பெற்று 61 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்திய அளவில் முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு கேட்டுப் பெறப் போராடும் வேளையில் முஸ்லிம்களுக்கு 3.5% இட ஒதுக்கீட்டைத் திமுக அளித்தது இந்த ஆவலை மனதில் வைத்துத்தான் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.



அதே வேளையில் இந்திய ராணுவத்தில் 3.5 % முஸ்லிம்கள் உள்ளனரா? அல்லது வெறும் 0.25% மட்டுமா? போன்றவற்றினைப் பற்றி இத்தனை நாள் அறியாத கட்டுப் பெட்டிகளாக முஸ்லிம்கள் இருந்து வந்தனர்.



இதனைப் பற்றிய கேள்விகள் எழுப்பியபின் தொடர்ந்த விசாரணையில் அநீதியும் அவநம்பிக்கையும் வெளிப்படையாகத் தெரிந்தன. இத்தனை நாட்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்த அநியாயத்தினை வெளிக் கொண்டுவந்த சச்சார் கமிட்டி அறிக்கையினை முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டும். இதனை ஒட்டிய கேள்விகளையும் உரிமைக்குரல்களையும் முஸ்லிம் அறிவுஜீவிகள் உரிய இடங்களில் எழுப்ப வேண்டும்.



ஆக, ஒரு 6% முஸ்லிம் மக்கள்தொகை 40% சட்டசபை இடங்களை வெற்றியோ தோல்வியோ அடையச் செய்து தமிழக அரசியலை நிர்ணயிக்குமெனில் இந்திய அளவில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டால் என்னவாகும் என்பதை இந்தச் சமுதாயம் எண்ணிப் பார்க்க வேண்டும். குறிப்பாக உ.பி, கேரளா, அஸ்ஸாம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் முஸ்லிம்களே துருப்புச் சீட்டுக்களாக உள்ளனர். அரசியல் ரீதியில் முஸ்லிம் அமைப்புகளிடையே ஒற்றுமை மலர்ந்தால் இந்திய அளவில் சிறிதும் பெரிதுமாக 150 பாராளுமன்ற சீட்களை முஸ்லிம்களால் நிர்ணயிக்க முடியும் என்பது ஆணித்தரமான உண்மை.



மார்க்க ரீதியில் இயக்கங்கள், அமைப்புக்கள் என்று ஏகத்திற்கு தமிழகத்தில் பெருகினாலும், அவைகூடத் தம்மை வளர்த்து விட்ட சாதாரண பாமர முஸ்லிம்களுக்கு அரசு மூலம் கிடைக்கக் கூடிய உரிமைகளை, பலன்களை எப்படி வாங்கித் தருவது? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.



இந்திய அளவிலும் மாநில அளவிலும் அரசியல் ரீதியில் முஸ்லிம்கள் பிரிந்து கிடப்பதே கடந்த 60 ஆண்டுகளாக மோசமான பின்தங்கியிருக்கும் சமுதாயமாக முஸ்லிம் சமுதாயத்தை இன்னும் வைத்திருக்கிறது.



எனவே முஸ்லிம்கள் குறைந்தபட்சம் அரசியல் ரீதியில் ஒன்றுபட்டு மிகப்பெரும் சக்தியாக உருவெடுக்கும் தருணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.



முஸ்லிம் சமுதாய இயக்கங்கள், அமைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரீதியிலாக கொள்கை கட்டமைப்பினைக் கொண்டிருந்தாலும் தொலைநோக்குப்பார்வையுடன் முஸ்லிம் சமுதாயம் செல்ல வேண்டிய பாதையினை நிர்ணயிக்கும் அரசியல் சக்தியாக உருவெடுக்க தேசிய அளவில் ஒன்றிணைந்து ஒரே கட்சியாக வெளிவர வேண்டும்.



வெற்றியைத் தரக்கூடியவன் வல்ல இறைவன். அதற்கான அணுகூலங்களை அமைக்க சமுதாயம் ஒன்றுபடட்டும்!



கருத்தாக்க மூலம் : முஹம்மது அமின் பின் அப்துல் காதிர் E - MAIL :inpt19@aol.com

Monday, December 29, 2008

முஸ்லீம் என்றாலே தீவிரவாதியா? டைரக்டர் அமீர் பேட்டி!




`யோகி' திரைப் படத்தின் இறுதிக் கட்ட பணிகளில் இருக்கிறார் அமீர். ஈழத் தமிழர் பிரச்னையில் ஆவேசமாய் பேசி, சிறை சென்று வந்ததால் சற்று தாமதமாகிறது படம்.

ஈழத்தமிழர் பிரச்னை குறித்தும் மும்பைத் தாக்குதல்கள் பற்றியும் பேசுகிறார், மீண்டும்.

`யோகி' எந்தளவிற்கு வந்திருக்கிறார்?

"இன்னும் பதினைந்து நாட்கள் ஷூட்டிங் மீதமிருக்கிறது.இதுவரை எடுத்ததைப் போட்டுப் பார்த்தால் என்னைத் தவிர மற்ற எல்லோரும் மிக நன்றாக நடித்திருக்கிறார்கள். அமீர் ஏன் நடிக்க வந்தான் என்ற கேள்வி எல்லோருக்குமே இருக்கிறது. ஒரு கதைக்குப் பொருத்தமாக இருப்பதால் தான் நடிக்கிறான் அல்லது அந்த கதாபாத்திரத்திற்காக ரொம்ப மெனக்கெட்டு இருக்கிறார் என்ற உண்மையான காரணம் இருக்கவேண்டும். இது கூட இல்லையென்றால் வேற என்ன?''

ஈழத்தமிழர் பிரச்னையில் குரல் கொடுத்து சிறை சென்றீர்-களே. அங்கு உங்களுக்குக் கிடைத்த சிறை அனுபவங்கள் எந்த உணர்வைக் கொடுத்தி-ருக்கிறது?

"திட்டமிட்டுத் திருடியவன், ப்ளான் பண்ணி சாதுர்யமாக கொலை செய்தவன், மிகவும் பெர்ஃபெக்ட்டாக என்னென்ன வழிகளில் சமூகத்தை ஏமாற்றலாம் எனத் தெரிந்த, படித்த கிரிமினல்கள் பலர் வெளியேதான் இருக்கிறார்-கள். அதே மாதிரி அங்கே உள்ளே இருப்பவர்-களில் பலர் கோபத்தில் கொலை செய்தவர்கள், அவசரப் பட்டுத் திருடியவர்கள், ஆத்திரத்தில் தப்பு செய்து வந்தவர்கள், கிராமங்களில் சின்னச் சின்ன பிரச்னைகளுக்காக ஏதாவது தப்பு செய்துவிட்டு உள்ளே வந்தவர்கள் அதிகம். `ஒரு நிமிஷம் கோபப்-பட்டேன். இப்ப யோசிச்சுப் பார்த்தா ஒண்ணுமில்ல. பதினைஞ்சு வருஷம் போச்சு. இளமையைத் தொலைச்-சாச்சு. இனி என்ன பண்ணப் போறோம்னு தெரியல' என்று மெஜாரிட்டியான பேர் சொல்லும்போது பரிதாபமாக இருக்கிறது. சிறையில் உள்ள பலர் மனரீதியாகப் பக்குவமடைந்து இருக்கிறார்கள். இன்னொரு வாய்ப்புக் கொடுத்தால் திருந்தி வாழ்வோம் என்பதுதான் அவர்கள் சொல்வது. இன்னும் நிறைய சங்கதிகள் சிறையில் இருக்கிறது. அவற்றையெல்-லாம் படமெடுக்க ஆசை இருக்கிறது.''

மிக விரைவில் தமிழர்களின் மன தைப் பிரதிபலிக்கும் விதத்-தில் ஈழப் படம் ஒன்றை இயக்க-விருப்பதாக வரும் செய்திகளில் எந்தளவிற்கு உண்மை இருக்கிறது?

"ஈழம் சார்ந்த கதை ஒன்று மட்டும்தான் இருக்கிறதா என்று என்னிடம் கேட்டால், இல்லை, நிறைய கதைகள் என்னிடம் உள்ளன என்பதுதான் என் பதில். இன்று தீவிர வாதம் என்றாலே முஸ்லிம்கள்தான் என்ற எண்ணம் இருக்கிறது. முஸ்லிம் களில் தீவிரவாதி இருக்கிறான் என்பது போய், முஸ்லிம்களே தீவிரவாதிகள் என்ற மனநிலை உருவாகி விட்டது. இன்னும் ஐம்பது வருடங்களில் அடுத்த தலைமுறைக்கு மொக-லாயர்கள் எப்படிப் படையெடுத்தார் கள் என்று சொன்-னோமோ அதே போல் தீவிரவாதி-களான முஸ்லிம்கள் நம்மை அழிக்க முற் பட்டார்கள் என்று பாடமாகி விடும் நிலை இருக்கிறது. இதை உடைக்க ஆசை. இதேபோல் உண்மையான ஈழப் பிரச்-னையையும், உண்மையான காஷ்மீர் பிரச்னை யையும் பட-மெடுக்க ஆசை. இதைப் படமாக்க ஈழத்திலும், காஷ்மீரிலும் அனுமதி அளித்தால் சம்பளம் இல்லாமலே எடுக்கத் தயார்.''

ஈழத்தமிழர்களின் படுகொலை-களுக்கு எதிராக குரல் கொடுத்-தீர்கள். அதற்காக சிறை சென்றீர்-கள். ஆனால் சிறையிலிருந்து வந்தபிறகு அந்தப் பிரச்னை குறித்துப் பேசவில்லை. என்ன காரணம்?

"பேசக்கூடாது என்பதெல்லாம் இல்லை. ஈழத்தில் தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இலங்கையில் மட்டுமல்ல உலகின் எந்த மூலையிலும் எந்த மனிதனுக்-கு அநியாயம் நடந்தாலும் அதைத் தட்டிக்கேட்கிற உரிமை எல்லா மனிதர்களுக்கும் உண்டு. அந்த நியாயங்களைத் தட்டிக் கேட்பது மனிதனின் சமூகப் பொறுப்பு. அதுவும் பொது வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு இந்தப் பொறுப்பு அதிகம். நான் பொது வாழ்க்கையில் இருப்பவன். ஈழப் பிரச்னைக்கு நான், நீ எனப் போட்டி போட்டுக்கொண்டு குரல் கொடுத்துப் போராடியவர்கள், நம் நாட்டில் நடந்த மும்பைத் தாக்குதலுக்குக் குரல் கொடுத்துப் போராடவில்லை. மும்பைத் தாக்குதலில் கூட பணக்காரர்கள் இருந்த ஹோட்டலில் நடந்த தாக்குதல் பற்றிதான் செய்திகள் பெரிதாக வந்தன. ரயில் நிலையத்தில் சுடப்பட்டு இறந்த அப்பாவி ஏழைகளைப் பற்றி யாரும் பேசவில்லை. இந்தத் தாக்குதலுக்காக பதவியை ராஜினாமா செய்தவர்கள் குஜராத் கலவரத்தின்போது ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு ஏன் பொறுபேற்கவில்லை? இன்றைக்கும் டிசம்பர் ஆறாம் தேதி வந்தால் நம்மை நடுரோட்டில் உட்கார வைத்து உடைமைகளை அவிழ்த்து போலீஸ் சோதனை செய்கிறார்களே. அந்த பாபர் மசூதியை இடித்த போது ஏன் யாரும் ராஜினாமா செய்யவில்லை? அப்போது நடந்த கலவரத்தில் எத்தனை ஆயிரம் மக்கள் பலியா-னார்கள்? இலங்கையில் நடக்கும் அநியாயத்தைச் சொல்லும் போது, நம் நாட்டில் நடக்கும் அநியாயங்களையும் சொல்லித்தான் ஆக வேண்டும். ஒவ்வொரு இந்திய-னுக்கும் இதைக் கண்டிக்கும் பொறுப்பு உள்ளது. இந்த சுதந்திரம், உரிமை கூட இல்லை-யென்றால் வாழ்வது எதற்கு? மருந்து குடித்துவிட்டு நீட்டி நிமிர்ந்து படுத்து விடலாம்.''.

- இரா. ரவிஷங்கர்

kumudam

அ.தி.மு.க. இருக்கும் வரை பி.ஜே.பி.யும்.,இந்துத்துவா அமைப்புகளும் தேவையில்லை.

அண்ணா தி.மு.கழகத்தின் அரணாக விளங்குவது ஆர்.எஸ்.எஸ். என்பது வெளி உலகிற்குத் தெரியாது



திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று பி.ஜே.பி. பெருந்தன்மையோடு அறிவித்திருக்கிறது. அந்தக் கட்சி போட்டியிட்டு ஆயிரம் வாக்குகள் சிதறினாலும் அது அண்ணா தி.மு. கழகத்திற்கு நட்டம் என்பது அதற்கு நன்றாகவே தெரியும்.

பி.ஜே.பி.யின் பொதுச் செயலாளர் அருண்ஜேட்லி இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஆணித்தரமான வாதத்தை முன்வைத்தார். அ.தி.மு.க.வோடு நல்லுறவு உண்டு. ஆனாலும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுடனும் வேறு சில கட்சிகளுடனும் கூட்டுச் சேர்ந்து தமது பலத்தைப் பெருக்கிக் கொண்டு டெல்லிக்கு அ.தி.மு.க. வர வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.


ஒருமுறை வாஜ்பாய் தலைமையில் அமைந்த மத்திய அரசை அ.தி.மு.க. கவிழ்த்திருக்கிறது. ஆனால், அதனை சொந்த வீட்டுப் பிள்ளை செய்த சுட்டித்தனம் என்றே எடுத்துக் கொண்டது. அ.தி.மு.க. மீது கொண்ட பாசம் எப்போதும் அதற்குப் பட்டுப் போனதில்லை. சோதனையான நேரங்களில் பி.ஜே.பி.க்குக் கரம் கொடுக்க அ.தி.மு.க.வும் தவறியதில்லை. கடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில்கூட பி.ஜே.பி. வேட்பாளருக்குத்தான் அ.தி.மு.க. வாக்களித்தது.

எனவே, தமிழகத்தைப் பொறுத்தவரையில் அ.தி.மு.க. இருக்கும்போது பி.ஜே.பி. தேவையில்லைதான். அதனால் அந்தக் கட்சி இங்கே காலை ஊன்ற முடியாமல் கண் கலங்கிக் கொண்டிருக்கிறது.

அமரர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க. இன்று இல்லை. அதன் உருவமும் சிதைந்துவிட்டது. கொள்கை கோட்பாடுகளும் பறந்து போய்விட்டன. அண்மையில் ஒரிசாவில் ஒரு சாமியாரை மாவோயிஸ்டுகள் படுகொலை செய்தனர். அதனை அவர்களே ஒப்புக் கொண்டனர். பல தலைமுறைகளாக கிறிஸ்துவர்களாக இருக்கும் ஆதிவாசிகளை அந்த சாமியார் இந்துக்களாக ஞானஸ்நானம் செய்ய முயன்றார். சாமியாரின் கொலையை அ.தி.மு.க. தலைமை வன்மையாகக் கண்டித்தது. நியாயம்.

ஆனால், அதனைத் தொடர்ந்து தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. ஏசுவின் திருத்தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டனர் வனாந்தரங்களில் தொண்டு செய்ய வந்த சகோதரிகள் கற்பழிக்கப்பட்டனர். மாதக்கணக்கில் சிறுபான்மையின மக்கள் சித்திரவதைகளுக்கு உள்ளானார்கள்.

அதனை அ.தி.மு.க. இன்றுவரை கண்டிக்கவில்லை. எனவே, தமிழகத்தைப் பொறுத்த வரையில் அந்தக் கழகம் இருக்கும் வரை பி.ஜே.பி.யும் தேவையில்லை. இந்துத்துவா அமைப்புகளும் தேவையில்லை.

ஏன்? குஜராத்தில் இரண்டாயிரம் இஸ்லாமிய மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்..

இன்றைக்கும் அங்கே அந்தப் படுகொலைப் படலங்கள் தொடர்கின்றன.

நரேந்திர மோடியை உலகம் மனித இனப் படுகொலைக் குற்றவாளியாகக் கூண்டில் நிறுத்தி இருக்கிறது.



அதற்காக வாதாடியதில் இடதுசாரிக் கட்சிகளுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் பெரும் பங்கு உண்டு.

ஆனால், அடுத்து அதே நரேந்திரமோடிக்கு முடிசூட்டு விழா நடந்தபோது அந்த வைபவத்தில் பங்குகொள்ள தனி விமானத்தில் ஆமதாபாத்திற்குப் பறந்து சென்றவர் செல்வி ஜெயலலிதா. அதனை நாம் குற்றச்சாட்டாகக் கூறவில்லை. அதுதான் செல்வி ஜெயலலிதாவின் இயல்பு. அ.தி.மு.க.வின் இன்றைய நடைமுறைக் கோட்பாடு.

தன்னை இந்து சமயத்தின் ஏந்தல் என்பதனை செயல்படுத்திக் காட்டுவதற்கு அவர் என்றும் தயங்கியதில்லை.

மூன்று மாதங்களுக்கு முன்னால் அதே நரேந்திரமோடி சென்னை வந்தார். வேறு விழாவிற்கு வந்த அவரை தமது இல்லத்திற்கு அழைத்தார். 64 வகைப் பதார்த்தங்களுடன் விருந்து வைத்தார். தமிழகத்தின் விருந்தோம்பல் நரேந்திரமோடிக்குத் தெரியவேண்டாமா?

செல்வி ஜெயலலிதா தங்கள் அணிக்கு வந்துவிட்டால், அவரை தங்கள் கோட்பாடுகளுக்கு ஏற்ப சரி செய்து கொள்வோம் என்று ஒரு தலைவர் கூறினார். அதில் ஒரு திருத்தம். இவர்களுடைய உதவி கோரி செல்வி ஜெயலலிதா தூதுவிடவும் இல்லை. மனுப்போடவும் இல்லை.
இவர்கள்தான் அ.தி.மு.க. அரசியல் உறவு கோரி சுவர் ஏறிக் குதித்தார்கள். ஒட்டகத்தின் முதுகைச் சீர்செய்து மான்குட்டி ஆக்கிவிடும் அந்த தலைவரின் கரடி வித்தையைக் காண நாமும் தயாராக இருக்க வேண்டும்.

இவர்கள் குலுக்கப்போகும் கரங்கள் நஞ்சு நிறைந்த முட்புதர்கள் என்று இந்த வாரம் கிறிஸ்துவ மக்களின் குரலான `நம் வாழ்வும்', இளைய இஸ்லாமிய சமுதாயத்தின் சிந்தனையான `மக்கள் உரிமை'யும் சுட்டிக் காட்டியிருக்கின்றன.

சிறுபான்மையின மக்கள் தங்கள் சீற்றத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதனை நாம் விமர்சிக்க விரும்பவில்லை.


ஆனால், அசைபோட்டால் நமது இதயக் களஞ்சியத்திலிருந்து பசுமையான பல நினைவுகள் துள்ளிக்குதித்து வெளிவருகின்றன. பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் வெற்றி வீரராக அத்வானி பவனி வந்தார். பல மாநிலங்கள் அந்த பவனிக்குத் தடைவிதித்தன. ஆனால் அன்றைய அ.தி.மு.க. ஆட்சியில் இங்கே வெற்றி உலா வந்தார்.

அடுத்து தேசிய ஒருமைப்பாட்டுக் கழகக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் செல்வி ஜெயலலிதா கலந்து கொண்டார். பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அவர் நியாயப்படுத்திப் பேசினார். சிறுபான்மையின மக்கள் கோரும் உரிமைகள் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தக் கூடாது என்றார். அந்தக் கூட்டத்தில் அத்வானியும் கலந்து கொண்டார். `பாபர் மசூதி இடிப்பிற்கு ஆதரவாக எங்களால் கூட இப்படி வலிமையாக வாதாட முடியாது' என்று, செல்வி ஜெயலலிதாவின் துணிச்சலைப் பாராட்டினார்...

பின்னர் ராமர் கோயிலை எங்கே கட்டுவது என்ற விவாதம் தொடங்கியது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம்தான் ராமர் பிறந்த இடம். எனவே அங்கே கட்டாமல் இத்தாலியிலா கட்ட முடியும் என்று செல்வி ஜெயலலிதா வினா எழுப்பினார். ஆயிரம் யானை பலம் பெற்றது போல் எழுந்த இந்துத்துவா சக்திகள் பூரித்துப் போயின.

இப்படி இந்து சமய சக்திகளுக்கு மட்டுமல்ல; பி.ஜே.பி.க்கும் அவர்தான் அரசியல் வழிகாட்டியாக வலம் வருகிறார். காலதேவனுக்கு நரைகள் பூத்திருக்கலாம். ஆனால் செல்வி ஜெயலலிதாவின் பெரும்பான்மை வாதங்கள் இளமையானவை. பசுமையானவை. இந்த வாதங்களை அவர் துணிச்சலோடுதான் முன்வைக்கிறார். அதனால் ஏற்படும் விளைவுகளைச் சந்திக்கும் மன உறுதியையும் பெற்றிருக்கிறார்.

அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.கழகம் பெறும் வெற்றி இந்துத்துவா சித்தாந்தத்திற்குக் கிடைத்த வெற்றியாகக் கூட கருதலாம்.

அண்ணா தி.மு.கழகத்தின் அரணாக விளங்குவது ஆர்.எஸ்.எஸ். என்பது வெளி உலகிற்குத் தெரியாது.

தங்கள் அரசியல் அரங்கமான பி.ஜே.பி.யைவிட அந்த இயக்கம் அ.தி.மு.க.வை அதிகம் நேசிக்கிறது.

முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் நள்ளிரவில் கலைஞர் கைது செய்யப்பட்டார். அப்போது நடந்த அதிர்ச்சி நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சிகளில் உலகம் பார்த்தது. அதிர்ந்து போனது.

அ.தி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்ய வாஜ்பாய் அரசு தயாராகி வருவதாகச் செய்திகள் வந்தன. வாஜ்பாய் கண்டித்தாலும் அத்வானி கண்டிக்கவில்லை.

`எந்தக் காரணம் கொண்டும் அ.தி.மு.க. அரசைத் தொடாதே' என்று நாக்பூரிலிருந்து பகிரங்கமாக ஒரு குரல் எழுந்தது. அந்த எச்சரிக்கையை விடுத்தது ஆர்.எஸ்.எஸ். தலைமைதான்.

ஆகவே, திருமங்கலம் தொகுதியில் அ.தி.மு.க.விற்குக் குறுக்கே நிற்பதில்லை என்று பி.ஜே.பி. எடுத்துள்ள முடிவு அதன் கண்ணோட்டத்தில் சரியானதுதான்.

எல்லாவற்றிற்கும் மேலாக இங்கே அ.தி.மு.க. இருக்கும்போது பி.ஜே.பி.க்கு வேலையில்லைதான்.
THANKS :SOLAI IN KUMUDAM REPORTER

Thursday, December 25, 2008

இஸ்லாத்தை மறக்கச்செய்யும் பதவி




அன்பர்களே,

உலகத்தில் நமக்கு ஒரு அங்கீகாரம்/அதிகாரத்தை அடைவது என்பது வரவேற்கத்தக்கதே! ஆனால் அதை அடையும் வழி இஸ்லாத்திற்கு முரணாக இருக்கக்கூடாது. தமிழகத்தில் முஸ்லிம்களின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்புகளில் பெரும்பாலானவை ஏதாவது ஒரு அரசியல் கட்சிகளின் உட்பிரிவாகவே செயல்படுவதைப்பார்க்கிறோம். எனவேதான் இவர்கள் ஆதரிக்கக்கூடிய கட்சிகள் இஸ்லாத்திற்கோ/முஸ்லிம்களுக்கோ விரோதமாக நடந்தாலும் இவர்களால் தட்டிக்கேட்க முடியவில்லை.

முஸ்லிம்களுக்கு எதிரான எத்தனையோ விசயங்கள் நாட்டில் அரங்கேறியபோது தனது பதவியை ராஜினாமா செய்யாத சகோதரரர் காதர்மொய்தீன்அவர்கள், விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் கருணாநிதி சொன்னவுடன் தனது பதவியைராஜினாமா செய்தார். செய்துதான் ஆகவேண்டும் ஏனெனில், அவர் தி.மு.க.எம்.பி.யாவார்.

இதுமட்டுமன்றி, முஸ்லீம் அமைப்புகள் பிரசமுதாய மக்களிடமும் ஒரு நற்பெயரை பெற வேண்டுமென்ற எண்ணத்தில் இஸ்லாமிய வட்டத்தைதாண்டி செயல்பட்டு சர்ச்சைகளில் சிக்குவதும் உண்டு. காதற்மொய்தீன் அவர்கள் வேலூர் அருகே சாமியாரை சந்தித்ததும், இந்துமுன்னணி நிகழ்ச்சியில் பேசியதையும் குறிப்பிடலாம்.

மேலும், பிற சமுதாய மக்களின் பண்டிகைக்காலங்களில் இவர்கள் வாழ்த்து அறிக்கை வெளியிடுவார்கள். அதில்கூட ஒருதலைவர் வரம்புமீறி, 'கல்வியின் அன்னை சரஸ்வதியை நினைவுகூறும் இந்நாளில்' என்று குறிப்பிட்டிருந்தார்.

பிற சமுதாய மக்களுக்கு வாழ்த்துகூறுவது ஒருபக்கம் இருக்கட்டும்! நமது பெருநாள்களில் வாழ்த்து கூற நபியவர்கள் கட்டளையிடவில்லை. இருப்பினும், நமது சந்தோசத்தை பகிர்ந்து கொள்வதற்காக நாம் ஈத் முபாரக் சொல்லிக்கொள்கிறோம்.

பிற சமுதாய மக்களை கவர வேண்டும் என்ற நிலைப்பாடு நம் சமுதாய தலைவர்களில் ஒருவரை எங்கேபோய் நிறுத்தியிருக்கிறது என்பதை மேலே உள்ள படத்தைப்பாருங்கள். எம்.ஜி.ஆர். சமாதியில் அஞ்சலி செலுத்துகிறார். அகிலத்திற்கோர் அருட்கொடையாக வந்த அண்ணல்நபி[ஸல்] அவர்களுக்கே நினைவஞ்சலி செலுத்துமாறு மார்க்கம் கட்டளையிடாதபோது இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத ஒருவர் சமாதியில் அஞ்சலி செலுத்தவைத்தது எது..? பதவி போதைதானே!

தனக்கென ஒரு அமைப்பு வைத்திருப்பவர்கள் நிலையே இதுவென்றால், பிற அரசியல் கட்சிகளில் அங்கம்வகிப்பவர்களை பற்றி சொல்லவே வேண்டியதில்லை. தனது படத்தின் மூலம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக மக்கள் மனதில்பதியவைத்த விஜய்கான்[?] கட்சியை சேர்ந்த முஸ்லிம்களின் விளம்பரம்;

அகிம்சையை சொன்னார் காந்தி

ஈகையை சொன்னார் நபிகள்

இவை அனைத்தையும் சொன்னார் கேப்டன்.

தனது போலி தலைவரை உய்ர்த்திப்பிடிப்பதற்காக உண்மைத்தலைவர்,உத்தம தலைவர் நபி[ஸல்]அவர்களை பின்னுக்கு தள்ளியதை பார்த்தீர்களா! இந்த கேப்டன்[?] சொல்லாததை,சொல்லமுடியாத அத்துணை போதனைகளையும் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே சொன்னவர்கள் நபிஸல்]அவர்கள்.
எனவே, அரசியலில் அங்கம் வகிக்கும் முஸ்லிம்களே, நீங்கள் பிற சமுதாயமக்களை கவரவேண்டுமேனில், அவர்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை செய்யுங்கள். வரவேற்கிறோம். அதைவிடுத்து மின்மினி பூச்சிகளின் வெளிச்சத்திற்காக சத்தியஒளியை மறந்துவிடாதீர்கள்!
படங்கள்;நன்றி தினத்தந்தி
thanks : http://mugavai-abbas.blogspot.com/2008/12/blog-post_24.html

Wednesday, December 24, 2008

கேள்வியின் நாயகன்-அந்துலே!

சமீபத்தில்அனைத்து ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாக ஆக்கப்பட்டிருக்றிர், திரு. அப்துல் ரகுமான் அந்துலே அவர்கள், மத்திய அரசில் சிறுபாண்மைத் துறை அமைச்சராக உள்ள அந்துலே அவர்கள் மும்பை தாக்குதலின்போது தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுத் தலைவர் ஹேமந்த் கார்கரேவின் மரணம் பற்றி கூறுகையில்,

ஹேமந்த் கார்கரே மலேகான் குண்டு வெடிப்பு சதி வழக்கின் புலனாய்வில் மிக முக்கிய பங்காற்றியதன் பின்னணியில் கொல்லப்பட்டுள்ளார். கொன்றவர்களை விட கொல்ல அனுப்பியவர்கள் யார்என்பதுதான் முக்கியமான கேள்வி என தன் சந்தேகத்தைப் பகிர்ந்துகொண்டார். நாடெங்கும் உள்ள ஜனநாயகவாதிகள் மனதிலும் இந்த கேள்வி இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஊடகங்கள் தொடர்ந்து லஷ்கர் இயக்கம், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ ஆகியவைதான் மும்பை தாக்குதலுக்கு காரணமென்றும், இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் நாட்டின் மீதே இராணுவ தாக்குதலை தொடங்க வேண்டும் எனவும் பிரச்சாரம் செய்து வருகின்றன.
சில அரசியல் பார்வையாளர்கள் அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ-தான் இத்தாக்குதலின் சூத்திரதாரியாக இருக்கக்கூடும் எனவும் கருதுகின்றனர். அப்படியான அனுமானங்களுக்கு அடிப்படை இல்லாமல் இல்லை.

இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொல்லாடலால் தன் ரத்த வெறி கொண்ட முகத்தை அமெரிக்கா திரை போட்டு மறைத்தே வைத்திருக்கிறது. தன் சந்தை நலனுக்காக உலகெங்கும் உள்ள வளரும் நாடுகளை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்து அந்த நாடுகளின் இயற்கை வளங்களை சுரண்டிக் கொழுக்க தன் ஆக்டோபஸ் கரங்களால் அந்நாடுகளின் குரல் வளையை நெறிக்கும் ஏகாதிபத்தியம்தான் அமெரிக்கா.

பெட்ரோலிய வளம் கொண்ட வளைகுடா நாடுகளில், கட்டுமான பணிகளுக்கு செல்கின்ற சாக்கில் ஒட்டு மொத்த வளைகுடா எண்ணெய் வளத்தையே தன் கைக்குள் கொண்டு வந்துள்ளது அமெரிக்கா.
முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்துக் கொண்டே இன்னொரு பக்கம் அரபு நாடுகளை தன் அடிவருடிகளாக வைத்துள்ளது. உலகெங்கும் நடக்கிற மண்ணுக்கான போரினையும், அரசியல் அதிகாரத்திற்காக போராட்டத்தையும், ஆதிக்கத்திற்கு எதிரான, ஆக்கரமிப்புகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்களையும் மதச்சாயம் பூசி, மதவெறிப் போராட்டங்களாக சித்தரித்து, அதன் மூலம் மத அடிப்படைவாதிகளை வளர்த்து விடுகிறது.

மத அடிப்படைவாதிகளுக்கு ராணுவ பயிற்சியும், ஆயுதங்களையும் அளித்து கலகங்களை உருவாக்கிவிட்டு அந்த கலகங்களை அடக்க அந்நாட்டு அரசுகளுக்கும் ஆயுதங்களை விற்கிறது. கலகக்காரர்களும், கலகத்தை அடக்கும் அரசும் தங்களின் ஆயுத தேவைக்கு அமெரிக்காவையே சார்ந்திருக்க வேண்டிய நிலை.

அமெரிக்க ஆதரவாளர் ஈரான் மன்னர் ஷா-வை அதிரடிப் புரட்சியின் மூலம் அகற்றிவிட்டு கொமேனி ஈரான் ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றினார். அமெரிக்காவின் சொத்துகளை முடக்கினார். உடனே ஈரானைத் தாக்க சதாம் உசேனை அமெரிக்கா ஏவிவிட்டது. இரசாயன ஆயுதங்கள் உட்பட ஏராளமான ஆயுதங்களை உலகத்தை பங்கு போடும் போட்டியில்இருந்த ரஷ்யா, அமெரிக்கா ஆகிய இரு ஏகாதிபத்தியர்களில் ஆப்கனிஸ்தானை ஆக்ரமிக்கும் முயற்சியில் ரஷ்யா வென்றது. மத்திய ஆசிய, நாடுகளின் கச்சா எண்ணெய் குழாய்களின் மூலமாக ஆப்கன், பாகிஸ்தான் வழியாக கொண்டு செல்ல ஆப்கானிஸ்தான் மண் தேவைப்பட்டது.
1979ஆம் ஆண்டு ரஷ்யா தன் கைப்பாவை நஜிபுல்லாவின் துணையுடன் ஆப்கனை ஆக்ரமித்தது. நாத்திகவாதிகளான ரஷ்ய கம்யூனிஸ்ட்களை விரட்ட, இஸ்லாமிய மத தீவிரவாதத்தை அமெரிக்கா திட்டமிட்டே வளர்த்தது. ஆப்கனில் முஜாஹிதீன்களும், தாலிபன்களும் அமெரிக்காவால், பாராட்டி சீராட்டி வளர்க்கப்பட்டனர். பல கோடி டாலர் பெருமான ஆயுதங்களை அமெரிக்கா வழங்கியது. இது போதாதென பின்லேடனின் அல்-கொய்தாவும் சவுதி அரேபியாவிலிருந்து ஆப்கனுக்கு வந்து முஜாஹிதீன்களுக்கும், தாலிபான்களுக்கும் பக்கபலமாக நின்றது.

ஆப்கன் மண்ணை ரஷ்ய ஆக்ரமிப்பிலிருந்து காப்பாற்றும் மக்களின் போராட்டம் திசை திருப்பப்பட்டு, மத வெறியூட்டப்பட்ட தாலிபான்களும், முஜாஹிதீன்களும் ரஷ்ய படைகளையும், அதன் பொம்மை அரசான, கைகூலி நஜிபுல்லாவின் படைகளையும் எதிர்த்து வீரப்போர் புரிந்தனர். 1989ல் ரஷ்யாவின் படை புறமுதுகிட்டு ஓடியது. ஆப்கனில் ரஷ்யாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான ஆக்ரமிப்பு யுத்தம்-நஜிபுல்லா அரசுக்கு எதிராக தாலிபான்களும், முஜாஹிதீன்களும் நடத்திய யுத்தமாக-உலகத்தின் பார்வைக்கு காட்டப்பட்டது.

ஆனால், அமெரிக்காவால் உருவாக்கப்பட்டு, ஊட்டி வளர்க்கப்பட்ட தாலிபன்களும், அல்-கொய்தாவும் வளைகுடாப் போரிலே அமெரிக்காவின் நரித்தனத்தை கண்டுகொண்டன. மேலும் தன் சொந்த மண்ணிலேயே அகதிகளாய் வாழும் பாலஸ்தீன மக்களின் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தும் இஸ்ரேல், அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாக இருப்பதும் தாலிபன்களுக்கும், அல்-கொய்தாவுக்கும் ஒப்புடையதாக இல்லை. எனவே, அமெரிக்கா இஸ்லாமிய நாடுகளுக்கு எதிரி என அறிவித்து அவை தாக்குதலில் இறங்கின.
தன்னாலே வளர்க்கப்பட்ட தாலிபன்களும், அல்-கொய்தாவும் தனக்கெதிராகவே திரும்பி இரட்டை கோபுரத்தை தாக்கியதும், தன் நரித்தனங்களையும், ஆயுத விற்பனைகளையும், வளைகுடா நாடுகளிடம் எண்ணெய் வளத்தை கொள்ளையடிப்பதையும் மூடி மறைக்கவும், தன் சந்தை நலனைக் காத்துக்கொள்ளவும் அமெரிக்கா "பயங்கரவாதம் என்ற சொல்லாடலை உருவாக்கி உலவவிட்டது. "பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரிலே ஆப்கனில் தாலிபான்கள் மற்றும் அல்-கொய்தாவையும், இதற்கு உலக நாடுகளின் எதிர்ப்பு கடுமையாக இருக்கவே தனக்கு ஆதரவாக தீவிரவாத தாக்குதல்களுக்கு ஆளாகும் இந்தியா போன்ற நாடுகளை தன் வலைக்குள் இழுக்க முயற்சிக்கிறது. இந்த பின்னனியில்தான் மும்பை தாக்குதலில் அமெரிக்க சி.ஐ.ஏ.வின் சதித்தனம் இருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் அனுமானிக்கின்றனர்.

அமெரிக்காவின் அடிவருடியாக பல பத்தாண்டு காலங்கள் இராணுவ ஆட்சியின் கீழ் இருந்த பாகிஸ்தான் சமீபமாகத்தான் பாராளுமன்ற ஜனநாயகப் பாதைக்கு திரும்பியுள்ளது. இதுவரை பாகிஸ்தானை ஆண்ட இராணுவ தளபதிகள், அமெரிக்காவின் கைக்கூலிகளாக, அடியாட்களாக வலம் வந்தனர்.

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ என்பது பாராளுமன்ற அரசின் கட்டுப்பாடுகளுக்கு உட்படாத அமைப்பு. அமெரிக்க நலன் காக்கும் அரசு தொடர்ந்து இருப்பதை அது உறுதி செய்யும். முஜாஹிதீன்கள், லஷ்கர் போன்ற மத அடிப்படைவாத குழுக்களை உருவாக்கி, பயிற்சி அளித்து, ஆயுதங்களும் வழங்கி தம் அடியாட்களாக வைத்துள்ளது ஐ.எஸ்.ஐ. இதன் செயல்பாடுகளுக்கு மாறான எண்ணம் கொண்ட அரசியல் தலைவர்கள் படுகொலை செய்யப்படுவதும், 'மாண்டு போவதும் பாகிஸ்தானில் சகஜம். சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது "நாங்கள்ஆட்சிக்கு வந்தால் தீவிரவாதிகளை இந்நாட்டிலிருந்தே ஒழித்திடுவோம் என முழக்கமிட்ட பெனாசிர் பூட்டோவும் இவர்கள் கையிலேதான் செத்துப் போனார். பாகிஸ்தான் அதிபரும், பிரதமரும் கூறுவதுபோல பாகிஸ்தான் இன்றளவும் பயங்கரவாதிகளின் களமாகவே உள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் மட்டும் பாகிஸ்தானில் நடந்த நூற்றுக்கும் அதிகமான தற்கொலைப் படை தாக்குதல்களில் சுமார் 1200 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவைவிட அதிகமாக பயங்கரவாத தாக்குதல்களுக்கு உள்ளாகிறது பாகிஸ்தான். பாகிஸ்தான் கலவர பூமியாகவே இருக்கும் வரைதான் அமெரிக்காவின் ஆயுதங்கள் அங்கே விற்பனையாகும். அதற்காகவே, மத அடிப்படைவாத தீவிரவாதிகளை அமெரிக்கா ஆயுதங்களைக் கொடுத்து பாகிஸ்தானில் வளர்த்து வருகிறது.

இன்றைக்கு மும்பை தாக்குதல்களை நடத்தியவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என அனைத்து ஊடகங்களும் பிரச்சாரம் செய்வதும், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா போர் தொடுக்க வேண்டும் என்ற பொதுக் கருத்தை மக்களிடம் உருவாக்க முயல்வதும் இந்தியா, பாகிஸ்தான் இடையே ஒரு பதற்றமான நிலையை தொடர்ந்து இருக்க செய்வதற்கான மிகப்பெரிய சதி வலையின் கண்ணிகளே. இந்த பதற்றமான நிலை தொடர்வது அமெரிக்காவிற்கு பல வகைகளில் சாதகமானதாகும்.

முதலாவதாக "இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொல்லாடலை இந்தியாவில் நிலை நிறுத்தலாம். "பயங்கரவாத எதிர்ப்பு போர் என்ற அமெரிக்காவின் படுபாதகத்திற்கு ஆதரவு அணியிலே உலகின் மிகப்பெரிய, வல்லரசு நாடாக வரக்கூடிய இந்தியாவையும் இணைத்துக் கொள்ளலாம். மேலும் முக்கியமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே போரை மூளவைத்து விட்டால் அமெரிக்காவின் ஆயுத வியாபாரம் இரு நாடுகளுக்கும் கனஜோராக நடக்கும். இத்துணை சாதகங்கள் இருப்பதால்தான் மும்பை தாக்குதல்கள், பாகிஸ்தான் மத அடிப்படைவாத குழுக்கள் மூலம் அமெரிக்க உளவு அமைப்பால் நடைபெற்றிருக்கலாமோ என அரசியல் நோக்கர்கள் சந்தேகிக்கின்றனர்.
இந்தியாவில் இந்துத்துவா அடிப்படைவாதிகள், முஸ்லிம்களை இல்லாதொழித்து, அகண்ட பாரதம், இந்து ராஷ்டிரம் உருவாக்கும் களப்பணியிலே இருப்பவர்கள். பல கொலைக்களங்களை கண்டவர்கள். குஜராத் கல வரத்தில் 2500க்கும் அதிகமான முஸ்லிம்களை படுகொலை செய்ய ஏதுவாக கோத்ராவில் தாங்களே ரயிலை எரித்து 60பேரை களப்பலி தந்தவர்கள். இவர்களின் அமைப்பு அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகளில் இருந்து நிதி வசூலித்து அனுப்பி இந்திய திரு நாட்டை ரத்த பூமியாக்குவதை பல்வேறு ஊடகங்கள் வெளிப்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன.

இஸ்ரேலின் இனவெறி 'மொசாத படையுடன் நெருக்கமான இந்த இந்துத்துவா அமைப்புகள், மொசாத்தின் அரசியல் குரு சி.ஐ.ஏவுடன், நெருக்கமாகவே உள்ளன. இந்தியாவில் "இஸ்லாமிய பயங்கரவாதம் எனும் கடைச்சரக்கை விற்க இந்த "சாவு வியாபாரிகள் ஒப்பந்தம் போட்டிருக்கலாம் என்றும் சில அரசியல் நோக்கர்கள் அச்சமடைந்துள்ளனர்.

"ஹேமந்த கார்கரேவை கொன்றது பாகிஸ்தானிலிருந்து வந்த பயங்கரவாதிகளாகவே இருக்கலாம் ஆனால் கொல்ல அனுப்பியது யார்?-என்ற அந்துலேவின் கேள்வி, இந்த நாட்டின் மீது பற்றுகொண்ட ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு தேசபக்தனும், கேட்கின்ற கேள்வி.

-வழக்கறிஞர் வெ.ஜீவகிரிதரன்

Saturday, December 20, 2008

கர்கரே இல்லாத மாலேகான் வழக்கு-விசாரணை தேங்கும் அச்சம்



மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்டு விட்டதால், மாலேகான் வழக்கு விசாரணை முன்பு போல துடிப்புடன் இருக்குமா என்று, அந்த வழக்கை விசாரித்து வரும் தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் அஞ்சுகின்றனர்.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் கர்கரே. மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தலைவராகப் பொறுப்பேற்றவுடன் மாலேகான் வழக்கை துப்பு துலக்குவதில் தீவிரம் காட்டினார்.

அவரது தீவிரமான, ஆழமான விசாரணையில், பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. பெண் தீவிரவாதி(துறவி) பிரக்யா சிங் தாக்கூர், தீவிரவாதி (சாமியார்) பான்டே உள்ளிட்ட பல இந்து தீவிரவாதிகள்தான் இதில் கைதாகினர்.
இந்து தீவிரவாதிகள்தான் இந்த செயலுக்குக் காரணம் என்பதையும் வெட்ட வெளிச்சமாக்கினார் கர்கரே.
வழக்கு துரித கதியில் போய்க்கொண்டிருந்த நிலையில்தான் துரதிர்ஷ்டவசமாக மும்பை தீவிரவாதத் தாக்குதலில் பலியானார் கர்கரே.

இதனால் மாலேகான் வழக்கை விசாரித்து வரும் தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் பெரும் சோகத்தில் உள்ளனர். வழக்கு இனி எப்படிப் போகும், முன்பு போல தீவிரம் இருக்குமா, அரசிடமிருந்து போதிய ஆதரவு கிடைக்குமா என்ற சந்தேகம் மற்றும் அச்சத்தில் அவர்கள் உள்ளனர்.

கர்கரேவும் இல்லை, கர்கரே கேட்ட உதவிகளையெல்லாம் செய்து கொடுத்த உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் இல்லை. இந்த நிலையில் இந்த வழக்கின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

முன்பு போல தங்களுக்கு ஆதரவு கிடைக்காது என்ற அச்சமும் அவர்களிடம் உள்ளது. இதுகுறித்து அவர்கள் பகிரங்கமாக பேசாவிட்டாலும் கூட, போலீஸ் வட்டாரத்தில் இந்த வழக்கு குறித்த கவலைகள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றனவாம்.

இருப்பினும், கர்கரே கடுமையாக பாடுபட்டதற்கு உரிய பலனை அடையாமல் விடக் கூடாது என்ற உறுதியில் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் உள்ளனராம்.
தீவிரவாத தடுப்புப் பிரிவு கூடுதல் ஆணையர் சுக்வீந்தர் சிங் கூறுகையில், விசாரணையின் இறுதி கட்டத்தில் நாங்கள் உள்ளோம் என்றார்.
மும்பை தீவிரவாதத் தாக்குதல் வழக்கை தற்போது குற்றப் பிரிவு விசாரித்து வருகிறது. மாலேகான் வழக்கை தீவிரவாதத் தடுப்புப் பிரிவு விசாரித்து வருகிறது. மும்பைத் தாக்குதல் வழக்கை தீவிரவாதத் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைத்தால் மாலேகான் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என்பதால் இப்போதைக்கு அது ஒப்படைக்கப்படவில்லையாம்.

குண்டுவைக்க ரூ. 10 லட்சம் நிதி:

இதற்கிடையே, தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம், மாலேகான் குண்டுவெடிப்புக்குக் காரணமான இந்து தீவிரவாத அமைப்பான அபினவ் பாரத் பொருளாளர் அஜய் ரஹிர்கர் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், குண்டுவெடிப்பை நிகழ்த்துவதற்காக பாரத் அமைப்பிலிருந்து ரூ. 10 லட்சம் வழங்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை இந்தூரில் உள்ள ஒரு ஹோட்டலில் ரஹிர்கர், 2 அறைகளை புக் செய்துள்ளார். இந்த அறைகள் ரஹிர்கர், எச்.வி. ஆப்தே, கர்னல் பி.எஸ். ராவ் பல்வந்த் ஆகியோரது பெயர்களில் புக் ஆகியுள்ளது. இதை ஹோட்டல் ஊழியரான கெளரவ் சர்மா உறுதிப்படுத்தியுள்ளார்.

சிங்காகாட்டில் ஆயுதப் பயிற்சி:

மேலும், இந்த செயலில் ஈடுபட்டவர்களுக்கு சிங்காகாட் என்ற இடத்தில் வெடிகுண்டுகளைப் பயன்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டதாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான ராகேஷ் தாவ்டே கூறியுள்ளார்.

இவருக்கும், நான்டெட் குண்டுவெடிப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதால், சிபிஐ தனியாக விசாரணை நடத்தி வருகிறது.

மாலேகான் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை, ராம்ஜி கலஸ்கரே என்பவர்தான் தனது மெக்கானிக் ஷாப்புக்கு கொண்டு வந்ததாக, இந்தூரைச் சேர்ந்த மெக்கானிக் கடை உரிமையாளரான ஜிதேந்திரா சர்மா வாக்குமூலம் அளித்துள்ளார்.

கலஸ்கரே-டேங்களேவுக்கு வலைவீச்சு:

இந்த கலஸ்கரே தற்போது தலைமறைவாக உள்ளார். மேலும் குண்டுகளை வைத்ததாக கருதப்படும் சந்தீப் டேங்களே என்பவரும் தலைமறைவாக உள்ளார். இவர்கள் இருவரும் இந்த வழக்கில் அதி முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்பதால் இவர்களைப் பிடிக்க தற்போது தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

கர்கரே இல்லாவிட்டாலும் கூட அவர் ஏற்படுத்தி வைத்து விட்டுப் போயுள்ள வேகத்தைப் பிடித்துக் கொண்டு தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் மாலேகான் வழக்கில் மீண்டும் மும்முரமாகியுள்ளனர்.

பயங்கரவாத தடுப்பு சட்ட வரைவுகள் மக்களவையில் நிறைவேறியது

மிகப் பெரிய திட்டமிடலுடன் அரங்கேறிய பம்பாய் கலவரத்திற்கு மூல காரணகர்த்தா இந்திய பயங்கரவாதி மோடி தான் என்பது பலவகையிலும் நிரூபணமாகி வருகிறது. பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட பயங்கரவாத தடுப்பு சட்ட வரைவுகள் பயங்கரவாதி மோடி மீதுப் பாயுமா ?
அத்வானிப் போன்ற பயங்கரவாதிகள் அதை ஆதரித்திருப்பதால் சிறுபான்மை மக்கைளயே மேற்கானும் பயங்கரவாத தடுப்பு சட்டம் பாய்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.







மும்பை கலவரத்தில் மோடியின் பங்கு

எப்படியாவது போலி சாமியாரினி பிரக்யா சிங்கை காப்பாற்றியாக வேண்டும், தரகர்கள் மூலம் பெட்டி பெட்டியாக கோடிகளை வைத்துப் பேரம் பேசியும் படியாத ஹேமந்த் கர்கரேவை தீர்த்துக்கட்டி விட்டால் மட்டுமே ப்ரக்யா சிங்கை காப்பாற்ற முடியும் அதன் மூலமாக முக்கிய தடயங்கள் அழிக்கப்பட்டு பிரக்யா சிங் நிரபராதி என்று நிரூபிக்கச்செய்து சங்பரிவாரங்கள் தீவிரவாதிகள் அல்ல என்று மக்களை நம்ப வைக்க முடியும் என்ற முடிவுக்கு வந்த மோடி இந்தியாவில் நிலை கொண்டுள்ள உலக பயங்கரவாத அமைப்பாகிய மொஸாதுடன் கைகோரத்தார்.


மொஸாதுக்கு உலகம் முழுவதும் கிளைகள் இருக்கின்றன வல்லரசு நாடுகளின் தலைமைப் பொறுப்புக்கு வருகின்றவர்களை முடிவு செய்யும் அளவுக்கு தீய சக்தி வாய்ந்தவையே மொஸாத்.


உலகில் பல நாடுகளில் அரசுக்கு தெரியாமல் பல தீவிரவாத அமைப்புகள் செயல்படுகின்றன ஆனால் மொஸாது தான் அரசு,

அரசு தான் மொஸாது

என்று சொல்லும் அளவுக்கு இஸ்ரேலில் செயல்படுகிறது பயங்கரவாத மொஸாத் அமைப்பு. அதனால் தான் இந்தியாவின் பழுத்த அரசியல் அனுபவம் வாய்ந்த இந்திரா காந்தி அம்மையாருடைய இறுதி மூச்சுவரை பயங்கரவாத இஸ்ரேலுடனான எந்த உறவையும் இந்தியாவுடன் வைத்துக்கொள்ளவில்லை.

அதற்குப் பின் பாபர் மஸ்ஜிதை இடிப்பதற்கு மறைமுக ஆதரவு வழங்கிய பாஷிச சிந்தனை கொண்ட நரசிம்மராவ் முதன் முறையாக இஸ்ரேலை நோக்கி வெள்ளைப் புறாவை பறக்க விட்டார் அதற்கடுத்து ஆட்சிக்கு வந்த பிஜேபி இந்தியாவிற்குள் மொஸாது என்ற விஷப் பாம்புக்கு சிவப்புக்கம்பள வரவேற்பளித்து இந்தியாவின் இதயமாகிய பம்பாயில், பம்பாயின் இதயமாகிய நரிமன் ஹவுஸில் குடியமர்த்தி பால் வார்த்தார்கள்.


மொஸாதுடைய நீண்ட நாள் திட்டம்

பாகிஸ்தானுடைய ராணுவ பலத்தை சீர்குலைக்க வேண்டும் என்பது மொஸாதுடைய நீண்ட காலத்திட்டம் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த மொஸாதுக்கு மோடியின் ஹேமந்த் கர்கரே கொலை திட்டம் நல்ல ஒரு வாய்ப்பாக அமைந்தது.


மோடியுடைய ஆவலை பூர்த்தி செய்து கொடுப்பதுடன் பாகிஸ்தானுடைய ராணுவ பலத்தை சீர்குலைக்க வேண்டும் என்கின்ற கணவை நிறைவேற்றிக் கொள்வதற்கு மோடியுடைய கொலைவெறி திட்டத்தை மொஸாத் நல்ல தருனமாக பயன்படுத்திக் கொண்டது.


இந்தியாவின் பொருளாதார, மற்றும் ராணுவ முன்னேற்றத்தைக் கண்டு சகிக்க முடியாத மொஸாதுடன் நெருங்கிய தொடர்புடைய வல்லரசுகள் மொஸாதை இன்னும் சூடேற்றி விடவே மொஸாது இந்தியாவின் சங்பரிவார தலைமையையும் அதன் கீழ் இயங்கும் ஊடகங்களையும் இது பாகிஸ்தானின் பயங்கரவாதம் என்று சூடேற்றி விட்டது மதவெறி (நடுநிலை ஊடகங்களைத தவிற) ஊடகங்களுக்கு பெரிய தீனியாகிப் போனது மும்பை கலவரம்.



ஹேமந்த் கர்கரே அவர்களை கொலைசெய்து கொலைப் பழியை பாகிஸ்தான் பயங்கரவாதம் என்று உலக ஊடகங்களை ஒருமித்தக் குரலில் ஊளையிடச் செய்வதற்காக தேர்வு செய்யப்பட்ட இடம் மோடிக்கு மிகவும் நெருக்கமான தாஜ் மஹால், ஓபராய் ஹோட்டல்கள்.


மேற்கானும் திட்டம் வெற்றி பெற வேண்டுமெனில் அதற்கு பாகிஸ்தானிகளை தேர்வுசெய்வது புத்திசாலித்தனமல்ல காரணம் முஸ்லிம்களுடைய குணாதிசயங்களை நன்கு அறிந்து வைத்திருப்பவர்கள் முஸ்லீம்களை விட சங்பரிவாரத்தினரே, முஸ்லிம்கள் இரண்டு விஷயத்தில் மிக உறுதியானவர்கள என்பது அவர்ளுக்கு நன்றாகத் தெரியும்


1. ஒன்று தனது மார்க்கம்.

2. அடுத்தது தேசப்பற்று.


இந்த இரண்டு விஷயத்திலும் துரோகம் இழைக்கவே மாட்டார்கள் அதனால் மகுடியின் முன் அடங்கும் பாம்பைப் போன்று மோடியின் முன் அடங்கும் மூலை சளவை செய்யப்பட்ட சங்பரிவார்களே இதற்கு தகுதியானவர்களும், நம்பிக்கையானவர்களும் என்பதால் அவர்களையே கொம்பு சீவி கொலை களத்தில் இறக்கி விடப்பட்டு அவர்களிலும் பலரை கொன்று விட்டு நாலு வார்த்தை உருது பேசத் தெரிந்தவனை மட்டும் சாட்சியாக விட்டு விடுவது என்ற சதி திட்டத்தில் எஞ்சியவனே அஜ்மல் அமீர் என்ற முஸ்லிம் பெயர் சூட்டப்பட்டவன். ஆனாலும் அல்லாஹ் அவர்களுடைய திட்டத்தை அம்பலப் படுத்தினான்.


அஜ்மீர் அமீர் என்று பெயர் சூட்டப்பட்டவனுடைய கையில் கட்டப்பட்ட யூனிஃபாம் காவி கலர் காப்பு களட்டப்படாமல் கொலை களத்தில் இறக்கி விடப்பட்டதால் மாட்டிக் கொண்டான்.


குஜராத் கலவரத்தில் ஈடுபட்ட மதவெறியர்களுடைய கைகளிலும் அதே யூனிஃபாம் காவி கலர் காப்பு அணியப்பட்டிருப்பதையும் காணலாம்.


வீணை பிடிக்க வேண்டிய கைகளில் துப்பாக்கி ஏந்திப் பயிற்சி பெறும் பெண்களின் கைகளிலும் அதே யூனிஃபாம் காவி கலர் காப்பு அணியப்பட்டிருப்பதை கவனிக்கலாம்.





முஸ்லிம்கள் உயிரேப் போனாலும் காப்பு அணிய மாட்டார்கள்.

அதேப்போன்று வடஇந்திய சங்பரிவாரங்கள் உயிரேப் போனாலும் யூனிஃபாம் காவி கலர் காப்பைக் கழட்ட மாட்டார்கள்.


ஏற்கனவே காந்தியை சுட்டுக் கொல்வதற்கு இவ்வாறே திட்டம் தீட்டி சிபிஐ வசம் வசமாக மாட்டிக் கொண்டவர்களுடைய வாரிசுகள் தான் இவர்கள்.


அடுத்த ஆதாரம்:

அவன் கொடுத்த பாகிஸ்தான் விலாசத்தில் ஏற்கனவே ஆள் இருப்பதாகவும் இந்தியாவில் பிடிபட்டவன் பாகிஸ்தானைச் சேர்நதவன் அல்ல என்று பாகிஸ்தான் திட்டவட்டமாக அறிவித்து விட்டது.


ஆதாரத்தை கொடுங்கள் நடவடிக்கை எடுபக்கின்றோம் என்று பாகிஸ்தான் பலமுறை கூறிய பின்னரும் இதுவரை தகுந்த ஆதாரத்தை இந்தியா சமர்ப்பிக்காமல் இருந்து வருகிறது.


மும்பை கலவரம் அந்திய பங்கரவாதி மோடியும், இஸ்ரேலிய பயங்கரவாத மொஸாதுடைய செட்டப் தான் என்பதை நன்றாக அறிந்திருந்தும் இந்திய சங்பரிவார ஊடங்கங்களும் உலக யூத, சியோனிஸ ஊடகங்களும் பாகிஸ்தானில் தீவிரவாதம் என்று ஒப்பாரி இடுகின்றன போதாக்குறைக்கு ஐநா பொதுச் செயலர் காண்டலிஸா ரைஸை இந்தியா – பாகிஸ்தானுக்கு அனுப்பி தீவிரவாத பல்லவியை பாட விட்டிருக்கின்றனர்.


வளரும் மேற்கத்திய நாடுகளின்

மொஸாதுக்கு பாகிஸ்தான் மீது ஒரு கண் என்றால் பொருளாதாரத்திலும் ரானுவத்திலும் முன்னேறிக் கொண்டிருக்கும் இந்தியாவின் மீது மேற்கத்திய வல்லரசு நாடுகளுக்கு ஒரு கண் இருந்து கொண்டே இருந்தது.

அதனால் தான் அமெரிக்கா, பிரிட்டன், ரஸ்யா போன்ற நாடுகள் பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் முகாம்கள் அதிகரித்து விட்டது ஒடுக்குங்கள் என்று ஓலமிடுகிறது.


நாம் கேட்கிறோம் ?

ஈராக்கை சல்லடையாக்கியப் பின் உளவு துறை கொடுத்த தவறான தகவல்களின் அடிப்படையில் போர் நடத்தப்பட்டது என்றுக்கூறி வருத்தம் தெரிவித்தது போல், பாகிஸ்தானில் தீவிரவாதிகள் செயலபடுவதாக உளவுத் துறை கொடுத்த தவறான அடிப்படையில் இந்தியாவை பாகிஸ்தான் மீது போர் தொடுக்கப்பட்டது என்ற சால்சாப்பைக் கூறுவார்கள் எவருடைய கண்கெட்டப்பின்னே சூரிய உதயம் எந்தப்பக்கம் போனால் அவர்களுக்கென்ன ? அவர்களுடைய பார்வை மங்கா ஒளியாக இருக்க வேண்டும் நேட்டோ'' பவருடன் வாழவேண்டும் அதற்காக உலகில் எந்த கொடூரத்தையும் அரங்கேற்றத் தவற மாட்டார்கள்.




இந்திய மற்றும் உலக ஊடகங்களே!

வரலாற்று திரிபுகள் செய்து அத்வானி, உமாபாரதி தலைமையில் இந்திய வரலாற்று சிறப்பு மிக்க தொன்மை வாய்ந்த பாபர் பள்ளிவாசலை இடித்த தீவிரவாத கும்பலை கண்டித்து எத்தனை முறை உங்கள் ஊடகங்களில் ஒப்பாரி வைத்தீர்கள் ??? அதற்காக எத்தனை முறை ஐநா பொதுச்செயலரை அனுப்பி நடிவடிக்கை எடுக்கச் சொன்னீர்கள் ?


சபர்மதி எக்ஸ்ப்ரஸ் ரயில் பெட்டிக்கு வெளியிலிருந்து யாரும் பெட்ரோலை ஊற்றி கொளுத்த வில்லை மோடியுடைய சங்பாரிவாரர்கள் உள்ளுக்குள் தீவைத்துக் கொண்டார்கள் என்பதை அப்பொழுதே தடயவியல் நிபுனர்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்கள்,


முதல்வர் பதவி என்னை தடுக்கவில்லை என்றால் முஸ்லீம்கள் மீது நானே சென்று குண்டு வீசுவேன் என்று கூறிய மோடியுடைய தீவிரவாதத்தை தெஹல்கா இணையதளம் தோலுரித்துக் காட்டியது அவர்களுடைய சதி திட்டத்தால் மூவாயிரம் முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டு பலகோடி ரூபாய் சொத்துக்க்ள சூறையாட்ப்பட்டன ஆதாரங்கள் கிடைத்தப் பின்னராவது அதைக் கண்டித்து எத்தனை முறை உங்கள் ஊடகங்களில் ஒப்பாரி வைத்தீர்கள் ??? அதற்காக எத்தனை முறை ஐநா பொதுச்செயலரை அனுப்பி வைத்து நடிவடிக்கை எடுக்கச் சொன்னீர்கள் ?


சூலாயுதங்களுடன் இந்தியாவின் பொது மேடைகளில் தோன்றி சங்பரிவாரர்களிடத்தில் மதவெறியைத் தூண்டிப்பேசிய ப்ரவீன் தொகாடியாவின் தீவிரவாதத்தை ஒடுக்கச் சொல்லி எத்தனை முறை உங்கள் ஊடகங்களில் ஒப்பாரி வைத்தீர்கள் ??? அதற்காக எத்தனை முறை ஐநா பொதுச்செயலரை அனுப்பி வைத்து நடிவடிக்கை எடுக்கச் சொன்னீர்கள் ?


இனவெறியையும், மொழி வெறியையும் தூண்டி விட்டு பன்னெடுங்காலமாக மும்பையில் ரெத்த ஆறை ஓட்டச்செய்யும் பால் தாக்கரே, ராஜ் தாக்கரேயை கண்டித்து எத்தனை முறை உங்கள் ஊடகங்களில் ஒப்பாரி வைத்தீர்கள் ??? அதற்காக எத்தனை முறை ஐநா பொதுச்செயலரை அனுப்பி வைத்து நடிவடிக்கை எடுக்கச் சொன்னீர்கள் ?


சகோதரர்களே!

வல்ல அல்லாஹ் அவர்களுடைய சதி திட்டத்தில் மண்ணை அள்ளிக் கொட்டி உலகுக்கு இவர்கள் யார் ? இவர்களுடைய சதிதிட்டம் எவ்வாறு இருந்தது என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து விடுவான்.


நெஞ்சுரம் கொண்ட ஹேமந்த் கர்கரே அவர்களைப்போல் மும்பை கலவர சம்பவத்தையும் வெளிச்சத்திற்கு கொண்டு வரக்கூடிய நெஞ்சுரங் கொண்டவர்களை அல்லாஹ் உருவாக்குவான்.


சதிகாரர்களுடைய சதி திட்டத்தின் அடிப்படையில் போர் மூளுமேயானால் ஏற்கனவே இந்திய ராணுவத்தினரால் காஷ்மீர் முஸ்லீம்கள் நிலை குலைந்துப் போயிருப்பதால் அந்த மக்களுடைய நிலமை இன்னும் மோசமாகக் கூடிய நிலை ஏற்படலாம்.








மும்பையில் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்திய சதிகாரர்களின் சதி திட்டத்தையும்,
அதனுடைய பிண்ணனியையும் வெளிச்சதிற்கு கொண்டு வரவும்,


இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் போர் மூளாமல் இருக்கவும்


வல்ல இறைவனிடத்தில் பிரார்த்திப்பதிலிருந்து யாரும் பின் வாங்கி விடாதீர்கள்.
உள்ளம் உருகி இறைவனிடத்தில் பிரார்த்தியுங்கள்,
யாருடைய பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக் கொள்வான் என்று நமக்கு தெரியாது.


இன்று ஒற்றுமையிலும், பொருளாதாரத்திலும், வழிகாட்டுதலிலும் மிகவும் பின்தங்கி இருக்கின்ற நாம் சர்வ வல்லமை பொருந்திய இறைவனுடைய உதவியை கோருவதில் சோர்வடைந்து விடாதீர்கள்.



''எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ, தவறு செய்து விட்டாலோ, எங்களைத் தண்டித்து விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சிரமத்தை சுமத்தியது போல் எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு வலிமையில்லாததை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! அருள் புரிவாயாக! நீயே எங்கள் அதிபதி, (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக ! திருக்குர்ஆன் 2:296.



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ


நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104


thanks to : Emil Friend

Monday, December 15, 2008

அமெரிக்க அதிபர் புஷ் க்கு செருப்பு அடி படம்

அமெரிக்க அதிபர் புஷ் க்கு செருப்பு அடி. படம். பாக்தாத்தில் அவமானம் - புஷ் மீது ஷூ வீச்சு

இந்த சம்பவத்தால் புஷ் அதிர்ச்சி அடைந்தார். அவரது முகம் பேயறைந்தது போல மாறியிருந்ததைக் காண முடிந்தது. பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத் வந்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது எகிப்தைச் சேர்ந்த டிவி நிருபர் ஒருவர் தனது இரு ஷூக்களையும் சரமாரியாக வீசி எறிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் ஜார்ஜ் புஷ் கடைசி முறையாக ஈராக்குக்கு விஜயம் செய்தார். தலைநகர் பாக்தாத் வந்த அவர் பிரதமர் நூரி அல் மாலிக்கை சந்தித்துப் பேசினார். பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு கடைசி முறையாக ஈராக் வர வாய்ப்பு கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைவதாக அவர் மாலிக்கியிடம் தெரிவித்தார்.பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். முதலில் மாலிக்கி பேசினார். பின்னர் புஷ் பேசத் தொடங்கினார். அப்போது திடீரென அரபி மொழியில் சத்தமாக கத்தியபடி ஒரு நிருபர் எழுந்தார்.ஈராக் மக்கள் உனக்கு அளிக்கும் கடைசி குட்பை முத்தம் இதுதான், நாயே என்று கோபமாக கூறியபடி தனது ஷூக்களை அடுத்தடுத்து புஷ்ஷை நோக்கி ராக்கெட் போல வீசினார். முதல் ஷூ பாய்ந்து வந்தபோது புஷ் தலையைக் குணிந்து தப்பினார். அந்த ஷூ பின்னால் உள்ள சுவரின் மீது பட்டு விழுந்தது.2வது ஷூ வீசப்பட்டபோது அதைப் பிடிக்க ஈராக் பிரதமர் மாலிக்கி முயன்றார். ஆனால் முடியவில்லை. இருப்பினும் அந்த ஷூவும் புஷ்ஷை உரசியபடி சென்று விழுந்தது.இந்த சம்பவத்தால் புஷ் அதிர்ச்சி அடைந்தார்.அவரது முகம் பேயறைந்தது போல மாறியிருந்ததைக் காண முடிந்தது. இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புப் படையினர் சுதாரித்துக் கொண்டு அந்த நிருபரை மடக்கிக் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.அவர் எகிப்து நாட்டைச் சேர்ந்த டிவி நிறுவன செய்தியாளர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. மத்திய கிழக்கு நாடுகளில் ஒருவர் மீது செருப்பு அல்லது ஷூவை தூக்கி வீசினால் அது மிகப் பெரிய அவமானமாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பி்ன்னர் நிலைமை சகஜமானது. அதன் பிறகு புஷ் பேசுகையில், அரசியல் கூட்டத்தின்போது நடப்பதைப் போல இப்போது நடந்து விட்டது. மக்களின் கவனத்தைக் கவர செய்யப்படும் செயல் இது. அந்த நபரின் (செய்தியாளர்) கவலை என்ன என்று எனக்குத் தெரியவில்லை. ஏன் இப்படி நடந்து கொண்டார் என்பதும் எனக்குப் புரியவில்லை என்றார் புஷ். பதவி விலகிச் செல்லும்போது பாக்தாத்தில் புஷ்ஷுக்குக் கிடைத்த இந்த வரவேற்பு அமெரிக்காவிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Saturday, December 6, 2008

பாபர் மஸ்ஜித் ஓர் வரலாற்றுப் பார்வை

பாபர் மஸ்ஜித் ஓர் வரலாற்றுப் பார்வை
பிரச்சினை உருவான விதம்




1949ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று முஸலிம்கள் பாபர் மசூதியில் இரவுத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடுகளுக்குச் சென்றனர். மீண்டும் வைகறைத் தொழுகைக் காக பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளிவாசலுக்குள் ராமர்,சீதை,இலட்சுமனர் ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. ராமர் தனது ஜென்மஸ்தானத்தில் அவதரித்து விட்டார் என்று ஒரு கும்பல் கலாட்டாவில் இறங்கியது.
வன்முறைக் கும்பல் பள்ளிவாசலுக்குள் நுழைந்து சிலை களை வைத்ததாக பைஸாபாத் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதன் பின்னர் மத்தியிலும்,மாநிலத்திலும் ஆட்சி புரிந்த காங்கிரஸ் அரசுகள் தொழுகைக்குத் தடை விதித்ததிலிருந்து பாபர் மசூதி பிரச்சினை நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக நீடித்து வருகிறது.
இராமர் கோயிலை இடித்துக் கட்டப்பட்டதே பாபர் மஸ்ஜித் என்ற புளுகு மூட்டையை சூதுவாது அறியாத இந்துக்கள் மனதில் அவிழ்த்துவிட்டு அவர்களில் பலர் அந்தப் பொய்யை நம்புகின்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.




இராமருக்காகக் கட்டப்பட்ட கோவில் ஒன்று அயோத்தியில் இருந்து அதை இடித்து விட்டு அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டதுங என்ற சங்பரிவாரத்தின் வாதம் உண்மையாக இருந்தால் பாபர் மசூதிக்காக எந்த முஸ்லிமும் போராடமாட்டார். பிறருக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிர மிப்புச் செய்து அதில் பள்ளிவாசல் கட்டுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.


பாபர் மசூதி பற்றி சங்பரிவாரத்தினரின் வாதங்கள் முற்றிலும் பொய்யாக இருப்பதால் தான் பாபர் மசூதிக்காக முஸலிம்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இராமருக்காகக் கட்டப்பட்ட கோவில் ஒன்று அயோத்தியில் இருந்து அதை இடித்து விட்டு அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது . என்ற சங்பரிவாரத்தின் வாதம் உண்மையாக இருந்தால் பாபர் மசூதிக்காக எந்த முஸ்லிமும் போராடமாட்டார். பிறருக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிர மிப்புச் செய்து அதில் பள்ளிவாசல் கட்டுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
பாபர் மசூதி பற்றி சங்பரிவாரத்தினரின் வாதங்கள் முற்றிலும் பொய்யாக இருப்பதால் தான் பாபர் மசூதிக்காக முஸலிம்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இராமர் என்று ஒருவர் வாழ்ந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சட்டர்ஜி, ஏ.கே. மஜும்தார், நேரு உள்ளிட்ட பல தலைவர்கள் கூறியுள்ளதன் அடிப்படையில் இராமர் கற்பனைப் பாத்திரம் என்று கூறி பிரச்சினையை நாம் திசை திருப்ப மாட்டோம்.
ஏனெனில் அந்த இடத்தில் இராமர் கோவில் irunthathaatuu அது பாபரால் இடிக் கப்பட்டதாடூ அந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டப்பட்டதா என்பதுதான் பிரச்சினையே தவிர இராமர் கற்பனைப் பாத்திரமா வரலாற்றுப் பாத்திரமா என்பது அல்ல.
இராமர் கற்பனைப் பாத்திரமாகவே இருந்தாலும் அவருக்காகக் கட்டப்பட்ட கோவிலை பாபர் இடித்திருந்தால் அது தவறு என்பதை எந்த முஸலிமும் மறுக்க மாட்டார்.
அயோத்தியில் ராமர் பிறந்தாராடூ
அயோத்தியில்இ அதுவும் பாபர் மசூதி கட்டப்பட்டிருந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்ற வாதம் எந்த அளவுக்குச் சரியானது என்பதைக் காண்போம்.
இராமரைப் பற்றி இந்துக்கள் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் சங்பரிவா ரத்தினரின் கூற்றுக்களின் அடிப்படையில் எடுக்கக் கூடாது. இந்து மதப் புராணங்களை மேற்கோள் காட்டியே முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் மனம் போக்கில் யாரேனும் இராமரைப் பற்றி முடிவு செய்தால் அது அவரது முடிவாகத்தான் இருக்குமே தவிர இந்து மதத்தின் முடிவாக இருக்க முடியாது.
இராமரைப் பற்றி முதன் முதலில் வால்மீகி என்பவர் சமஸ்கிருத மொழியில் இராமாயணத்தை எழுதினார். இராமரைப் பற்றி அதில் கூறப்பட்ட விஷயங்கள் தான் இராமரைப் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடியாகும்.வால்மீகி இராமாயணத்தில் இராமர் பிறந்ததைப் பற்றிக் கூறும்போதுஇ ஙஅவர் திரேதா யுகத்தில் பிறந்தார் என்று கூறப் பட்டுள்ளது.
இந்துக்களின் கால அளவை முறையில் யுகம் என்பது காலத்தை அளக்கும் பெரிய அலகுகளில் ஒன்று. யுகங்கள் நான்கு. அவை:
கிருத யுகம் 17,28,000 (பதினேழு இலட் சத்து இருபத்து எட்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது.
திரேதா யுகம் 12,96,000 (பன்னிரெண்டு இலட்சத்து தொண்ணூற்று ஆறாயிரம்) ஆண்டுகள் கொண்டது.
துவாபர யுகம் 8,64,000 (எட்டு இலட்சத்து அறுபத்து நான்காயிரம்) ஆண் டுகள் கொண்டது.
கலியுகம் 4,32,000 (நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது) என்பனவாகும்.
அதாவது கிருத யுகத்தில் பாதி அளவு கொண்டது திரேதா யுகம். திரேதா யுகத்தில் பாதி அளவு கொண்டது துவாபர யுகம். துவாபர யுகத்தில் பாதி அளவு கொண்டது கலியுகம்.
இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் கலியுகம். கலியுகம் கிறிஸ்து பிறப்பதற்கு 3102 வருடங்களுக்கு முன் துவங்குகிறது. இயேசுவுக்குப் பின் 2008 ஆண்டுகள் ஆகின்றன. இதன்படி கலியுகம் துவங்கி 5110 ஆண்டுகள் நடக்கிறது. இந்த யுகத்தில் இராமர் பிறக்கவில்லை.
கலியுகத்துக்கு முந்திய யுகம் தூவாபர யுகம். இந்த யுகத்திலும் இராமர் பிறக்க வில்லை.
இந்த யுகத்துக்கும் முந்திய யுகம்தான் திரேதா யுகம். இந்த யுகத்தின் கடைசி வருடத்தில் இராமர் பிறந்திருந்தார் என்று வைத்துக் கொண்டால் கூட 8,64,000 ரூ 5,110, 8,69,110 எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் இராமர் பிறந்தார் என்பது வால்மீகி இராமாயணத்தின் தீர்ப்பு.
இராமர் பிறந்த காலம் பற்றி வால்மீகி இராமாயணம் கூறுவது போலவே அவர் பிறந்த ஊர் பற்றி கூறும்போது, 'இராமர் அயோத்தி என்னும் பட்டணத்தில் பிறந்தார் எனக் கூறுகிறது.
அப்படியானால் எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அயோத்திப் பட்டணம் இருந்திருக்க வேண்டும்.
ஆனால் உ.பி.யில் உள்ள அயோத்தி எப்போது தோன்றியது என்று பல விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில் மத்திய அரசாங்கத்தின் தொல் பொருள்துறை சார்பில் அயோத்தியை ஆய்வு செய்து 1976, 77ல் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையின் 52, 53 ஆகிய பக்கங்களில் 'அயோத்தி என்ற ஊர் உண்டானதும், அதில் மக்கள் வசிக்கத் தொடங்கியதும் கி.மு. 700ல்தான் இருக்க முடியும் எனக் குறிப்பிடுகின்றார்.
அதாவது 2708 ஆண்டுகளுக்கு முன்னர் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்திருக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று அவர்களின் அறிக்கை கூறுகிறது.
இதன் பின்னர், சி.பி.லால், கே.என். தீட்சித் ஆகிய வரலாற்று வல்லுனர்கள் 1979, 80ல் இதை மறு ஆய்வு செய்தனர். தொல்பொருள் துறையினரின் மேற்கொண்ட முடிவு சரியானதே என்று அவர்கள் கண்டுபிடித்தனர்.அயோத்தியில் எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் இராமர் பிறந்தார் என்று வால்மீகி கூறுகிறார். ஆனால் ராமர் பிறந்ததாகச் சொல்லப்படும் அந்தக் காலத்தில் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்த தில்லை என்பது தெளிவாகிறது.
இராமாயணத்தையும் மறுக்காமல், தொல்பொருள் அறிஞர்களின் கண்டுபிடிப் புகளையும் மறுக்காமல் ஒரு முடிவுக்கு வருவதாக இருந்தால் என்ன முடிவுக்கு இந்துக்கள் வர வேண்டும்,
இந்த அயோத்தியின் வயது 2708 ஆண்டுகளாக இருக்கலாம். ஆனால் ராமாயணத்தில் கூறப்பட்ட அயோத்தி இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அந்த அயோத்தி இருந்திருக்கலாம். ஒரு பெயரில் பல ஊர்கள் இருப்பது சாதாரண மானதுதான் என்ற முடிவுக்குத்தான் அவர்கள் வரவேண்டும். அப்போதுதான் நடைமுறை உண்மைக்கு முரணில்லாமலும், இராமாயணத்தை மறுக்காமலும் முடிவு எடுத்ததாக அமையும்.
"இராமர் பிறந்தது இந்த அயோத்தி அல்ல; வேறு அயோத்திதான், என்பதற்கு இராமாயணத்திலேயே இன்னும் பல சான்றுகள் உள்ளன.
அயோத்தியைப் பற்றி பேசும் வால்மீகி இராமாயணம் சரயூ நதியைப் பற்றியும் கூறுகிறது. சரயூ நதி அயோத்தியில் இருந்து ஒன்றரை யோஜன் தூரத்தில் உள்ளது என்று கூறுகிறது. ஒன்றரை யோஜன் என்பது இன்றைய கணக்குப்படி 23 கிலோ மீட்டர் ஆகும்.
ஆனால் இப்போது நாம் அயோத்தி சென்று பார்த்தால் சரயூ என்ற பெயரில் ஒரு நதி அங்கே ஓடினாலும், அது அயோத்திலேயே ஓடுகிறது. அயோத்தியில் இருந்து 23 கி.மீ. தொலைவில் அது இல்லை.
அப்படியானால் இராமாயணத்தில் கூறப்படும் அயோத்தியும் சரயூ நதியும் இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அயோத்தி என்ற பெயரில் ஒரு ஊரும், அதிலிருந்து 23 கி.மீ தொலைவில் சரயூ என்ற பெயரில் ஒரு நதியும் இருந்திருக்க வேண்டும் என்று நம்பினால்தான் இராமா யணம் கூறுவது மெய்யாகும்.
இந்த அயோத்திதான் அந்த அயோத்திஙங என்று கூறுவது இராமாயணத்தை மறுத்து இந்து மதத்தையே மறுப்பதாக ஆகிவிடும்.
அதுபோல் சரயூநதி கங்கை எனும் பெருநதியில் சங்கமம் ஆகிறது என்று வால்மீகி இராமாயணம் குறிப்பிடுகிறது. ஆனால் உ.பி.யில் உள்ள சரயூ நதி கங்கையில் சங்கமம் ஆகவில்லை. மாறாக ராப்தி எனும் நதியில் சங்கமமாகிறது. இதிலிருந்து தெரிய வருவது என்னடூ இராமாயணம் குறிப்பிடுவது இந்த அயோத்தியையோ, இந்த சரயூ நதியையோ அல்ல என்பதுதான்.
மேலும் சரயூ நதி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்வதாக வால்மீகி ராமாயணம் வர்ணிக்கிறது. ஆனால் உ.பி. யில் உள்ள சரயூ நதி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கிறது.
அதை ஆய்வு செய்த ஷேர்சிங் என்ற ஆய்வாளர் ஒரு உண்மையைக் கண்ட றிந்து வெளிப்படுத்தியுள்ளார்.நேபாளத்தில் ஒரு அயோத்தி உள்ளது. அதிலிருந்து 20 கி.மீ தொலைவில் ஒரு நதி ஓடுகிறது. அது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்கிறது. மேலும் அது கங்கையில் சங்கமம் ஆகிறது என்று அவர் கண்டுபிடித்துள்ளார்.
எனவே இராமர் பிறந்த அயோத்தி உ.பி.யில் உள்ள அயோத்தி என்று யாராவது நம்பினால் அவர்கள் இராமாயணத்தை மறுத்தவர்களாகின்றனர்.
இராமாயணத்தில் கூறப்படும் அடையாளங்களும் தன்மைகளும் எந்த அயோத்திக்குப் பொருந்துகிறதோ அந்த அயோத்திதான் இராமர் பிறந்த அயோத்தி என்று முடிவு செய்வதுதான் இந்துமதத்தின் ஆதாரத்தால் நிரூபிக்கப்பட்ட தாகும்.
அயோத்தியில் இராமர் கோவில் இருந்ததா??
"பாபர் மசூதி 1528ல் கட்டப்பட்டது. மீர்பாகி என்ற பாபரின் தளபதி அங்கிருந்த ராமர் கோவிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் கோவிலைக் கட்டினார் என்ற வாதத்திலாவது உண்மை உள்ளதா என்றால் அதிலும் உண்மை இல்லை.
இந்த இராமர் கோவிலை விக்கிரமா தித்த மன்னர் கட்டினார் என்று சங்பரிவா ரத்தினர் கூறுகின்றனர். விக்கிரமாதித்தன் என்பது சோழன்இ பாண்டியன் போன்ற பொதுப் பெயராகும். சந்திர குப்தர்இ சமுத்திர குப்தர் உள்ளிட்ட குப்த மன்னர்கள் தான் விக்கிரமாதித்தன் என்ற பெயரால் குறிப்பிடப்படுகின்றனர்.
அவர்களில் இராமர் கோவிலைக் கட்டிய மன்னர் யார் என்பதைப் பற்றி பலவறாக முரண்பட்டுக் கூறுகிறார்கள். கோவிலைக் கட்டிய விக்கிரமாதித்தன் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்களின் கூற்று பொய் என்பதில் ஐயம் இல்லை.
குப்த மன்னர்கள் உ.பி.யில் சில பகுதி களை ஆட்சி செய்த காலம் கி.பி. 300 முதல் கி.பி. 1100 வரையாகும். இந்த எண்ணூறு ஆண்டுகளில் ஆட்சி செய்த குப்த மன்னர்களே விக்கிரமாதித்தன் எனப்படு கின்றனர்.
கி.பி. 300 முதல் 1100 வரை அயோத்தி என்று கூறப்படும் நகரில் மனித சஞ்சாரமே இருந்ததில்லை. இந்திய தொல் பொருள் இலாகாவின் தலைவர்
பி.பி. லால், 1975ல் சமர்ப்பித்த ஆய்வறிக்கை ,தி வீக்ங (25.02.90) எனும் ஆங்கில ஏட்டிலும் ,சன்டே டைம்ஸ்ங (20.11.87) ஏட் டிலும் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் பலவிதமான ஆதாரங்களை எடுத்துக் காட்டி அயோத்தி எனப்படும் அந்தப் பகுதியில் குப்தர்கள் ஆட்சி செய்த 300 லி 1100 வரையிலான கால கட்டத்தில் எந்த மனிதனோ, கட்டடமோ, கோவிலோ, வேறு எதுவுமோ இருந்த தில்லைஙங என்று அடித்துக் கூறுகிறார்.
மனிதர்கள் வாழாத இடத்தில் குப்தர்கள் கோவில் கட்டினார்கள் என்று கூறுவது பொய் என்பது இதிலிருந்து நிரூபணமாகிறது. இல்லாத கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்பதை இந்து நண்பர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
இராமர் கடவுளாகக் கருதப்பட்டது எப்போது?
இராமருக்குக் கோவில் கட்டுவது என்றால் அவரை இந்துக்கள் கடவுளாகக் கருதத் தொடங்கிய பிறகுதான் கட்டுவார்கள். இராமரைக் கடவுள் என்று இப்போது இந்துக்கள் நம்பினாலும் ஆரம்பத்தில் இந்துக்கள் அவ்வாறு நம்பவில்லை. குறிப்பாக கோவில் கட்டப்பட்டதாக சங்பரிவாரர் கூறும் 300, 1100 குப்தர் காலத்தில் இராமர் கடவுள்களில் ஒருவராகக் கருதப் படவில்லை.
கி.பி. ஆறாம் நூற்றாண்டில் அமர சிம்ஹ என்பவர் அமர கோஷாங என்ற பெயரில் சமஸ்திருத கலைக் களைஞ்சியத்தை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவில் கடவுளாகக் கருதப்பட்டவர்கள் என்ற பட்டியல் உள்ளது. அந்தப் பட்டியலில் இராமர் இல்லை. அந்தக் காலகட்டத்தில் இந்துக்கள் இராமரைக் கடவுளின் அவதாரமாகக் கருதவில்லை என்பதற்கு இது ஆதாரமாகவுள்ளது.
லட்சுமிதர் என்பவர் புனித யாத்திரைத் தலங்கள் என்ற பெயரில் 11 ஆம் நூற்றாண்டுவரை அதாவது குப்தர்களின் கடைசிக் காலம்வரை இந்தியாவில் இருந்த புனிதத் தலங்களைப் பட்டியல் போட்டுள்ளார். அந்தப் பட்டியலில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை.
குப்தர் ஆட்சியில் இராமர் கோவில் கட்டப்பட்டது உண்மை என்றால் அந்த ஆலயம் ஏன் புனித யாத்திரைத் தலங்கள் பட்டியலில் இடம் பெறவில்லை
அதுபோல் எஸ்.எஸ். ஐயர் என்ற ஆய்வாளர் "இந்தியக் கோவில்கள், கட்ட டக்கலை, சரித்திரக் குறிப்புக்கள் என்ற நூலை வெளியிட்டுள்ளார். அதில் அயோத்தியின் இராமர் கோவில் பற்றி அவர் கூறவில்லை. விக்கிரமாதித்தன் கட்டிய கோவில்கள் என்ற தலைப்பில் ஐந்து கோவில்களைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை.
ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராமச்சந்திர கத்ரி என்பவர் 1989 நவம்பர் 12 தேதியிட்ட ரேடியன்ஸ் பத்திரிகையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். என்சைக்ளோ பீடியா பிரிட்டானிகா உள்ளிட்ட பல ஆதாரங்களைக் காட்டி, கி.பி. 1100க்குப் பிறகுதான் இராமரைக் கடவுள் என்று கருதி வழிபடும் நிலை உருவானது எனக் கூறுகிறார்.
அதாவது கடைசி விக்ரமாதித்த மன்னர் காலம் வரை ராமர் என்பவர் இந்துக்களின் கடவுள்களின் அவதாரங்களில் ஒருவராக வணங்கப்படவில்லை.
கடவுளாகக் கருதப்படாதவருக்கு குப்தர்கள் கோவில் கட்டினார்கள் என்று மனசாட்சி உள்ள இந்துக்கள் நம்ப முடியுமா?
இன்னும் தெளிவாகச் சொல்வதானால் வால்மீகி எழுதிய இராமாயணம் சமஸ் கிருத மொழியில்தான் இருந்தது. சமஸ்கி ருதம் மக்களின் பேச்சு மொழியாக இருக்கவில்லை. பிராமனப் பண்டிதர்கள் மட்டுமே அறிந்த மொழியாகத்தான் இருந்தது. எனவேதான் இராமர் மக்களால் கடவுளாகக் கருதப்படவில்லை.
மக்கள் பேசுகின்ற இந்தி மொழியில் துளசிதாசர் என்பவர் இராமாயணத்தை மொழி பெயர்த்து வெளியிட்டார். இதன் பின்னர்தான் இராமாயணம் மக்கள் அறியும் காப்பியமாக ஆனது. துளசி தாசர் இந்தியில் ராமாயணம் வெளியிட்ட பின்பு தான் இராமர் கடவுள் அவதாரம் என்று மக்களால் கருதப்பட்டார்.
துளசி தாசர் காலம் என்ன எந்தக் காலத்தில் இராமர் கோவில் இடிக்கப்பட்ட தாகக் கூறுகிறார்களோ எந்தக் காலத்தில் பாபர் ஆட்சி புரிந்தாரோ அதே காலத்தில் தான் துளசி தாசரும் வாழ்கிறார். அதுவும் அயோத்தியில் வாழ்கிறார். 1500 களில்தான் பாபர் ஆட்சி புரிகிறார். அந்த ஆட்சியின் கீழ்தான் துளசி தாசரும் வாழ்கிறார்.
இராமாயணம் இந்தி மொழியில் ஆக்கப்பட்டதே பாபர் காலத்தில்தான் என்பதும் பாபர் காலத்தில் இராமர் கடவுளாகக் கருதப்படவுமில்லை. இந்து மக்கள் அவரைப் பற்றி அறிந்திருக்கவும் இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது.
இராமாயணமே இந்தியில் மக்கள் மத்தியில் பரவாத காலத்தில் இராமர் எப்படி கடவுளாகக் கருதப்பட்டிருப்பார்டூ எப்படி அவருக்குக் கோவில் கட்டபட்டிருக்கும் என்பதை நியாயவுணர்வுள்ள இந்துக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இந்தியாவில் முதல் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றவர் டாக்டர். ராதா கிருஷ்ணன். இவரது மகன் சர்வபள்ளி கோபால் இந்து பக்திமானும் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளருமாவார்.
இவர் ராமர் ஆலயம் பற்றிய ஆய்வுக் கட்டுரையில்," கி.பி. 1750க்கு முன்பு வரை இந்தியாவில் இராமருக்காக எந்தக் கோவிலும் எந்தப் பகுதியிலும் இருந்ததில்லை. ராமர் கோவில்கள் அனைத்தும் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவைகளே எனத் திட்டவட்டமாக அறிவிக்கிறார்.
200 ஆண்டுகளுக்கு முன்னால் இராமர் கோவில்களே இந்தியாவில் இருக்கவில்லை என்றால் 1528ல் இல்லாத இராமர்கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்று நடுநிலையாளர்கள் சிந்திக்கக் கோருகிறோம்.
உண்மை என்னவென்றால் பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டியவர் இப்ராஹிம் லோடியாவார். இவர் 1524ல் பள்ளி வாசலுக்கான அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அவர் அப்பணியைத் தொடர வில்லை. இப்ராஹிம் லோடியைக் கொன்றுவிட்டு அப்பகுதியைக் கைப்பற்றிய பாபர் 1528ல் அந்த அடித்தளத்தின் மீது பாபர் பள்ளியைக் கட்டினார். எனவே பாபர் கோவிலை இடித்தார் என்று கூறுவது முழுப் பொய் என்பது இதன் மூல மும் தெளிவாகிறது.
பாபர் கோவிலை இடிப்பவரா..
இதுவரை நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்கள் மட்டுமே அறிவுடைய மக்களுக்குப் போதுமானதாகும். ஆயினும் ஒரு வாதத்துக்காக அங்கே கோவில் இருந்தாலும் பாபர் அதை இடித்திருக்க மாட்டார்.
ஏனெனில், இதே அயோத்தியில் ஹனுமான்கிரி, ஜென்மஸ்தான் உள்ளிட்ட ஐந்து கோவில்களுக்கு செப்புப் பட்டயத் தில் எழுதி பாபர் மானியம் வழங்கியுள் ளார். அந்தக் கோவில்களின் நிர்வாகம் அதை நன்றியுடன் பாதுகாத்து வருகின்றன என்று ராம்ரக்ஷா திரிபாதி என்பவர் தக்க சான்றுகளுடன் தெளிவுபடுத்தியுள்ளார்.
கோவில்களுக்கு மானியம் வழங்கிய ஒருவர் எப்படி கோவிலை இடிப்பார் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மேலும் பாபர் ஆட்சி புரிந்தபோது முஸலிம்களின் சதவிகிதம் இப்போதுள்ள தைவிட பன்மடங்கு குறைவாகவே இருந்திருக்கும். பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பு இல்லாமல் இருந்தால்தான் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். பெரும்பான்மை மக்களின் வழி பாட்டுத் தலத்தை பாபர் இடித்திருந்தால் அப்போதே மாபெரும் மக்கள் புரட்சி ஏற்பட்டு பாபர் விரட்டியடிக்கப்பட்டிருப்பார். பதவியைத் தக்க வைத்துக்கொள்ளும் நிலையில் உள்ள எந்த மனிதனும் இதுபோன்ற காரியங்களைச் செய்யவே மாட்டார்.
பாபர் அவரது மகன் ஹிமாயூன் அவரது மகன் அக்பர் என்று வாழையடி வாழையாக எவ்விதப் புரட்சியும் வெடிக்காமல் ஆட்சி நீடித்தது என்றால் இந்துக்கள் வெறுப்படையும்படி அவரது ஆட்சி அமையவில்லை என்பது தெளிவாகவில்லையா?
பாபர் தமது கடைசிக் காலத்தில் தனது மகன் ஹிமாயூனுக்கு பாரசீக மொழியில் ஓர் உயில் எழுதினார். அந்த உயில் மத்திய அரசின் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் டெலலியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அந்த உயிலில்.
மகனே இந்துக்கள் பெரும்பான்மை யாகவுள்ள ஒரு நாட்டை நீ ஆளப் போகிறாய். இந்துக்கள் பசுவைத் தெய்வமாக மதிக்கின்றனர். எனவே எக்காரணம் கொண்டும் பசுவின் மாமிசத்தை உண்ணாதே அதனால் இந்துக்கள் உன்னை வெறுத்து விடுவார்கள் என்று மகனுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
இந்துக்கள் வெறுத்து விடக்கூடாது என்பதற்காக பசுவின் மாமிசத்தையே தவிர்த்துக் கொள்ளச் சொன்ன பாபர்இ கோவிலை இடித்திருக்க முடியும் என்று சிந்தனையுள்ள யாராவது நம்ப முடியுமா.
பாபர் காலத்தில் அவரது முதல் எதிரியாக இருந்தவர் குருநானக். இவர்தான் சீக்கிய மதத்தின் நிறுவனர். இவர் பாபரை கடுமையாக எதிர்த்து வந்தார். குறிப்பாக பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் போன்றவற்றைத்தான் அவர் குறிப்பிடுகிறார். பாபர் கோவிலை இடித்திருந்தால் அதை குருநானக் கட்டாயம் குறிப்பிடாமல் இருக்க மாட்டார். அது மட்டுமின்றி குருநானக் அயோத்திக்கு வந்து பாபர் மசூதியைப் பார்வையிட்டு ரசித்திருக்கிறார் என்று அவரது வரலாறு கூறுகிறது.
கோவிலை இடித்து பாபர் பள்ளிவாசல் கட்டியிருந்தால் அந்தக் காலத்தில் வாழ்ந்த அவருக்குத்தான் அது நன்றாகத் தெரியும். கோவிலை இடித்துக் கட்டிய பள்ளிவாசலை அவர் ஒருக்காலும் ரசித்திருக்க மாட்டார்.
பாபர் கொடுங்கோலர் என்பதால் பயந்து கொண்டு விமர்சனம் செய்யாமல் மக்கள் இருந்திருக்கலாம் என்று பொய்யாகக் கற்பனை செய்து சிலர் கூறுகின்றனர்.
பாபர் கொடுங்கோலராகவோ இந்துக்களால் வெறுக்கப்பட்டவராக இருக்கவில்லை என்பதே உண்மை. ஒரு வாதத்துக்காக பாபர் கொடுங்கோலர் என்று வைத்துக் கொண்டாலும் இவர்களின் வாதம் சரியானது அல்ல.
பாபருக்குப் பின் அவரது மகன் ஹீமாயூன் ஆட்சி செய்கிறார். பாபர் இறந்து 25 ஆண்டுகளில் அவரது பேரன் அக்பர் ஆட்சிக்கு வருகிறார். இவர் இஸ்லாத்தை விட்டு விலகி தீனே இலாஹி என்ற புதிய மதத்தை உருவாக்கினார். சங்பரிவாரத்தினர் பாராட்டும் அளவுக்கு இந்துச் சார்புடைய மன்னராக இருந்தார் அக்பர்.
கோவிலை பாபர் இடித்திருந்தால் அதை நேரில் பார்த்த பலரும் அக்பர் காலத்தில் வாழ்ந்திருப்பார்கள். அக்பருக்கு அவர்கள் அஞ்சத் தேவையில்லை. உங்கள் தாத்தா இடித்த கோவிலைக் கட்டித் தாருங்கள் என்று ஒரு வார்த்தை சொன்னால் அப்போதே அக்பர் அதைச் செய்திருப்பார். இடித்திருந்தால்தானே கேட்டிருப்பர்கள் அப்படி எந்தச் சம்பவமும் நடக்கவில்லையே.
அதுதான் போகட்டும் முஸலிம்களின் ஆட்சி முடிவுக்கு வந்து வெள்ளையர்கள் ஆட்சி நடத்தினார்களே அந்தக் காலம் முதல் நாடு விடுதலை அடைந்த 1948 வரை இதுபற்றி எந்த வழக்கோ, பிரச்சினையோ இருந்ததா என்றால் அறவே இல்லை.
வெள்ளையர்களின் 200 ஆண்டு கால ஆட்சியிலும்
கோவிலை இடித்துவிட்டார்கள்; அதை எங்களிடம் தாருங்கள் என்று வழக்கு ஏதும் பதிவாகவில்லை. ஒர் காலகட்டத்தில் இந்து முஸலிம் பகைமை மிகவும் உச்சத்தில் இருந்தது. அந்தக் காலத்தில்கூட இதுபோன்ற பிரச்சினை எதுவுமில்லை.
1949 டிசம்பர் 23ல் சிலைகளைப் பள்ளி வாசலில் வைத்து பிரச்சினையை முதன் முதலாகத் துவங்கும்வரை இராமர் கோவில் என்ற எந்த விவகாரமும் இருக் கவில்லை.
இன்னும் சொல்வதாக இருந்தால் அயோத்தியில் இராமர் பிறந்த இடம் என்ற பெயரில் 30 கோவில்கள் இன்றளவும் உள்ளன. இராமர் பிறந்த இடம் என்று பல இடங்களைக் குறிப்பிட்ட இந்துக்கள் பாபர் மசூதியையும் அதில் ஒன்றாகக் குறிப்பிடவில்லை.
1949ல் சங்பரிவாரம் புளுகு முட்டையை அவிழ்த்து விடும்வரை இதுதான் நிலைமை.
எனவே மக்களின் வெறியைக் கிளறி விட்டு அதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்று திட்டமிட்டுத்தான் இந்தப் பொய்யைப் பரப்பினார்கள். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் வெள்ளை மனம் படைத்த இந்து மக்களை ஏமாற்றி வளர்ந்து ஆட்சியையும் பிடித்தார்கள்.
இந்துச் சமுதாய மக்களே இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்க இணைந்து பாடுபடுவோம். பொய்களைப் பரப்பி நமக்கிடையே பகையை விதைப்பவர்களைப் புறக்கணிப்போம்.

Thanks to : http://www.tntj.net/Statement/Babar_History_full.asp