Thursday, January 8, 2009

அதிகாரிகள் மீது அவதூறு ஜெயலலிதாவுக்கு தமுமுக கண்டனம்

பத்திரிக்கை அறிக்கை

அதிகாரிகள் மீது அவதூறு

ஜெயலலிதாவுக்கு தமுமுக கண்டனம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர்
எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கை:




அதிமுகவின் பொதுச் செயலாளராகவும், ஆர்.எஸ்.எஸ்ஸின் அறிவிக்கப்படாத தலைவராகவும் செயல்பட்டுவரும் ஜெயலலிதா அரசின் உயர் பொறுப்புகளில் இறுக்கும் முஸ்லிம் அதிகாரிகள் மீது அவதூறு சுமத்துவதே வழக்கமாக வைத்து உள்ளார். திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு பதிவு இயந்திரங்களில் அதிமுக வுக்கு எதிராக சதி செய்யப்பட்டுள்ளதாகவும், இது செய்தவர்கள் இந்திய ஆட்சி பணி அதிகாரி சையத் முனீர் ஹோடாவும், இந்திய காவல் பணி அதிகாரி ஜாபர் சேட்டும் என்று வஞ்சம் துனிக்கும் அவதூறை நெஞ்சம் அஞ்சாது கூறியுள்ளார் ஜெயலலிதா. இதை தமுமுக வன்மையாக கண்டிக்கிறது.


இடைத் தேர்தல் பணிகள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் நேரடி கட்டுப் பாட்டில் நடப்பவை என்பது எல்லோரும் அறிந்ததே. சென்னை மெட்ரோ ரயில் கார்பரேஷன் பொறுப்பில் இறுக்கும் முனீர் ஹோடாவும், உளவுத்துறை ஐ.ஜி யான ஜாபர் சேட்டும் திருமங்கலம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக சதி செய்தனர் என்ற அபாண்ட குற்றசாட்டு ஜெயலலிதாவின் வக்கிரபுத்தியை வெளிப்படுத்துகிறது. தேர்தல் ஆணையம் இதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு முன் சையத் முனீர் ஹோடாவை தேசத் துரோகி என்று அநாகரிகமாக விமர்சனம் செய்துள்ளார் ஜெயலலிதா.


அதிகார துறையில் மீச் சிறுபான்மையாக இருக்கும் சிறுபான்மை முஸ்லிம் அதிகாரிகளை ஜெயலலிதா தொடர்ந்து இழிவுபடுத்துவது கண்டனத்திற்குரியது. இனியாவது அவர் இதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

No comments: