Saturday, January 17, 2009

எல்லாரும் ஜோரா ஒருதடவை கைதட்டுங்க! ஐ.நா.வுக்கு சொரணை வந்திருச்சு!!


பாலஸ்தீனத்தில் காசா மீது இஸ்ரேலிய ராணுவ பயங்கரவாதிகளின் தொடர்தாக்குதலில் முன்னூறு குழந்தைகள், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட ஆயிரத்து நூறுபேர் ஷகீதாகியுள்ளனர். இஸ்ரேலின் இந்த ரத்தவெறியை உலகநாடுகள் மற்றும் இதயமுள்ள மக்கள் அனைவரும் கண்டித்துவருகின்றனர்.
ஒரு உத்தரவு மூலம் இஸ்ரேலை அடக்கவல்லமை கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்தவேண்டும் என்று மயிலிறகால் வருடியது. வன்நெஞ்சம் கொண்ட வந்தேறி இஸ்ரேல் ஐ.நா.வின் வேண்டுகோளை காற்றில்பறக்கவிட்டுவிட்டு வழக்கம்போல காசாமீது தனது விமானத்தை பறக்கவிட்டது.
குவைத்தை விட்டு ஈராக் வெளியேறவேண்டும் என்று ஐ.நா. கட்டளையிட்டபோது, அதை ஏற்க மறுத்தார் சதாம். உடனே ஐ.நா.வுக்கு கோபம் பொங்கிக்கொண்டுவந்தது. உடனடியாக ரத்தவெறி பிடித்த காட்டேரி அமேரிக்கா தலைமையில் பன்னாட்டுப்படையை அனுப்பி குவைத்தை மீட்டது. இன்று இஸ்ரேல்,ஐ.நா.வின் கட்டளையை தூக்கி விசியபோது ஐ.நா.தூங்கிக்கொண்டிருக்கிறது.
தூங்கிக்கொண்டிருந்த ஐ.நா.வின் வாலில் இஸ்ரேலில் தீயை கொளுத்திவிட்டவுடன் துடித்து எழுந்தது ஐ.நா. ஆம்! காசாவில் வீடுகள்,மசூதிகள்,பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் அவ்வளவு ஏன் மையவாடி வரை இஸ்ரேல் குண்டுமழை பொழிந்தபோது கண்டுகொள்ளாத ஐ.நா., காசாவில் உள்ள ஐ.நா. நிவாரண நிறுவனம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
இது பற்றி ஐ.நா.மன்றத்தின் தலைமை செயலாளர் பான் கி மூன் கூறியதாக வெளியாகியுள்ள செய்தியில்,
ஐ.நா. நிவாரண நிறுவனத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது தனக்கு கடும் கோபத்தை வரவழைத்ததாகவும், காசாவில் துன்பங்கள் தாங்கமுடியாத அளவுக்கு வந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
இதற்கிடையில் நேற்று இஸ்ரேலிய போர்விமானம் காசாவில் உள்ள மையவாடியில் குண்டுமழை பொழிந்ததால் அடக்கம் செய்யப்பட்டிருந்த ஜனாசாக்கள் சிதறியதாக செய்தி வெளியாகியுள்ளது. செத்தவர்களையும் விட்டுவைக்காத பிணம்தின்னி இஸ்ரேலே! நீ விதைத்ததற்கான பலனை ஹாமாஸ் உனக்கு வழங்கும் இன்ஷா அல்லாஹ்
.

No comments: