Tuesday, January 13, 2009

நந்திகிராம் இடைத்தேர்தலில் படுதோல்வி:இடதுசாரிகளுக்கு இது ஒரு பாடம்!


நந்திகிராம் இடைத்தேர்தலில் படுதோல்வி:
இடதுசாரிகளுக்கு இது ஒரு பாடம்!

சர்ஜுன்

மார்க்சிஸ்டுகள் நீண்டகாலம் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் மேற்கு வங்காள மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத் தேர்தலில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி தோல் வியை சந்தித்திருக்கிறது. தேர்தல்களில் வெற்றி தோல்வி சகஜம், எனினும் மார்க்சிஸ்டுகளின் கோட்டையான மேற்கு வங்காளத்தில் தற்போதைய அரசியல் சொல்லிக் கொள்ளும் படியாக எந்தவித வளர்ச்சியும் இல்லாத திரிணா மூல் காங்கிரஸ் கட்சியிடம் இடதுசாரி கள் தோல்வி அடைந்திருப்பது ஒரு அரசியல் அவலம் என்பதை இடது சாரிகள் உணர்ந்து கொள்ள வேண்டும். மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங் கிரஸ் கட்சி அங்கு தங்களை எதிர்த்துப் போட்டியிட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை 39 ஆயிரம் வாக்கு கள் வித்தியாசத்தில் தோற்கடித்திருக் கிறது.


நந்திகிராம் என்ற பகுதியைப் பற்றி வாசகர்களுக்கு அதிகம் விளக்கத் தேவையில்லை. ஏனெனில் சிறப்புப் பொருளாதார மண்டலம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக நந்திகிராமில் உள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்து வதற்காக அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்தியது மாநில அரசு. தங்களது வாழ்வாதாரமாக விளங்கும் விளை நிலங்களை விட்டுத்தர மாட் டோம் என நந்திகிராமில் வாழும் அந்த பாமர மக்கள் போராடினர். ஏழைப் பாட்டாளிகளுக்காகப் பாடுபடுவதற் காகவே இயக்கம் கண்டோம் எனக் கூறியவர்கள் உரிமை காக்க போராடிய மக்களை மூர்க்கத்தனமாக நசுக்கினார் கள். ஆளும் கட்சியாக இருப்பதால் காவல்துறையினரை வைத்து காட்டுத் தனமாக நந்திகிராம் மக்களைத் தாக்கினார்கள். இதில் பல உயிர்கள் பலியாயின.


காவல்துறையினர் பொதுமக்களைத் தாக்குவதா? பொறுக்க முடியுமா காம்ரேடுகளுக்கு? காவல்துறையினர் தாக்க பார்த்துக் கொண்டிருப்பதா? பொறுமை இழந்த கம்யூனிஸ்ட் தொண் டர்களும் அப்பாவி மக்களைத் தாக்கினர்.


தாக்கப்படுபவர்கள் பல்வேறு முனை களிலும் வஞ்சிக்கப்படும் அப்பாவி மக்களாயிற்றே? பரிதாபத்துக்குரிய முஸ்லிம் சமூகத்தினராயிற்றே என அவர்கள் பார்க்கவில்லை. அவர்கள் தான் மதச்சார்பின்மை பேசும் மாவீரர் களாயிற்றே. பாதிக்கப்பட்டவர்களை மேலும் மேலும் தாக்கும் வேலையைத் தொடர்ந்து செய்தார்கள். ஏழைப் பாட் டாளிகளின் கண்ணீருக்கு தற்போது விடை கிடைத்திருக்கிறது. கடந்த மே மாதம் நந்திகிராமில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி படுதோல்வியை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து ஜனவரி 5ஆம் தேதி 2009ஆம் ஆண்டு நந்திகிராமில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தனது கூட்டணிக் கட்சியான சி.பி.ஐ.யிடம் தொகுதியை ஒதுக்கியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. நந்திகிராமில் மார்க் சிஸ்ட்களால் நிகழ்த்தப்பட்ட அரசு வன்முறையில் கொடூரமாக கொல்லப் பட்ட ஷேக் இம்தாதுல் என்ற ஒரு விவசாய இளைஞனின் தாயாரிடம் இடது சாரிகள் தோல்வியைத் தழுவினார்கள்.


எந்தக் காவல்துறையின் அராஜகத்தை நம்பி அவர்கள் நந்திகிராமில் வெறியாட் டம் போட்டார்களோ, அந்த காவல்துறையின் அராஜகம்தான் அவர்களை படு தோல்வி பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டி ருக்கிறது.


காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலியானவரின் தாயாரையே அந்தத் தொகுதி மக்கள் தேர்ந்தெடுத்து இடதுசாரிகளின் நோக்கம் தவறு என்பதை தங்கள் வாக்குச் சீட்டுகளின் மூலம் காட்டினார்கள்.


இதற்கு முன்பு நந்திகிராமின் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த முகமது இல்யாஸ் மீதான லஞ்ச ஊழல் புகார்கள் நிரூபிக்கப்பட்டதால் பதவி இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பதவி இழந்ததால் நந்திகிராமில் இடைத் தேர்தல் நடைபெற்றது. ஃபெரோஸா பீவியை எதிர்த்துப் போட்டியிட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பரமானந்த் படுதோல்வியை சந்தித்திருக்கிறார்.


நந்திகிராம் விவகாரத்தில் காம்ரேடு கள் மறந்துபோன கொள்கையை நந்தி கிராம் மக்கள் இந்தத் தேர்தல் முடிவு களின் மூலம் நினைவூட்டியுள்ளார்கள்.


இதில் இடதுசாரிகள் பாடம் கற்றுக் கொள்வார்களா?

thnaks :tmmk.in

No comments: