Saturday, January 10, 2009

தமிழகமே திரண்டு வரட்டும்


தமிழக மக்கள் அனைவரின் உள்ளங் களிலும் நீங்கா இடம்பெற்று இயங்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 13ஆம் பொதுக்குழு, தீரர்களின் கோட்டையாம் திருச்சி மாநகரில் சீரோடும் சிறப்போடும் நடைபெற்று நிறைவுபெற்றிருக்கிறது.


தமிழக மக்களின் சுக துக்கங்களில் பங்குகொண்டு வீரியமுடன் காரிய மாற்றும் தமுமுகவின் பொதுக்குழுவுக்கு அரசியல் வரலாற்றில் சிறப்பிடம் உண்டு எனினும் 2009 ஜனவரி 4ஆம் தேதி திருச்சியில் கூடிய பொதுக்குழுவுக்கும் அதற்கு முந்தைய நாள் கூடிய செயற் குழுவுக்கும் தமிழக அரசியல் வானில் திருப்புமுனைக்குரிய சிறப்பிடம் உண்டு.


அரசியல் அரங்கில் வெற்றி தோல் வியை தீர்மானிக்கும் சக்தியாக தமுமுக உருவான 13 ஆண்டு காலமாக வெற்றி நடை போட்டு வருகிறது.


தமுமுக எனும் சமூக விழிப்புணர்வு இயக்கம் அரசியல், சமூக, மார்க்க தளங்களில் வெற்றித்தடத்தை பதித்தது எனினும் தமிழக மற்றும் இந்திய அரசியல் அரங்கில் ஒரு பெரும் வெற்றி டம் ஒன்று நீடித்தவண்ணம் இருந்தது.


இந்திய முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, அழுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக் கான அரசியல் அமைப்பு தேவை என்ற ஏக்கம், எதிர்பார்ப்பு அனைத்து மட்டங் களிலும் பரவி இருந்தது. யாதொரு பலனும் கருதாது, மெய் வருத்தம் பாராது, பசி நோக்காது, கண் உறக்கம் இல்லாது, கடமையாற்ற தங்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்ற ஒரு தூய்மையான அரசியல் இயக்கம் வராதா என ஏங்கியதற்கு விடை தரும் விதமாக தமுமுக எனும் மக்கள் இயக்கம் அரசியல் கட்சி ஒன்றை தோற்று விப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.


தமுமுகவின் அரசியல் பிரிவிற்கான பிரகடனம் வெற்றிடத்தை நிரப்புவதற் கான முன்னோட்டமாக அமைந்திருக்கிறது.


வெற்றிடத்தை நிரப்புவது என்பது தமிழகத்தின் அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்காக மட்டுமல்ல, அகில இந்தியாவிலும் ஏற்பட்டிருக்கும் அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற் காகவும் அல்ல, உலகுக்கு ஒரு அரசியல் முன்மாதிரியை உருவாக்கும் விதமாக தமுமுகவின் அரசியல் பிரிவு அரங்கேற இருக்கிறது.


அரசியல் பிரிவு தொடங்குவதற்கு முன்பாக தமுமுக தலைவர் தலைமையில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு அந்த ஆய்வுக்குழு தமுமுகவின் உயர்மட்டக் குழுவிடம் தனது பரிந்துரையை வழங்கியது.


'மனிதநேய மக்கள் கட்சி' மக்களின் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர விருக்கிறது இன்ஷாஅல்லாஹ்.


அரசியல் தூய்மையையும், கூர்மை யையும், நேர்மையையும் கடைப்பிடித்து நிலைத்த புகழ்பெற்ற கலிபாக்கள் அபூபக்கர், உமர் (ரலி) ஆகியோரின் ஆட்சி, நிர்வாகத் திறமை கடைக்கோடி குடிமகனுக்கும் சமநீதி வழங்கியது. காந்தியடிகள் கூட கனவு கண்ட ஆட்சி முறை அது. அத்துணை சிறப்பு மிகுந்த ஆட்சியாளர்களின் வழிமுறையைப் பின்பற்றி அரசியல் நெறி பேண தமுமுக வின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சி (ம.ம.க.) சூளுரைக்கிறது.


அரசியலில் புதிய பாடத்தை இந்த தேசத்துக்கு கற்பித்துத்தர தமுமுகவின் மனிதநேய மக்கள் கட்சி தயாராக இருக்கிறது என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறது. இஸ்லாத்தின் அரசியல் கொள்கையென அறிஞர் அல் மவாரிதி கூறியதைப் போல மார்க்கத்தை நெஞ்சில் ஏற்றி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் அரசுகளையும் திறமையாக நிர்வாகம் செய்ய முடியும் என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு அரசியல் இயக்கத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தவே தமுமுக விரும்புகிறது.


அரசியல் என்பது ஒரு தீமை. அரசியல் வாதி என்பவர் முறைகேடுகளின் மொத்த உருவம் என்ற கற்பிதங்களை உடைத் தெறியும் விதமாக அரசியல்வாதி என்பவர் இறைவனுக்கு நெருக்கமாகி தன்னையும் தனது மக்களையும் தீமையிலிருந்து பாதுகாத்துக் கொள் வார், சிறந்த மக்கள் கூட்டத்தை உருவாக்குவார் என்ற நம்பிக்கையை தமுமுக வழங்கும் இன்ஷாஅல்லாஹ்.


1995 ஆகஸ்ட் 25ஆம் தேதி தடா என்னும் கொடும் சட்டத்தை எதிர்த்து தமுமுக செறுகளம் கண்டது. அஞ்சிய காகிதப் புலிகள் வாயடைத்து நிற்க, திரளான முஸ்லிம்களின் கூட்டத்துக்கு தலைமை வகித்த தமுமுக அன்றிலிருந்து தமிழக முஸ்லிம்களின் சமுதாயத்தின் முதல் நிலை சக்தியாக விளங்கி வருகிறது, அல்ஹம்துலில்லாஹ்.


உலக பயங்கரவாத இஸ்ரேலின் செயற்கைக்கோள் இந்திய மண்ணில் ஏவப்பட்ட போதும், அப்பாவி முஸ்லிம்களின் மீது பயங்கரவாத பழிசுமத்திய போதும், மது என்ற கொடும் தீமை தலைவிரித்து ஆடும் போதும், கந்து வட்டி கொடுமைகளால் ஏழைப் பாட் டாளி வர்க்கம் வேதனையில் ஆழ்ந்த போதும், ரங்கநாத் மிஸ்ரா அறிக்கை போன்ற உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய பரிந்துரைகள் அரசாங்க பரண் களின் தூசு படிய கிடக்கும் போதும், உழைக்கும் வர்க்கத்தை சுரண்டும் வர்க்கம் ஒன்று ஏய்க்கும் போதும், ஒரு தூய்மையான லி அறிவார்ந்த லி செயல் திறன் படைத்த ஒரு வெகுஜன மக்கள் இயக்கம் ஒன்றுவந்து நம் ஏக்கத்தைத் தீர்க்காதா? நம் கண்ணீரைத் துடைக் காதா? என ஏங்கும் மக்களுக்காக புது யுகம் படைக்க புறப்பட்டிருக்கிறது தமுமுகவின் புதிய அரசியல் பிரிவு.


இந்தியாவை எழுச்சியுடன் கட்ட மைக்க மனிதநேய மக்கள் கட்சி உறுதி ஏற்கிறது. இணைந்து பணியாற்ற மக்களுக்கு அழைப்பு விடுக்கிறது. புதிய வரலாற்றின் முதல் அத்தியாயம் இன்ஷா அல்லாஹ் பிப்ரவரி 7 அன்று எழுதப்படவுள்ளது. அதில் இடம்பெற தமிழகமே திரண்டு வரட்டும்.

No comments: