Saturday, January 17, 2009

சரப்ஜித்சிங்கின் மரண தண்டனைரத்து? அப்சலின் கதிஎன்ன?



பாகிஸ்தானில் முக்கிய நகரங் களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சதிகளில் முக்கிய பங்கு வகித்தவர் என இந்தியாவைச் சேர்ந்த சரப்ஜித் சிங்கை பாகிஸ்தான் அரசு கைது செய்தது. சரப்ஜித் சிங்கிற்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. சரப் ஜித் சிங்கிற்கு ஆதரவாக அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து இந்தியாவில் பல்வேறு மட்டத்திலும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. சரப்ஜித் சிங் கிற்கு ஆதரவாக இந்திய ஊடகங்கள் அனைத்தும் வரிந்து கட்டின.


சரப்ஜித் சிங்கை நேரில் சந்திக்க அவரது குடும்பத்தினருக்கு பாகிஸ் தான் அரசு அனுமதி வழங்கியது. இந்தியா, பாகிஸ்தான் என இரு நாட்டிலுமுள்ள மனித உரிமை ஆர்வலர் களின் முயற்சியால் இது கை கூடியது.


இந்நிலையில் சரப்ஜித்சிங்கிற்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்ட னையை ரத்து செய்ய வேண்டும் எனகோரிக்கைகள் இந்தியாவெங் கும் எழுந்தன. சரப்ஜித்சிங் உள்பட மரண தண்டனைக் கைதிகள் அனை வரது தண்டனையையும் ஆயுள் தண்டனையாக குறைக்கும்படி பாகிஸ்தான் உள்துறை அமைச்கத் துக்கு அந்நாட்டு சட்ட மந்திரி பரூக் நயீக் பரிந்துரை செய்துள்ளார். இதை உள்துறை அமைச்சகம் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் சரப்ஜித் சிங் மரண தண்டனை அபாயத்திலிருந்து தப்பிக்கும் வாய்ப்பு இருப்பதாக பாகிஸ்தானிலிருந்து வரும் தகவல் கள் தெரிவிக்கின்றன.


சரப்ஜித்சிங் விவகாரத்தில் இந்தி யாவில் பெருவாரியான மக்கள் அவ ருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தனர்.


பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் அன்சர் பர்னி சரப்ஜித் சிங்கின் விடுதலைக்காக முழுவீச்சில் பாடு பட்டார். தனது நாட்டைச் சாராத ஒருவருக்காக இன்னும் தன்னுடைய நாட்டில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு களில் தொடர்புடைய குற்றம்சாட்டப் பட்ட ஒருவருக்காக பாகிஸ்தானின் முன்னாள் அமைச்சர் மனித உரிமை ஆர்வலர் அன்சர் பர்னி பாடுபட்டு வருகிறார்.


ஆனால் நம் நாட்டில் நம் இந்தியக் குடிமகன் அப்சல் குருவை தூக்கி லிட்டுக் கொலை செய்ய வேண்டும் என துடியாய் துடிக்கிறார்கள். குற்றம் நிரூபிக்கப்படாத அப்சலின் உயிரைப் பறிக்க குறியாய் அலைபவர்கள் சரப்ஜித் விவகாரத்தையும் பாகிஸ்தான் முன் னாள் அமைச்சர் அன்சர் பர்னியையும், நம் நாட்டில் பொறுப்பற்ற சில ஊடகங் களையும், பாஜகவையும் இங்கு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியது பொருத்தமாக இருக்கும்.
- ஸ்ரீதரன், திருவண்ணாமலை

No comments: