Saturday, January 17, 2009

வீரவிளையாட்டு என்றபெயரில் மிருகவதை;தடைசெய்க!

தமிழகத்தில் வீரவிளையாட்டுகள் என்று சிலவிசயங்கள் நடைமுறையில் உள்ளன.அதில் சிலவிஷயங்கள் மனிதர்களின் உயிருக்கு உளைவைப்பதாகவும், மிருகங்களை வதைசெய்வதாகவும் உள்ளது.மாடுகளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் இந்த ஆண்டு ஆறு பேர் பலியாகியுள்ளனர். ஐந்நூறு பேர் காயமாகியுள்ளனர். இதுபோக மாடுகளை வதை செய்வதையும் பார்க்கிறோம்.அதாவது, வீரம் என்றால் நாம் எதை சொல்வோம் பத்துபேர் சேர்ந்து ஒருவனை அடிப்பதையா? இல்லை. ஒத்தைக்கு ஒத்தையாக நின்று ஜெயிப்பவனையா? ஜல்லிக்கட்டை நீங்கள் பார்த்தால் ஒரு மாட்டை பலபேர் அதன்மீது விழுந்து அமுக்குவதை காணலாம். திமிளைப்பிடித்து தொங்குவதும், வாலைப்பிடித்து இழுப்பதும் இப்படியான வேதனைகள்.மேலும், சிலபகுதிகளில் எருதுகட்டு என்றபெயரில் மாட்டை வடத்தில்கட்டி, அதை ஓடவிடாமல் செய்து அதை பலபேர் சேர்ந்து அமுக்குவது. அதுபோல, கோவில் திருவிழா மற்றும் தலைவர்களின் பிறந்தநாள்விழா இப்படி சில நிகழ்ச்சிகளில் மாட்டுவண்டி பந்தயம் என்ற பெயரில் மாடுகளை கடுமையாக ஓடவிடுவதும், சாட்டையால் அடிப்பதும், தார்கம்பால் ரத்தம் வழியும் அளவுக்கு குத்துவதும் இதுபோன்ற கொடூரங்களை பார்க்கிறோம்.ஜல்லிக்கட்டில் மாடுகள் துன்புறுத்தப்படுவதை முன்னிட்டு தொடரப்பட்ட வழக்கில் ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடைவிதித்தது. தமிழக அரசின் மேல்முரையீட்டால் சில நிபந்தனைகளுடன் அனுமதியளித்தது. அனால் ஜல்லிக்கட்டை முற்றிலுமாக தடை செய்வதே சரியாகும். இல்லையென்றால் மாடுகளை தொடாமல் ராமராஜன் மாதிரி பாட்டுப்பாடி காளைகளை அடக்கட்டும்.இதுபோக ஆடுகளை மோதவிடுவது, சேவல்களின் காலில் கத்தியை கட்டி மோதவிடுவது இதுபோன்ற மிருகவதைகளும் தடைசெய்யப்படவேண்டும்.கால்நடைகள் நமக்கு பலவகைகளில் உதவியாக இருக்கிறது. உதவி செய்த ஜீவனுக்கு உபத்திரவம் செய்வதுதான் மனித பண்பாடா?என்பதை சிந்திக்கவேண்டும்.முஸ்லிம்களும், ஏனைய அசைவப்பிரியர்களும் உணவுக்காக உயிரினங்களை அறுப்பதை மிருகவதை என தத்துவம் பேசிய ஜீவகாருண்ய மேதைகள்' கண்முன்னே நடக்கும் இந்த கொடூரங்களை கண்டுகொள்ளாதது ஏன்?
thanks to : நிழல்களும் நிஜங்களும்


No comments: