Tuesday, January 20, 2009
மாட்டுப் பொங்கல் "பின்பக்க”த்திற்குப் பூஜை
தை இரண்டாம் நாளை “மாட்டுப் பொங்கல்” என்கிறார்கள். உழவுக்குப் பயன்படும் (காளை) மாட்டுக்கு “நன்றி” பாராட்டும் நாள் என்கிறார்கள்.
அன்றைய நாளில் பல ஊர்களிலும் “ஏறு தழுவுதல்” நடைபெறுகிறது. போர்க் குணத்தோடு வளர்க்கப்படும் காளைகள் போட்டியின் போது அவிழ்த்து விடப்பட்டு ஓடிவரும்போது அதன் திமிலைப் பிடித்து அடக்கி நிறுத்த இளைஞர்கள் முயன்று, வீழும் விளையாட்டு. உயிருக்கே பாதிப்பை ஏற்படுத்தும் விளையாட்டு. ஆனாலும் உயிரைப் பொருட்படுத்தாமல் இதில் ஈடுபடுகின்றனர். இது தமிழர் பண்பாடாக இருந்தது.
அறுவடைத் திருநாளாம் பொங்கலை, “சங்கராந்தி” ஆக்கிய பார்ப்பனர், மாட்டுப் பொங்கலையும் பார்ப்பனப் பண்பாட்டு நிகழ்ச்சியாக்கி விட்டனர். ஓர் அய்யங்கார் அம்மணிக்குச் சொந்தமான தொலைக்காட்சியில் மாட்டுப் பொங்கல் நிகழ்ச்சியைக் காட்டினார்கள். பசு மாடுகள் வரிசையாகக் கட்டப்பட்ட தொழுவம். பார்ப்பன மடிசார் மாமிகள், கையில் பித்தளைத் தட்டில் கர்ப்பூரத்தைக் கொளுத்தி எடுத்துக் கொண்டு, பசு மாட்டின் பின்புறம் மலம், மூத்திரம் வெளிவரும் உறுப்புகளுக்குக் கர்ப்பூர தீபாராதனை காட்டும் காட்சியைக் காட்டினார்கள். இதுதான் பார்ப்பன பண்பாடு!
இந்து மதத்தின் எல்லாக் கடவுள்களும் பசு மாட்டில் வசிக்கின்றன என்ற முட்டாள்தனமான கருத்தின் அடிப்படையில் பசு மாட்டைக் கும்பிடும் பார்ப்பனர், இப்போது மாட்டுப் பொங்கலன்றே இதைச் செய்ய ஆரம்பித்து விட்டனர். பசுவின் மூத்திரம் வரும் வழியில்தான், லட்சுமி வாசம் செய்கிறாள் என்கிறது, இந்து மதம்! அதனால்தான், வைணவக் கோயிலில் விடிந்ததும் பூஜை நடக்கும்போது பெருமாள் முகத்திற்கு நேரே பசு மாட்டின் யோனியைக் காட்டுகிறார்கள்! கடவுள் லட்சுமியை தரிசனம் செய்கிறதாம்!
பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து தமிழர்களைக் காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளும் காலத்தில், அந்த முயற்சிகளுக்கு ஓரளவு வெற்றிகள் கிடைத்துள்ள காலத்தில், தம் பண்பாட்டுத் திணிப்பில் பார்ப்பனர்கள் எவ்வளவு தீவிரமாக இருக்கின்றனர் என்பதை அத்தொலைக்காட்சி பட்டவர்த்தனமாகக் காட்டுகிறது! என்னே, காட்டுவிலங்காண்டித்தனம்!
பார்ப்பவர்கள், பார்க்காமல் புறக்கணிக்க வேண்டாவோ?
நன்றி விடுதலை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment