Tuesday, January 27, 2009

குட் இந்திய போலீஸ் குட்


டெல்லி: இந்தியாவில் அதிகம் லஞ்சம் வாங்குவதில் காவல்துறை முன்னணியில் இருப்பதாக சர்வதேச நிறுவனம் ஒன்றின் சர்வே தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் இருந்து இயங்கி வரும் டிரேஸ் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் லஞ்சத்தை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இவ்வமைப்பு சார்பில் இந்தியாவில் லஞ்சம் அதிகம் வாங்கும் துறை எது என்ற சர்வே நடத்தப்பட்டது.

கடந்த 2007 ஜூலை 1ம் தேதி முதல் 2008 அக்டோபர் 30ம் தேதி வரையிலான காலத்தில் அதிக லஞ்சம் வாங்கிய இந்திய துறை எது என்பதை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

இதில் இந்தியாவில் கேட்கப்படும் லஞ்சத்தில் 30 சதவீதத்தை போலீஸ் துறையினர் கேட்டுள்ளதாக தெரிகிறது. மத்திய அரசு துறையினர் இவர்களை விட 3 சதவீதம் அதிக லஞ்சம் கேட்டாலும் அவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் போலீசுக்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது.



மாநில அரசு ஊழியர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் தலா 10 சதவீதத்துடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர்.

இது குறித்து இவ்வமைப்பின் தலைவர் அலெக்சாண்ட்ரா விரேஜ் கூறுகையில், சில தவறுகளை மறைக்க பலவந்தமாக லஞ்சம் வசூலிக்கப்படுகிறது. அதில் போலீசுக்கு அதிக பங்கிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டினருக்கும் இந்த சிக்கல் இருக்கிறது என்றார் அவர்.

No comments: