Monday, December 29, 2008
முஸ்லீம் என்றாலே தீவிரவாதியா? டைரக்டர் அமீர் பேட்டி!
`யோகி' திரைப் படத்தின் இறுதிக் கட்ட பணிகளில் இருக்கிறார் அமீர். ஈழத் தமிழர் பிரச்னையில் ஆவேசமாய் பேசி, சிறை சென்று வந்ததால் சற்று தாமதமாகிறது படம்.
ஈழத்தமிழர் பிரச்னை குறித்தும் மும்பைத் தாக்குதல்கள் பற்றியும் பேசுகிறார், மீண்டும்.
`யோகி' எந்தளவிற்கு வந்திருக்கிறார்?
"இன்னும் பதினைந்து நாட்கள் ஷூட்டிங் மீதமிருக்கிறது.இதுவரை எடுத்ததைப் போட்டுப் பார்த்தால் என்னைத் தவிர மற்ற எல்லோரும் மிக நன்றாக நடித்திருக்கிறார்கள். அமீர் ஏன் நடிக்க வந்தான் என்ற கேள்வி எல்லோருக்குமே இருக்கிறது. ஒரு கதைக்குப் பொருத்தமாக இருப்பதால் தான் நடிக்கிறான் அல்லது அந்த கதாபாத்திரத்திற்காக ரொம்ப மெனக்கெட்டு இருக்கிறார் என்ற உண்மையான காரணம் இருக்கவேண்டும். இது கூட இல்லையென்றால் வேற என்ன?''
ஈழத்தமிழர் பிரச்னையில் குரல் கொடுத்து சிறை சென்றீர்-களே. அங்கு உங்களுக்குக் கிடைத்த சிறை அனுபவங்கள் எந்த உணர்வைக் கொடுத்தி-ருக்கிறது?
"திட்டமிட்டுத் திருடியவன், ப்ளான் பண்ணி சாதுர்யமாக கொலை செய்தவன், மிகவும் பெர்ஃபெக்ட்டாக என்னென்ன வழிகளில் சமூகத்தை ஏமாற்றலாம் எனத் தெரிந்த, படித்த கிரிமினல்கள் பலர் வெளியேதான் இருக்கிறார்-கள். அதே மாதிரி அங்கே உள்ளே இருப்பவர்-களில் பலர் கோபத்தில் கொலை செய்தவர்கள், அவசரப் பட்டுத் திருடியவர்கள், ஆத்திரத்தில் தப்பு செய்து வந்தவர்கள், கிராமங்களில் சின்னச் சின்ன பிரச்னைகளுக்காக ஏதாவது தப்பு செய்துவிட்டு உள்ளே வந்தவர்கள் அதிகம். `ஒரு நிமிஷம் கோபப்-பட்டேன். இப்ப யோசிச்சுப் பார்த்தா ஒண்ணுமில்ல. பதினைஞ்சு வருஷம் போச்சு. இளமையைத் தொலைச்-சாச்சு. இனி என்ன பண்ணப் போறோம்னு தெரியல' என்று மெஜாரிட்டியான பேர் சொல்லும்போது பரிதாபமாக இருக்கிறது. சிறையில் உள்ள பலர் மனரீதியாகப் பக்குவமடைந்து இருக்கிறார்கள். இன்னொரு வாய்ப்புக் கொடுத்தால் திருந்தி வாழ்வோம் என்பதுதான் அவர்கள் சொல்வது. இன்னும் நிறைய சங்கதிகள் சிறையில் இருக்கிறது. அவற்றையெல்-லாம் படமெடுக்க ஆசை இருக்கிறது.''
மிக விரைவில் தமிழர்களின் மன தைப் பிரதிபலிக்கும் விதத்-தில் ஈழப் படம் ஒன்றை இயக்க-விருப்பதாக வரும் செய்திகளில் எந்தளவிற்கு உண்மை இருக்கிறது?
"ஈழம் சார்ந்த கதை ஒன்று மட்டும்தான் இருக்கிறதா என்று என்னிடம் கேட்டால், இல்லை, நிறைய கதைகள் என்னிடம் உள்ளன என்பதுதான் என் பதில். இன்று தீவிர வாதம் என்றாலே முஸ்லிம்கள்தான் என்ற எண்ணம் இருக்கிறது. முஸ்லிம் களில் தீவிரவாதி இருக்கிறான் என்பது போய், முஸ்லிம்களே தீவிரவாதிகள் என்ற மனநிலை உருவாகி விட்டது. இன்னும் ஐம்பது வருடங்களில் அடுத்த தலைமுறைக்கு மொக-லாயர்கள் எப்படிப் படையெடுத்தார் கள் என்று சொன்-னோமோ அதே போல் தீவிரவாதி-களான முஸ்லிம்கள் நம்மை அழிக்க முற் பட்டார்கள் என்று பாடமாகி விடும் நிலை இருக்கிறது. இதை உடைக்க ஆசை. இதேபோல் உண்மையான ஈழப் பிரச்-னையையும், உண்மையான காஷ்மீர் பிரச்னை யையும் பட-மெடுக்க ஆசை. இதைப் படமாக்க ஈழத்திலும், காஷ்மீரிலும் அனுமதி அளித்தால் சம்பளம் இல்லாமலே எடுக்கத் தயார்.''
ஈழத்தமிழர்களின் படுகொலை-களுக்கு எதிராக குரல் கொடுத்-தீர்கள். அதற்காக சிறை சென்றீர்-கள். ஆனால் சிறையிலிருந்து வந்தபிறகு அந்தப் பிரச்னை குறித்துப் பேசவில்லை. என்ன காரணம்?
"பேசக்கூடாது என்பதெல்லாம் இல்லை. ஈழத்தில் தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இலங்கையில் மட்டுமல்ல உலகின் எந்த மூலையிலும் எந்த மனிதனுக்-கு அநியாயம் நடந்தாலும் அதைத் தட்டிக்கேட்கிற உரிமை எல்லா மனிதர்களுக்கும் உண்டு. அந்த நியாயங்களைத் தட்டிக் கேட்பது மனிதனின் சமூகப் பொறுப்பு. அதுவும் பொது வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு இந்தப் பொறுப்பு அதிகம். நான் பொது வாழ்க்கையில் இருப்பவன். ஈழப் பிரச்னைக்கு நான், நீ எனப் போட்டி போட்டுக்கொண்டு குரல் கொடுத்துப் போராடியவர்கள், நம் நாட்டில் நடந்த மும்பைத் தாக்குதலுக்குக் குரல் கொடுத்துப் போராடவில்லை. மும்பைத் தாக்குதலில் கூட பணக்காரர்கள் இருந்த ஹோட்டலில் நடந்த தாக்குதல் பற்றிதான் செய்திகள் பெரிதாக வந்தன. ரயில் நிலையத்தில் சுடப்பட்டு இறந்த அப்பாவி ஏழைகளைப் பற்றி யாரும் பேசவில்லை. இந்தத் தாக்குதலுக்காக பதவியை ராஜினாமா செய்தவர்கள் குஜராத் கலவரத்தின்போது ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு ஏன் பொறுபேற்கவில்லை? இன்றைக்கும் டிசம்பர் ஆறாம் தேதி வந்தால் நம்மை நடுரோட்டில் உட்கார வைத்து உடைமைகளை அவிழ்த்து போலீஸ் சோதனை செய்கிறார்களே. அந்த பாபர் மசூதியை இடித்த போது ஏன் யாரும் ராஜினாமா செய்யவில்லை? அப்போது நடந்த கலவரத்தில் எத்தனை ஆயிரம் மக்கள் பலியா-னார்கள்? இலங்கையில் நடக்கும் அநியாயத்தைச் சொல்லும் போது, நம் நாட்டில் நடக்கும் அநியாயங்களையும் சொல்லித்தான் ஆக வேண்டும். ஒவ்வொரு இந்திய-னுக்கும் இதைக் கண்டிக்கும் பொறுப்பு உள்ளது. இந்த சுதந்திரம், உரிமை கூட இல்லை-யென்றால் வாழ்வது எதற்கு? மருந்து குடித்துவிட்டு நீட்டி நிமிர்ந்து படுத்து விடலாம்.''.
- இரா. ரவிஷங்கர்
kumudam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment