Monday, February 2, 2009

பதர்சயீத் ராஜினாமா செய்யத்தயாரா? பாயும் ஹைதர்அலி!



சில நாட்களுக்கு முன் சட்டமன்றத்தில் உரையாற்றிய, முன்னாள் வஃக்ப் போர்டு தலைவரும் அண்ணாதிமுக எம்.எல்.ஏவுமான பதர்சயீத், அம்மா ஆட்சியில் வஃக்ப்போர்டுக்கு சுதந்திரமளித்திருந்தார். ஆனால் இன்று வஃக்பு சொத்துக்களை ஆளும்கட்சிக்கு லீசுக்கு கொடுக்கிறார்கள். மேலும் வஃக்பு வாரியத்தின் மூலம் கட்சி வளர்க்கிறார்கள் என்று சாடினார்.

உடனே வஃக்ப் அமைச்சர் மைதீன்கான், ஆற்காட்டார் உள்ளிட்டோர், உறுப்பினர் ஆதாரங்களை தந்தால் நடவடிக்கை எடுக்கத்தயார் என்றனர்.அதற்கு பதர் சயீத் பதிலளிக்கவில்லை. இந்நிலையில், பதர்சயீதின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து தற்போதைய வஃக்ப் வாரியத்தலைவர் சகோதரர் ஹைதர் அலி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில்,

பதர்சய்யீத் வஃக்ப்வாரிய தலைவராக இருந்தபோது, வஃக்பு வாரியத்தில் பதியப்பட்டிருந்த போரூர் ஷேய்க்மானியம் மஸ்ஜித் ஹைருன்னிஷா என்ற வஃக்புவை அது வஃக்பு சொத்துஇல்லைஎன தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். ௧௯௩௫ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ரெவின்யூ மேப்பில் உள்ள பள்ளிவாசலையே, இல்லாத பள்ளிக்கு ஒரு நிர்வாகக்குழு தேவையில்லை என உத்தரவுபோட்டு ஐந்நூறு கோடி மதிப்புள்ள 52. ஏக்கர் வஃக்பு சொத்தை இழக்கும் நிலைக்கு தள்ளினார். நாங்கள் சுப்ரீம் கோர்ட் மூலம் அந்த சொத்தை மீட்க நடவடிக்கை எடுத்துவருகிறோம்.

மேலும் பதர்சய்யீத் மீதானகுற்றச்சாட்டை நான் நிரூபிக்கத்தயார். நான் அவர்மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள், அவர் என்மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் பற்றி சி.பி.சி.ஐ.டி. விசாரிக்கவேண்டும். என்மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் நான் பொதுவாழ்விலிருந்து விலகத்தயார். பதர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் எம்.எல்.எபதவியை ராஜினாமா செய்யத்தயாரா? என ஹைதர் அலி சவால்விட்டுள்ளார்.

உண்மையில் ஹைதர் அலி அவர்களின் துணிச்சலான சவால் வரவேற்கத்தக்கதே! அதே நேரத்தில், பதர்சய்யீத் தங்கள் மீது குற்றம் சுமத்தும்வரை, ஐநூறுகோடி சொத்து பற்றி மூச்சு விடாதது ஏன்? என்னைப்பற்றி கண்டுகொள்ளாதவரை உன்னைப்பற்றி நான் கண்டுகொள்ளமாட்டேன் என்பது போன்ற அளவுகோலா? அல்லாஹ் அறிந்தவன்.

இதுவரை இருந்த தலைவர்களிலிருந்து ஹைதர் அலி அவர்கள் மாறுபட்டவர். தவ்ஹீத் கொள்கையுடையவர். எனவே கடந்த காலங்களில் இருந்தவர்களால் பறிபோன வக்பு சொத்துக்களை மீட்பதோடு, கடந்த கால தவறுகள் தங்களின் காலத்திலும் வராமல் பாதுகாப்பது உங்களின் கடமையாகும்.

'நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள்;உங்கள் பொறுப்புகள் பற்றி விசாரிக்கப்படும் என்ற நபிமொழியை மனதில் கொண்டால் எல்லாம் சீர்பெறும் என்பது திண்ணம்.

No comments: