"திண்ணமாக அல்லாஹ் மென்மையானவன்; அனைத்து விஷயங்களிலும் மென்மையை விரும்புகிறான்'' என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ, முஸ்லிம்)
"இஸ்லாத்தில் சிறந்த செயல் எது?'' என ஒரு மனிதர் இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவியதற்கு, ''நீர் (பிறருக்கு) உணவளிப்பதும், நீ அறிந்தோருக்கும், அறியாதோருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்'' என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு அம்ரு நூல்: புகாரீ, முஸ்லிம்)
(ஒரு முறை) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக்குள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு உதவி செய்" என்று கூறினார்கள்.
மக்கள், "இறைத்தூதர் அவர்களே! அக்கிரமத்துக்குள்ளானவனுக்கு நாங்கள் உதவுவோம். அக்கிரமக்காரனுக்கு நாங்கள் எப்படி உதவுவோம்?" என்று கேட்டனர்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "அவனுடைய கைகளைப் பிடித்து (அக்கிரமம் செய்யவிடாமல் தடுத்து)க் கொள்வாய் (இதுவே, நீ அவனுக்குச் செய்யும் உதவி)" என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நூல்: புகாரி
No comments:
Post a Comment