Tuesday, April 28, 2009
ஏர் 'மலையாள' இந்தியா!
இவர்கள்தான் இந்த நிறுவனங்களில் தங்களுக்கு கீழுள்ள அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் பெற்றுள்ளனர்.
ஏர் இந்தியாவின் தலைமைப் பொறுப்பு எப்போதும் மலையாளிகளுக்காகவே ரிசர்வ் செய்யப்பட்டுவிட்ட பதவி மாதிரி ஆகிவிட்டது. மலையாளி அல்லாதவர்கள் அந்தப் பதிவியை நினைத்துப் பார்க்கக் கூட முடியாத நிலை வந்துவிட்டது.
இதன் இப்போதைய சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநர் பாரத் பூஷன். இவருக்கு முன்பு இப்பதவியில் இருந்தவர் ரகு மேனன். அவருக்கும் முன்பிருந்தவர் துளசிதாஸ் மூவருமே மலையாளிகள், கேரள கேடர் ஐஏஎஸ் அதிகாரிகள்.
இன்னும பல பொதுத் துறை நிறுவன உயர் பதவிகளையும் மலையாள அதிகாரிகளே பிடித்துள்ளனர். இதன் சூத்திரதாரிகள் யார் தெரியுமா... பிரதமர் அலுவலகத்தில் உள்ள இரு மலையாள அதிகாரிகள்.
பிரதமரின் முதன்மை செயலாளராக இருப்பவர் டி.கே.ஏ. நாயர். மத்திய அரசின் கேபினட் செயலாளர் கே.எம்.சந்திரசேகர். இந்த இருவரும்தான் அனைத்து பொதுத்துறை நிறுவன உயர் அதிகாரிகளையும் நியமிக்கும் முக்கிய பொறுப்பில் அமர்ந்துள்ளனர்.
இதுவே தமிழ்நாட்டு ஐஏஎஸ் அதிகாரிகள் முக்கிய பொறுப்புகளில் இருந்தால் செய்கிற முதல் 'நல்ல காரியம்' இருக்கிற சக தமிழ் அதிகாரிகளை ஒழித்துக் கட்டுவதுதான்!
not only india dubai also some like that..
அரசு விருதை திருப்பி அனுப்பினார் கவிஞர் இன்குலாப்
கவிஞரும், நாடக ஆசிரியருமான பேராசிரியர் இன்குலாப், 2006-ம் ஆண்டில் பெற்ற தமிழக அரசின் "கலைமாமணி' விருதை திருப்பி அனுப்பியுள்ளார்.
இலங்கைத் தமிழர் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகளின் செயல்களால் அதிருப்தி அடைந்துள்ளதால் விருதை அரசிடமே திருப்பித் தருவதாக அவர் அறிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் கருணாநிதி காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கவிஞர் இன்குலாப், சென்னை புதுக்கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி 2002-ல் ஓய்வு பெற்றவர்.
Saturday, April 18, 2009
RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 10.
1991 ல் திரும்பவும் எனக்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் கட்சியான BJP யில் ஒரு பதவி கிடைத்தது. எர்ணாகுளம் மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டு நிறைய நிறைய பதவி கிடைத்தது. இதிலிருந்து கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கலாம் என்று நினைத்தேன். இதிலும் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் தலையிட்டு அதையும் கலைத்தார்கள். B.J.P.யும் ஆர்.எஸ்.எஸ்ஸும் எனக்கெதிராக மாறின.
நான் அங்கிருந்து சாந்தாவையும் அழைத்துக் கொண்டு இரவோடு இரவாக சொந்த உருக்குச் சென்று விடலாம் என்று எண்ணினேன். ஒரு இரவு நேரத்தில் நான் சாந்தாவை யாரும் பார்க்காமல் வீட்டில் இருந்து அழைத்து வந்தேன். இரவு முழுவதும் ஒரு முஸ்லிம் பெண்ணின் வீட்டில் தங்க வைத்தேன். நாங்கள் இருவரும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்று தெரிந்தும் அந்த முஸ்லிம் பெண் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தாள்.
இப்படி ஒரு விதமாக நான் ஊரை வந்தடைந்தேன். திருமணம் முடிந்த சில மணிகளுக்குள்ளாகவே காவல் துறையினர் எனது வீட்டிற்கு வந்தார்கள். ஸ்டேஷன் வருமாறு அவர்கள் என்னிடம் கூறினார்கள். இன்று என்னால் வர இயலாது நாளைக்கு வருகிறேன் என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தேன்.
மறுநாள் காலை ஸ்டேஷன் செல்லும்போது சாந்தாவின் அப்பாவும், அம்மாவும் அங்கே இருக்கிறார்கள். இருப்பத்தி ஐந்தாயிரம் ரூபாயையும், பத்து பவுன் நகையையும் இவன் திருடிக்கொண்டு போய் விட்டான் என்று சாந்தாவின் அப்பா சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தனிடம் புகார் கொடுக்கிறார்.
இவர் இப்படி பேசமாட்டார் என்று எனக்கு நன்றாக தெரியும். இதற்குப் பின்னாலும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் செயல்படுகிறார்கள் என்று எனக்குத் தோன்றியது. அது நிஜமாகவும் இருந்தது.
இதிலிருந்து எனது வீட்டில் பல பிரச்னைகள் உருவாகத் தொடங்கின. நாங்கள் இருப்பது இரண்டாவது அம்மாவின் வீடானதால் அவர்களுக்கு இத்திருமணத்தில் கொஞ்சம் கூட விருப்பமே இல்லை.
உடனே நான் தனியாக இவர்களை விட்டு பிரிந்து செல்வோம் என முடிவெடுத்து இரண்டு பேருமாக ஒரு சின்ன குடிசையில் எங்களது வாழ்கையைத் தொடங்கினோம். அப்போது நான் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்தேன். அதனால் கொஞ்சம் வருமானம் இருந்தது.
வேலை செய்து கொஞ்சம் பணம் சேர்த்து எனது ஊரில் அம்பேத்கர் காலனியில் ஒரு மூன்று செண்டு இடம் வாங்கினேன். அங்கே ஒரு சின்ன செட் கட்டினோம். அங்கே வைத்து எனக்கு ஒரு குழந்தை பிறந்தது. மீரா என்று அதற்குப் பெயர் சூட்டினேன். இப்போது ஜாஸ்மின் என்பது அவளது பெயர்.
இறைவன் நாடினால் வளரும்.
Wednesday, April 15, 2009
RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 9.
எங்களை வெறியூட்டி களத்தில் இறக்கிய நம்பியாரின் கூட்டத்திற்கோ எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. எங்களுக்கு ஊக்கம் கொடுத்துவிட்டு அவர்கள் தப்பித்துக் கொண்டார்கள்.
40 நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். இந்த மருத்துவமனை வாழ்க்கையில் எனக்கு ஒரு உற்ற துணையாக ஒருவள் இருந்தாள். அவள் வேறு யாருமில்லை நான் ஆர்.எஸ்.எஸ்ஸில் சாகா பயற்சிப் எடுக்கும் பொழுது பக்கத்தில் சாந்தா என்ற ஒரு பெண்ணுடன் பழகிவந்தேன். அந்தப் பழக்கம் காதலாக உருவானது. அவள் ஒரு தேவர் இனத்தைச் சார்ந்த ஆர்.எஸ்.எஸ். குடும்பத்தில் பிறந்த பெண்.
மருத்துவமனையில் எனது காலின் நிலைமை மிக மோசமாக இருந்தது. காலைத் துண்டித்து மாற்ற வேண்டும் என்று டாக்டர் சொல்லிவிட்டார். தனிமையான வாழ்க்கை அப்போதுதான் எனது மனதில் துக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் காலை முறித்தால் பிழைப்பிற்கு வழியில்லாமல் கஷ்டப்படுவேன் என்ற எண்ணத்தில் காலை துண்டித்து எடுக்க நான் சம்மதிக்கவில்லை.
உடனே நான் ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்து ஒரு ஆர்.எஸ்.எஸ். காரனான எனது தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவனிடம் உதவி தேடினேன். அவன் என்னை ஒரு நாட்டு வைத்தியரிடம் அழைத்துச் சென்றான். கடுமையான முயற்சியின் போது சிறிது நாளில் எனது காலும் சரியானது. உடனே நான் எனது வீட்டிற்குத் திரும்பினேன். அப்பொழுது ஆர்.எஸ்.எஸ். காரர்கள் என்னை அமைப்பிலிருந்து வெளியேற்றியிருந்தார்கள்.
சாந்தா என்ற அந்த ஆர்.எஸ்.எஸ். உயர் குடும்பத்தைச் சார்ந்த பெண்ணுக்கும் எனக்கும் தொடர்புகள் அதிகமாயின.
நான் தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்தவனாக இருப்பதால் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் இதைக் கடுமையாக எதிர்த்தார்கள். அப்போது தான் எனக்குத் தெரிந்தது:
இந்துக்கள் எல்லோரும் சமமானவர்; இந்து மதத்தை நாம் நன்றாக பேணிக் காப்போம்; என்ற இவர்களது கோஷம் வெறும் பொய்யானது என்று.
இதிலிருந்து ஆர்.எஸ்.எஸ்ஸிற்காக வேலை செய்வதை நான் தவிர்க்கலானேன். ஆர்.எஸ்.எஸ்ஸில் உயர் ஜாதி இனத்தைச் சார்ந்தவர்கள் சொகுசாக வாழ தாழ்த்தப்பட்ட மக்களான நாங்கள் பல இன்னல்களுக்கும், துன்பங்களுக்கும் ஆட்பட்டு எங்களது சொந்த வாழ்க்கையைப் பற்றியே சிந்திக்காமல் ஏமாந்தவர்களானோம்.
இறைவன் நாடினால் வளரும்.
Sunday, April 12, 2009
RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 8.
வேணுகோபாலன் நம்பியார் என்ற எங்களது BMS தலைவன் [இது ஆர்.எஸ்.எஸ்ஸின் தொழிலாளர் பிரிவு]என்னிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்தார். CITU வைச் சார்ந்த தங்கப்பன் என்ற நபரை கொலை செய்யவேண்டும் என்பதுதான் அந்தப் பொறுப்பு.
பெரும்படம் என்ற இடத்தைச் சேர்ந்த பிரகாசன், சித்திரப்புழையில் உள்ள ப்ரதீப்குமார், தலைவர் வேணுகோபாலன் நம்பியார் இவர்கள் எல்லாம் சேர்ந்து [தங்கப்பனை கொல்வதற்கு] ஒரு இரவு இரகசியத் திட்டம் தீட்டினோம். அடுத்த நாள் காலையில் தங்கப்பனின் எல்லா அசைவுகளையும் நாங்கள் கண்காணித்தோம். இரவில் தங்கப்பனை கொலை செய்ய வேண்டும் என்றுதான் தலைவரது கட்டளை.
சூரியன் மறையும் நேரத்தில்தான் தங்கப்பன் வீட்டிற்குச் செல்வான். இரவு நேரத்தில் தங்கப்பன் ஸ்கூட்டரில் வருவதை பார்த்தோம். அம்பல மேட்டில் உள்ள ரிபனரி வழியாக HOC க்கு சமீபமுள்ள சித்திரப்புழை பாலத்தில் ஸ்கூட்டர் வந்து கொண்டிருந்தது. அருகில் வந்ததும் தங்கப்பனை உருட்டுக் கட்டை கொண்டு தலையில் அடித்தேன். பிரகாசன் கத்தியை உருவி ஒரு குத்து குத்திய அதே மாத்திரத்தில் திடீரென ஒரு பஸ் எங்களது முன்னில் வந்து நின்றது. உடனே அங்கிருந்து நாங்கள் ஓடினோம். திரும்பி BMS
ஆபீசுக்கு செல்ல முடியாமல் கலகலப்பானதும் சிறிது நாள் நாங்கள் தலை மறைவாக வாழ்தோம். சில நாட்கள் கழித்து திரும்பவும் BMS க்கும், CITU க்கும் சண்டைகள் உருவானது. நான் BMS, RSS தொழிற்சங்கத்திற்காக CITU பார்ட்டியோடு போராட வேண்டி வந்தது.
இரு பார்ட்டிகளுக்கும் சண்டைகள் தொடங்கிற்று. இந்தச் சண்டைகளுக்கும், துன்பங்களுக்கும் இரையானேன். இந்தப் போரில் எனது ஒரு கால் முறிந்து தொங்கியது. இரத்தம் மடமடவென கொட்டிக்கொண்டிருந்தது. போலீஸ் சம்பவ இடத்திற்கு வந்ததும் நாங்கள் ஓடி தலைமறைவாக முற்பட்டோம். ஆனால் கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாமல் முறிந்து தொங்கும் எனது ஒரு காலையும், வடிகின்ற இரத்ததையும் பொருட்படுத்தாமல் போலீஸ் என்னைக் கடுமையாகத் தாக்கியது.
இவ்வளவு துன்பங்களையும் அனுபவித்த பிறகு நான் தொங்குகின்ற காலோடு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டேன். சிறிது காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தேன். இத்தனை துன்பங்களுக்குப் பிறகும் மருத்துவமனையில் நான் இருக்கும் பொழுது ஒரு ஆர்.எஸ்.எஸ். காரர்கூட என்னை வந்து சந்திக்கவே இல்லை.
ஆர்.எஸ்.எஸ்ஸின் திட்டத்தின் கீழ் நடந்த சண்டையில் மீன் விற்று தனது வாழ்க்கையை ஓட்டுகின்ற தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த உண்ணி கிருஷ்ணன் ஆர்.எஸ்.எஸ்ஸிற்காக தனது உயிரை இழந்தான். அவனது இறுதி சடங்குகளில் பங்கெடுப்பதற்குக் கூட எனக்கு முடியாமல் போயிற்று.
இறைவன் நாடினால் வளரும்.
Thursday, April 9, 2009
RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 7.
திப்பு போர் செய்யும் போது நமது மதத்தின் ஆண்களையெல்லாம் வெட்டி வீழ்த்திவிட்டு நம் சகோதரிகளான இந்துப் பெண்களைச் சிறை வைத்து ஆசை தீர கற்பழிப்பான். ஆலுவாமணிப்புரத்தைச் சேர்ந்த சிவனின் அனுக்கிரகத்தால் நமக்கு அப்போது அதிக நஷ்டம் ஏற்படவில்லை. என்றெல்லாம் வெறுப்பூட்டும் பொய்களை எங்களுக்குச் சொல்லித் தருவார்கள்.
இதையெல்லாம் இதயத்தில் சுமந்த என்னைப் போன்றவர்கள் முஸ்லிம்களை கடுமையாக வெறுத்தோம்; எதிர்த்தோம்; அழிக்க ஆசை கொண்டோம்.
முஸ்லிம்களின் தாடியைக் கண்டால் வெறுப்பு; அவர்களின் தோற்றத்தைக் கண்டால் வெறுப்பு; அவர்களை முழு உருவத்தில் காணும் போது கடித்துக் குதறிவிடலாம் என்ற எண்ணம். அதிலிருந்து முஸ்லிம்களை எதிர்ப்பதும் அவர்களுக்கெதிராகப் பிரச்சாரம் செய்வதும்தான் எனது முழுநேர தொழிலாக மாறியது.
அப்போது ஒப்பந்த ஊழியர்களின் சங்கம்[contract workers sangh] என்ற அமைப்பு ஆர்.எஸ்.எஸ்ஸின் கீழ் உருவானது.
இந்த ஒப்பந்த ஊழியர்களின் சங்கத்தின் செயலராக நான் வேலை பார்த்து வந்தேன். மேடைப் பேச்சுக்கு தகுதியானவன் என்றதால்தான் எனக்கு அந்தப் பதவி கிடைத்தது. அந்த சமயத்தில் எங்களது எதிரியாக CITU இருந்தது. அதற்கெதிராகப் போராடிட நாங்கள் தீர்மானித்தோம். குடிலில் பாஸ்கர மேனோன் என்பவர் CITU என்ற தொழிற் சங்கத்தின் தலைவர்.
இந்த இரண்டு அமைப்பைச் சேர்ந்தவர்களும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர்கள். சவர்ணர் என்ற மேல் ஜாதிக்காரர் [அதாவது ஆர்.எஸ்.எஸ். காரர்கள்] இந்தச் சண்டைகளில் கலந்து கொள்ளமாட்டார்கள். எங்களைத் தூண்டிவிட்டு விட்டு இவர்கள் அமர்ந்திருப்பார்கள்.
சொகுசாக வாழவேண்டும் என்ற சுயநலவாதிகளாக இருந்தார்கள் அந்த ஆர்.எஸ்.எஸ். காரர்களான சவர்ணர் என்ற மேல் ஜாதிக்காரர்கள். இவற்றையெல்லாம் அறியாமல் ஏதோ இந்து விடுதலைப் போராட்டம் என்ற நினைப்பில் மூடத்தனமாக நான் இயக்கத்துக்காக என்னை முழுமையாகத் தந்து கொண்டிருந்தேன்.
ஒரு நாள்,…………
இறைவன் நாடினால் வளரும்.
Wednesday, April 8, 2009
அயோத்தி: முஸ்லீம்கள் பராமரித்த இராமன், துரோகம் செய்த பா.ஜ.க - தலைமை பூசாரி பேட்டி
மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், பா.ஜ.க. கும்பல் வழக்கம் போல அயோத்தி பிரச்சினையைக் கையிலெடுத்து இந்துமதவெறியைப் பரப்ப முயற்சிக்கிறது. இந்நிலையில் ராமனுக்காகவோ அல்லது ராமன் கோவில் கட்டுவதற்காகவோ பா.ஜ.க. துரும்பைக் கூட அசைக்கவில்லை என பா.ஜ.க.வின் அரசியல் நாடகத்தைத் திரைகிழித்து, ராமஜென்ம பூமியின் தலைமைப் பூசாரி சத்யேந்திரதாஸ் பேட்டியளித்துள்ளார். “தெகல்கா” ஆங்கில வார ஏட்டில் நிருபர் அஜித் சாகியின் கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள பதில்கள் இவை:
பா.ஜ.க. ராமன் கோவில் பிரச்சினையில் பின்வாங்கவில்லை; கோவில் கட்டுவதில் உறுதியாக உள்ளது என எல்.கே. அத்வானி கூறியுள்ளாரே?
அவர் புளுகுகிறார். ராமன் கோவில் விவகாரத்தை பா.ஜ.க. அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே பயன்படுத்தியுள்ளது. ராமனுக்காகவோ அல்லது கோவில் கட்டுவதற்காகவோ அவர்கள் துரும்பைக் கூட அசைக்கவில்லை. இந்த விவகாரத்தில் பா.ஜ.க.வும், விஷ்வ ஹிந்து பரிசத்தும் சம்பந்தப்பட்டுள்ளவரை, ஒருபோதும் பிரச்சனை தீராது.
ஆனால், ராம ஜென்ம பூமியை விடுவிக்கத்தானே பாபர் மசூதி இடிக்கப்பட்டது?
பாபர் மசூதியை இடித்தது குழந்தை ராமனுக்கு (மசூதிக்குள் வைக்கப்பட்டிருந்த ராமன் பொம்மை) துயரத்தையே உருவாக்கியுள்ளது. பாபர் மசூதி இருந்தவரை அம்மசூதி, ராமன் சிலையை வெயிலிலும் மழையிலும் பாதுகாத்து வந்தது. ஆனால், இப்போதிருக்கும் தற்காலிகக் கூரையில் மழைத் தண்ணீர் ஒழுகுகிறது. மழைத் தண்ணீரில் இருந்து சிலையைப் பாதுகாக்க நான் ஒரு குடையை
வைக்க வேண்டியதாயிற்று. பாபர் மசூதி இருந்தவரை ராமன் சிலை பட்டாடைகளுடன் ஜொலித்தது. இன்றோ கந்தலாடை உடுத்திப் பிச்சைக்காரனைப்போல நிற்கிறது. மசூதி தகர்ப்புக்கு முன்பு ராமனைப் பக்தர்கள் மிக அருகில் சென்று தரிசிக்க முடியும். ஆனல் இன்று, குறைந்தபட்சம் 16 மீட்டர் தள்ளி நின்றுதான் பக்தர்கள் கும்பிட வேண்டும். வருகின்ற பக்தர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துவிட்டது. பாதுகாப்புப் படையின் புண்ணியத்தால் கோவிலுக்கு வருபவர்கள் சுற்றிச் சுற்றி நெடுந்தூரம் நடந்துவர வேண்டியுள்ளது. போலீசுத்துறை ஒவ்வொரு பக்தரையும் தீவிரமாகப் பரிசோதிக்கிறது. சாதாரண பூசைப் பொருட்களைக்கூட கொண்டுவர யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. பஜனைப் பாடல்களோ, ராமகாதையோ ஒலிப்பதில்லை. ஒலி பெருக்கிகள் கூட மவுனமாகிவிட்டன. முதல்முறை வருபவர்கள் மறுமுறை வரக்கூடாது என முடிவு செய்து விடுகின்றனர். பாபர் மசூதி இருந்தவரை இப்படியெல்லாம் நடந்ததில்லை. ஆயிரக்கணக்கானோர் வந்து சென்றனர். ஆனால் பாபர் மசூதியை இடித்ததன் மூலம் குழந்தை ராமனின் கோவிலை ராமபக்தர்கள் சிதைத்துவிட்டனர்.
எப்போது ராமர் கோவில் கட்டப்படும் என எண்ணுகிறீர்கள்?
எப்போது இந்துக்களின் உணர்வுகளும் முஸ்லீம்களது உணர்வுகளும் இவ்விசயத்தில் ஒன்றுபடுகிறதோ, அப்போதுதான் அது கட்டப்படும். எப்போது இரு மதத்தவரின் மனதிலும் “உலகிலேயே சிறந்த நாடு நம் இந்தியா - சாரே ஜஹான் சே அச்சா” எனும் கவிஞர் இக்பாலின் வரிகள் பதிகின்றதோ அப்போது.
அயோத்தியில் விஷ்வ இந்து பரிஷத்துக்கு ஆதரவு எப்படி இருக்கிறது?
பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு ஒன்றிரண்டு பழைய ஆட்களைத் தவிர வேறு எந்த சாதுக்களோ, மடாதிபதிகளோ விஷ்வ இந்து பரிஷத்தில் சேரவில்லை. அவர்கள் மதத்தின் பெயரால் இந்தியர்களைத் தவறாக வழிநடத்துகின்றனர் என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். அவர்கள் தில்லி அரியணையைக் கைப்பற்றுவதற்காக ராமனின் நாமத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.
இதனால் நீங்கள் இந்துத்துவா சக்திகளிடையே எதிரிகளை சம்பாதிக்கவில்லையா?
அவர்கள் என்னைத் தலைமை அர்ச்சகர் பதவியிலிருந்து நீக்கப் பலமுறை முயன்றார்கள். எனக்கு ராமனின் மீது பக்தியில்லை என்றும் சொல்லிப் பார்த்தார்கள். பைசாபாத் ஆணையரிடம் என்னை நீக்கச் சொல்லி மனுக் கொடுத்தனர். ஆனால் மசூதி இடிப்பு வழக்கு முடியும் வரை தற்காலிகக் கோவிலில் எந்தவொரு மாற்றமும் செய்யக் கூடாது என வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பு, எனது தலைமை அர்ச்சகர் பதவியைக் காப்பாற்றி வருகிறது.
யார் ராமர்கோவிலை நிர்வகிக்கின்றனர்?
பைசாபாத் ஆணையாளர்தான் பொறுப்பாளர். எல்லா காணிக்கைகளும் ஒரு வங்கிக் கணக்கில் போடப்படும். அதிலிருந்து ஒரு பகுதி “குழந்தை ராமனின்” பராமரிப்புக்குச் செலவிடப்படும். அதுவும் நான் ஊடகங்களில் முறையிட்டதற்குப் பிறகு, சில நேரங்களில் மிகுந்த இடர்ப்பாடுகளுக்கிடையில்தான் கிடைக்கிறது. மீதமுள்ள பணத்தைத் தொடமுடியாது.
அயோத்தி முஸ்லீம்களைப் பற்றி உங்களது கருத்து என்ன? அவர்களில் ஒருவர் பாபர் மசூதியை மீட்க வேண்டும் என்று வழக்கு தொடுத்துள்ளாரே?
அவர்கள் அயோத்தியின் உண்மையான குடிமக்கள். நமது சிலைகளுக்கு மாலைகட்டிக் கொடுப்பதும், துணிகளைத் தைத்துத் தருவதும் அயோத்தி முஸ்லீம்கள்தான். இந்த முஸ்லீம்கள் கொடியவர்களாக இருந்தால், எங்கள் விழாவுக்கு அவர்கள் கொடுக்கும் பட்டாசுகளில் ஒரு வெடிகுண்டைச் சேர்த்து வைத்து அனுப்பி இருக்க முடியுமே! ஆனால் அவர்கள் இதுவரை அப்படி செய்யவில்லை; இனியும் அப்படிச் செய்யப் போவதில்லை.
இந்தப் பிரச்சனைக்கு என்னதான் தீர்வு?
இந்தப் பிரச்சனைக்கு அரசியல்வாதிகள் என்றைக்கும் தீர்வுகாணப் போவதில்லை. இந்து ஒருவரையும், முஸ்லீம் ஒருவரையும் தேர்வுசெய்து அவர்களிருவரும் பேசி இதற்கு ஒரு தீர்வுகாணச் சொல்லுங்கள். அதனை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என உறுதி கூறுங்கள். அந்த மட்டில் சுலபமானதுதான்.
இந்துவெறியர்கள் கடவுள் ராமன் மீது பற்றோ, பக்தியோ கொண்டவர்களல்ல. ராமனை வைத்து ‘இந்து’க்களை அணிதிரட்டிக் கொண்டு முஸ்லிம்களைத் தாக்கி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி, இந்துவெறி பாசிச பயங்கரத்தை நிறுவுவதே அவர்களின் நோக்கம். அதனால்தான் ராமன் பொம்மையை அம்போவென விட்டுவிட்டு ராமன் கோயிலைக் கட்டப்போவதாக இன்னமும் வெறியூட்டி வருகிறார்கள். இந்துவெறியர்களின் முகவிலாசத்தையும், மத நம்பிக்கைக்கும் மதவெறிக்கும் உள்ள வேறுபாட்டையும் உலகுக்கு உணர்த்திவிட்டு, கடவுள் ராமன் பொம்மை அயோத்தியில் பிச்சைகாரனாக நின்று கொண்டிருக்கிறது.
Tuesday, April 7, 2009
பாதிரியார் மீது கட்டாய மதமாற்றம்-ரூ.5 கோடி மோசடி புகார்
சென்னை அண்ணாசாலை மற்றும் தியாகராய நகரில் பாதிரியார் ஸ்டீபன் லூயிஸ் என்பவர் வேலை வாய்ப்பு அலுவலகம் நடத்தி வந்தார். அதன்மூலம் வெளிநாட்டு வேலை வாய்ப்பு வாங்கி தரப்படும் என விளம்பர செய்திருந்தார்.
இதை பார்த்த சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சண்முகவேல் என்பவர் தனது இரு மகன்கள் சுகுமாறன், சுரேஷ்குமார் ஆகியோருக்கு வெளி நாட்டில் வேலை வாங்கி தரும்படி கேட்டுள்ளார்.
அப்போது பாதிரியார் ஒரு நபருக்கு ரூ 2 லட்சம் கொடுத்தால் பைபிள் மெடிலின் என்ற அறக்கட்டளை மூலம் இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளில் ஒன்றில் வேலை வாங்கிவிடலாம் என கூறியுள்ளார்.
இதையடுத்து சண்முகவேல் ரூ. 4 லட்சத்தை பல தவணைகளில் அவரிடம் கொடுத்துள்ளர். அதற்கு ஒரு ரசீதும் தந்துள்ளார். பணம் முழுமையாக கொடுத்து பல மாதங்கள் ஆகியும் அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. அதற்கான அறிகுறியும் தெரியவில்லை.
இதையடுத்து சண்முகவேல் பாதிரியாரிடம் சென்று முறையிட்டுள்ளார். அப்போது பாதிரியார் நீங்கள் கிறிஸ்துவர்களாக மாறினால், எளிதாக வேலை கிடைத்துவிடும் என கூறியுள்ளார். ஏற்கனவே அவர் வசம் ரூ. 4 லட்சம் கொடுத்திருப்பதால் அவர்களும் வேறு வழியில்லாமல் மதம் மாறியுள்ளனர்.
ஆனாலும், அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. தொடர்ந்து அவரிடம் சண்முகவேல் வற்புறுத்த, அவர் பணத்தை திருப்பி பெற்றுகொள்ளுங்கள் போலி செக் கொடுத்தார். மீண்டும் அவரை சென்று பார்த்த போது தனக்கு பெரிய புள்ளிகளை தெரியும் இனியும் இங்கு வந்தால் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதையடுத்து பாதிரியார் மீது பண செய்தது, மதமாற்றம் செய்தது, போலி செக் கொடுத்தது ஆகிய புகார்களுடன் சென்னை போலீஸ் கமிஷ்னர் ராதாகிருஷ்ணனை அணுகினார் சண்முகவேல்.
இவரை போல மேலும் பலரும் மோசடி பாதிரியார் மீது புகார் கொடுத்துள்ளனர். அவர் மொத்தம் ரூ. 5 கோடி வரை மோசடி செய்திருக்கலாம் என தெரிகிறது.
இதையடுத்து போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
Sunday, April 5, 2009
RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 6.
அந்த ஒரு மணி நேரத்தில் இரண்டு விதமான பயிற்சிகள் தருவார்கள். மனதைக் கட்டுப்படுத்துவதற்கான பயற்சியும், உடல் பயற்சியும் தருவார்கள். சவர்ணர் என்ற இனத்தைச் சார்ந்தவர், தாழ்த்தப்பட்ட என்னைப் போன்றவர்களுக்குத்தான் பயற்சிகள் தருவார். இவர்களின் இயக்கத்திற்கு தாழ்த்தப்பட்ட நாங்கள் நன்றாகப் பயன்பட்டோம்.
இந்தப் பயற்சிகளைப் பெறும் பொழுது ஆர்.எஸ்.எஸ். மீது எங்களுக்கு ஆழமான அழுத்தமான பிடிப்பு ஏற்படும்.
இந்தப் பயற்சியைப் பெறுபவர்கள் தங்களை முழுமையாக ஆர்.எஸ்.எஸ். ல் இணைத்துக் கொள்வார்கள்.
இந்த அமைப்பில் சேர்ந்த உடனேயே கிறிஸ்தவர்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும் வெறுப்பு உண்டாயிற்று. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் இவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் இந்தியாவிற்கெதிரானதென்று எங்களை நம்பவைத்தார்கள். அது முதல் முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் எதிரிகளாகவே பார்த்தேன்.
ஆர்.எஸ்.எஸ். காரர்கள் முதலில் முஸ்லிம்களுக்கெதிராக எடுத்து வைக்கும் குற்றச்சாட்டு என்னவென்றால்,
* நாமெல்லாம் கிழக்குப் பக்கம் நின்று கடவுளை வணங்கும் போது, முஸ்லிம்கள் மேற்குப் பக்கம் நோக்கித் தொழுகிறார்கள்.
* நாம் கோமாதாவை[பசுவை] சாப்பிடக்கூடாது என்றால் அவர்கள் சாப்பிடுகிறார்கள்.
* நாம் வலது பக்கம் வேட்டி கட்டினால் அவர்கள் இடது பக்கமாக வேட்டியைக் கட்டுகிறார்கள்.
மொத்தத்தில் முஸ்லிம்கள் இந்து ஆச்சாரங்களுக்கு எதிராவே தங்களது வழ்க்கையை ஓட்டுகிறார்கள். இந்துக்களாகிய நாம் தான் இந்த நாட்டுக்குச் சொந்தக்காரர்கள்.
ஆனால் இந்து என்ற மதத்தில் தாழ்த்தப்பட்ட நான் ஒரு பகுதியல்ல என்ற விவரம் எனக்குத் தெரியாது. இந்து என்ற மதத்தில் தாழ்த்தப்பட்ட எனக்கு எந்த மதிப்பும் எந்த உரிமையும் இல்லை. ஒரிரு சாதியினரும், பிராமணர்களும் தான் இந்து மதத்திற்குச் சொந்தக்காரர்கள் என்ற விவரம் அப்போது எனக்குத் தெரியாது.
இந்து மதத்திற்காக உயிரை அற்பணிக்க இவர்கள் மூளைச் சலவைச் செய்து தாழ்த்தப்பட்ட எங்களை பயன்படுத்திக் கொள்வார்கள். இதையெல்லாம் தெரியாமல் அப்போது நான் முழுநேர ஊழியனாக ஆர்.எஸ்.எஸ்ஸில் பணியாற்றி வந்தேன்.
இவர்கள் திப்பு சுல்தானைப் பற்றி ஒரு அபாண்டமான பொய் வரலாற்றைக் கூறுவார்கள்.
இறைவன் நாடினால் வளரும்.
Saturday, April 4, 2009
RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 5.
ஒரு விதமாக எனது தங்கை 17 வயதை அடைந்தபோது, நான் சம்பாதித்ததின் மூலம் மூன்று பவன் நகையும் ஆயிரம் ரூபாய் வரதட்சணையும் கொடுத்து எனது தங்கையின் திருமணத்தை நடத்தி முடித்தேன்.
அம்மாவிடம் சென்று திருமணத்திற்காக அழைத்தேன். அம்மாவோ அவள் பெற்ற பிள்ளையின் திருமணத்திற்கு வரவே இல்லை. புது கணவனும் பிள்ளையுமாக அவள் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தாள்.
சொந்தம் என்று சொல்லிக்கொள்ள எனக்கு இருந்த ஒரே சொத்து எனது தங்கை. தங்கையை ஒரு மாதத்திற்கு ஒரு முறை சென்று பார்த்து வருவேன். என்னால் முடிந்தளவு பொருட்களை வாங்கிச் செல்வேன். என் தங்கையைப் பார்த்துவிட்டு வரும்போது தான் எனது மனதுக்கு ஒரு நிம்மதி. மூன்று பிள்ளைகளைப் பெற்று அவள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தாள். நான் தனியாக இருந்தேன்
இதன் பிறகுதான் எனது முழுக் கவனமும் ஆர் எஸ் எஸ் மீது சென்றது. ஆர்.எஸ்.எஸ். ன் பணியில் நான் தனியொரு சுகத்தைக் கண்டேன். கல் வெட்டும் தொழில் முடிந்தால் முழு கவனமும் ஆர்.எஸ்.எஸ்ஸிற்காகத்தான்.
சிறு பருவத்தில் நான் ஊரில் கோவிலுக்குச் சென்றுவிட்டு வெளியே வரும் போது சில இளைஞர்கள் வெளியில் நின்று இந்துக்களெல்லாம் ஒன்று; இந்து நடைமுறை ஒன்றாகும்; என்று பாடுவர். இவர்கள்தான் இந்த ஆர்.எஸ்.எஸ் காரர்களா? என்று எனது சிறு வயதில் நான் பார்த்தவற்றை வைத்துக் கணித்துக் கொள்வேன்.
ஒரு கும்பலாக கோவிலுக்கு வெளியே இருந்து ஒரு நபர் சொல்லிக்கொடுக்க மற்றவர்களெல்லாம் இணைந்து பாடுவதும், கோவிலில் வேறு சில வணக்கங்களில் ஈடுபடுவதும்தான் என்னை அந்த அமைப்பில் ஈர்த்த்து. சொந்த பந்தம் எதுவுமில்லாத எனக்கு ஆர்.எஸ்.எஸ்.ஒரு சொந்தமாக மாறியது.
அதற்காக கடுமையாக உழைக்க நான் உறுதி பூண்டேன். எனது நாடு முஸ்லிம்கள் அதிகமாக வாழக்கூடிய ஒரு நாடாகும்; முஸ்லிம்கள் இந்த நாட்டின் கொள்ளைக்காரர்கள்; குழப்பக்காரர்கள்; கோவில்களை இடிக்ககூடியவர்கள்; என்றெல்லாம் அவர்கள் பாடம் சொல்லித்தந்தார்கள்.
இதையெல்லாம் கேட்ட எனக்கு அவர்களோடு ஒரு விதமான நெருக்கம் ஏற்பட்டது. அவர்களது சாகாவிலும் நான் கலந்து கொண்டேன். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் சாகாவில் கலந்து கொள்வேன்.
இறைவன் நாடினால் வளரும்.
Thursday, April 2, 2009
RSS.முழு நேர ஊழியனின்.. பேட்டி - 4.
முஸ்லிகள் – இஸ்லாம்தான் இந்தியாவின் அனைத்துப் பிரச்னைகளையும் தீர்க்க வல்ல மார்க்கம் என்பதை எடுத்துச் சொல்லிடவேண்டும்.
இந்த நிலையில் “இந்தியாவின் விடுதலை இஸ்லாத்தின் மூலம்” எத்துணை பொருள் செறிந்த, காலத்திற்கேற்ற முழக்கம் என்பதை உணர்ந்தேன்.
அம்பேத்கர் “மதமாற்றம் தான் தீண்டாமைக்குத் தீர்வு” எனக் குறிப்பிட்டார். அம்பேத்கர் இஸ்லாத்திற்கு வந்திருக்கவேண்டும். அப்போது இருந்தவர்கள் இஸ்லாத்தைச் சரிவர அவரிடம் எடுத்துச் சொல்லவில்லை என்றே எனக்குப் படுகின்றது.
நான்: “இல்லை” (நான் குறுக்கிட்டேன்.)
“அம்பேத்கருக்கு அழைப்பே விடுக்கப்பட்டது. இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளச் சொல்லி ஹைதராபாத் நிஜாம் அவர்கள் அம்பேத்கர் அவர்களுக்கும் அவர்களோடு இஸ்லாத்திற்கு வருபவர்களுக்கும் எல்லா உதவிகளையும் செய்திட முன் வருவதாகச் சொன்னார்.
டாக்டர் அம்பேத்கர் அவர்கள் ஒரு கல்வி கூடத்தை ஆரம்பிக்க முன் வந்த போது, அதற்கான இடத்தை அவர் பெறுவதில் முஸ்லிம்கள் பெருமளவில் உதவி செய்தார்கள்.
தலித் மக்களை மட்டுமே கொண்ட அந்தக் கல்விக் கூடத்தில் பாடங்கள் பயிற்றுவிக்க உயர்ஜாதி ஆசிரியர்கள் முன்வாராத போது முஸ்லிம்கள் முன் வந்தார்கள்.
அதே போல்தான் புகழ்பெற்ற பூனா ஒப்பந்தத்திற்கு முன்னால் நடை்பெற்ற வட்டமேஜை மாநாட்டில் ஜின்னா அத்தனை எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாமல், முஸ்லிம்களுக்குக் கிடைக்கவிருந்த சலுகைகளை விட்டுக்கொடுத்திடவும் தயாராக இருந்தார்.
இதற்கு அம்பேத்கர் அவர்களும் நன்றி சொல்லியுள்ளார்கள்”
என்று அவரிடம் விளக்கிவிட்டு, “நீங்கள் அடுத்து என்ன செய்வதாகத் திட்டம்?” என்று கேட்டோம். அவர் தொடர்ந்தார்.
பிலால் சாஹிப்: அடுத்து என் மக்களை விடுவிக்க என்னால் இயன்ற அளவு எல்லாவற்றையும் செய்திடத் தயாராக இருக்கின்றேன்.
நான் திண்ணையில் தூங்குகின்றேனா, உண்கின்றேனா என்பவையெல்லாம் எனக்குப் பொருட்டல்ல.
என் மக்களின் விடுதலைக்குப் பாடுபட்டிட சித்தமாக இருக்கின்றேன்.
நான்: உங்கள் வாழ்க்கை ஒரு வித்தியாசமான வரலாற்றைக் கொண்டது. முஸ்லிகளையும் இஸ்லாத்தையும் வெறுக்கக் கற்றுக் கொண்டு, முஸ்லிகளுக்கு எதிராகத் தீவிரமாகப் பணியாற்றிட முன் வந்து இறுதியில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள்.
இதற்கு முன்னால் தமிழகத்தில் அப்துல்லாஹ் அடியார் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள்.
பகுத்தறிவு பாசறைகள் என்று பறைசாற்றப்பட்டவற்றிலிருந்து வந்ததால் அவர் இஸ்லாத்தை ஏற்றுகொண்டது ஒரு புது வரலாற்றையும், அனுபவத்தையும், அணுகுமுறையையும் தந்தது.
அதன் பின்னர் அப்துல்லாஹ் அடியார் அவர்கள் வழி இஸ்லாத்தை அறிந்து அதனை ஏற்றுக்கொண்ட கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் அவர்கள், கம்யூனிசத்திலிருந்து வந்தார். அஃது ஒரு புதிய வரலாற்றையும் அனுபவத்தையும் தந்தது.
நீங்கள் ஹிந்துத்வாவிலிருந்து வந்திருப்பது பிறிதோர் புது அனுபவத்தைத் தருகின்றது.
உங்கள் வாழ்க்கையை எழுதி மக்களுக்குச் சொன்னாலே அஃதோர் விடுதலை வேட்கையை ஏற்படுத்துமே?
பிலால் சாஹிப்: ஆமாம். ஆனால் என்னால் அமர்ந்து எழுதுவது இயலாது. நான் களத்தில் உழைத்துப் பழக்கப்பட்டவன். நீங்கள் யாரையாவது அமர்த்தினால் நான் சொல்கின்றேன். அவர் எழுதித் தரலாம்.
இந்தப் பணிக்காக தேஜஸ் மலையாளப் பத்திரிகையின் ஆசிரியரை நியமித்து விட்டு வந்தேன்.
எங்களை முதலில் அழைத்துப்போய் பிலால் அவர்களின் வீட்டைக் காட்டிய இரண்டு சகோதரர்களும் பிலால் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணாகவே இருந்து வருகிறார்கள் என்பதைத் தெரிந்தோம் பின்னால்.
முஸ்லிகள் ஒன்றைக் கவனிக்க வேண்ட
RSS.முழு நேர ஊழியனின்.. பேட்டி - 3.
அமுக்கப்பட்ட மக்களின் - ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான குரல் நாசர் மஹ்தனியிடமும், அவருடைய இயக்கத்திலும் எதிரொலிக்கக் கண்டேன்.
ஆகவே நான் நாசர் மஹ்தனியின் கூட்டங்களைத் தொடர்ந்து கவனிக்கலானேன்.
அவருடைய உத்வேகம் முஸ்லிகள், தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் இப்படிப் பலரும் அங்கம் வகிக்கும் ஓர் பெரும் இயக்கமாக பி.டி.பி. வளர்ந்து வருவதைக் கண்டேன்.
என்னையும் அந்த இயக்கத்தில் இணைத்துக் கொண்டு பணியாற்றினேன்.
என் இயல்பான, எதார்த்தமான ஈடுபாடு எல்லோரையும் கவர்ந்தது. பி.டி.பி.யிலும், நான் மெல்ல மெல்ல உயர்ந்தேன்.
பி.டி.பி.யின் தொண்டர்கள் என்னிடம் பாரபட்சமின்றி காட்டிய பாசம் என்னுள் உண்மையான அன்பைப் பிரவாகம் எடுத்து ஓடச்செய்தது.
பி.டி.பி.யிலுன், நான் கொட்டிய உழைப்பால் அதன் முன்னணி தலைவர்களுள் ஒருவனானேன்.
இப்போது நான் முஸ்லிகளோடு நித்திய வாழ்க்கை தொடங்கிவிட்டேன்.
அதாவது நான் ஆரம்பத்தில் எந்த முஸ்லிகளை வெறுப்பதற்குக் கற்றுத் தரப்பட்டேனோ அந்த முஸ்லிகளை நான் இப்போது நேரில்
சந்திக்கின்றேன்.
எந்த முஸ்லிம்களை இங்கே இந்த நாட்டில் வாழவிட்டிருப்பது தன்மானக் குற்றம் என எண்ணினேனோ அந்த முஸ்லிகளோடு நான் வாழத் தொடங்கி இருகின்றேன்.
(இதைச் சொல்லிக்கொண்டிருக்கும்போது ஒரு வினாவைத் தொடுக்கின்றார்)
நான் என் வாழ்க்கையைப் பற்றி மேற்கொண்டு சொல்வதற்கு முன்னால் உங்களிடம் ஒரு கேள்வி:
நாசர் மஹ்தனியைப் பற்றி உங்கள் கருத்தென்ன ?
நாசர் மஹ்தனி ஏனைய முஸ்லிம் அரசியல் இயக்கங்களை போல் ஓர் இயக்கத்தை நடத்திக் கொண்டிருப்பவர். விஷேஷமாகச் சொல்வதற்கு எதுவுமில்லை. மேற் கொண்டு சொல்லுங்கள்.
நாசர் மஹ்தனி எனக்கு இஸ்லாத்தைப் பற்றியத் தெளிவுகளைத் தந்தவர். அதனால் நான் அவருக்கு நன்றி கடன்பட்டிருக்கின்றேன்.
P.D.P.யின் தலைவர் நாசர் மஹ்தனியின் பெயரைக் குறிப்பிடும் போதெல்லாம் முஹம்மத் பிலால் தன்னுடைய நன்றிப்
பெருக்கைக் காட்டுகின்றார். தான் இஸ்லாத்தில் இணைவதற்கு அதாவது நேர்வழி பெறுவதற்கு காரணமாய் இருந்தவர் நாசர் மஹ்தனி என்பதால் அவர் அவரை நன்றியோடும், கண்ணியத்தோடும் பார்க்கின்றார். நான் இதை அவரிடம் கேட்டும் விட்டேன். அவர் அதை ஒப்புக் கொண்டார். தனக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் நாசர் மஹ்தனி தனக்கும், தனது சமுகத்திற்கும் நேர்வழி காட்டியிருக்கின்றார் என்பதுதான் அவரது நன்றிப் பெருக்கிற்குக் காரணம்.
[மீண்டும் தொடர்ந்தார்]
நான் பி.டி.பி.யில் சேர்ந்தபோது முஸ்லிம்களோடு வாழ ஆரம்பித்திருந்தேன்.
அதாவது நான் முஸ்லிம்களை ஊன்றிக் கவனித்தேன். அவர்களோடு வாழ்ந்தேன்.
பி.டி.பி யின் பணிகளுக்காக நான் வெளியூர் சென்றபோதெல்லாம் பி.டி.பி யின் பிரதிநிதிகள் என்னை வரவேற்றார்கள்.
முஸ்லிம்கள் அதிலும் பஞ்சையர்கள் - அன்றாடம் காய்ச்சிகள் யாதார்த்தமாக என்னை வரவேற்றார்கள். அவர்கள் உழைத்து ஈட்டிய பொருளில் எனக்குத் திண்பண்டங்கள் வாங்கித் தருவார்கள். இவர்கள் காட்டிய யதார்த்தம் என்னை வெகுவாகக் கவர்ந்தது.
அது வரை நான் எங்கேயும் சந்திக்காக ஒரு எதார்த்தத்தை இந்தத் தொண்டர்களிடம் சந்தித்தேன்.
அதே போல் நாசர் மஹ்தனி கண்ணியப்படுத்தப்படும் போதும், அவர் கற்றவர்களாலும், செல்வந்தவர்களாலும் விருந்து வைத்து உபசரிக்கப்படும் போதும் நான் விலகி நிற்க வேண்டியதில்லை. நான் அவர்களோடு இயைந்து இணைந்து நிற்க முடிந்தது; உண்ண முடிந்தது; உறங்க முடிந்தது.
அதன் பின்னர் முஸ்லிம்களால் மிகவும் அதிகமாக மதிக்கப்படும் பிலால் (அல்லாஹ்வின் ஆசியும் அருளும் அவர்கள் மீத
ு உண்டாக்கட்டும்) அவர்களின் வரலாற்றைக் கற்றேன்.
முஹம்மது(ஸல்)அவர்கள் பிலால்(ரலி)அவர்களை வைத்திருந்த விதமும், அவர்கள்பால் கொண்டிருந்த அன்பும் என்னை மிகவும் நெகிழச் செய்தது. இன்றளவும் பிலால் (ரலி) அவர்கள் பால் முஸ்லிம்கள் காட்டும் நேசத்திற்கும், பாசத்திற்கும் அளவேயில்லை. இது என்னுள் பல நிரந்தர மாற்றங்களைக் கொண்டுவந்தது.
தொழுகையில் காட்டும் சமாதானம் அல்லாஹ்வின் முன் அனைவரும் சமம் என்ற எண்ணத்தை என்னுள் ஆழப்பதிய வைத்தது.
இஸ்லாத்தை ஏற்பது என முடிவு செய்தேன். சில நூல்களைக் கற்றேன். மனதால் மாறினேன். இறைவனின் அடியானாக, இது நடந்தது இரண்டு மாதங்களுக்கு முன்.
நான் முஹம்மது பிலால் ஆனேன். என் மனைவி ஃபாத்திமா ஆனாள். என் முதல் குழந்தை ஷாகிதா ஆனாள். இரண்டாவது குழந்தை தஸ்லீம் ஆனாள்.
இப்போது நான் குழிவேலிப் புலியில் இருக்கிறேன்.
இங்கே ஒரு பள்ளிவாசல் இருக்கின்றது. இந்த பள்ளிவாசலுக்கு எதிர்புறத்தில் ஒரு முஸ்லிம் இருக்கின்றார். அவருடைய வசதியையும், வளத்தையும் வைத்துப் பார்க்கும் போது நான் எந்த விதத்திலேயும் அவருக்கு ஈடாக மாட்டேன்.
ஆனால் பள்ளியில் தொழப்போகும்போது நான் முன்னே சென்றால் நான் முன் வரிசையில் தொழுவேன். அவர் எனக்குப் பின்னால் நின்று தொழுவார். அவர் அல்லாஹ்வை ஸஜ்தா செய்திடும் போது என் கால் அவர் தலையைத் தொடும்.
இதில் அல்லாஹ்வைத் தொழுவதில் அணிவகுத்து நிற்பதில் பின்னே நிற்பவன், முன்னே நிற்பவன் என்ற எண்ணங்கள் யாரிடமுமில்லை.
மாறாக அந்தத் தனவந்தர் என்னைப் பார்த்திடும் போதெல்லாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றார். கட்டித் தழுவுகின்றார். உடன் பிறந்த ஓர் சகோதரனாகவே என்னை நடத்துகின்றார்.
இது என்னுள் நிரந்தர களிப்பை ஏற்படுத்துகின்றது.
இறைவன் நாடினால் வளரும்.
பிரிவு: RSS ஊழியன், நூல்கள் |
Wednesday, April 1, 2009
RSS.முழு நேர ஊழியனின்.. பேட்டி - 2.
ஒர் ஆர்.எஸ்.எஸ். காரனாக இருந்த வேலாயுதன் என்ற நான் பிலாலானதை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் குன்னத்துக்காடு பஞ்சாயத்தில் பிணர்முண்டா என்ற கிராமத்தில் பிறந்தேன்.
எனது தகப்பனார் பெயர் ஐயப்பன். தாய் காளி. 1962-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ம் நாள் என்னுடைய பிறந்ததினம். எனது தகப்பாரின் மூன்று திருமணத்தில் 7 குழந்தைகள். அண்ணன் குமாரன், தம்பி சுரேஷ், சகோதரிகள் அம்மிணி, கிரிஜா, பிந்து மஞ்ஜுளா பின்னர் நான்.
நானும் தங்கை அம்மிணியும் ஒரே தாயின் பிள்ளைகள். தந்தை ஒரு செங்கல் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். அம்மா விவசாயம் செய்யக்கூடியவளாகவும் இருந்தாள்.
எனக்குப் பதினோரு வயது இருக்கும்போது…….,
எனது தந்தை வேலைக்குச் சென்றால் திரும்புவதற்கு சில நாட்கள் ஆகும்.
கோலஞ்சேரிக்குப் பக்கத்தில் கடையிருப்பு என்ற இடத்தில் கொன்னனின் வீட்டில்தான் எனது தந்தை தங்குவார். எனது தந்தை அந்த [கொன்னனின்]வீட்டில் தங்குவதில் எனது அம்மாவிற்கு சில சந்தேகங்கள் எழுந்தன. அந்த சந்தேகங்கள் சில நாட்களுக்குப் பிறகு நிஜங்களாயின.
எனது அப்பாவிற்கும் கொன்னனின் மனைவிக்கும் சில தொடர்புகள் ஏற்பட்டு அது திருமணம் வரை சென்று முடிந்தது.
அப்பா தினசரி இரவு குடித்து விட்டு வந்து அம்மாவை சித்ரவதை செய்வது தொடர்ந்து கொண்டே இருந்தது.
அப்பாவின் சித்ரவதை தாங்க முடியாமல் கடைசியில் அது விவாகரத்து வரை சென்றது. எனது கண்முன்னே வைத்து அம்மா தன் கழுத்தில் தொங்கிய தாலியை அறுத்து அப்பாவின் முகத்தில் விட்டெறிந்தாள். இது எனது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்து விட்டது.
எனது தங்கை அம்மிணியையும் அழைத்துக் கொண்டு, அம்மா வீட்டை விட்டு வெளியேறினாள். அம்மாவுடன் செல்வதற்கு எனது மனம் அனுமதிக்கவில்லை. நான் எனது அப்பாவின் அம்மாவுடன் எனது சிறு வயது வாழ்க்கையைக் கழித்தேன்.
இறைவன் நாடினால் வளரும்.