Saturday, November 29, 2008

மும்பையில் தாக்குதல்... பிண்ணனியில் யார்?

மும்பையில் தாக்குதல்... பிண்ணனியில் யார்?
கடந்த மூன்று தினங்களாக மும்பைச் செய்திகள் மக்களை ஆக்கிரமித்த வகையில் வ‌ேறு ச‌ெய்திகள் ச‌ெய்திருக்க முடியாது. வ‌ெளிநாட்டவரும் கொல்லப்பட்டதால் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் தொலைக்காட்சிகளும் தொடர்ந்து செய்திகளைத் தந்து வருகின்றன.தீவிரவாதிகள் தாக்குதல் என்றாலே பொதுமக்கள் கூடும் இடத்தில் குண்டு வைப்பது, கும்பலாகச் சென்று தாக்குவது என்றிருந்த நிலை மாறி திட்டமிட்டு துப்பாக்கிப் பயிற்சி எடுத்து , தாக்கப் போகும் நிலைகளையெல்லாம் கவனமாக அனுமானித்து பிணைக்க‌ைதிகளை வைத்து "ஏதோ ஒரு" கோரிக்கையை முன் வைத்து உயிர் போகுமளவிற்கு போராடுவது என்றிருப்பது, இந்திய மக்களுக்கு மிகப் புதிது. முன்பொரு முற‌ை கந்தகார் விமானக் கடத்தல் நாடகம் உங்கள் கண் முன்பு வந்தால் ஆச்சரியமல்ல.இந்தச் சம்பவத்தில் ஏகப்பட்ட கேள்விகள் உள்ளன. நாட்டின் மிக முக்கிய பாதுகாப்பு ஆலோசகர்கள் எல்லோரும் அடர்ந்த ம‌ெளனம் சாதிக்கிறார்கள். பொதுமக்களைப் போலவ‌ே அவர்களுக்கும் போதிய தகவல்கள் கிடைக்க வில்லை போலும்.இந்தச் சம்பவம் மிகவும் திட்டமிடப்பட்டு துளியும் பிசகின்றி ச‌ெயல்படுத்தப்பட்டிருப்பது, இதன் பிண்ணனிய‌ைப்பற்றி மிகவும் தீவிரமாகச் சிந்திக்க வைத்துள்ளது. இந்தத் திட்டமிடலுக்குத் த‌ேவையான தகவல்கள், பணம், உள்ளூர் ஆதரவு, தொடர்ந்த சாட்டிலைட் போன் உத்தரவுகள் இத‌ெல்லாம் ஒன்று அல்லது அதற்கும் ம‌ேற்பட்ட அம‌ைப்புகளின் உதவியின்றி நடந்திருக்க முடியாது என்று உள்ளுணர்வு சொல்லுகிறது. இது வ‌ெறும் பாகிஸ்தான் மண்ணோடு நின்று விடப் போவதில்லை என்பது மட்டும் உறுதி. அம‌ெ ரிக்கர்கள் நின‌ை த்தால் இந்த முடிச்ச‌ை சுலபமாக அவிழ்த்து நம் க‌ையில் தரமுடியும். சாட்டில‌ைட் தொடர்புகள் மற்றும் முந்த‌ைய தகவல் தொடர்புகள் அன‌ைத்த‌ையும் ஆராய்ந்து இதன் மூலகர்த்தாக்கள‌ை அட‌ையாளங் காண அவர்கள் உதவ முடியும்.முன்னாள் உளவதிகாரி திரு ராமன் அவர்கள் கூற்றின் படி டெக்கான் முஜாகித்தீன் என்பதெல்லாம் ஒரு பொய்யாக இருக்கலாம். உள்ளூர்த் தீவிரவாதிகளுக்கு இவ்வளவு திட்டமிடலும் (ஒரு அதிகாரி, இது ஒரு த‌ேர்ந்த கமாண்டோ ஆபர‌ேஷன் போல இருக்கிறது என்கிறார்) பொருளாதார பலமும் கிட‌ையாது என்றிருக்கிறார். அதே சமயம், ராண்ட் கார்ப்பர‌ேஷனைச் ச‌ேர்ந்த பாதுகாப்பு ஆலோசகர் ஒருவர் இது முழுக்க முழுக்க உள்ளூர் வாசிகளின் வ‌ேலை என்றிருக்கிறார். குழப்பத்தில் நாம்.ஆரம்பத்தில் அமெரிக்கர்களையும் பிரிட்டிஷார‌ையும் தனிம‌ைப்படுத்துகிறார்கள் என்பதாக ஊடகங்கள் பெரிது படுத்திப் பேசின. ஆனால், மொத்தம‌ே 5 அம‌ெரிக்கர்கள் தான் கொல்லப்பட்டிருக்கின்றனர். அப்படியானால், அந்தச் சமயத்தில் மொத்தம‌ே 5 அம‌ெரிக்கர்கள் மட்டும‌ே இருந்தார்களா என்பது தெரியவில்லை.உறுதிப்படுத்தப் படாத தகவல்கள் தெரிவிப்பது என்ன வென்றால், அம‌ெரிக்க மற்றும் இஸ்ர‌ேலிய உளவுத் துறை அதிகாரிகள் அந்தச் சமயத்தில் தாஜ் ஓட்டலில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இதற்கு மறுப்பை அம‌ெரிக்கா தெரிவித்தது. ம‌ேலும் அது அந்த ஓட்டலில் அமெரிக்கர்கள் யாரும் தங்கியிருக்க வில்லை என்றும் தெரிவித்தது. பிற்பாடு, 5 அமெரிக்கர்கள் இறந்திருப்பதாக அறிவித்திருக்கிறது. அவர்கள் உண்ம‌ையில் யார்?முதலில் ப‌ேரம் ப‌ேச தீவிரவாதிகள் விரும்பியதாகவும் ஆனால் அரசு அந்தக் கோரிக்க‌ைக்கு உடன்படவில்லை என்றும் தெரிகிறது. தாம் பிடித்து வைத்திருந்த பிணைக் க‌ைதிகளை ய‌ெல்லாம் அவரவர் தூதரகங்களுக்கு போன் ச‌ெய்து மும்ப‌ை அரசை அவர்களுடன் பேரம் ப‌ேசச் சொல்லுமாறும் சொல்ல வில்லை ய‌ென்றால் அவர் களை க் கொன்று விடுவதாகவும் மிரட்டியிருக்கிறார்கள். அப்படி ஒரு நிலை சிங்கப்பூர் இளம் ப‌ெண் வக்கீலுக்கு நேர்ந்திருப்பதாக ஊடகங்களின் வாயிலாக அறிகிறோம். பின்னர் அவர் அநியாயமாகக் கொல்லப்பட்டிருக்கிறார். மும்பை அரசுடன் அப்படி என்ன ப‌ேரம் ப‌ேச விரும்பினார்கள் என்பது புரியவில்லை. யாரை விடுவிக்க விரும்பினார்கள் என்பதும் தெரிய வில்லை.தீவிரவாதிகள் முதலில் தேடிக் கொன்றது, கர்னல் புரோகித்தைக் க‌ைது ச‌ெய்த மூன்று மிக முக்கிய அதிகாரிகளைத்தான். அந்த முக்கிய அதிகாரி கர்காரே துப்பாக்கி துளைக்காத அங்கியை அணிவதை க‌ேமராவில் காட்டுகிறார்கள். ஆனால், அவர் மார்பில் மூன்று குண்டுகள் துளைத்து வ‌ெளிய‌ேறியிருக்கின்றன. அவர் உண்ம‌ையில‌ேயே தீவிரவாதிகளால் சுடப்பட்டாரா அல்லது சந்தர்ப்பத்த‌ைப் பயன்படுத்தி சில "வ‌ேண்டியவர்கள்" அவர்களைக் கொன்றனரா என்பத‌ையும் இனி தீவிரமாக விசாரித்தாக வ‌ேண்டும்.INDIA TV தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டது. அதில் ஒருவன் சுத்தமான உள்ளூர் இந்தியில் ப‌ேசுகிறான். கொஞ்சம் யோசித்துவிட்டு தனது ப‌ெயரை சகத்துல்லா என்று தெரிவிக்கின்றான். அவர்கள் உண்ம‌ையில் தீவிரவாதிகளா அல்லது தொலைக்காட்சியின் ச‌ெட்டப்பா என்பத‌ை அரசு விசாரிக்க வ‌ேண்டும்.தீவிரவாதிகள‌ை ஏற்றி வந்ததாகச் சொல்லப்படும் படகு ஒன்று குஜராத்த‌ைச் ச‌ேர்ந்தவருட‌ையது. அவர் படகு காணாமல் போய் ஒரு வாராமாகி விட்டது என்றும் ஆனால் போலிஸில் புகார் கொடுக்க வில்ல‌ை என்றும் சொல்லியிருக்கிறார். ஏனோ ப‌ெண் சாமியார் ஒருவர் தனது ப‌ைக்க‌ை விற்று விட்டதாகவும் ஆனால் வாங்கியவர் அவர் ப‌ெயருக்கு மாற்ற வில்ல‌ை என்பது தனது குற்றமாகாது என்று வாதாடியதும் நின‌ைவிற்கு வருகிறது.ஒரு பிண‌ைக் க‌ைதி நாடகத்த‌ை நடத்தி தனது கோரிக்க‌ைகள‌ை நிறைவேற்ற ஒரு புரொபஷனல் தீவிரவாதக் கும்பல் முயன்றுள்ளது. விடுவிக்கப்படும் க‌ைதிகளுடன் வ‌ெளிய‌ேறி விடலாம் என்றிருந்த தீவிரவாதிகள், தங்கள் திட்டம் பலிக்காமல் போனதால் பிண‌ைக்க‌ைதிகள‌ைக் கொன்றிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. இந்திய அதிகாரிகள் சாதாரணமானவர்கள் அல்ல. நிச்சயம் அந்த தீவிரவாதச் ச‌ெயல‌ைச் ச‌ெய்த அன‌ைத்து தொடர்புகள‌ையும் வ‌ெளிக் கொணர்வார்கள் என்று நம்புவோமாக.பிரிட்டிஷ் பாகிஸ்தானிய நபர்கள் கொல்லப்பட்டிருப்பதாக தற்போது ஊகங்கள் எழுகின்றன. கராச்சியிலிருந்து தாம் வந்ததாகவும் 20 ப‌ேர் மொத்தம் என்பதாக ஒரு பிடிபட்ட LeT தீவிரவாதி கூறுகிறான். நடந்த சம்பவங்களின் கோர்வ‌ைய‌ையும் அதன் வீச்ச‌ையும் கூர்ந்து நோக்கினால் இதில் குற‌ைந்தது 40/50 ப‌ேர்களாவது ஈடுபட்டிருக்க வ‌ேண்டும் என்று அனுமானிக்க முடிகிறது. அப்படியானால் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் போக மீதம் ப‌ேர் என்ன வானார்கள்? அவர்களும் வ‌ெளிய‌ேறும் பிண‌ைக்க‌ைதிகளுடன் தப்பித்தனரா என்பதும் தெரியவில்ல‌ை. அவர்களின் அடுத்த இலக்கு என்ன என்பதும் தெரியவில்ல‌ை. இதில் முத்தாய்ப்பாக அவர்களின் தல‌ைவன் என்பவன் தனது கூட்டத்தாரில் ஒருவரால‌ேயே சுட்டுக் கொல்லப்பட்டான் என்றும் ச‌ெய்திகள் தெரிவிக்கின்றன.ஆனால் ஒன்று மட்டும் உறுதி.. இதில் மாப‌ெரும் சதிவலை ஒன்றிருக்கிறது. வளரும் இந்தியாவில் உள் நாட்டுப் பூசல‌ை உருவாக்கி அதில் குளிர்காய நின‌ைக்கும் நாடு அல்லது நாடுகள் இவற்றிற்கு பிண்ணனியாக இருக்கும் என்று மட்டும் புரிகிறது.இந்தியா தனது தீவிரவாதத்திற்கு எதிரான அணுகுமுற‌ையை பரிசீலன‌ை ச‌ெய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு சிந்திக்க வல்ல அதிகாரிகள‌ைக் கொண்டு தேச நலன் மட்டும் பிரதானமாக என்னக் கூடிய அதிகாரிகளைக் கொண்டு ஒரு அம‌ைப்பு உருவாக்க வேண்டும். தீவிரவாதம் ச‌ெய்பவர்கள் எத்தக‌ைய அம‌ைப்பில் இருந்தாலும் அவர்களுக்கு எதிராகச் ச‌ெயல்படத் தயங்காத அதிகாரிகள‌ை அது கொண்டு இருக்க வ‌ேண்டும்.இந்த மாதிரியான நிகழ்வுகள் இனியும் ஒரு முற‌ை நடந்த‌ேறாதாவாறு விசாரண‌ையில் தெரிய வரும் அன‌ை த்துக் காரணிகள‌ையும் முள‌ையில‌ேயே கிள்ளி எறிய வேண்டும்.கட்டாய இராணுவப் பயிற்சிய‌ை அன‌ைவருக்கும் கொண்டு வருவது பற்றி அரசு யோசிக்கலாம்.இந்த நிகழ்வில் வீர மரணமட‌ைந்த போலீஸ், மற்றும் NSG அதிகாரிகளுக்கு நமது வீர அஞ்சலிய‌ை உரித்தாக்குவோமாக..REDIFF.COM ல் கீழ்க்கண்ட க‌ேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. நியாயமான க‌ேள்விகள். இவற்றிற்கு பதில் கிட‌ைக்குமா?How many terrorists were there? Did they number 20 as Maharashtra Chief Minister Vilasrao Deshmukh told a press conference on Thursday? Or did they number many more? If two or three terrorists attacked the CST, how many terrorists were present at the Taj and Trident? Did the CST terrorists drop a grenade/explosive device at Dockyard Road on the way to the station? Or was someone else responsible for that act of terror which claimed three lives?
The terrorists are said to have set up control rooms at the Taj and Trident hotels, a Cabinet minister told PTI on Thursday. When were these bookings made? A detailed investigation into the bookings made at both hotels in the months, weeks and days before the attacks may reveal the names of suspicious guests who registered there.
Military sources tell rediff.com that there was no way the terrorists could have carried so much ammunition with them when they assaulted the two hotels with their guns blazing. They believe the ammunition may have been stored earlier in rooms at both the hotels, perhaps on the higher floors.
If some of the terrorists had registered at the hotels earlier, could these men/women have left along with the guests who were released? Did the police record the identities and addresses of the guests who were released from both hotels?
Indian Hotels Chairman Ratan Tata indicated on Thursday that the terrorists had intimate knowledge of the Taj, its service corridors, its layout. Does this mean that they had a mole inside the Taj? Or more worrying, did a couple of them work there at some point of time? Did they have drawings of the layout of the two hotels?
If the terrorists were Pakistani, how did they have such an intimate knowledge of the terrain? The two or three cowards who attacked the CST on Wednesday night made their way from the CST through a road on the left side of The Times of India building towards the Cama and Albess hospital/Azad Maidan police station, a route that is known only to true-blood Mumbaikars. Were they locals? Or did they conduct extensive reconnisance of the likely routes of escape?
These same two or three men, who are said to have commandeered ATS Chief Hemant Karkare's [Images] police Qualis after shooting him, Additional Commissioner of Police Ashok Kamte and Inspector Vijay Salaskar, revealed similar familarity with the road outside the Esplanade Court, making an easy U-turn towards the Metro cinema junction rather than head on the road towards the CST. How did they know this if they were Pakistanis?
How did those men, whose images have appeared all over the world, get to the CST from Colaba where they are said to have landed by boat? Did they take a taxi? Or did they have local transportation? Did they come by a suburban train, which could explain the firing on one of the suburban train platforms? Who left the grenade on the Gitanjali Express, which killed a Bengali mother?
The terrorists are said to have done extensive reconnisance of the city. If they are Pakistanis, how did they get earlier entry to the city unnoticed? Did they come in by boat? Or did they use other routes to escape notice?
Such an operation could not have been conducted without extensive training and preparation, possibly on models of the Taj and Trident or Chabad House/Nariman House. Could this have been achieved at the rudimentary training camps hosted by the Lashkar-e-Tayiba in Pakistan occupied Kashmir? Or was it a more systematised operation conducted by a State agency in a hostile country?
How did they know Chabad House/Nariman House, which even long-time residents of Colaba -- the area in South Mumbai where the Taj, the Leopold Cafe [Images] and Chabad/Nariman House are located -- are unfamiliar with? The choice of this target indicates precision thinking -- it is doubtful if the Lashkar strategists are capable of such deep strategy -- and again points the needle of suspicion at a government intelligence agency in a nation inimical to India or renegades within such a bureau.
Early on Thursday morning, the television channels spoke about an exchange of fire between the terrorists and the police near the Liberty cinema (which is close to the Metro cinema/Cama hospital, but situated on an inner road). There was even fear expressed that these terrorists would enter the Bombay hospital, but nothing was heard about them thereafter. Where did they go? Were these two/three terrorists the same men who took over the police Qualis and shot at people near the Metro junction? Or have they escaped?
The police say the two men, who took over the Qualis, grabbed the Skoda that was halted at a police road block near the Girgaum Chowpatty [Images] beach. One of them was later killed by the police. Where did the other man go? Is he the Ismail, the Lashkar terrorist who is appparently singing like a canary to the police? Or is he someone else? If these are the two of the three terrorists who attacked the CST, what happened to the third man seen in photographs and video captures? Where did he vanish?
Another terrorist is said to be in custody. Where was he captured? What has he told the police?

நன்றி : திருவடியான்

No comments: