Wednesday, July 1, 2009
துபாய் மருத்துவமனையில் சுயநினைவிழந்து வாடும் இந்தியர்
துபாய்: துபாய் மருத்துவமனையில் சுயநினைவிழந்த நிலையில் இந்தியர் ஒருவர் கடந்த ஒரு மாதமாக அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். இவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.
இந்திய மக்களுக்கு பல்வேறு சமுதாயப் பணிகளை ஆற்றிவரும் ஈமான் அமைப்பினர், அதன் மக்கள் தொடர்பு செயலாளர் முஹம்மது தாஹா தலைமையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்தியர்களை வாரந்தோறும் சந்தித்து அவர்களது தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர்.
அவ்வாறு சென்ற பொழுது கடந்த ஒரு மாத காலமாக இந்தியர் ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் நினைவிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் தகவல் அறிந்து அவரை பார்த்தனர்.
அவர் யார் என்பதற்கான சான்றுகளும் எதுவும் அவரிடம் இல்லாத நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரைப் பார்க்கையில் தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என கருத்தப்படுகிறது.
தமிழ் பேசும் போது மட்டும் இவரது பார்வை மேலும் கீழும் வருகிறது. எனவே இவர் குறித்து தகவல் தெரிந்தால் ஈமான் மக்கள் தொடர்பு செயலாளர் ஏ. முஹம்மது தாஹாவை 050 467 4399 / 050 51 96 433 எனும் அலைபேசியில் அல்லது muduvaihidayath@gmail.com என்ற மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அவ்வாறு தகவல் கிடைக்கும் பட்சத்தில் அவரை பத்திரமாக அவரது குடும்பத்தாரிடம் சேர்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment