ஸ்ரீநகர்: காஷ்மீர் சட்டசபையில் சபாநாயகரை தாக்க முயன்றார் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரான மெஹ்பூபா முப்தி.
முன்னாள் முதல்வர் முப்தி முகம்மத் சயீதின் மகளான இவர் எதிர்க் கட்சித் தலைவராக உள்ளார். இந் நிலையில் இன்று காஷ்மீர் சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கியது.
அப்போது மாநிலம் சோபியானில் இரண்டு பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தின் மீது சட்டசபையி்ல் மெஹ்பூபா பிரச்சனை கிளப்பினார்.
அப்போது சபாநாயகர் முகம்மத் லோனுக்கும், மெஹபூபாவுக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது.
அப்போது ஆவேசமான மெஹ்பூபா சபாநாயகரை நோக்கிச் சென்று அவரது மேஜையில் இருந்த மைக்கைப் பிடுங்கி அவர் மீது வீசினார். ஆனால், அது அவர் மீது படவில்லை.
இதையடுத்து அவைக் காவலர்கள் ஓடிவந்து மெஹ்பூபாவை வெளியே இழுத்துச் சென்றனர். இச் சம்பவத்தால் சட்டசபையில் பெரும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து மக்கள் ஜனநாயக கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டு சபை இன்று முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment