ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் முழுப்பொறுப்பும் அமெரிக்காவைச்சாரும் என ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் அலி லாரி ஜானி கூறினார்.
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா தடுக்காது என்று அமெரிக்க துணை அதிபர் ஜோ பைடன் கூறியதற்கு பதிலடியாக தோஹாவில் சுற்றுப்பயணம் மேற்க்கொண்டிருக்கும் லாரி ஜானி இதனை தெரிவித்தார்.
அமெரிக்காவின் அனுமதியில்லாமல் இஸ்ரேலுக்கு எந்தவொரு நாட்டின் மீதும் தாக்குதல் நடத்த முடியாது என்று எல்லோருக்கும் தெரியும்.பைடனின் கூற்று அரசியல் தந்திரமானது.இதனை பல முறை நாம் கேட்டிருக்கிறோம். அணு சக்தி தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ஒருபக்கம் கூறிக்கொண்டு மறுபக்கத்தில் இம்மாதிரியான அறிக்கைகள் விடுவது கவலைக்குரியது என்று அலி லாரி ஜானி கூறினார். இவ்விஷயத்தை நாங்கள் கெளரவப்பூர்வமாக எடுத்திருக்கிறோம் என்றும் அவர் மேலும் தெளிவுப்படுத்தினார்.
ஆனால் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரியான அயான் கெல்லி கூறுகையில்,"ஈரானை தாக்குவதற்கு இஸ்ரேலுக்கு நாங்கள் பச்சைக்கொடி காண்பிக்கவில்லை.இஸ்ரேல் ஒரு சுதந்திர நாடென்பதால் அது எந்தவிதமான நடவடிக்கையை எடுக்கும் என்று எங்களுக்கு தெரியாது.மேலும் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிப்பது பற்றி இதுவரை நாங்கள் ஆலோசிக்கவில்லை. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பு விஷயத்தில் நாங்கள் விட்டுகொடுக்க முடியாது"என்றார்.
செய்தி ஆதாரம்:தேஜஸ் மலையாள நாளிதழ்
No comments:
Post a Comment