கேரளாவின் கடற்கரையோரத்-தில் வாழும் இசுலாமியர்கள் அரபு நாடுகளிலிருந்து வந்தவர்களின் வழித்தோன்றல்கள் என்பர். தமிழ்-நாட்டின் கீழக்கரைப் பகுதியில் இருப்பவர்களும் அதே மரபு வழியைக் கொண்டவர்கள்தாம். காலப் போக்கில் இம்மக்களும் நம் மக்களைப் போன்றே தோற்றத்தில் மாறிவிட்டனர்.
கேரள மாப்ளா முசுலிம்கள் பற்றிய ஒரு சேதி. அவர்களில் 5 பிரிவு-கள் உண்டாம். சன்னி, ஷியா, வஹாபி, ஜைத், ஹனபி, ஷாபி, அஹமதியா, இசுமெய்லி போன்ற பிரிவுகள் என நினைத்துக் கொள்-ளாதீர்கள். இவை வேறு வகைப் பிரிவு-கள்.
தங்ஙள், அரபி, அன்சாரி, புஸ்ஸ-லார் மற்றும் ஒஸ்ஸான் -_ என 5 வகைகள் இவற்றிற்குப் பெயர்கள். என்ன இவை? எதைக் குறிக்கின்றன, இந்தப் பெயர்ப் பிரிவுகள்?
தங்ஙள் என்றால் முகமது நபியின் மகளான பாத்திமாவின் வழிவந்த-வர்கள். இந்துமத நம்பூதிரிகளைப் போல இவர்கள் உயர்ந்தவர்களாம்.
அவர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் அரபிகள்.
அரபிகளுக்கும் கீழே அன்-சாரிகள். இவர்கள் மூவருக்கும் கீழே கடைத்தட்டில் வைக்கப்பட்டிருப்ப-வர்கள் புஸ்ஸலார்களும் ஒஸ்-ஸான்களும்.
புஸ்ஸலார் என்பவர்கள் கேரள மீனவர்களாகிய இந்துமத முக்குவர் ஜாதியில் இருந்து இசுலாமாகி-யவர்கள். புதிய இஸ்லாம் என்பது புஸ்ஸலாம் என்றாகி விட்டது.
இசுலாமியர்களின் பஞ்சமர்கள் ஒஸ்ஸான்கள். நாவிதர்கள். இந்து மதத்தில் எந்தத் தொழிலோ அந்தத் தொழிலையே இஸ்லாத்திலும் செய்பவர்கள்.
முஸ்லிம்களிடையே ஜாதியும் சமூக அடுக்குகளும் எனும் நூல் பல பிரபலங்கள் எழு-திய கட்டுரைகளின் தொகுப்பு நூலில் இந்த விவரங்கள். தொகுத்தவர் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகப் பேராசிரியர் இம்தியாஸ் அகமது.
பிரம்மாவின் முகத்திலிருந்து வந்தேன் எனக்கூறி முதன்மை இடத்தை எடுத்துக் கொண்டான் பார்ப்பனன், இந்து மதத்தில் என்றால்... இஸ்லாத்தின் நபிகள் நாயகத்தின் குடும்பக் கொடி வழி என்ற கதை கூறப்படுவதா
மதங்கள் என வந்தாலே, இதுதான் போலிருக்கிறது. அதனால்-தான் புரட்சிக்கவிஞர், பெரு மதங்கள் எனும் பீடை பிடியாதிருக்க வேண்டும் என்று பாடினார்.
அன்பிற்கினிய ஆசிரியர் அவர்களுக்கு,
தங்களின் விடுதலை நாளிதழில் 'இசுலாத்திலும் ஜாதி?' என்ற கட்டுரை கண்டேன். கேரளாவில் சிலர் சில பிரிவுப்பெயரில் இருப்பதை வைத்து இஸ்லாத்திலும் ஜாதி உண்டென்று கூறவருகிறீர்கள். அதோடு இஸ்லாத்தை வர்ணாசிரம கொள்கையோடு ஒப்பிட்டுள்ளீர்கள். முதலில் ஒரு அடிப்படையை விளங்கிக்கொள்ளுங்கள். வர்ணாசிரம கொள்கை என்பது இந்து மதத்தின் அங்கீகாரம் பெற்றதாகும். ஆனால், இஸ்லாம் பிறப்பு அடிப்படையில் மனிதர்களிடையே எந்த ஏற்றத்தாழ்வையும் அங்கீகரிக்கவில்லை. 'மனிதர்களே! உங்களை ஒரே ஆத்மாவிலிருந்து படைத்த ஒரே இறைவனை அஞ்சுங்கள் என்று எல்லாம் வல்ல இறைவன் தன் அருள்மறையான குர்ஆனில் சொல்லிக்காட்டுகிறான். இதன்மூலம் மனிதர்கள் அனைவரும் அவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும், வேறுமதத்தவராக இருந்தாலும், அல்லது நாத்திகராகவே இருந்தாலும் மனிதர்கள் அனைவரும் ஒரே தாய் தந்தை மூலம் பிறந்தவர்களே என்று இஸ்லாம் பிறப்பால் ஏற்படுவதாக கூறும் ஏற்றத்தாழ்வுக்கு சாவுமணி அடிக்கிறது. மேலும், உலக முஸ்லிம்களின் ஒரே தலைவரும் இறைத்தூதருமான நபிகள் நாயகம்[ஸல்] அவர்கள், தனது இரு உபதேசத்தின்போது, 'அரபியருக்கு-அரபியர் அல்லாதவர்களைவிட எந்த சிறப்புமில்லை. அரபியர் அல்லாதவர்களுக்கு அரபியர்களை விட எந்த சிறப்புமில்லை என்று உபதேசம் செய்து, அரபியர்கள் தான் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் கொண்ட அரபியர்களின் என்னத்தை தவிடு பொடியாக்கினார்கள். அதோடு தான் அன்று உயர்வாக கருதப்பட்ட குறைஷி எனும் குலத்தில் பிறந்தவராக இருந்ததும், குலப்பெருமையையும் ஏற்ற தாழ்வையும் ஒழிக்கும் வகையில், எத்தியோப்பியா பகுதியை சேர்ந்த கருப்பு நிற அடிமையான பிலால் [ரலி] என்பவரை தனது காரியதரிசியாகவும், இறைவனை வணங்குவதற்காக அழைப்பு விடுக்கும் அழைப்பாளராகவும் நியமித்ததோடு, அந்த பிலால் அவர்களை என் தோழர் என்று கூறி தோள்மீது கை போட்டு கொண்டவர் எங்கள் தலைவர் நபிகள் நாயகம் அவர்கள். இன்றும் கூட தாழ்த்தப்பட்டவர்கள் என்று கருதப்படும் பிரிவிலிருந்து ஒருவர் முஸ்லிமாக மாறினால் அவருடன் நாங்கள் ஒரே வரிசையில் நின்று தொழுவோம், அவருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவோம், அவருடன் திருமணம் உள்ளிட்ட எல்லா உறவுமுறைகளையும் ஏற்படுத்திக்கொள்வோம். இத்தகைய செயல்முறை வர்ணாசிரம கொள்கையில் உண்டா என்பதை சிந்திக்க வேண்டுகிறேன்.
சரி! அப்படியானால், முஸ்லிம்கள் ஷாபி-ஹனபி-ஹம்பலி-மாலிகி-வகாபி இப்படியான பிரிவாக பிரிந்திருப்பது ஏன் என்ற கேள்வியை நீங்கள் எழுப்பலாம்? இது போன்ற எந்த பிரிவையும் நபிகள் நாயகம்[ஸல்] அவர்கள் உருவாக்கவில்லை. நபிகள் நாயகம்[ஸல்]அவர்களின் மறைவிற்குப்பின்னால் தோன்றிய அறிஞர்கள் தான் ஷாபி-ஹனபி-ஹம்பலி-மாலிகி-வகாபி போன்றவர்கள். இவர்கள் சொன்ன இஸ்லாமிய விளக்கத்தை பின்பற்றியவர்கள் நாளடைவில், அந்த அறிஞர்களின் பெயரால் அழைக்கப்படலாயினர். இது ஒரு ஜாதியல்ல. இவர்களுக்குள் எந்த ஏற்றத்தாழ்வுகளும் இல்லை. இவர்களுக்குள் கொடுக்கல் வாங்கல் திருமணம் உள்ளிட்ட அனைத்தும் நடக்கவே செய்கிறது.அதோடு மேற்கண்ட அறிஞர்களை பின்பற்றுமாறு இஸ்லாம் எங்களுக்கு கட்டளையிடவில்லை. ஒரு முஸ்லிம் அல்லாஹ்வையும்-அவனது தூதர் நபிகள் நாயகம்[ஸல்]அவர்களை மட்டுமே பின்பற்றவேண்டும். இந்த பிரிவுப்பெயர்களுக்கு இஸ்லாத்தில் அனுமதியும் இல்லை.
அதோடு தாங்கள் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள, தங்ஙள், அரபி, அன்சாரி, புஸ்ஸ-லார் மற்றும் ஒஸ்ஸான் -_ என 5 வகைகள் இவற்றிற்குப் பெயர்கள். என்ன இவை? எதைக் குறிக்கின்றன, இந்தப் பெயர்ப் பிரிவுகள்?
தங்கள்-அதாவது நபி[ஸல்] அவர்களின் வழித்தோன்றல் என்று ஒரு கூட்டம் கேரளாவில் ஏமாற்றிக்கொண்டு திரிகிறது. நபி[ஸல்] அவர்களின் மகளின் சந்ததியாக இருந்தாலும் அவர்களுக்கென இஸ்லாத்தில் எந்த சிரப்பும்கிடையாது. ஏனெனில், நபியவர்கள் தன் மகள் பாத்திமா[ரலி] அவர்களிடம் சொன்னார்கள்; பாத்திமாவே! உம்முடைய அமல்தான் மறுமையில் ஈடேற்றமளிக்கும். மாறாக, நான் அல்லாஹ்விடமிருந்து எதையும் தடுக்கும் சக்தி பெற்றவன் அல்லன் என்றார்கள். நபி அவர்களின் மகளாக இருந்தாலும் அவர்கள் செய்த நன்மை மட்டுமே அவர்களுக்கு ஈடேற்றம் தரும். அதைத்தாண்டி நபியவர்களின் மகள் என்பதனால் வேறு எந்த அந்தஸ்தும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. அவ்வாறிருக்க சில மூடர்கள் மக்களின் அறியாமையை பயன்படுத்ததி தங்களை நபியின் மகளின் வழித்தோன்றல் என்று ஏமாற்றுவதை வைத்து அதை இஸ்லாத்தில் ஒரு ஜாதியாக அதுவும், பிராமணர்களை போன்று என்று நீங்கள் கூறுவது தவறாகும். மேலும் மற்ற பிரிவினர் அவர்கள் செய்யும் தொழிலை வைத்து அறியப்படுகின்றனர்.[ உதாரணத்திற்கு பொற்கொல்லன், சலவை தொழிலாளி, முடி திருத்துபவர் இப்படி] இஸ்லாம் எந்த தொழிலையும் இழிவாக கருதவில்லை. திருட்டு-மோசடி-விபச்சாரம் நீங்கலாக]. இது ஜாதியல்ல.
ஆக, இஸ்லாத்தில் பிரிவுமில்லை- ஜாதியுமில்லை. நாங்கள் ஒரே ஜாதிதான்[முஸ்லிம்கள்தான்].
அன்புடன்;முகவை எஸ்.அப்பாஸ்.
No comments:
Post a Comment