டெல்லி: சட்டீஸ்கர், ஒரிசா, ஜார்க்கண்ட் மாநில காட்டு பகுதிகளில் சுமார் 40 ஆயிரம் சதுர கிமீ., நக்சல்கள் வசம் இருப்பதாகவும், அவை அரசு கட்டுப்பாட்டில் இல்லை எனவும் உள்துறை அமைச்சகம் நாடாளுமன்ற நிலை குழுவிடம் தெரிவித்துள்ளது.
நக்சல்கள் தான் இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு அச்சுறுத்தல் என பிரதமர் மன்மோகன் பேசிய மறுநாளே இந்த தகவல் வெளியாகியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இந்நிலையில் நேற்று நடந்த நாடாளுமன்ற நிலை குழு கூட்டத்தில் இந்த பிரச்சனை விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்பட்டது. பாஜக தலைவர் நாயுடு தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரிகள் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் நக்சல் நச்சுறுத்தல் குறித்து அறிக்கை வழங்கினர்.
கூட்டத்தில் உள்துறை செயலாளர் ஜிகே பிள்ளை கூறுகையில்,
மாவோயிஸ்ட் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளனர். அவர்கள் வேகமாக பரவி வருகின்றனர். இவர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
முன்னதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இந்தியாவில் உள்ள 223 மாவட்டங்கள் மற்றும் 2 ஆயிரம் காவல் நிலையம் இருக்கும் பகுதிகளில் நக்சல்களின் ஆதிக்கம் காணப்படுவதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment