கோவை: கோவையில் மேலும் 16 பேருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் இருப்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் ஸ்வைன் ப்ளூவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது.
கோவையில் அவிலா காண்வென்ட் மெட்ரிகுலேசன் பள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவருக்கு ஸ்வைன் ப்ளூ தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதே பள்ளியைச் சேர்ந்த இன்னொரு சிறுமிக்கும் நோய் தாக்குதல் ஏற்பட்டு சிகிச்சைக்குப் பின் இப்போது உடல் நிலை தேறியுள்ளது.
அதே போல நீலகிரியைச் சேர்ந்த சென்னையில் பயிலும் 15 வயது மாணவருக்கும், பெங்களூரில் பணியாற்றி வரும் பொள்ளாச்சியைச் சேர்ந்த 31 வயது இளைஞருக்கும் பன்றிக் காய்ச்சல் நோய் தாக்குதல் உள்ளது.
இந்த மூவர் உள்பட 4 பேர் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தத்தில் கோவையில் இதுவரை 16 பேருக்கு ஸ்வைன் ப்ளூ பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதே போல நாகர்கோவிலில் ஸ்வைன் ப்ளூ அறிகுறியுடன் இருவர் மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் தமிழகத்தில் ஸ்வைன் ப்ளூவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது.
No comments:
Post a Comment