புதுடில்லி: பா.ஜ.,வின் தேர்தல் பிரசாரத்தில், விலைவாசி உயர்வு பிரச்னை தான் முக்கிய அம்சமாக இடம் பெற உள்ளது. ராமர் பாலம், அணுசக்தி ஒப்பந்தவிவகாரம் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. பா.ஜ.,வின் உயர்மட்ட கமிட்டி கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. தேர்தல் பிரசாரம் குறித்து முடிவு செய்வது தான், இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கம். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் உறுப்பினர்களும் இதில் பங்கேற்றனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு: தொகுதி சீரமைப்பு குறித்து மத்திய தேர்தல் நிர்வாக குழுவால், பல குழுக்கள் அமைக்கப்பட்டு, நாட்டின் பல பகுதிகளுக்கு அனுப்பப்பட்டது.
அந்த குழுக்கள், தங்களது அறிக்கைகளை சமர்பித்துள்ளன. அது குறித்த ஆய்வு, நேற்றைய கூட்டத்தில் முக்கியமாக இடம் பெறவில்லை. இதுபற்றி 18ம் தேதி நடக்கும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். நாட்டில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. ஏழை மக்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தற்போதைய மத்திய அரசு பதவிக்கு வந்தது. ஆனால், விலைவாசி உயர்வால், ஏழை மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். எனவே, கட்சியின் தேர்தல் பிரசாரத்தில், விலைவாசி உயர்வே முக்கிய அம்சமாக இடம் பெறும். ராமர் பாலம் பிரச்னை மற்றும் அணுசக்தி ஒப்பந்தம் ஆகியவற்றுக்கு, பிரசாரத்தில் முக்கியத்துவம் தரப்படாது. அதை விட, உள்நாட்டு பாதுகாப்பு பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
கர்நாடக சட்டசபை தேர்தலில், உள்ளூர் பிரச்னைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இவ்வாறு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பா.ஜ., மத்திய தேர்தல் நிர்வாக குழுவில் முன்பு, 19 உறுப்பினர்கள் இருந்தனர். இதை, ஆறு உறுப்பினர்களாக குறைத்து, தலைவராக வெங்கையா நாயுடுவை நியமித்து கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். இதற்கு சுஷ்மா சுவராஜ் போன்ற முன்னணி தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
நந்தவனத்தில் ஒரு ஆண்டி...கதையாக இறுதியில் ராமரை கூத்தாடி இப்பொழுது போட்டு உடைத்துவிட்டு நாட்டுப்பிறச்சனைதான் மக்களிடம் செல்லும் என்று ஞானதோயம் வந்துவிட்டது இந்த கேடிகளுக்கு!
No comments:
Post a Comment