இது தொடர்பாக ஐ.நா.சபை ஒரு ஆய்வு அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
ஜிம்பாப்வேயில் சுகாதார சூழ்நிலை மிக மோசமான நிலைக்கு சென்றிருக்கிறது. ஏற்கனவே அங்கு “எய்ட்ஸ்” நோய் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த நிலையில் காலரா நோய் பரவி ஏராளமானோரை பலி கொண்டு உள்ளது. இது வரை 98 ஆயிரத்து 592 பேர் காலராவுக்கு பலியாகி உள்ளனர்.
பாதுகாப்பான குடிநீர், சுகாதார வசதியின்மைதான் காலரா பரவுவதற்கு காரணமாக உள்ளது. காலரா நோயினால் மேலும் 60 லட்சம் பேர் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.
உணவு பொருள் இருப்பு மிகவும் குறைந்து விட்டது. மக்களுக்கு தேவையான அளவுக்கு உணவு பொருட்கள் வினியோகம் கிடைக்க வில்லை. இதனால் 50 லட்சம் பேர் பட்டினி கிடக்கிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sunday, August 23, 2009
ஜிம்பாப்பே நாட்டில் 50 லட்சம் பேர் பட்டினி: ஐ.நா.
ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் கடந்த ஆண்டு பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. அரசு பணிகள் சரி இல்லாததால் சுகாதார சீர்கேடு மற்றும் பல்வேறு பாதிப்புகளும் ஏற்பட்டன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment