மும்பை: மும்பை மாஹிம் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது மற்றொரு ரயில் மோதியது. இந்த விபத்தில் 11 பேர் காயமடைந்தார்கள்.
மேற்கு ரயில்வேயை சேர்ந்த மும்பை, மாஹிம் ரயில் நிலையத்துக்கு அந்தேரிக்கு செல்லும் 9 பெட்டிகள் கொண்ட பயணிகள் ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது ரயில் நிலையத்தில் முதல் பிளாட்பாரத்தில் போரிவில்லி பகுதிக்கு செல்லும் ரயில் நி்ன்று கொண்டிருந்தது.
இந்த நேரத்தில் ரயில்வே நிலையத்தில் உள்ள மின்சார சிக்னல் விளக்குகள் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்தேரி செல்லும் பயணிகள் ரயில் மதியம் 1.05 மணிக்கு நின்று கொண்டிருந்த ரயில் மீது மோதியது.
இந்த விபத்தில் 2 ரயில்வே ஊழியர்கள், 4 பெண்கள் உட்பட மொத்தம் 11 பேர் காயமடைந்தார்கள்.
இந்த விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு கமிஷ்னர் பிரசாந்த் குமார் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இது குறித்து மேற்கு ரயில்வேயின் துணை பொது மானேஜர் ஆர்எஸ் சக் கூறுகையில்,
ரயிலின் வேகம் 15-20 கிமீட்டருக்குள் இருந்ததால் பெரிய விபத்து நேரவில்லை. சிக்னல் சரியாக தான் செயல்பட்டுள்ளது. டிரைவர் கவனக்குறைவுடன் செயல்பட்டுள்ளார். காயமடைந்தவர்கள் அருகிலிருந்த சியான் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.
No comments:
Post a Comment