இன்று எல்லாத் துறையிலும் போலிகள் அதிகரித்து விட்டனர். அரசியல், இலக்கியம், ஆன்மீகம் என இல்லாமல் பகுத்தறிவு தளத் திலும் போலிகளின் ஆதிக்கம்தான் மேலோங்கி இருக்கிறது.
சாமியார்களும், சன்னியாசிகளு மாகிய காவி உடைதாரிகள் மட்டுமல்லாமல், "கருஞ்சட்டை' பெருமை பேசும் பெரியாரிஸ்டு களிலும் போலிகள் நிறைந்து காணப்படுகின்றனர். அதிர்ச்சியோ, ஆச்சரியமோ கொள்ளாதீர்கள்.... இது நிஜம்!
பகுத்தறிவு தந்தை என அழைக் கப்படும் திராவிடக் கழக நிறுவனத் தலைவர் பெரியார் ஈ.வே. ராமசாமியின் பிறந்த நாள் பொதுக் கூட்டங்கள், கருத்தரங்குகள் - தமிழகம் முழுவதும் பலராலும் நடத்தப்பட்டுக் கொண்டிருக் கின்றன. அந்த வகையில் "கீற்று' இணைய தளம் குழுவினர் ஏற்பாட் டில் ""பெரியாரோடு ஒரு பயணம்'' என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் 18-09-2010 அன்று சென்னை தேவநேய பாவணர் நூலக கருத் தரங்கு வளாகத்தில் நடைபெற்றது.
பெரியார் நடத்தி வந்த குடியரசு பத்திரிகையின் தொகுப்புகளை அடிப்படையாகக் கொண்டு கால வரிசைப்படி சுமார் 6 பேர் உரையாற்றும் வகையில் நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருந்தது.
பெரியார் திராவிட கழகத் தலைவர் கௌத்தூர் மணி, விடுதலை ராஜேந்திரன் உள்ளிட்ட மூத்த பெரியாரிஸ்டுகள் பங்கேற்று பங்கேற்று உரையாற்றினர்.
பெரியார் இன இழிவு நீங்கவும், தீண்டாமைக் கொடுமை, சாதீய இழிவுகள் நீங்கவும் இஸ்லாமே நன் மருந்து எனப் பரிந்துரைத்தார். இஸ்லாம்தான் சாதியை வேரறுத்து சகோதரத்துவத்தையும், சமத்துவத் தையும் தருகிறது என்றெல்லாம் இஸ்லாம் குறித்து தனது மேடைப் பேச்சுக்களிலும், எழுத்துக்களிலும் வெளிப்படுத்தினார்.
"குடியரசு' பத்திரிகை தொகுப்பு களின் செய்திகளைப் பார்த்தால், பெரியார் அனைத்து விதமான இழிவுகளிலிருந்தும் விடுபட இஸ் லாம் மார்க்கத்தை தீர்வாகச் சொல்லியிருப்பது விளங்கும். தனது பேச்சுக்களில் எழுத்துக்களில் இஸ் லாத்தை வெகுவாகப் பாராட்டியுள் ளார். மதம் கூடாது, கடவுள் இல்லை என்ற பரப்புரை செய்த அவர், சமத்துவ - சகோதரத்துவ அடிப்படையில், பகுத்தறிவு சிந்த னைக்கு ஒட்டிய இறை நம்பிக்கை கொண்ட இஸ்லாத்தைப் பாராட்டி பேசிய செய்தி இன்று பலராலும் இருட்டடிப்புச் செய்யப்பட்டு வருகிறது.
பெரியாரைப் பின்பற்றுகிறோம், பெரியாரின் வாரிசுகள் நாங்கள் தான் எனக் கூறுவோர் எல்லாம் கூட - இஸ்லாம் குறித்த சிந்தனை களை பேச மறுக்கின்றனர். பெரியா ரின் படம் தான் அவர்களுக்குத் தேவை! பாடம் இல்லை! அவரால் திரட்டப்பட்ட லட்சங்கள் தேவை - அவரது லட்சியங்கள் தேவை இல்லை என்ற நோக்குடன் செயல் படுகின்றனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் நிறை வுரையாற்றிய பெரியார் தி.க. தலைவர் கொளத் தூர் மணியின் பேச்சுத் தான் நம்மை ஆச்சரியப்படுத்தியது.
""பெரியார் இஸ்லாத்தைப் பாராட்டியதாக கூறுவது தவறு. அவர் எல்லா மதங்களையும் விமர்சித்துள்ளார். அவர் ஒன்றும் ஏமாளி அல்ல! இஸ்லாத்தைப் பாராட்ட... அவர் தீண்டாமைக் கொடுமையில் சிக்கித் தவித்தவர்க ளுக்கு மட்டும்தான் இஸ்லாத்தைத் தீர்வாகச் சொன்னார். அது குறித்து இன இழிவு ஒழிய இஸ்லாம் என புத்தகம் கூட வந்துள்ளது. சுயமரி யாதைக்காரர்களுக்கும், பெண்ணுரி மையை விரும்புவர்களுக்கும் இஸ் லாத்தை அவர் பரிந்துரைக்க வில்லை.
மேலும் துருக்கியில் புரட்சி நிகழ்த்திய கமால் பாஷாவை பெரி யார் பாராட்டிப் பேசினார். கமால் பாஷா குர்ஆனை தடை செய்தவர், பள்ளிவாசலைப் பூட்டியவர்.
அவரைப் பாராட்டியதிலிருந்தே பெரியார் இஸ்லாம் குறித்த விமர்சன சிந்தனை கொண்டிருந்தார் என்பது தெரிகிறது. மேலும் பெரி யார் இந்து மதத்திலிருந்து வேறு மதங்களுக்குப் போனவர்களை எல்லாம் திரும்பவும் இந்து மதத் துக்கே கொண்டு வர நினைத்திருந் தார்'' என்பதாக கொளத்தூர் மணி பேசினார்.
அந்த நிகழ்ச்சியில் பெரியாரிஸ் என கூறிக் கொள்ளும் ஒருவரது வாயிலிருந்து இப்படியான வார்த் தைகள் வெளிப்பட்டதும், பார்வை யாளராக பங்கேற்றிருந்த நமக்குப் பேரதிர்ச்சி! அப்பொழுதுதான் நமக்கு ஒன்று விளங்கியது. போலிகள் ஆன்மீகத் துறையில் மட்டுமல்ல, அறிவுத் துறையிலும் ஊடுருவியிருக்கின்றனர் என்று!
பெரியாரின் கொள்கைகளைச் சொல்வதாகக் கூறிக் கொண்டு அவரது லட்சியங்களை இருட்ட டிப்புச் செய்யக் கூடியவர்களாக அவர்கள் உலவுகின்றனர். பெரியா ரின் கோடிக்கணக்கான சொத்துக் களுக்கு வாரிசுரிமை கொண்டாடும் கி. வீரமணி தலைமையிலான திராவிடர் கழகம் மட்டுமல்லாமல், லட்சியங்களுக்கு உரிமை கொண் டாடுவதாகக் கூறும் கொளத்தூர் மணி தலைமையிலான பெரியார் திராவிடக் கழகத்தினரும் கூட பெரியாரின் உண்மையான கொள் கைகளை - லட்சியங்களை இருட்ட டிப்புச் செய்வதில் குறியாக இருக் கின்றனர்.
வெளியில் பேசும் போது, சாதீய ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்கப் பாடுபடுகிறோம் என கூறிக் கொள்ளும் அவர்கள் ஒவ்வொருவ ரும், அந்தரங்கத்தில் மிகப் பெரிய சாதீய இந்துத்துவா உணர் வாளர்களாக இன்னும் கூர்மையாகச் சொல்வதானால், சாதி வெறியர்களாக - தீவிர இந்துக்களாக உள்ளனர் என்றே எண்ணத் தோன்றுகிறது.
சாதி, தீண்டாமை ஒழியக் கூடாது என்பதில் இந்துத்துவ சக்திகளுக்கு நிகராக இவர்களும் உழைத்துக் கொண்டிருக்கின்றார் களே என்ற சிந்தனை எழுகிறது. திகவின் சார்பில் பெரியார் பெய ரால் நடத்தப்படும் கல்லூரிகள், பல்கலைக் கழகத்தில் இதுவரை சமூக நீதி அடிப்படையிலான 69 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப்படவே இல்லை.
பெரியாரின் சொத்துக்களை நிர்வகிக்கும் அறக்கட்டளை தலை மைப் பொறுப்பில் தாழ்த்தப்பட்ட வர் ஒருவர் கூட நியமிக்கப்பட வில்லை என கூப்பாடு போடும் பெரியார் திராவிட கழகத்தின் தலைமை பொறுப்பில் மட்டும் தலித்களுக்கு வாய்ப்பளிக்கப்பட் டுள்ளதா என்றால், இல்லை என்பதுதான் பதிலாக உள்ளது.
இடஒதுக்கீட்டில் தான் இப்படி என்றால் பெண்ணுரிமை விஷயத்தி லாவது கி. வீரமணியும், கொளத் தூர் மணியும நேர்மையாக நடந் துள்ளார்களா என்றால் இல்லை என்பதுதான் பதிலாகும். பெரியார் தி.கவின் தலைமைப் பொறுப்பில் எத்தனை பெண்கள் உள்ளனர்? கொளத்தூர் மணி குடும்பத்துப் பெண்கள் முழு உரிமையுடன் நடத்தப்படுகிறார்களா? என்றால் இல்லை! இல்லை.... இல்லை என்பதுதான் பதிலாக உள்ளது.
சரி, பெரியார் விரும்பியபடி சுய மரியாதை உணர்வுடனாவது இவர்கள் நடந்து கொள்கிறார்களா? என்றால் அதுவும் இல்லை.
""ஏண்டா வெங்காயம்... சாமின்னு சொல்லி கல்லுக்கும் - சிலைக்கும், மாலையும், மரியாதையும் செய்து பூஜை செய்கிறாயே இது முட்டாள் தனமாக, பகுத்தறிவுக்குப் பொருந் தாத செயலாக உனக்குப்படவில் லையா?'' எனக் கேட்ட பெரியா ருக்கே, இவர்கள் சிலை அமைத்து பூஜை செய்வது சுயமரியாதையா? பகுத்தறிவா?
இப்படி எல்லா வகையிலும் பெரி யாருக்கு எதிராக - அவரது கருத் துக்களுக்கு விரோதமாக செயல்பட் டுக் கொண்டு போலி பெரியாரிஸ்டு களாக உள்ளவர்கள், பெரியாரின் இஸ்லாமிய சிந்தனைகளை இருட் டடிப்புச் செய்வது மட்டுமல்லாமல், திரிவு வேலைகளும் செய்யத் துவங்கி இருக்கின்றனர்.
பெரியார் இஸ்லாத்தைத் தீண் டத்தகாத தலித்துகளுக்கு மட்டும் தான் பரிந்துரைத்தார் என்பது எவ் வளவு பெரிய பொய்? திரிபு வாதம்? தலித்களுக்கு மட்டுமா அவர் சொன்னார்! ஒட்டு மொத்த திரா விட இனமும் இழிவிலிருந்து விடு பட இஸ்லாம் தான் தீர்வு என்ப தாகத்தான் பெரியார் கூறியுள்ளார்.
மேலும் கொளத்தூர் மணி கூறு வது போல், இந்து மதத்திலிருந்து வேறு மதங்களுக்கு மாறியவர்களை மீண்டும் இந்துத்துவாக மாற்ற முயற்சித்தார் என்பது அபாண்டம்! அநியாயம்! அக்கிரமம்! அயோக்கி யத்தனம்!
இப்படி ஒரு சிந்தனையை பெரி யார் எப்போதுமே கொண்டிருக்க வில்லை என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. மேலும் பெரி யார் துருக்கி கமால் பாஷாவை ஆத ரித்தார் என்பதன் மூலம் இஸ் லாத்தை அங்கீகரிக்கவில்லை என்ப தாக கொளத்தூர் மணி கூறுவது அறிவுக்குப் பொருந்தாத விஷயம்.
"குடியரசு' பத்திரிகையில் பெரி யார் மட்டுமே கட்டுரைகள் எழுத வில்லை. பல நேரங்களில் குத்தூசி குருசாமியும் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். அப்படி குத்தூசி குருசாமி எழுதிய பல கட்டுரைகள் பெரியார் எழுதியதாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதுண்டு. இது குறித்து குத்தூசி குருசாமியே வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன.
துருக்கி கமால் பாஷா குறித்த கட்டுரை குத்தூசி குருசாமி எழுதி யதுதானே தவிர பெரியார் எழுதிய தில்லை. பெரியார் இஸ்லாத்தைப் புரிந்து கொண்டிருந்த அளவுக்கு குத்தூசி புரிந்து கொண்டவரல்ல என்பது திராவிட இயக்க ஆய் வாளர்களுக்கு எளிதாகப் புரியும். பெரியார் இஸ்லாத்தை தீர்வாகக் குறிப்பிட்டு பல மேடைகளில் பேசி யுள்ளதால் அதனைத்தான் அவரது கருத்தாகக் கொள்ள வேண்டும்.
இஸ்லாம் மார்க்கத்தையும், முஸ் லிம் சமுதாயத்தையும் நுட்ப மாக ஆராய்ந்து தெளிவாக பெரி யார் புரிந்து கொண்டிருந்தது போன்று பெரியாரை - அவரது சிந்தனை களை, லட்சியங்களை முழுமையா கத் தெளிவாகப் புரிந்து கொண்ட வர்கள் முஸ்லிம்கள்! முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் பெரியாரின் லட் சியங்களை பரப்புரை செய்யத் துவங்கினால் எத்தனை "மணி'கள் வந்தாலும், சதிகள் பல செய்தாலும் இஸ்லாமிய எழுச் சியை - திராவிட இன மறுமலர்ச்சி யைத் தடுக்க முடியாது. முஸ்லிம் அமைப்புகள் - இயக்கங்கள் பெரியாரின் சிந்தனை களை பரப்புரை செய்வது காலத் தின் கட்டாயம்.
- பாபா