Saturday, May 30, 2009
போலீசாரிடம் சிக்கி சீரழிந்த இளம்பெண்!
இது பற்றி அங்குள்ள சில போலீஸ்காரர்கள் அவரிடம் விசாரித்தபோது சப்- இன்ஸ்பெக்டர் கற்பழித்ததை கூறினாள்.
இந்நிலையில் அவர் அங்குள்ள குளியல் அறையில் குளிப்பதை ஒரு போலீஸ்காரர் தனது செல்போனில் படம் பிடித்தார். பின்னர் அதை அவரிடம் காட்டி, இதை சி.டி.யில் பதிவு செய்து வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி கற்பழித்தார். பின்னர் அவரது நண்பர்கள் 9 பேரை அங்கு வரவழைத்தார். அவர்கள் கும்பலாக சேர்ந்து அவளை கற்பழித்தனர்.
இதில் அவர் மயங்கி விழுந்ததால் போலீசார் அவளை போட்டு விட்டு தப்பி ஓடினார்கள்.
இது பற்றி அவள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணாவை சந்தித்து புகார் கொடுத்தார். ராமகிருஷ்ணா உத்தரவின் பேரில் உமாவை கற்பழித்த போலீசாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் உமாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இது பற்றி உமா கூறும்போது, செல்போனில் என்னை நிர்வாண படம் எடுத்து மிரட்டி கற்பழித்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக்கு நியாயம் கிடைக்கும் வரை ஓயமாட்டேன் என்றார்.
Wednesday, May 27, 2009
அனைத்து குடிமக்களுக்கும் பல்நோக்கு தேசிய அடையாள அட்டை!
புது தில்லி: நாடு முழுவதும் அனைத்து குடிமக்களுக்கும் பல்நோக்கு தேசிய அடையாள அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தில்லியில் திங்கள்கிழமை பதவியேற்ற அவர் பிறகு நிருபர்களிடம் பேசுகையில் இந்த உறுதிமொழியை அளித்தார். "18 வயது நிரம்பியவர்களுக்கும் அதற்கும் அதிகமானவர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்படும். இது நவீனத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டிருக்கும். தேசிய குடிமக்கள் பதிவேடு பராமரிக்கப்பட்டு அதில் குடிமக்கள் பற்றிய எல்லா விவரங்களும் பதிவு செய்யப்படும். பிறந்த தேதி, நிறம், உருவஅமைப்பு, அங்க அடையாளங்கள் பற்றிய குறிப்புகளுடன் கையெழுத்து, கைரேகை ஆகியவை அதில் இடம் பெறும்.
எல்லாவற்றுக்கும் மேலாக ஒவ்வொரு குடிமகனுக்கும் தேசியக் குடியுரிமை எண் வழங்கப்படும். இனி எதிர்காலத்தில் இந்த அடையாளம்தான் சட்டப்பூர்வ ஆவணமாக அனைத்து இடங்களிலும் பயன்பாட்டுக்கு வரும். இந்த அடையாள அட்டையைக் கேட்டு வாங்குவது அவசியமாகும்.
இப்போதைக்குக் கடலோர மாவட்டங்கள் சிலவற்றிலும் அந்தமான்-நிகோபார் தீவுகளிலும் சோதனை அடிப்படையில் இந்த அடையாள அட்டை வழங்கும் பணிகள் நடைபெறுகின்றன. இது பூர்த்தியானதும் இத் திட்டத்தில் உள்ள நன்மை தீமைகள், குறைகள் ஆராயப்படும். அவற்றை நீக்கும் பரிகார நடவடிக்கைகளை வகுத்துக்கொண்டு தேசம் பூராவிலும் உள்ளவர்களுக்கு இது அமல்படுத்தப்படும். இந்த அட்டையே வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் போன்ற அனைத்துக்கும் அடிப்படை ஆவணமாக இனி பயன்படும்.
அத்துடன் தேசியக் குடிமகன் ஆவணமும் பராமரிக்கப்படும். பிறப்பு, இறப்பு பதிவேடுகளும் இந்த ஆவணமும் அவ்வப்போது சரிபார்க்கப்பட்டு நாட்டின் மக்கள் தொகை பற்றிய திட்டவட்டமான தகவல்கள் அரசுக்கு தரப்படும்.
இனி வெளிநாட்டவர்கள் யாரும் சட்ட விரோதமாக இங்கு குடியேற முடியாது' என்றார் ப. சிதம்பரம்.
துணை நிலை ராணுவப்படைகள்: உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள துணை நிலை ராணுவப் படைப்பிரிவுகளின் தலைமையகங்களுக்கு நேரில் வந்து பார்வையிடுவதாக உறுதி கூறியிருக்கிறார் ப. சிதம்பரம். அவரை வரவேற்க நினைவுப்பரிசுகளுடன் அதிகாரிகளும், கோரிக்கைகளுடன் ஜவான்களும் காத்திருக்கின்றனர். ஊதியம், படிகள் ஆகியவற்றை உயர்த்தக் கோரியும், விடுமுறை, ஓய்வு ஆகியவற்றில் கவனம் செலுத்தக் கோரியும் சிதம்பரத்திடம் கோரிக்கை வைக்க அனைவரும் ஆவலாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கூவம் மணக்குமா?
சில மாதங்களுக்கு முன் புதுப்பேட்டையிலுள்ள பழைய சித்ரா தியேட்டர் அருகிலுள்ள கூவத்தின் கரையோரம் இருந்த குடிசைகள் அப்புறப்படுத்தப்பட்டபோது, கூவத்தின் வரலாறு மனக்கண்ணில் தெரிந்தது. கூவம் சென்னையின் மைய ரேகையாக அமைந்து உள்ளது. சென்னை மாநகரின் வரலாற்றில் கூவம் முக்கிய அங்கமாகிவிட்டது. 1820-ம் ஆண்டு காலகட்டத்தில் இன்றைய கல்லூரிச் சாலையிலுள்ள கல்வித்துறை இயக்குநரகத்தின் பின்புறம் உள்ள கூவம் ஆற்றங்கரையிலும், எழும்பூர் சிந்தாதிரிப்பேட்டை அருகில் உள்ள ஆற்றங்கரையிலும் மாலை நேரங்களில் மக்கள் கூடி விருந்துகள் வைத்துக் கொண்டாடுவது உண்டு. இன்றைய கடற்கரைக்குச் சென்று பொழுதைக் கழிப்பதைப்போல 1820-களில் கூவம் கரை, பொழுதுபோக்கு மையமாக இருந்து வந்துள்ளது என்று சொன்னால் நம்பவா முடிகிறது? அதுமட்டுமல்லாமல், கூவத்தைப் புனிதமாகக் கருதினார் வள்ளல் பச்சையப்பர்.
அவர் அதிகாலையில் புதுப்பேட்டை, கோமளீஸ்வரன்பேட்டையிலுள்ள கூவத்துக்கு வந்து குளித்துவிட்டு, குதிரையில் கந்தகோட்டம் முருகன் கோவிலுக்குப் போவார் என்று அவரது சரிதையில் கூறப்படுகிறது. 1907-ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ரல்ப் பென்சன் இன்றைய பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் டவுட்டன் இல்லத்தில் குடியிருந்தபோது, மாலை நேரங்களில் கூவம் கரையில் உலவச் செல்வதுண்டு. சென்னை ஆளுநர் கிராண்ட் டப், ""கூவம் கரையோரத்தில் உள்ள மஞ்சள் அரளி மரங்களிலிருந்து நீரில் விழும் அரளி மலர்களைப் பார்க்க ஆனந்தமாக உள்ளது'' என்று கூறி மகிழ்ந்திருக்கிறார். இவ்வாறு கீர்த்தி பெற்ற கூவம் படிப்படியாகக் கழிவுநீர்க் கால்வாய் என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இதற்கு முதல் காரணம், இந்தியாவில் விளையும் பருத்தியின் மூலம் துணிகளை உற்பத்தி செய்து உடனே பிரிட்டனுக்கு அனுப்ப வேண்டும் என்று இங்கிலாந்திலிருந்து ஓர் அரண்மனை உத்தரவு வந்தது.
அதனால், 1934-ல் கவர்னர் மார்டின் பிட், சிந்தாதிரிப்பேட்டையில் பல பகுதிகளிலிருந்து நெசவாளர்களை அழைத்துக் கொண்டு வந்து குடியமர்த்தினார். நெசவுத் தொழில் மூலம் வெளியாகும் கழிவுகள் கூவத்தில் சேர்ந்தன. இதுதான் முதல் பாதிப்பு. கூவம் ஆறு சென்னையின் மேற்குப் பகுதியில் 65 கி.மீட்டர் தூரத்தில் கேசவரம் அணையில் இருந்து தொடங்குகிறது. இந்த ஆறு கடம்பத்தூர் ஒன்றியத்தில் இருக்கும் கூவம் கிராமத்தில் தொடங்கி, மணவாள நகர், அரண்வாயல், திருமழிசை, வெள்ளவேடு, கண்ணார்பாளையம், பருத்திப்பட்டு, பூவிருந்தவல்லி, மதுரவாயல், அமைந்தகரை என ஓடி சாக்கடை நீரோடு கலந்து சென்னை மாநகருக்குள் வருகிறது. சென்னையில் கூவம், அடையாறு, பக்கிங்காம், ஓட்டேரி கால்வாய்களும், நந்தனம், மாம்பலம், அரும்பாக்கம், விருகம்பாக்கம், கொடுங்கையூர் ஆகிய பகுதிகளில் ஓடைகளும் உள்ளன. இவைகள் மூலமாகத்தான் கழிவு நீர் ஓடுகிறது. இதனால் நாற்றம். கொசுக்கள் வளர்கின்றன. இன்றைக்கு அழகிய கூவம் நதியாக இருக்க வேண்டியது வெறும் சாக்கடையாக மாறிவிட்டிருக்கிறது. 70 ஆண்டுகளில் படிப்படியாக நாசமாகிவிட்டது. சென்னை மாநகரில் 18 கி.மீட்டர் தூரத்துக்கு கூவம் ஆறு ஓடுகிறது.
இதன் கரையில் குடிசைகள் வேய்ந்த 8,266 குடும்பங்கள் வாழ்கின்றன. இதில் 127 இடங்களில் மாநகரக் கழிவு நீர் சேர்கிறது. கோயம்பேட்டில் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு 34 மில்லியன் லிட்டர் இதில் சேர்கிறது. இந்நிலையில் கூவம் மணக்குமா? பல திட்டங்கள், அறிக்கைகள் என சொல்லப்பட்டு எதுவும் சரிவரவில்லை. ஆங்கிலேயர் காலத்திலேயே முயற்சிகள் இருந்தும், 1960-ல் இது குறித்து சென்னை மாகாண அரசு திட்ட மதிப்பிலே அறிக்கை தயார் செய்தது. அதன்படி சேத்துப்பட்டு அருகே அடையாற்றை கூவத்துடன் இணைக்கலாம் என்று அதில் பரிந்துரை செய்தது. காங்கிரஸ் ஆட்சி முடிந்து அண்ணா தலைமையில் திமுக ஆட்சி ஏற்பட்டது. அண்ணா 1967-ல் ரூ. 118 லட்ச மதிப்பில் ஒரு திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அப்போது, அண்ணா ""லண்டனுக்கு தேம்ஸ் எப்படி பெருமை சேர்க்கிறதோ அதைப்போல் கூவம் சென்னைக்குப் பெருமை சேர்க்க வேண்டும்'' என்ற ஆசையை வெளிப்படுத்தினார். 1973-ல் இதில் படகுகள் விடப்பட்டன.
படித்துறையில், பாரி, ஓரி என தமிழக ஏழு பெரும் வள்ளல்கள் பெயரில் படித்துறை மண்டபங்கள் அமைக்கப்பட்டன. இன்று அவை எல்லாம் பாழடைந்த நிலையில் இருக்கின்றன. 1976-ல் ம.பொ.சி. தலைமையில் அமைந்த குழு ரூ. 22 கோடியில் ஒரு திட்டத்தைக் கண்டறிந்தது. 1991-ல் செவன் டிரண்ட் என்ற ஆலோசனைக் குழுமம் மற்றும் 1994-ல் மேக் டொனால்ட் குழுமமும் ரூ. 34.8 கோடி மதிப்பீட்டிலும், 1998-ல் அரசு பொதுப்பணித்துறை ரூ. 19 கோடி மதிப்பீட்டிலும், 2000-ல் மீண்டும் தமிழக அரசு ரூ. 720 கோடி மதிப்பீட்டிலும், தற்போது 2008-ல் தமிழக அரசு உலக வங்கியுடன் இணைந்து பல திட்டங்கள் என அறிவிப்புகள்... ஆனால், எதிலும் பலன் கிட்டவில்லை. சேத்துப்பட்டு பாலத்தின் கீழ் அரசின் மீன் வளர்ப்புப் பண்ணை இருந்தாலும் மீன் வளர்ப்பும் சரியாக நடக்கவில்லை. அது நஷ்டத்தில் நடக்கிறது. இங்கு கிடைக்கும் மீன் வகைககள், நண்டுகளை உண்டால் உடலுக்குத் தீங்கு ஏற்படுவது நிச்சயம்.
போதாக்குறைக்கு கழிவுகள் அதில் சேர்வதால் மனித இனத்தை வாட்டும் கொசுக்கள் தாராளமாக உற்பத்தி ஆகின்றன. கூவத்தில் கலக்கும் கழிவு நீரைத் தடை செய்ய வேண்டும். அத்துடன் தூர்வாரி, கரைகளில் மரம், செடி, கொடிகளை வளர்க்க வேண்டும். கூவம் சுத்தம் ஆனால் மின்சார ரயில், பறக்கும் ரயில் போலவே நீர்வழி போக்குவரத்தையும் சென்னை மாநகரில் ஏற்படுத்தலாம். கூவத்தைச் சீர்படுத்தி, பக்கிங்காம் கால்வாய்த் திட்டத்தை நடைமுறைப்படுத்தி இவற்றுடன் இணைக்கலாம். கூவம் ஆறு நேப்பியர் பூங்கா அருகில் கிழக்கு நோக்கிச் சென்று வங்கக் கடலில் கலக்கிறது. அதன் முகத்துவாரத்தை ஆழப்படுத்தி, அங்குள்ள மேட்டுப்பாங்கான கழிவுகளை அகற்ற வேண்டும். சென்னையில் 1,398 பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. இதில் பல தொழிற்கூடங்களின் கழிவுகள் கூவத்தில் நேரடியாகச் சேர்கின்றன. சில சமயங்களில் இறந்த மாடுகள், நாய்களின் உடல்கள் இந்த ஆற்றில் காணப்படுகின்றன. அவற்றையும் அகற்ற உரிய நடவடிக்கைகள் வேண்டும்.
கூவத்தைச் சுத்திகரிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பல உள்ளன: 1. கூவம் கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் உள்ள தடைகளை அகற்றிச் சுத்தம் செய்ய வேண்டும். 2. கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்பு குடிசைகளை அகற்றி அங்கு வசிக்கும் மக்களுக்கு வேறு பகுதிகளில் மாற்று இடம் கொடுக்க வேண்டும். 3. மருத்துவமனை கழிவுகள், ஆலைக் கழிவுகள், பெரிய ஓட்டல்களின் கழிவுகள் கூவத்தில் கலப்பதைத் தடை செய்ய வேண்டும். இந்தக் கழிவுகளில் மருத்துவமனைகளின் மூலம் சேர்வது மட்டும் 37 டன் ஆபத்தான மருத்துவக் கழிவுகள். 4. கூவத்தில் நீர்வரத்தைச் சரிசெய்ய 50 முதல் 80 மீட்டர் அளவில் அகலப்படுத்த வேண்டும். 5. புறநகர்ப் பகுதியில் செங்கல் சூளைக்காக மண் எடுக்கப்படுகிறது. இதனால் ஒரே சீரான ஆழம் இல்லாமல் போகிறது. மணலும் திருடப்படுகிறது. கூவத்தின் கரையோரங்களில் பூங்கா, ஓட்டல்கள், மக்களைக் கவரும் வகையில் பல்பொருள் அங்காடிகள் அமைக்கலாம். இவற்றைப் பராமரிக்க இவற்றிலிருந்து வாடகை பெறலாம்.
இவ்வளவு திட்டங்கள் மற்றும் ஆய்வுகள் அரசுச் செலவில் நடத்தப்பட்டு அவ்வப்போது கூவத்தைச் சுத்தப்படுத்த ஒதுக்கீடும் செய்யப்பட்ட பிறகும் கூவம் மணக்கவில்லையே ஏன்? இதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தைப் பலரும் பங்கு போடாமல் இருந்திருந்தால் இப்போது பணிகள் முடிந்து இருக்கும். மக்களின் வரிப்பணம் இவ்வளவு கோடிகளாக ஒதுக்கீடு செய்து அது குறிப்பிட்ட நோக்கத்துக்காகச் செலவு செய்யப்படாமல் தனிப்பட்டவரின் நலனுக்குச் செல்கிறது. இதனால் கூவம் மட்டுமல்லாமல் எந்தத் திட்டமும் வெற்றி பெறுவதில்லை. காகிதப் பூ மணக்காது! அதைப்போல் கூவம் தேம்ஸ் ஆகிவிடாது! உண்மையிலேயே நமது ஆட்சியாளர்களுக்கு மனமிருந்தால், வாஷிங்டன் நகருக்கு ஒரு பொட்டோமாக் நதி, லண்டனுக்கு ஒரு தேம்ஸ், பாரிஸ் நகருக்கு ஒரு ரைஸ் போல சிங்காரச் சென்னைக்கு கூவமும் அமைவது என்ன இயலாத ஒன்றா?
நன்றி: தினமணி (கே.எஸ். இராதாகிருஷ்ணன்)
Tuesday, May 26, 2009
யாஹூ மெசெஞ்சர் (Yahoo Messenger) ஒரே நேரத்தில் பல கணக்குகளில் சாட் செய்ய...
நம்மில் பலர் யாஹூவின் சேவையான யாஹூ மெசஞ்சரை பயன்படுத்துகிறோம். ஆனால் அதில் சில தேவைகளுக்காக பல கணக்குகள் (Account) வைத்திருப்போம்.
Wednesday, May 20, 2009
ஆபாச சாமியாருக்கு 16 ஆண்டு கடுங்காவல் தண்டனை
கேரள மாநிலத்தில் மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் பதினைந்து வயதுக்குட்பட்ட இரண்டு சிறுமிகளை பலாத்காரம் செய்த வழக்கு உட்பட மூன்று வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சாமியாருக்கெதிரான நேரடி சாட்சிகள், சிடிக்கள் மற்றும் புகைப் படங்களின் அடிப்படையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். முக்கிய நான்கு சாட்சிகளில் மூன்று பேர் வழக்கிலிருந்து பின்வாங்கிய நிலையில் ஒரு பெண்ணின் உறுதியான சாட்சியத்தின் அடிப்படையில் இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
நான் ஒரு நிரபராதி என்றும் எனவே தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்த ஆபாச சாமியார், தனக்கெதிராக போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு தன்னை குற்றவாளியாக்கியிருப்பதாகவும் கடந்த ஒரு வருடமாக ஜெயிலில் அனுபவித்த தண்டனையே மிக அதிகம் என்றும் நீதிபதிகளிடம் மன்றாடியிருக்கின்றார்.
கடந்த 2008 மே 13 ம் தேதி கைது செய்யப்பட்ட இந்த சாமியார் முதலில் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக தேடப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார். ஹவாலா, நில மோசடி, ஏமாற்று போன்ற பல வழக்குகளில் தொடர்புடையவராக பின்னர் கண்டறியப்பட்டார். இவர் மீது மேலும் பல வழக்குகள் விசாரிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.