Tuesday, May 26, 2009

யாஹூ மெசெஞ்சர் (Yahoo Messenger) ஒரே நேரத்தில் பல கணக்குகளில் சாட் செய்ய...

நம்மில் பலர் யாஹூவின் சேவையான யாஹூ மெசஞ்சரை பயன்படுத்துகிறோம். ஆனால் அதில் சில தேவைகளுக்காக பல கணக்குகள் (Account) வைத்திருப்போம்.

அவற்றை எல்லாம் ஒரே நேரத்தில் மெசஞ்சரில் இல் லாக் இன் (Sign In) செய்ய முடியாது. கீழே உள்ள வழிமுறைகளை செய்வதன் மூலம் நீங்கள் ஒரே நேரத்தில் பல கணக்குகளில் இருந்து இயங்க முடியும்.
முதலில் Yahoo messenger ஐ இங்கே தரவிறக்கம் செய்து உங்கள் கணனியில் நிறுவிக் கொள்ளுங்கள். முதலில் Yahoo messenger ஐ இங்கே தரவிறக்கம் செய்து உங்கள் கணனியில் நிறுவிக் கொள்ளுங்கள்.

1. முதலில் Start மெனுவுக்கு சென்று "Run" என்பதனை கிளிக் செய்யவும். அதில் regedit என்று டைப் செய்து OK செய்யவும்.

2. உங்கள் கணித்திரையில் Registry Editor விண்டோ தோன்றியிருக்கும். அதில் HKEY CURRENT USER க்கு பக்கத்தில் உள்ள "+" குறியை அழுத்துங்கள். அதன் வழியே Software->Yahoo->Pager->Test க்கு செல்லவும்.
3. இனி Registry Editor இல் உள்ள வலது பக்க பெட்டியில் வெளியே வைத்து Right Click செய்யவும். நீங்கள் கிளிக் செய்தவுடனேயே "New" என்ற Option தோன்றும். அதில் DWORD Value என்பதனை கிளிக் செய்யுங்கள்.4. நீங்கள் உருவாக்கிய "New Value #1" என்பதனை "Plural" என்று பெயர் மாற்றம் செய்து கொள்ளுங்கள். (கீழே படத்தை பார்க்கவும்)
5. நீங்கள் அதனை பெயர் மாற்றம் செய்த பின்பு அதனை "Double Click" செய்யுங்கள. Value Data என்ற Column இல் "0" ஆக இருப்பதை "1" ஆக மாற்றிக் கொள்ளுங்கள். இனி OK செய்து வெளியேறுங்கள்.
இனி வேலை செய்கிறதா என்று பாருங்கள், இல்லாவிட்டால் ஒருமுறை உங்கள் கணணியை ரீ-ஸ்டார்ட் செய்து பயன்படுத்துங்கள்.
நன்றி : தேன்தமிழ்

No comments: