Thursday, February 4, 2010

`செக்ஸ்' அர்ச்சகர் தேவநாதனுடன் உறவு கொண்ட 4 பெண்களுக்கு நேற்று மருத்துவ பரிசோதனை நடந்து

காஞ்சீபுரம் `செக்ஸ்' அர்ச்சகர் தேவநாதனுடன் உறவு கொண்ட 4 பெண்களுக்கு நேற்று மருத்துவ பரிசோதனை நடந்து.

காஞ்சீபுரம் மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகர் தேவநாதன் (வயது 35), கோவில் கருவறையில் பல பெண்களுடன் `செக்ஸ்' வைத்துக் கொண்டதாகவும், அதை அவரே செல்போனில் படம் பிடித்ததாகவும் புகார்கள் எழுந்தன.

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து, பெரிய காஞ்சீபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போலீசாரால் தீவிரமாக தேடப்பட்டு வந்த அர்ச்சகர் தேவநாதன், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ந் தேதி காஞ்சீபுரம் முதல் வகுப்பு குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரணடைந்தார்.

அர்ச்சகருடன் உறவு கொண்ட பெண்களில் ஒருவரான தாரா போலீசாரிடம் அளித்த வாக்கு மூலத்தில், `அர்ச்சகர் தன்னை வசியம் வைத்து கற்பழித்தார்' எனக் கூறினார். காஞ்சீபுரம் பூக்கடை சத்திரத்தைச் சேர்ந்த பூ விற்கும் பெண் கலா, `அர்ச்சகர் தேவநாதன் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, என்னை கருவறையில் வைத்து கற்பழித்தார்' என வாக்குமூலம் கொடுத்தார்.

சில நாட்கள் கழித்து சபிதா, வள்ளி என்ற மேலும் 2 பெண்களும் போலீசிடம் பரபரப்பான வாக்குமூலம் கொடுத்தனர்.

அவர்கள் 4 பேரும் கடந்த (டிசம்பர்) மாதம் 21-ந் தேதி காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜராகி, தேவநாதன் கற்பழித்ததாக, மாஜிஸ்திரேட்டு முன்னிலையிலும் ரகசிய வாக்கு மூலம் அளித்தனர்.

அப்போது அர்ச்சகரின் மனைவி தேவகங்காவும் கோர்ட்டில் ஆஜராகி, தன் கணவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்தார்.

இதைத் தொடர்ந்து, `செக்ஸ்' அர்ச்சகர் தேவநாதனுடன் உறவு கொண்டதாக கூறப்படும் 4 பெண்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

அதன்படி அந்த 4 பெண்களுக்கும் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடந்தது. அவர்களின் கன்னித் தன்மை, உடல் வளர்ச்சி, உடல் பாகங்கள், அவர்கள் செக்சுக்கு தகுதியானவர்களா? கற்பழிக்கப்பட்டார்களா? என்று பல கட்ட பரிசோதனைகளை பெண் டாக்டர் பராசக்தி தலைமையிலான மருத்துவக்குழுவினர் மேற்கொண்டனர்.

இந்த பரிசோதனைகள் முடிய ஒவ்வொரு பெண்ணுக்கும் தலா ஒரு மணி நேரம் ஆனது.

மருத்துவ பரிசோதனைக்காக, 4 பெண்களும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காஞ்சீபுரத்திலிருந்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு, பிறகு மீண்டும் காஞ்சீபுரத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

மேற்கண்ட தகவல்களை காஞ்சீபுரம் மாவட்ட குற்றப்பரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயராகவன் தெரிவித்தார்.

No comments: