Showing posts with label கவிஞர் இன்குலாப். Show all posts
Showing posts with label கவிஞர் இன்குலாப். Show all posts

Tuesday, April 28, 2009

அரசு விருதை திருப்பி அனுப்பினார் கவிஞர் இன்குலாப்

கவிஞர் இன்குலாப், தான் பெற்ற கலைமாமணி விருதை திருப்பிக்கொடுத்துள்ளார்.

கவிஞரும், நாடக ஆசிரியருமான பேராசிரியர் இன்குலாப், 2006-ம் ஆண்டில் பெற்ற தமிழக அரசின் "கலைமாமணி' விருதை திருப்பி அனுப்பியுள்ளார்.

இலங்கைத் தமிழர் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகளின் செயல்களால் அதிருப்தி அடைந்துள்ளதால் விருதை அரசிடமே திருப்பித் தருவதாக அவர் அறிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் கருணாநிதி காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கவிஞர் இன்குலாப், சென்னை புதுக்கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி 2002-ல் ஓய்வு பெற்றவர்.