Wednesday, February 4, 2009

இந்தியாவில் 1 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம்!



டெல்லி: இந்திய பொதுத் தேர்தலோடு பெரும் சோதனையும் சேர்ந்தே வருகிறது. ஆம்.. இந்த நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் 10 மில்லியன் மக்கள் அதாவது ஒரு கோடி பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் ஏற்றுமதி 22 சதவிகிதம் குறைந்துள்ளது. இன்னும் சில மாதங்களில் இந்த அளவு மேலும் கூடக் குறையலாம். எனவே இப்போதே 400 க்கும் மேற்பட்ட உற்பத்தித் தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. இவற்றில் பணியாற்றிய 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வேலை இழந்துவிட்டனர். மேலும் 5 லட்சம் பணியாளர்கள் வேலை இழக்கும் வகையில் தொழிற்சாலைகள் உற்பத்தியை நிறுத்தி வருகின்றன. 40 லட்சம் முழுநேர / பகுதி நேர தொழிலாளர்கள் ஏற்கெனவே வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே பணியில் இருப்பதாக இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

"இதுவும்கூட இன்னும் சில மாதங்கள் வரைதான். எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்கள் முடிந்தவரை எங்கள் தொழிலாளர்களை காப்பாற்றவே முயல்கிறோம். குறைந்த சம்பளத்துடனாவது அவர்களை வைத்திருக்க முயற்சி செய்கிறோம். ஆனால் அதற்குக் கூட வழியில்லாத அளவுக்கு ஏற்றுமதி குறைந்துவிட்டது. உள்நாட்டில் சப்ளை செய்யலாம் என்றால், இங்கே வெளிநாட்டுப் பொருட்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. என்ன செய்வதென்றே புரியவில்லை.

பெரும்பாலான நடுத்தர மக்களுக்கு வாழ்வாதாரமாக உள்ள கார்மென்ட்ஸ் தொழில் முழுவதுமாக படுத்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது, என்று அகில இந்திய தொழில்துறைக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த அபாயத்தை நன்கு உணர்ந்துள்ளதாகவும், இதைத் தடுக்க முடிந்தவரை அதிக நிதி உதவி அளித்து வேலை இழப்பைத் தடுக்க முயற்சிப்போம் என்றும் மத்திய நிதித்துறைச் செயலாளர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய ஜனநாயக முன்னணியில் MIP உடன் TMMK

சமீபத்தில் அரசியல் பயணத்தைத் துவக்கிய அஸ்ஸாம் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் (AUDF) தலைவர் பதுருத்தீன் அஜ்மலுக்கு பல மாநில முஸ்லிம் அமைப்புகள் வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, ஐக்கிய ஜனநாயக முன்னணியில் அங்கம் வகிக்கவும் இசைவு தெரிவித்துள்ளனர்.

திங்களன்று, டெல்லியிலுள்ள 'ப்ரஸ் கிளப் ஆஃப் இந்தியா' வில் AUDF ஐ அறிமுகப்படுத்திய அதன் தலைவர் பதுருத்தீன் அஜ்மல், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தேசிய அளவில் குறைந்தது ஆறு மாநிலங்களில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் எனக் குறிப்பிட்டார்.

அத்தோடு, தேசிய அளவில் முஸ்லிம்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் சமூகத்தின் அனைத்து அடித்தட்டு மக்களுடன், மதசார்பற்ற கட்சிகளும் தனது முன்னணியில் இணையுமாறு கோரிக்கையும் விடுத்தார்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மில்லி இத்திஹாத் பரிஷத்தின் தலைவர் சித்தீக்குல்லாஹ் சவுத்ரி, AUDF அறிமுக நிகழ்ச்சியில் பதுருத்தீன் அஜ்மலுடனான தனது கலந்துரையாடலை, நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

புதிய தேசிய அரசியல் கட்சியின் அறிவிப்பை, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் டாக்டர்.பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் வரவேற்றுள்ளார்.

நம்மிடம் பேசிய AUDF இன் செயல் தலைவர் ஹாபிஸ் ரஷீத் அவர்கள், 'தேர்தல் ஆணைய விதிகளின் அடிப்படையில், பொதுத் தேர்தல் நெருங்கி வரும் இந்த சந்தர்ப்பத்தில், தேசிய அளவிலான அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பு செய்ய இயலாத நிலையில் உள்ளோம். எனவே வெவ்வேறு மாநிலங்களில் ஐக்கிய ஜனநாயக முன்னணி UDF என்ற பதாகையின் கீழ் பல்வேறு பெயர்களில் நாம் இயங்குவோம். எதிர்வரும் 17.02.09 அன்று டெல்லியில் கூட உள்ள 'அகில இந்திய அரசியல் விவகார குழு' இதன் சாத்தியங்களைக் குறித்து ஆலோசித்து இறுதி செய்யும். அவ்வாலோசனைக் கூட்டத்தில் மேற்கு வங்கத்தின் MIP (மில்லி இத்திஹாத் பரிஷத்) உம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தமுமுக (TMMK)வும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்' எனக் குறிப்பிட்டார்.

தகவல் : டூசர்க்கில்ஸ் டாட் நெட்
தமிழில்: அபூஹாஜர்

Tuesday, February 3, 2009

இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து



கைபர்போலன் கணவாய் வழியாக இந்திய துணைக்கண்டத்தில் நுழைந்த ஆரியர்கள்,பிறப்பின் பெயரால் மனிதர்களில் தீண்டாமையை கடைபிடிப்பதையும்,கடவுளின்பெயரால் கற்பனையான மூடநம்பிக்கைகளையும் விதைப்பதை கண்ணுற்ற திரு.பெரியார் அவர்கள் அதை ஒழிப்பதற்கான பகுத்தறிவு முயற்சியில் ஈடுபட்டு ஒரு முடிவெடுத்தார். 'மூட்டைப்பூச்சியை ஒழிக்க வீட்டைகொளுத்திய கதையாக' கடவுளின் பெயரால் நடக்கும் அக்கிரமங்களை ஒழிக்க கடவுளே இல்லை என்ற பிரச்சாரத்தை முன்வைத்தார்.
பின்னாளில், தி.க. உடைந்து தி.மு.க.ஆனவுடன் அதன் தலைவர் அண்ணா, 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற தத்துவத்தை முன்வைத்தார்[இதுதான் இஸ்லாமிய கடவுள்கொள்கையாகும்] தி.மு.க. பிளந்து அண்ணாதி.மு.க. உதயமானவுடன், எம்.ஜி.ஆர். மூகாம்பிகையை வழிபட்டார். கருணாநிதியோ மஞ்சள் துண்டுக்கு மாறினார். அதற்கு வியாக்கியானமும் கொடுத்து மறைத்தார்.மேலும், சாய்பாபாவுடனும்,அமிர்தானந்தமயியுடனும் மேடையில் காட்சிதந்து அருள்பாலித்தார்[?] அத்துடன் 'கடவுளை நான் ஏற்றுக்கொள்கிறேனா என்பதைவிட கடவுள் என்னை ஏற்றுக்கொள்ளக்கூடிய பணியை செய்கிறேனா என்பதுதான் முக்கியம்' என்று திருவாய் மலர்ந்தார். ஜெயலலிதாவை சொல்லித்தெரியவேண்டியதில்லை. அவர் அண்ணா தி.மு.க.வை, அத்வானி தி .மு.கவாக நடத்திவருபவர்.
இப்படியான இவர்களின் பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சியாக[?] இன்று அண்ணா நினைவுநாளை முன்னிட்டு 31.கோவில்களில் சிறப்பு வழிபாடும், சமபந்தி விருந்தும் நடைபெறும் அன்று பகுத்தறிவு தி.மு.க.அரசு அறிவித்துள்ளது. இதில், ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்களும் சபாநாயகர் உள்ளிட்ட எம்.எல்.ஏக்களும் கலந்து கொள்வார்களாம். இந்த பகுத்தறிவு தடுமாற்றத்தை கண்டிக்கவேண்டிய கி.வீரமணியோ கண்டுகொள்ளவில்லை. ஆனால் எதிர்பாராத பக்கத்திலிருந்து எதிர்ப்பு வந்துள்ளது.
இந்து மக்கள் கட்சி, இந்த சிறப்பு வழிப்பாடு-மற்றும் சமபந்திவிருந்து நடைபெறும் கோவில்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.நாத்திகரான அண்ணாவின் திதியை கோவில்களில் நடத்துவது ஆலயவிதிமுறைகளுக்கு முரணானதுஎன்று அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.
தவறான கொள்கைகளில் உறுதியிருக்காது என்ற வாக்கிற்கேற்ப, பகுத்தறிவு என்ற முலாம் பூசிக்கொண்டு பக்தர்களாக வலம்வரும் திராவிட கட்சியினரை, உண்மையான பகுத்தறிவு மார்க்கமான இஸ்லாத்திற்கு அழைக்கிறோம்.' இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து' என்ற பெரியாரின் வாக்கை, நீங்கள் உண்மையில் பெரியாரை பின்பற்றுவதாக இருந்தால் இஸ்லாத்தை ஏற்பதன்மூலம் பெரியாரின் வாக்கை உண்மைப்படுத்த முன்வாருங்கள்.

Monday, February 2, 2009

கிழிந்துதொங்கும் தேசவிரோதிகளின் முகமூடிகள்!



மாலேகாவ்ன் குண்டுவெடிப்புச் சதிகாரர்கள் மீது 20.1.2009இல் 4000 பக்கக் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நான்கு மாதங்கள் தீவிர விசாரணைக்குப் பிறகு - விசாரணை அதிகாரி ஹேமந்த் கார்கரே மும்பை தாக்குதலில் கொல்லப்பட்ட பிறகு - குற்றப்பத்திரிகை தாக்கலானது.


சிறீகாந்த் புரோகித் எனும் பார்ப்பன ராணுவ அதிகாரி முதன்மைக் குற்றவாளி. இந்து ராஷ்ட்ரம் அமைக்கத் திட்டமிட்டு, அரசியல் கூட்டம், கொடி போன்றவற்றையும் எழுதி வடிவமைத்து, இதற்கான சதிச் செயல்களில் ஈடுபடுவதற்குத் தேவையான வெடிப் பொருள்களை வாங்கிச் சேமித்தார் அல்லது ராணுவத்திலிருந்து திருடிச் சேமித்தார் என்று குற்றச் சாற்று.அவருடைய நோக்கம், இசுரேல் நாட்டின் உதவியுடன் போட்டி அரசாங்கம் ஒன்றை இந்தி யாவுக்கு எதிராக அமைப்பது என்றும் இந்தியாவை விட்டு வெளியேறி இசுரேலில் தஞ்சம் புகுந்து அங்கிருந்து போட்டி அரசை நடத்துவது என்பது தான்.


37 வயதான சன்னியாசினி பிரதிக்யா சிங் எனும் தாக்கூர் (சத்திரிய) ஜாதிப் பெண் முக்கிய குற்றவாளி.சுயம்பு சங்கராச்சாரி தயானந்த் பாண்டே எனும் பார்ப்பனர் கூட்டுச் சதிகாரர். இவருடன் இணைந்து சதித்திட்டம் போட்டவர் போர்க்கருவிகள் விற்பனையாளரான ராகேஷ் தாவ்டே என்பவர். 2006இல் நடந்த நாண்டெட் குண்டு வெடிப்பிலும் சம்பந்தப்பட்ட ஆள்.




இந்துமதவெறி அமைப்பான அபிநவ் பாரத் அமைப்பின் பொருளாளர் அஜய் ராஹிர்கர் பணம் திரட்டி உதவியவர். சுமார் 21 லட்சம் ரூபாய்க்கு மேல் நிதி திரட்டித் தந்துள்ளார்.இவர்கள் தவிர, சிவ நாராயணன் கல்சங்ரா, ஷியாம்லால் சாகு, ஜகதீஷ் மாத்ரே, சமிர் குல்கர்னி, சுதாகர் சதுர்வேதி, ரமேஷ் உபாத்யாயா என்று 11 பேர் குற்றம் செய்யத் தூண்டியோர் என்று குற்றப் பத்திரிகை கூறுகிறது.




சந்தீப் டாங்கே, ராம்ஜிகல் சங்ரா, முத்தாலிக் என்றழைக்கப்படும் பிரவீண் பாட்டில் என்கிற மூன்று குற்றவாளிகளும் பிடிபடாமல் உள்ளனர்.இவர்களைத் தவிர, சாமி அசீமானந்த் என்ற பெயர் கொண்ட குஜராத்தைச் சேர்ந்த டாங் பகுதியில் இருந்த சாமியார் ஒருவரையும் இன்னும் கண்டு பிடிக்க முடியாமல் இருக்கிறது. இந்த ஆளைப் பிடித்தால், பலசதிச் செயல்கள் பற்றிய விவரங்கள் வெளிவரும்.அத்துடன் அஜ்மீர் தர்காவிலும், அய்தராபாத் மெக்கா மசூதியிலும் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புச் சதிகள் பற்றிய விவரங்களும் வெளிவரும். ஆனால், இந்த ஆளுக்கு குஜராத்தின் மோடி அரசின் ஆதரவு இருக்கும் காரணத்தால் அவரைப் பிடிக்க முடியவில்லை.




மகாராட்டிர மாநிலத்தின் பயங்கரவாதத்தடுப்புப் பிரிவுக் காவல் துறைத் தலைவராகக் கூடுதல் பொறுப்பில் உள்ள ரகுவன்ஷி இதுபற்றிக் கூறும் போது, இவர்கள் இந்து ராஷ்ட்ரத்தை அமைத்திட இசுரேல் நாட்டின் உதவியை நாடத் திட்டமிட் டுள்ளனர் என்றும், அதற்கு முன்பாக இங்குள் ளோரின் ஆதரவை முதலில் திரட்டுவது என்றும் தீர்மானித்து விட்டனர் என்கிறார்.




இவர்களது திட்டம், சந்திப்புகள், பேச்சு வார்த்தைகள் எல்லாவற்றையுமே மடிக்கணினியில் பதிவு செய்து வைத்த அல்ட்ரா மாடர்ன் சதிகாரர்கள். காவல் துறை அனைத்தையும் அள்ளிக் கொண்டு வந்து வழக்கில் ஆவணங்களாகத் தாக்கல் செய்துள்ளனர்.தாலிபான், முஜாகிதீன் போன்ற இசுலாமியத் தீவிரவாதிகளின் செயல்களின் வீடியோ படக் காட்சிகளைப் போட்டுக்காட்டி இந்துமத வெறியைத் தூண்டி இசுலாமியர்களுக்கு எதிரான சதிச் செயல்களின் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளனர்.




காவல் துறையினரால் விசாரிக்கப்பட்ட ராணுவத் தினரையும் மதவெறிக் கட்சி ஆள்களையும் வழக்கில் சேர்க்காமல் விட்டுவிட்டனர். விசாரணை அலுவலர் ஹேமந்த் கார்கரே கொல்லப்பட்டு விட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.வழக்கில் 400 சாட்சிகள் குறிக்கப்பட்டுள்ளனர். போஸ்லா மிலிட்டரிப் பள்ளியின் உறுப்பினர்களும் சாட்சிகளாக்கப்பட்டுள்ளனர். இந்தப் பள்ளியில் பயிற்சி அளித்து 1000க்கும் மேற்பட்டவர்களை இந்தியாவின் முப்படைகளிலும் சேர்த்து விட்டிருப்பதாகப் பயிற்சியாளர் கூறியிருக்கிறார் என்பது கவனிக்கத் தக்கது. ஆயிரத்தில் ஒருவன்தான் அகப்பட்டுள்ளான். மற்றவர்கள் என்ன செய்து மாட்டிக் கொள்வார்கள் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.




இந்தியத் தண்டனைச் சட்டப்பிரிவுகளின் படியோ, திட்டமிட்ட சதிச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் படியோ அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.ஆனால், வெளி நாட்டுக்குத் தப்பி ஓடி அந்நாட்டு ஆதரவைப் பெற்று, இந்திய நாட்டுக்கு எதிராகப் போட்டி அரசை நிறுவிட முயற்சி செய்தவர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராகச் செயல்பட்ட அரசுத் துரோகக் குற்றச்சாட்டுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? எந்த நடவடிக்கையும் இல்லை! பார்ப்பனர்கள் என்பதால் சலுகையோ?



தரவு: தெகல்கா 31.1.09
நன்றி;விடுதலை

பதர்சயீத் ராஜினாமா செய்யத்தயாரா? பாயும் ஹைதர்அலி!



சில நாட்களுக்கு முன் சட்டமன்றத்தில் உரையாற்றிய, முன்னாள் வஃக்ப் போர்டு தலைவரும் அண்ணாதிமுக எம்.எல்.ஏவுமான பதர்சயீத், அம்மா ஆட்சியில் வஃக்ப்போர்டுக்கு சுதந்திரமளித்திருந்தார். ஆனால் இன்று வஃக்பு சொத்துக்களை ஆளும்கட்சிக்கு லீசுக்கு கொடுக்கிறார்கள். மேலும் வஃக்பு வாரியத்தின் மூலம் கட்சி வளர்க்கிறார்கள் என்று சாடினார்.

உடனே வஃக்ப் அமைச்சர் மைதீன்கான், ஆற்காட்டார் உள்ளிட்டோர், உறுப்பினர் ஆதாரங்களை தந்தால் நடவடிக்கை எடுக்கத்தயார் என்றனர்.அதற்கு பதர் சயீத் பதிலளிக்கவில்லை. இந்நிலையில், பதர்சயீதின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து தற்போதைய வஃக்ப் வாரியத்தலைவர் சகோதரர் ஹைதர் அலி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில்,

பதர்சய்யீத் வஃக்ப்வாரிய தலைவராக இருந்தபோது, வஃக்பு வாரியத்தில் பதியப்பட்டிருந்த போரூர் ஷேய்க்மானியம் மஸ்ஜித் ஹைருன்னிஷா என்ற வஃக்புவை அது வஃக்பு சொத்துஇல்லைஎன தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். ௧௯௩௫ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ரெவின்யூ மேப்பில் உள்ள பள்ளிவாசலையே, இல்லாத பள்ளிக்கு ஒரு நிர்வாகக்குழு தேவையில்லை என உத்தரவுபோட்டு ஐந்நூறு கோடி மதிப்புள்ள 52. ஏக்கர் வஃக்பு சொத்தை இழக்கும் நிலைக்கு தள்ளினார். நாங்கள் சுப்ரீம் கோர்ட் மூலம் அந்த சொத்தை மீட்க நடவடிக்கை எடுத்துவருகிறோம்.

மேலும் பதர்சய்யீத் மீதானகுற்றச்சாட்டை நான் நிரூபிக்கத்தயார். நான் அவர்மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள், அவர் என்மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் பற்றி சி.பி.சி.ஐ.டி. விசாரிக்கவேண்டும். என்மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் நான் பொதுவாழ்விலிருந்து விலகத்தயார். பதர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் எம்.எல்.எபதவியை ராஜினாமா செய்யத்தயாரா? என ஹைதர் அலி சவால்விட்டுள்ளார்.

உண்மையில் ஹைதர் அலி அவர்களின் துணிச்சலான சவால் வரவேற்கத்தக்கதே! அதே நேரத்தில், பதர்சய்யீத் தங்கள் மீது குற்றம் சுமத்தும்வரை, ஐநூறுகோடி சொத்து பற்றி மூச்சு விடாதது ஏன்? என்னைப்பற்றி கண்டுகொள்ளாதவரை உன்னைப்பற்றி நான் கண்டுகொள்ளமாட்டேன் என்பது போன்ற அளவுகோலா? அல்லாஹ் அறிந்தவன்.

இதுவரை இருந்த தலைவர்களிலிருந்து ஹைதர் அலி அவர்கள் மாறுபட்டவர். தவ்ஹீத் கொள்கையுடையவர். எனவே கடந்த காலங்களில் இருந்தவர்களால் பறிபோன வக்பு சொத்துக்களை மீட்பதோடு, கடந்த கால தவறுகள் தங்களின் காலத்திலும் வராமல் பாதுகாப்பது உங்களின் கடமையாகும்.

'நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள்;உங்கள் பொறுப்புகள் பற்றி விசாரிக்கப்படும் என்ற நபிமொழியை மனதில் கொண்டால் எல்லாம் சீர்பெறும் என்பது திண்ணம்.

Sunday, February 1, 2009

ஆலங்குளத்தில் இரட்டை தம்பளர் முறை 42 குடும்பங்கள் ஊரை விட்டு தள்ளி வைப்பு

ஆலங்குளம்: நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே இரட்டை டம்ப்ளர் முறை நடைமுறையில் உள்ளதாகவும், ஒரு சமுதாயத்தை சேர்ந்த 42 குடும்பங்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஆலங்குளம் ஊராட்சி ஓன்றியம் கல்லூத்து கிராமம், காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சமுத்திரபாண்டி. கழுநீர்குளம் பஞ்சாயத்தின் நான்காவது வார்டு உறுப்பினர்.

இவர் கலெக்டரிடம் அளித்த மனுவில், கல்லூத்தில் உள்ள டீக்கடையில் எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு இரட்டை தம்பளர் முறையில் டீ கொடுத்து வந்தனர். இதுகுறி்த்து மற்ற சமுதாயத்தை சேர்ந்தவர்களிடம் முறையிட்டு வந்தேன்.

இந்நிலையில் ஊர் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அந்த ஊரை சேர்ந்தவர்கள் என்னையும், எங்க ஊர் நாட்டாமையையும் அழைத்தனர். அந்த கூட்டத்திற்கு நான் செல்ல மறுத்து விட்டேன். 27ம் தேதி கூட்டத்திற்கு சென்ற ஊர் நாட்டாமையையும் அவதூறாக பேசியுள்ளனர்.

கடந்த 28ம் தேதி முதல் எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு கடையில் டீ கொடுக்க மறுத்ததுடன் பலசரக்கு கடையில் பொருளை தரவும் மறுத்து விட்டனர். இதனால் கல்லூத்து கிராமத்தை சேர்ந்த ஒரு சமுதாய மக்கள் முத்து கிருஷ்ணபேரி அல்லது ஆலங்குளம் சென்று பொருட்களை வாங்க வேண்டியுள்ளது.

இதுகுறித்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க கோரி கடந்த 28ம் தேதி வீரகேரளம்புதூர் போலீசில் புகார் செய்தோம். ஆனால் போலீசார் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் ஆலங்குளம் தாலுகா அலுவலகத்தில் நடக்கும் சமாதான கூட்டத்துக்கு வரு்மாறு விஏஓவும் போலீசாரும் அழைத்தனர்.

ஆனால் புகார் மீது வழக்கு பதிவு செய்யாமல் சாமாதான கூட்டத்திற்கு அழைத்தது வேதனையை அளி்க்கின்றது. ஊரை விட்டு விலக்கியதால் 42 குடும்பங்கள் எங்கும் பொருட்கள் வாங்கமுடியாமல் அவதிப்படுவதாக அதே ஊரை சேர்ந்த கணேசன் கூறினார்.

இவர்களுடன் இதே ஊரை சேர்ந்த சொரிமுத்து, குமரேசன், மனித உரி்மைகள் களம் இயக்குனர் பரதன், அருந்ததியினர் பெண்கள் எழுச்சி இயக்கத்தின் மாநில அமைப்பாளர் முத்துமாரி ஆகியோரும் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Folder Lock (பாதுகாப்பிற்கு சிறந்த மென்பொருள் )


இது தகவல் பாதுகாப்பிற்கு சிறந்த மென்பொருள் ஆகும் . இதன் மூலம் உங்கள் ஆவணங்களுக்கு Password கொடுத்து பாதுகாக்க முடியும். folder lock ஆனது password கொடுப்பது மட்டும் அல்லாது Data களை மற்றவர்கள் கண்டுபிடிக்க முடியாதவாறு hide பண்ணியும் விடுகிறது. அதனால் உங்கள் தகவலுக்கு 100 சதவீத பாதுகாப்பு கிடைக்கிறது. folder lock முலம் உங்கள் கணணியின் Drive களுக்கும் மற்றும் Usb Drive, CD Drive, Floppy drive களுக்கும் Password கொடுத்து பாதுகாக்க முடியும். இதன் இன்னொரு சிறப்பு இதை நீங்கள் உங்கள் Usb drive , External hard disk, cd, memory card போன்றவைகளில் வைத்து potable software ஆக பயன்படுத்தலாம். இது 4 வகையான theme களில் கிடைக்கிறது இதன் options சென்று இதன் பாதுகாப்பு தன்மையை உங்கள் வசதிக்கேற்ப கூடிக்கொள்ளலம்.


you can download
http://www.box.net/shared/0gt7u68lzo#Folder_Lock_Ver_5.9.5