Wednesday, July 28, 2010

பாதிரியாரின் செக்ஸ் தொல்லை-உடன்பட வலியுறுத்தும் கணவர் குடும்பத்தார்-பெண் புகார்

திருச்சி: வேலை பார்க்கப் போன இடத்தில் பாதிரியார் செக்ஸ் வைத்துக் கொள்ள வற்புறுத்துகிறார். இதுகுறித்து கணவர், மாமனார், மாமியாரிடம் கூறினால் அதற்கு உடன்பட வற்புறுத்துகின்றனர். கூடுதலாக வரதட்சணை கேட்டும் கொடுமைப்படுத்துகின்றனர் என்று திருச்சி பெண் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

திருச்சி சுப்பிரமணியபுரம் காந்திநகரைச் சேர்ந்தவர் லாசர். அவரது மகள் பாரதி என்ற எஸ்தர் (19). கடந்த 24.2.10 அன்று தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் மாரநாதா சபையில் பாலாஜி என்ற மனோபாவுக்கும் (29), பாரதிக்கும் திருமணம் நடந்தது.

இத்தனைக்கும் பாரதி, பாலாஜிக்கு சொந்த அத்தை மகள் ஆவார். திருமணத்தின்போது தனது மகளுக்கு சீர் வரிசையாக, ரூ. 1 லட்சம் ரொக்கம், ரூ. 50 ஆயிரத்துக்கு சீர் வரிசை பொருட்களையும் கொடுத்தார் லாசர்.

திருமணத்திற்குப் பின்னர் போடிநாயக்கனூரில் குடித்தனத்தை ஆரம்பித்தனர் பாரதியும், பாலாஜியும். ஆனால் பாலாஜிக்கு குடும்ப வாழ்க்கையிலும், தாம்பத்யத்திலும் ஈடுபாடு இல்லை. இதனால் பாரதி மனம் உடைந்தார்.

மனைவியிடம் சரியாக பேசுவதும் இல்லையாம் பாலாஜி. இதுபோதாதென்று பாலாஜியின் பெற்றோர் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்த ஆரம்பித்தனர்.

இந்த நிலையில், போடி நாயக்கனூர் மாரநாத சபையில் பைபிள் படிப்புக்கு, ஆசிரைய வேலைக்கும் செல்ல வற்புறுத்தினர். இதையடுத்து கடந்த மே மாதம் 3ம் தேதி முதல் 7ம் தேதி வரை அப்பணிக்குச் சென்றுள்ளார் பாரதி.

அந்த நாட்களில் அங்கிருந்த பாதிரியார் டேவிட் புஷ்பராஜ் (இவருக்கு வயது 55 என்பது குறிப்பிடத்தக்கது) என்பவர் பாரதியை வற்புறுத்தி ஆபாச சிடிக்களைப் போட்டுப் பார்க்கக் கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த பாரதி, இதுகுறித்து தனது மாமியாரிடம் கூற அவரோ, அதைக் கண்டு கொள்ளவே இல்லையாம்.

இதை எதிர்பாராத பாரதி, கணவரிடம் முறையிட்டுள்ளார். அவரோ, பாதிரியார் சொல்படி நடந்து கொள் என்று கூற மேலும் அதிர்ச்சியாகியுள்ளது பாரதிக்கு.

அடுத்த அதிர்ச்சியாக, என் இஷ்டப்படி நீ நடக்கவில்லை. இனியும் நீ இங்கு இருக்கக் கூடாது. வாழ வேண்டும் என விரும்பினால், ரூ. 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் 10 பவுன் நகையை வாங்கி வா என்று கூறியுள்ளார் பாலாஜி.

இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார் பாரதி. தந்தை லாசர் உடனடியாக விரைந்து வந்து சம்பதியிடம் இதுகுறித்துப் பேசியுள்ளார். ஆனால் அவர்களோ சரியாக பேசவில்லையாம். இதையடுத்து மகளை வீட்டுக்குக் கூட்டி வந்து விட்டார் லாசர்.

இந்த நிலையில், 30.6.10 அன்று திருச்சி மண்டல போலீஸ் ஐ.ஜி.யை நேரில் சென்று சந்தித்து பாரதி புகார் மனு அளித்தார்.

அதில், எனது கணவர் பாரதி தாம்பத்திய உறவில் விருப்பம் இல்லாமல் இருந்து வருகிறார். பாதிரியார் டேவிட் புஷ்ப ராஜ் என்னிடம் அடிக்கடி செக்ஸ் தொல்லை கொடுத்து வருகிறார். இதற்கு எனது மாமனார், மாமியார், கணவர் ஆகியோர் உடந்தையாக உள்ளனர். அடிக்கடி பணம்- நகை கேட்டு சித்ரவதை செய்து வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து கன்டோன்மென்ட் மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இலங்கை முஸ்லிம்கள் மீதான விடுதலைப் புலிகளின் கொடுமைகள்


சிங்களப் பேரினவாதத்தின் கொடுமைகளிலிருந்து விடுதலை பெறுதல் எனும் தூரநோக்கோடு ஸ்தாபிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் போராட்டங்களில் இறுதியாக நிலைத்து நின்றது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டும்தான்.

ஆயினும், சிறுபான்மையினர் போராட்டமாக உருவெடுத்த விடுதலைப் புலிகள் அமைப்பு, பின்னர் மற்றொரு சிறுபான்மை இனமான முஸ்லிம் சமூகத்தின் மீது கொடுமைகளையும் படுகொலைகளையும் கட்டவிழ்த்து விட்டமையே அதன் அழிவுக்குக் காரணமாயமைந்தது.

விடுதலைப் புலிகள், முஸ்லிம் சமூகத்தை நசுக்க ஆரம்பிக்கும் வரைக்கும், அவர்களது போராட்டத்துக்கு தமது உடல், பொருளால் முஸ்லிம்கள் பெரும் உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்கி வந்துள்ளார்கள். ஆரம்ப கட்டங்களில், புலிகளின் முன்னணி வீரர்களாக நின்று போராடியவர்கள் முஸ்லிம்களே. புலி உறுப்பினர்களை, இந்திய இராணுவத்திடமிருந்தும் இலங்கை இராணுவத்திடமிருந்தும் பாதுகாத்துக் காப்பாற்றி வந்தவர்களும் முஸ்லிம்களே. புலிகள் வருமானமின்றி நாதியற்றுத் திரிந்த காலப்பகுதிகளில், தமது மாடுகள், வயல் விளைச்சல்கள், வர்த்தகப் பண்டங்கள், பொருளாதாரங்கள், ஆளணியினர் என பலவகையிலும் உதவியவர்கள் முஸ்லிம்களே.

எனினும், முஸ்லிம்களை தமது இனமொன்றாகக் கருதாது, அவர்களை இரண்டாந்தரமாகவே கருதி வந்த புலிகள், கிடைத்த சந்தர்ப்பங்களில் அவர்கள் மீது படுகொலைகளையும் கொடுமைகளையும் கட்டவிழ்த்து விட்ட போதே, முஸ்லிம்கள் விழித்துக் கொண்டனர். புலிகளுக்கான தமது ஆதரவையும் ஒத்துழைப்பையும் முழுமையாக வாபஸ் பெற்றனர்.

அதன்பின், முஸ்லிம்களின் பகிரங்க விரோதிகளாகிப் போன புலிகள், அம்முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விட்ட கொடுமைகளும் வன்முறைகளும் மிகக் குரூரமானவை.

ஏறாவூர் நகரில், எல்லைக் கிராமங்களில், தூங்கிக் கொண்டிருந்த முஸ்லிம் மக்களின் கதவுகளை உடைத்து, ஆயுதங்களுடன் உள்ளே புகுந்த புலிகள், அங்கு உறக்கத்திலிருந்த மக்களை சுட்டுக் கொன்றனர். கற்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து, சிசுவை வெளியே இழுத்தெடுத்து, சுவரில் அடித்துக் கொன்றனர். அன்று படுகொலை செய்யப்பட்ட மக்களின் எண்ணிக்கை 201. இவர்களுள் கற்பழிக்கப்பட்ட யுவதிகளும், கழுத்தறுக்கப்பட்ட இளைஞர்களும் அதிகம். குழந்தைகள், சிறுவர்கள், வயோதிபர்கள் பெண்கள் என்ற எவ்வித வேறுபாடுமின்றி புலிகளினால் இப்படுகொலை அரங்கேற்றப்பட்டது.

காத்தான்குடி நகரில், பள்ளிவாயலொன்றில் தொழுகையிலிருந்த மக்களை புலிகள் புறமுதுகில் சுட்டுக் கொன்றனர். இதில், சிறுவர்கள் பெரியோர்கள் உள்ளடங்கலாக 213 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

அழிஞ்சிப் பொத்தானை எனும் கிராமத்தில், ஓர் நள்ளிரவில், ஆயுதங்களுடன் உட்புகுந்த விடுதலைப் புலிகள், அங்கிருந்த மக்களை சுட்டும் வெட்டியும் கொன்று குவித்தனர். இதில் பலியானோரின் எண்ணிக்கை 77.

முஸ்லிம் காலனி மக்களில் 56 பேர், புனித மக்கா நகருக்குச் சென்று தமது ஹஜ் கடமைகளை நிறைவேற்றி விட்டு, பரிசுத்தமான நிலையில் ஊர் திரும்பி வந்து கொண்டிருக்கும் போது, வழிமறித்த புலிகள், அவர்கள் அனைவரையும் வாகனத்திலிருந்து இறக்கி, வரிசையாக நிறுத்தி வைத்து, கண்களையும் கைகளையும் கட்டி விட்டு, நெற்றிப் பொட்டில் சுட்டுக் கொன்றனர். வாகனத்தையும் தீயிட்டுக் கொழுத்தினர்.

வடக்கில், பூர்வீகமாக வாழ்ந்து வந்த முஸ்லிம்களை, ஒரே இரவில், புலிகள் அச்சுறுத்தி வெளியேற்றினர். வெளியேற மறுத்தவர்களை அடித்துத் துன்புறுத்தினர். ஐம்பது ரூபா பணமும் ஒரு மாற்றுடையும் தவிர எதனையும் கொண்டு செல்ல முடியாது என்று நிபந்தனை விதித்தனர். தமது பூர்வீக மண், தமது வயல் நிலங்கள், தமது வீடுகள், சொத்து சுகங்கள், கோடிக்கணக்கான வர்த்தகப் பொருட்கள் அனைத்தையும் பறித்தெடுத்துக் கொண்டு அந்த வடபுலத்து முஸ்லிம்களை அகதிகளாக விரட்டியடித்தனர் இந்தப் புலிகள்.

மூதூரில், சமூக சேவைகளில் ஈடுபாடு காட்டி வரும் முஸ்லிம் இளைஞர்களை இனங்கண்டு, அவர்கள் அனைவரையும் கைது செய்து அழைத்துச் சென்று, வரிசையில் நிறுத்தி வைத்து சுட்டுக் கொன்றனர். 25க்கும் அதிகமான துடிப்பான முஸ்லிம் இளைஞர்கள் இதன்போது படுகொலை செய்யப்பட்டனர்.

வடகிழக்கிலுள்ள முஸ்லிம்களிடமிருந்து கப்பம், ஆட்கடத்தல், கொள்ளை, திருட்டு என புலிகள் சேகரித்துள்ள பொருளாதாரத்தின் மொத்தத் தொகை, 250 கோடிகளையும் தாண்டுவதாக ஒரு கணிப்பீடுள்ளது. அதேவேளை, வடக்கிலிருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட மக்களிடமிருந்து புலிகள் அபகரித்துக் கொண்ட பொருளாதாரத்தின் மொத்தத் தொகை 135 கோடிகளையும் தாண்டும் என்பது சரிகாணப்பட்ட புள்ளிவிபரமாகும்.

இது தவிர, புலிகளால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட முஸ்லிம் புத்திஜீவிகள் மற்றும் கல்விமான்கள் போன்றோரின் தொகையும் அளப்பரியது. 400க்கு மேற்பட்ட முஸ்லிம் ஆசிரியர்கள், 113 முஸ்லிம் பாடசாலை அதிபர்கள், 50க்கு மேற்பட்ட முஸ்லிம் சிற்றூழியர்கள், 25க்கு மேற்பட்ட கல்வி நிருவாக சேவை அதிகாரிகள், 10 நிருவாக சேவை அதிகாரிகள் எனத் தொடரும் இப்பட்டியல், முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தைக் கருவறுத்த புலிகளின் குரூரத்தையும் அயோக்கியத்தனத்தையும் நிறுவப் போதுமானவையாகும். புலிகளால் படுகொலை செய்யப்பட்ட இலங்கை முஸ்லிம்களின் மொத்த சனத்தொகை 5000க்கும் அதிகமாகும்.

மன்னார் அரச அதிபர் மக்பூல், மூதூர் உதவி அரச அதிபர் ஹபீப் முஹம்மத், ஓட்டமாவடி உதவி அரச அதிபர் ஏ.கே. உதுமான், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரச அதிபர் வை. அஹ்மது, காத்தான்குடி உதவி அரச அதிபர் ஏ.எல். பளீல் போன்றோர் இத்தகைய முஸ்லிம் புத்தி ஜீவிகள் உயரதிகாரிகள் போன்றவர்களுள் முக்கியமானவர்கள்.

இவர்கள் அனைவரும் எஸ்.எல்.ஏ.எஸ். மற்றும் எஸ்.எல்.ஈ.ஏ.எஸ். போன்ற நாட்டின் அதியுயா நிருவாகப் பரீட்சையில் திறமைச் சித்தியடைந்து, மாவட்ட நிருவாக அதிகாரிகளாகக் கடமையாற்றிய மிகப் பெரும் முஸ்லிம் ஆளுமைகள். இவர்கள் மீதான புலிகளின் படுகொலைகள், முஸ்லிம் சமூகத்தின் மீது அவர்களுக்கிருந்த இனவெறியையும் குரூரத்தையுமே காட்டுகின்றன.

இவை தவிர, புலிகளினால் அழிக்கப்பட்ட முஸ்லிம்களின் வீடுகள், வழிபாட்டுத் தலங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் ஏனைய பொருளாதாரங்கள் என்பனவற்றின் மொத்தப் பெறுமதி 50 கோடிகளுக்கும் அதிகமானதாகும்.

ஒட்டுமொத்தமாக, படுகொலைகள் எனும் அத்திவாரத்தில் கட்டியெழுப்பப்பட்ட பாதகச் செயல்களின் மொத்த வடிவமே இந்தப் புலிகள் இயக்கமாகும். ஆரம்பத்தில் தமது சக போராட்டக் குழுக்களை அழிப்பதில் கவனம் செலுத்திய புலித் தலைவர் பிரபாகரன், அதன்பின், தனது போராட்ட நடவடிக்கைகளை மறுக்கின்ற, எதிர்க்கின்ற, மற்றும் நியாயம் பேசுகின்ற தமிழ்த் தலைவர்கள் அனைவரையும் கொன்றொழித்தார். துரோகம் என, தான் அரங்கேற்றிய படுகொலைகளுக்கு நியாயமும் கற்பித்தார்.

அதன்பின், முஸ்லிம் சமூகத்திலிருந்த கல்விமான்கள், புத்திஜீவிகளையும் சமூக முன்னோடிகளையும் தேடித் தேடிக் கருவறுத்தார். முஸ்லிம்களின் பொருளாதாரங்களை சூறையாடினார். குறிப்பாக வடக்கிலிருந்த முஸ்லிம்கள் செல்வச் செழிப்போடு வாழ்ந்து வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத புலித்தலைவர் அவர்களது சொத்துக்கள் அனைத்தையும் அபகரித்துக் கொண்டு அவர்களை அகதிகளாக விரட்டி விட்டார்.

முஸ்லிம்களை பொருளாதார ரீதியாக நசுக்கியது போதாதென்று, கல்வி ரீதியாகவும் அவர்களை நசுக்க முனைந்தனர் புலிகள். தமக்கு ஆதரவாக உள்ள தமிழ் நிருவாக அதிகாரிகள் மற்றும் கல்வி நிருவாக சேவை அதிகாரிகளைக் கொண்டு முஸ்லிம்களுக்குக் கிடைத்து வந்த கல்வி வாய்ப்புகளையும் படிப்படியாகப் பறித்தெடுத்தனர்.

இதற்கும் மேலாக முஸ்லிம்களின் காணிகளையும் வயல் நிலங்களையும் பறிமுதல் செய்து, அதில் தமது ஆதரவாளர்களைக் குடியமர்த்தியதோடு முஸ்லிம்களின் வயல் நிலங்களில் தாங்கள் பயிர்களையும் விவசாயங்களையும் மேற்கொள்ளவும், அல்லது முஸ்லிம்களை விவசாயம் மேற்கொள்ள அனுமதித்து விட்டு, அறுவடைக் காலப்பகுதியில் அவர்களை அச்சுறுத்தி, பிரதேசத்துக்குள் வர விடாது தடுத்து தாங்களே அறுவடை செய்து இலாபத்தைப் பெருக்கிக் கொள்ளும் வழக்கத்தை மேற்கொள்ளவும் அவர்கள் நன்கு பழக்கப்பட்டுப் போயினர்.

முஸ்லிம்கள் தமது விவசாயத் தேவைகளுக்காகப் பயன்படுத்தி வந்த வாகனங்கள், அன்றாடப் பாவனைக்காக வைத்திருந்த வாகனங்கள் உள்ளிட்ட பல வாகனங்கள் புலிகளினால் பறித்துச் செல்லப்பட்டுள்ளன. அவை ஒரு போதும் மீள ஒப்படைக்கப்பட்டது கிடையாது. ஜீரணிக்க முடியாமல் தமது வாகனங்களைத் தேடித் தமிழ்ப் பகுதிக்குள் செல்லும் முஸ்லிம்கள் திரும்பி வந்தால் சடலமாக வருவார்கள், அல்லது காணாமல் போவார்கள்.

இவ்வாறு அரசியல், கல்வி, அபிவிருத்தி, பொருளாதாரம், வர்த்தகம், நிலம் என எல்லா வகையிலும் முஸ்லிம்கள் எதிர்கொண்ட பேரிழப்புகளுக்கான முழுப் பொறுப்பையும் புலிகளும் புலிகளின் தலைவர் பிரபாகரனும் மற்றும் அவரது சகாக்களும்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வளவு குரூரத்தையும் செய்து முடித்த பின்னும், பிரபாகரனை தேசியத் தலைவர் என்றும், புலிகள் விடுதலைப் போராளிகள் என்றும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் சில இந்திய அரசியற் கட்சித் தலைவர்கள் குறித்தும் நாம் மிகவும் விசனங் கொள்ள வேண்டி ஏற்படுகின்றது.

தமது அற்ப அரசியல் நலன்களுக்காகவும், பிழைப்புவாதத்துக்காவுமே இத்தகைய நடவடிக்கைகளில் இறங்கி, புலிகள் கொல்லப்பட்டமையைக் கண்டித்தும் தமிழ் மக்கள் அழிக்கப்பட்டமையை எதிர்த்தும் போராட்டமும் ஆர்ப்பாட்டமும் நடத்தி வரும் இவர்கள், சில காலங்களுக்கு முன்பு, புலிகளின் பாசிசவாதத்தினால் தமிழ் மக்கள் சுதந்திரமும் உரிமையும் இழந்து சிறைப்படுத்தப்பட்ட கைதிகள் போன்ற வாழ்ந்த போதும், புலிகளினால் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் எவ்வித நியாயமுமின்றிக் கொன்று குவிக்கப்பட்டு வந்த போதும் எங்கே போயிருந்தார்கள்?

உண்மையில் இவர்களது நோக்கம் தமிழ் மக்களைப் பாதுகாப்பதா? அல்லது தமது அரசியல் பிழைப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினையை ஒரு கொழுகம்பாகப் பயன்படுத்திக் கொள்வதா?

எவ்வாறாயினும்,இத்தகைய குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட பிழைப்புவாத அரசியல்வாதிகளின் கைகளுக்குள் சிக்கி விடாமல், சுயமாகச் சிந்தித்து சொந்த புத்தியுடன் நடப்பதொன்றுதான், இந்தியத் தமிழ் மக்கள், இலங்கையிலுள்ள மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவருக்கும் செய்யும் பேருதவியாக அமையும்.

தேங்க்ஸ் டு : http://irukkam.blogspot.com/2010/06/blog-post_14.ஹ்த்ம்ல்

Monday, July 26, 2010

வன்புணர்வு வழக்கில் கிறிஸ்தவ போதகர் கைது - பரபரப்பு வாக்குமூலம்

சென்னையில் வன்புணர்வு வழக்கில் மதபோதகர் கைது செய்யப்பட்டார். பெண்களை ஏமாற்றி அவர்களுடன் `செக்ஸ்' உறவு வைத்ததோடு, லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்திருப்பதாகவும் அவர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை அயனாவரம் பழனி ஆண்டவர் கோயில் தெருவில் ``பெயித் அசெம்பிளி'' என்ற பெயரில் பெந்தேகோஸ்தே கிறிஸ்தவ சபை உள்ளது. இதில் 150 பேர் வரை உறுப்பினர்களாக உள்ளனர். இந்த சபையில் போதகராக பணியாற்றியவர் செல்வராஜன்.

இந்த சபைக்கு வரும் பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்வதாகவும், கோவில் கட்டியதில் கடன் பட்டு விட்டதாக சொல்லி, சபை உறுப்பினர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்து விட்டதாகவும் செல்வராஜன் மீது புகார்கள் வந்தன. இவர் மீது இந்த சபையைச் சேர்ந்த 2 பெண்கள் அயனாவரம் காவல் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்தனர்.

கர்த்தர் பெயரைச் சொல்லி ஏமாற்றி, செல்வராஜன் தன்னிடம் கடந்த 6 வருடங்களாக செக்ஸ் உறவு வைத்ததாகவும், மேலும் தன்னிடம் 5 சவரன் நகைகளையும், ரூ.3 லட்சம் பணமும் ஏமாற்றி விட்டார் என்றும் ஒரு பெண் குறிப்பிட்டு இருந்தார்.

மற்றொரு பெண் கொடுத்த புகாரில், தான் செல்வராஜனிடம் குமாஸ்தாவாக மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளத்தில் வேலை பார்த்ததாகவும் கர்த்தர் என்னை மனைவியாக வைத்துக் கொள்ள ஆசீர்வதித்து விட்டார் என்று பொய் சொல்லி, செல்வராஜன் ஏமாற்றி என்னை கற்பழிக்க முயற்சித்தார் என்றும், ரூ.63 ஆயிரம் பணத்தையும், 5 சவரன் நகைகளையும் ஏமாற்றி விட்டார் என்றும் குற்றம் சாட்டி இருந்தார்..

இந்த 2 புகார்கள் மீதும் மத்திய சென்னை இணை ஆணையர் தாமரைக்கண்ணன் உத்தரவின் பேரில், துணை ஆணையர் லட்சுமி, உதவி கமிஷனர் சங்கரலிங்கம், ஆகியோர் மேற்பார்வையில் அயனாவரம் ஆய்வாளர் ரமேஷ் தனித்தனியாக 2 வழக்குகள் பதிவு செய்தார். கற்பழிப்பு, கற்பழிப்பு முயற்சி, மோசடி, மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் செல்வராஜன் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

பின்னர் உடனடியாக செல்வராஜன் கைது செய்யப்பட்டார். அவர் காவல்துறையினரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

எனது சொந்த ஊர் அருப்புக்கோட்டை அருகே உள்ள நாகலாபுரம் புதூர் ஆகும். நான் பி.ï.சி.படித்து விட்டு ஐ.டி.ஐ.யும் படித்துள்ளேன். சிறிது காலம் சென்னை மாநகர பேருந்து கழகத்தில் மெக்கானிக்காக பணி புரிந்தேன். அதன் பிறகுதான் இந்த பெந்தேகோஸ்தே கிறிஸ்தவ சபையை தொடங்கினேன்.

கடந்த 14 ஆண்டுகளாக இந்த சபையை நடத்தி வருகிறேன். நான் பாதிரியாருக்கு படிக்கவில்லை. அனுபவ ரீதியாக மதபோதகராக பணியாற்றினேன். எனக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். ஒரு மகன் என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டான். இன்னொரு மகன் படித்து வருகிறான். எனது மனைவி வில்லிவாக்கத்தில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறாள்.

மரியாள் இந்துவாக இருந்து மதம் மாறியவர். அவர் தனது கணவருடன் தகராறு என்றும், அதனால் மனக்குழப்பம் அடைந்துள்ளதாகவும், இதனால் ஜெபம் செய்யும்படியும் கூறினார். அப்போதுதான் எனக்கும், எனது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு நானும் மனக்குழப்பத்தில் இருந்தேன்.

இதனால் நாங்கள் இருவரும் எங்கள் கதையை ஒருவருக்கொருவர் சொல்லி மன ஆறுதல் அடைந்தோம். அப்படித்தான் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு நெருக்கமாகி விட்டோம். அவர் விரும்பித்தான் என்னோடு உறவு வைத்துக் கொண்டார்.

சுகன்யாவும் அவரது கணவரோடு சண்டை என்று சொல்லித்தான் என்னோடு பழக ஆரம்பித்தார். ஆனால் நான் அவரோடு தொடர்பு எதுவும் வைக்கவில்லை. அவருக்கு ஆறுதல் மட்டுமே சொன்னேன்.


இவ்வாறு செல்வராஜன் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

செல்வராஜன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தி சிறைக்கு அனுப்பப்படுவார் என்று காவல்துறை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

Saturday, July 24, 2010

முற்றும் கழண்ட டவுசர்!! அடடே ஆர் எஸ் எஸ் அம்மணக்கட்டை!!

சிபிஐ வசம் இருக்கும் சில முக்கிய விடியோக்களை போன வாரம் ஹெட்லைன்ஸ் டுடே என்ற செய்தித் தொலைக்காட்சி சேவை நிறுவனம் ஒலிஒளி பரப்பியது (6 விடியோக்கள்) . அவை அனைத்தும் பட்டாசு ரகங்கள். ஆர் எஸ் எஸ்ன் முக்கியத் தலைவர்கள் பயங்கரவாதிகள் என்ற உண்மை வெளிவந்தது. இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியை கொல்வதற்கான திட்டங்களையும் வகுத்துள்ளனர் ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள்.

இந்த பயங்கரவாத கும்பலை இயக்கியவர்களில் ஒருவன் இந்திரேஸ் குமார். இவர் ஆர் எஸ் எஸ்ல் பல முக்கியப் பொறுப்புகள் வகிப்பவர். இவன் தான் காஷ்மீர் அமர்நாத் நிலப் பிரச்சினையை தூபம் போட்டு வளர்த்தவர்களில் ஒருவன். இவன் தான் நேபாள் மாவோயிஸ்டுகளுக்கு எதிராகவும் வேலை செய்துள்ளான். குறிப்பாக ஆர் எஸ் எஸ்ன் முஸ்லீம் பிரிவின் தலைவரே இவர்தான். என்னவொரு முரன்நகை? ஆர் எஸ் எஸ் கும்பல் முஸ்லீம் வேசம் போட்டு குண்டு வைக்கும் போது அதன் தலைவர்களோ முஸ்லீம்களுக்கு அமைப்பு ஏற்படுத்தி அதற்கு தலைமை வகிக்கிறார்கள்.

கடந்த சில வருடங்களில் நடந்த பல குண்டு வெடிப்புகளில் ஆர். எஸ். எஸ்ன் பாத்திரம் மீண்டும் மீண்டும் ஊர்ஜிதமாகி வந்துள்ளது. குறிப்பாக, மலேகான் குண்டு வெடிப்பு கைதுகள் விரிவாக நடந்து அதில் ஆர் எஸ் எஸ்ன் நேரடி பாத்திரம் மறுக்க இயலாத அளவு அம்பலமானது. ஆயினும் ஆர் எஸ் எஸை தடை செய்யவோ அதன் அலுவலகங்களை சோதனையிட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்யவோ அரசு தயாராக இல்லை (இந்த இடத்தில் பாப்புலர் பிரண்ட் அமைப்பின் மீது நடத்தப்பட்டுள்ள அரசு தாக்குதல்களை ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளவும்).

(இந்து பயங்கரவாத அமைப்பின் கொடி)






(அயோத்தியில் பஜ்ரங்தள் சிறார்களுக்கு ஆயுதப் பயிற்சி)

(மலேகான் குண்டு வெடிப்பில் இந்து பயங்கரவாதிகள்)

(இந்து பயங்கரவாதி இந்திரேஸ் குமார் - ஆர் எஸ் எஸ் தலைவன்)



ஆர் எஸ் எஸ் இந்து பயங்கரவாதிகளும் மிகத் தைரியமாக பேசி வருவதும், ஏதோ முஸ்லீம் குண்டு வைச்சான் அதனால் நான் திருப்பி குண்டு வைக்கிறேன் என்பது போலவும் நியாயப்படுத்தி வந்துள்ளது. ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள் முஸ்லீம் வேசம் போட்டுக் கொண்டு இந்துக்கள் கூடும் இடங்களில் குண்டு வைத்து மாட்டிக் கொண்டுள்ளனர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. மேலும் இதுவரை இவர்கள் மாட்டிக் கொண்டுள்ள குண்டு வெடிப்புகள் எதிலுமே அவை முஸ்லீம்கள் மீது பலி போடும் வகையிலேயே செய்துள்ளனர். ஆக இவர்களின் நோக்கம் மக்களை மத அடிப்படையில் மோத விட்டு ரத்தம் குடிக்க வேண்டும் என்பதே ஆகும். இஸ்லாம் பயங்கரவாதிகள் ஆர் எஸ் எஸ்ன் எதிர்பார்ப்புக்கு பொறுத்தமான அளவு அதிகமான குண்டு வெடிப்புகளை நிகழ்த்தவில்லை என்பதே இவர்களின் வருத்தம். வருத்தத்தை தீர்க்கும் வகையில் முஸ்லீம் வேசம் கட்டி ஆர் எஸ் எஸ் கும்பலே குண்டுகள் வைக்கத் தொடங்கிவிட்டனர்.

(இந்து பயங்கரவாதிகள் குண்டு வைத்துள்ள இடங்கள்)


ஆதாரம்: outlook india

மாட்டிக் கொண்டவர்களின் இன்னொரு பயங்கரவாத தலைவன், பாஜகவின் முன்னாள் இருமுறை எம்பி பி. எல். சர்மா. இவனும் மாலேகான் குண்டு வெடிப்பு முக்கிய குற்றவாளிகள் தாயனந்த் பாண்டே மற்றும் லெப்டினண்டு ஸ்ரீரிகாந்த் புரோகித் ஆகியோர் இந்தியா முழுவதும் குண்டு வைத்து லட்சக்கணக்கில் மக்களைக் கொல்வது குறித்து பேசுகின்ற விடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. ஆர் எஸ் எஸ்ன் முகமுடி அமைப்பான அபினவ் பாரத் என்ற பயங்கரவாத குழுவே முக்கிய குண்டு வெடிப்பு குற்றவாளி ஆகும். இந்த அமைப்புடன் பல விவாதங்களில் பங்கெடுத்துள்ளான் பாஜக முன்னாள் எம்பி சர்மா.

ஜனவரி 2008ல் பரிதாபாத்தில் நடந்த இவர்களின் கூட்டத்தில் (சர்மா மற்றும் பிற பயங்கரவாதிகள்) இந்திய குடியரசுத் துணைத்தலவரை கொல்லும் திட்டம் தோல்வியடைந்தது குறித்து விவாதித்துள்ள விடியோவும் அம்பலமாகியுள்ளது.

(பயங்கரவாதிகளின் அணிவகுப்பு)

ஆர் எஸ் எஸ் தலைவன் பயங்கரவாத கும்பலின் வழிகாட்டி இந்திரேஸ் குமார் பேட்டி எடுத்தது ஹெட்லைன்ஸ் டுடே. ஆர் எஸ் எஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு என்ற உண்மைகளை சொல்லி அவனிடம் பேசிய பொழுது மறுக்க வழியின்றி ஒடிவிட்டான் பயந்தாக்கொள்ளிப் பயல்.

உண்மைகளை வெளிப்படுத்திய குற்றத்திற்காக ஹெட்லைன்ஸ் டுடே நிறுவனத்தை வெள்ளிக்கிழமை 2000 ஆர் எஸ் எஸ் ரவுடிகளை அனுப்பி தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதல் குறித்தும் ஆர் எஸ் எஸ் அம்பலமானது குறித்தும் பிற இந்திய ஊடகங்கள் அதிகபட்ச மௌனம் காத்தன (தெஹல்காவிற்கு காட்டியது போலவே).

இவர்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கை போய்விட்டதாம் எனவே இந்து ராஷ்டிரம் அமைக்கப் போகிறார்களாம். இதே போல கூறிய 'குற்றத்திற்'காகத்தான் தியாகத் தோழர் ஆசாத்தின் படுகொலை நியாயப்படுத்தப்பட்டது. இந்திய அரசு ஆர் எஸ் எஸ் தலைவர்களை நாயைச் சுடுவது போல சுட்டுக் கொல்லுமா? நாய்க்கும் தன் குட்டி பொன் குட்டி, எனவே அவர்கள் செய்ய மாட்டார்கள்......

அசுரன்

தரவுகள் ஆதாரம்: ஹெட்லைன்ஸ் டுடே

தென்காசி RSS அலுவலகத்தில் குண்டு வைத்த வழக்கு மூன்று இந்து முன்னணி ஆட்கள் கைது!!!

வெடித்த குண்டுகள் ! புதையுண்ட உண்மைகள் !!

ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!


சிபிஐயிடம் மாட்டிக் கொண்டனர் இந்து பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்ன் முக்கியத் தலைவர்கள்!


Hindu Rashtra: Saffron terror's hall of shame


The Headlines Today sting


Vedio-Saffron goons attack HT Delhi office


Saffron goons attack Headlines Today office

Hindu terror is a reality, yet India refuses to utter its name

thnaks to : http://www.tamilcircle.net


Sunday, July 18, 2010

பெற்ற மகனுடன் செக்ஸ் உறவு கொண்ட அமெரிக்க தாய் கைது.

நியூயார்க்: பெற்ற மகனுடனேயே செக்ஸ் உறவு வைத்துக் கொண்ட 36 வயது அமெரிக்கப்
பெண்ணை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.அமெரிக்காவின் மிச்சிகனைச் சேர்ந்தவர் அய்மி ஸ்வோர்ட். இவருக்கு தற்போது வயது 36 ஆகிறது. இவருக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் பிறந்தவுடனேயே தத்து கொடுத்து விட்டார் அய்மி. இந்த நிலையில் சிறுவனுக்கு 14 வயதான நிலையில் அவனைத் தேடிக் கண்டுபிடித்து அழைத்துக் கொண்டார்.

தற்போது 16 வயதாகும் அச்சிறுவனை கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் ரீதியாக தவறாகப்
பயன்படுத்தியதாக அய்மி மீது குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிறந்தவுடன் தத்து கொடுக்கப்பட்ட தனது மகனை 14 வயது பையனாக அய்மி பார்த்தபோது
மகன்-தாய் உணர்வுகளை அய்மி வெளிப்படுத்தவில்லை. மாறாக, ஒரு பாய் பிரண்டை
பார்க்கும் கேர்ள் பிரண்டின் உணர்வுகள்தான் அவரிடம் ஏற்பட்டதாக அய்மியின்
வழக்கறிஞர் மிச்சல் ரிபிட்வர் கூறியுள்ளார்.

இந்த உணர்வு காரணமாக கடந்த 2 வருடங்களாக தனது மகனுடனேயே செக்ஸ் உறவு வைத்து வந்துள்ளார் அய்மி. தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள அய்மிக்கு மன நல ஆலோசனை வழங்கப்படவுள்ளது. அய்மிக்கு 9 முதல் 30 வருடங்கள் வரை தண்டனை கிடைக்கும் எனத் தெரிகிறது.

Thursday, July 15, 2010

கும்பாவுருட்டி அருவி-அதிகரிக்கும் கேரள வனத்துறையினரின் செக்ஸ் வக்கிரங்கள்

கும்பாவுருட்டி அருவி-அதிகரிக்கும் கேரள வனத்துறையினரின் செக்ஸ் வக்கிரங்கள்
செங்கோட்டை: கேரள மாநிலத்தில் உள்ள கும்பாவுருட்டி அருவிப் பகுதிக்குச் செல்லும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் கேரள வனத்துறையினரின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அவதியுற்று வருகின்றனர்.

செங்கோட்டை அருகே தமிழக எல்லையை தாண்டி அச்சன்கோவில் வனப்பகுதியில் உள்ளது கும்பாவூருட்டி அருவி.

வனப்பகுதிக்குள் அமைந்திருக்கும் இந்த அருவிக்கு கரடுமுரடான பாதைகளை தாணடிதான் செல்ல வேண்டும். இதனால் பெண்கள் அதிக அளவில் அங்கு செல்வதில்லை. ஆனாலும் சில பெண்கள் தங்கள் குடும்பத்தினரோடு வந்து செல்கின்றனர். அப்படி வரும் பெண்களை இங்குள்ள கேரள வனத்துறையினரும், காட்டு பகுதியி்ல் சுற்றி திரியும் ரவுடிகளும் பாலியல் தொந்தரவு செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையி்ல் கடந்த சில தினங்களுக்கு முன் மேலும் ஒரு பகீர் செயலை கேரள வனத்துறையினர் செய்துள்ளனர். தமிழகத்தில் இருந்து ஒரு குடும்பம் கும்பாவூருட்டி அருவிக்கு சுற்றுலா சென்றுள்ளது. அப்போது அவர்களில் ஒரு பெண்ணை வனத்துறையினர் பிடித்து பாலியல் தொந்தரவு செய்துள்ளனர். அந்த பெண்ணின் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக ஓட விட்டு வேடிக்கை பார்த்துள்ளனர். மேலும், இதை வனக்குழுவினர் செல்போனில் பதிவு செய்து இன்டர்நெட்டில் பரப்பியுள்ளனர்.

தற்போது அந்த காட்சிகள் இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த காட்சியுடன் வனத்துறையினர் அந்த பெண்ணின் குடும்பத்தினரை மிரட்டும் குரலும் தெளிவாக கேட்கிறது. இந்த பகீர் காட்சிகள் இணையத்தில் வெளிவர தொடங்கியுள்ளதை அடுத்து திருவனந்தபுரம் வனஅதிகாரி வர்கீஸ் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் கேரள-தமிழக எல்லையோர மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குடும்பத்தோடு சென்ற தாயையும், அவரது 15 வயது மகளையும் இக்கும்பல் பலாத்காரம் செய்ததாக அப்போதே தகவல் வெளிவந்தது. ஏற்கனவே இதே பகுதியில் கடந்த சில ஆண்டு காலமாகவே இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

வனப்பகுதியில் நடக்கும் சம்பவங்கள் வெளியே தெரியாமல் புதைந்து விடுவது குறிப்பிடத்தக்கது. ஆரியங்காவு பாலருவியில் குளிப்பதை சில கும்பல்கள் வீடியோ எடுப்பதாகவும் ஏற்கனவே கடந்த ஆண்டே குற்றச்சாட்டுகள் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.

Monday, July 12, 2010

வக்கிரக் கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் !


technology-how-to-take-great-photos-on-y

செல்போன்கள் ஆளுக்கு இரண்டு என மாறிவிட்ட இன்றைய சூழலில் செல்போன் தொடர்பான குற்றங்கள் உலகம் முழுவதும் மலிந்து கிடக்கின்றன. செல்போன் குற்றங்களில் முதல் இடத்தில் நிற்கிறது ஆபாசப் படங்கள், வீடியோக்கள் !

பத்து கல்லூரி மாணவர்களின் செல்போன்களைப் பரிசோதித்தால் அதில் ஆறு பேருடைய செல்போன்களிலாவது நிச்சயம் இருக்கும் சில ஆபாசப் படங்கள் அல்லது ஆபாச வீடியோக்கள்.

இந்தப் படங்களில் இருப்பவர்கள் நடிகைகளோ, பாலியல் தொழிலாளிகளோ அல்ல. பள்ளி, கல்லூரி மாணவிகள், அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் அல்லது குடும்பப் பெண்கள் என்பது அதிர வைக்கிறது. அவர்களுடைய தனிமையை ஊடுருவிப் பார்க்கும் வல்லூறுக் கண்களே இந்த குற்றங்களின் பின்னணியில் இயங்கும் காரணகர்த்தாக்கள்.

அதிர்ச்சியூட்டும் இத்தகைய படங்கள் பல ஆயிரக்கணக்கான பெண்களுடைய வாழ்க்கையை நாள் தோறும் சீரழிக்கிறது என்பதே இதன் பின்னணியில் உறையும் வலிமிகுந்த உண்மையாகும்.

சக பணியாளியையோ, மாணவியையோ, தோழியையோ ஆபாசமாய் படம் எடுத்து அதை மற்றவர்களுக்குக் காண்பிக்கப் போவதாய் செய்யப்படும் “பிளாக் மெயில்” பல ஆயிரம் பெண்களுடைய கற்பையும், நிம்மதியையும், வாழ்க்கையையும் கலைத்து எறிந்திருக்கிறது

இந்த குற்றங்களில் ஈடுபடுபவர்கள் எல்லோரும் இளைஞர்கள் என நீங்கள் நினைத்தால் அது மாபெரும் தவறு, நரை வயதுப் பெரியவர்கள் பலரும் இத்தகைய குற்றங்களின் ஊடாக இயங்குகின்றனர். பொது இடங்கள், பூங்காக்கள், இண்டர்நெட் காஃபேக்கள் தொடங்கி படுக்கையறைகளும், கழிவறைகளும் கூட இந்த ரகசியக் கண்காணிப்புப் பட்டியலில் இருக்கின்றன என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும்.

தனியே ரகசியமாய் எடுக்கப்படும் பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் யூ டியூப் போன்ற தளங்களில் மலிந்து கிடக்கின்றன என்பதும். உலகம் முழுவதிலுமுள்ள மொபைல் பயன்பாட்டாளர்களால் பார்க்கப்படுகின்றன என்பதும் நமது தனிமையின் மீதே ஒரு பயத்தை ஏற்படுத்திவிடுகிறது.

“எல்லோரிடமும் கேமரா போன்கள் இருக்கும் போது, குற்றவாளிகள் பொது இடங்களில் குற்றங்களைச் செய்யத் தயங்குவார்கள், பத்திரிகையாளர்கள் சட்டென கண் முன்னால் நிகழும் நிகழ்ச்சிகளைப் படமெடுத்து விட முடியும்” என ஏகப்பட்ட பில்டப் கதைகளோடும், எக்கச் சக்க எதிர்பார்ப்புகளோடும் சந்தைக்கு வந்த மொபைல் போன்கள் இன்று அந்தரங்கங்களின் வெளிச்ச மேடையாகியிருப்பது கவலைக்குரிய ஒன்று.

போதாக்குறைக்கு மொபைல் நிறுவனங்கள் போன்களின் விலையையும், மெமரி கார்ட்களின் விலையையும் சகட்டு மேனிக்கு குறைத்து வருவது அங்கிங்கெனாதபடி எங்கும் அதி நவீன கேமராக்கள் நிரம்பி வழிய ஒரு காரணமாகிவிடுகிறது.

இன்றைய அதி நவீன மொபைல் போன்கள் பெரும்பாலும் ஒரு சின்ன கம்ப்யூட்டராகவே செயல்படுகின்றன. சில விரல் அசைவுகளினால் இணையத்தொடர்பை ஏற்படுத்தவும், தகவல்களைப் பரிமாற்றிக் கொள்ளவும் முடியும் என்பதனால் பிழைகள் பரவும் வேகமும் ஜெட் வேகமாகியிருக்கிறது.

இந்த ஆபத்தைக் கருத்தில் கொண்டு பல நாடுகள் கேமரா மொபைல் போன்களுக்கான அனுமதியை மறுத்து வருகின்றன. உதாரணமாக சவுதி அரேபியாவில் கேமரா போன்களுக்கு அனுமதி இல்லை. அமெரிக்காவிலும் நீச்சல் குளம் போன்ற பொது இடங்களில் கேமரா போன்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

பெரும்பாலான சாப்ட்வேர் அலுவலகங்களில் கேமரா மொபைல்களை அனுமதிப்பதில்லை. சாப்ட்வேர் நிறுவனங்களின் அமைப்பையோ, ரகசியங்களையோ, படமெடுத்துவிடக் கூடாது எனும் முன்னெச்சரிக்கையே இதற்கான காரணம். இதற்காக அலுவலகங்கள் கேமராக்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டியோ, மொபைல் கேமராக்களை முழுமையாய் தடை செய்தோ சட்டங்களைக் கொண்டு வருகின்றன.

சில சாப்ட்வேர் அலுவலகங்களில் நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கேமரா இயங்காதவாறு செய்து விடுகின்றனர். உங்கள் மொபைலில் கேமரா இருந்தாலும் இந்த அலுவலக வளாகத்தில் நுழைந்தவுடன் அவை செயலிழந்து விடுகின்றன.

கம்ப்யூட்டர்களைப் போலன்றி இந்த மொபைல் படங்களை தனிமையான இடங்களிலிருந்து பார்த்து விட முடியும் என்பதனால் இளைய தலைமுறையினரை இந்த மொபைல் வீடியோக்கள் ஒரு அடிமையாகவே மாற்றியிருக்கின்றன.

நவீன ரக போன்கள் ஒரு தொடுதலிலேயே “யூ டியூப் (You Tube)” பாலியல் வீடியோக்களை இயக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன என்பதும், பல பில்லியன் டாலர் பிசினஸ் மொபைல் பாலியல் வீடியோ தொழிலில் மறைந்துள்ளது என்பது கவனிக்கத் தக்கது.

x

நம்மைச் சுற்றி உருவமற்ற நிழலாய் எப்போதுமே தொடரும் இத்தகைய சிக்கல்களிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள என்ன செய்யலாம் ?

1. எத்தனை நம்பிக்கைக்குரிய நண்பராய் இருந்தாலும், உங்களை கவர்ச்சியாகவோ, அந்தரங்கமாகவோ படம் எடுக்க அனுமதிக்காதீர்கள். ஆண் தோழர்கள் என்றல்ல உங்கள் பெண் தோழியர்களுக்கும் அனுமதி அளிக்காதீர்கள். ஏராளம் படங்கள் சக தோழியரால் எடுக்கப்படுபவையே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

2. “உடனே அழித்து விடுவேன்” எனும் வாக்குறுதியுடன் எடுக்கப்படும் இந்தப் படங்களை சில வினாடிகளிலேயே வேறொரு கைப்பேசிக்கோ, மின்னஞ்சலுக்கோ உங்களுக்குத் தெரியாமலேயே அனுப்பிவிட்டு உங்கள் முன்னால் சாதுவாக படங்களை அழித்துக் காண்பிப்பது வெகு சுலபம் என்பதை உணருங்கள்.

3. தனியாக ஆண்களுடன் தங்க நேரிடும் சூழல்களில் இரட்டைக் கவனம் கொண்டிருங்கள். எந்தக் காரணம் கொண்டும் மது, போதை போன்றவற்றை விரும்பியோ, கட்டாயத்தின் காரணமாகவோ உட்கொள்ளாதீர்கள்.

4. உங்கள் மொபைலில் புளூடூத் ஆன் செய்யப்பட்டிருந்தால் உங்கள் மொபைலில் உள்ள படங்களையோ, செய்திகளையோ உங்களுக்குத் தெரியாமலேயே திருடிச் செல்ல நிறைய மென்பொருட்கள் உள்ளன. எனவே தேவையற்ற நேரங்களில் புளூடூத் ஐ ஆஃப் செய்து விடுங்கள்.

5. வெப் கேம் – மூலமாக காதலர்களுடன் பேசும் பெண்கள் உணர்ச்சிவசப்பட்டு தங்கள் அந்தரங்கங்களை வீடியோவில் அரங்கேற்றாதீர்கள். இவை வழியிலேயே திருடப்பட்டு வக்கிரக் கண்களால் விவகாரமாக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

6. இண்டர்னெட் காஃபேக்களில் – யாருமே இல்லை, விரும்பிய தனிமை இருக்கிறது என உங்கள் சில்மிஷங்களை நிகழ்த்தாதீர்கள். பல இண்டர்னெட் கஃபேக்கள் ரகசிய கேமராக்களைப் பொருத்தி நீங்கள் தனிமை என நினைக்கும் அறைக்குள் செய்வதை படம் பிடித்துக் கொண்டிருக்கின்றன.

7. பூங்கா, கடற்கரை போன்ற இடங்களில் செல்லும் போதும் ஏதோ ஒரு மூன்றாவது கண் உங்களைக் கவனிக்கிறது எனும் உள்ளுணர்வு கொள்ளுங்கள்.

8. எந்தக் காரணம் கொண்டும் “பிளாக் மெயிலுக்கு” பணிந்து விடாதீர்கள். பிளாக் மெயில் செய்பவர்கள் தங்கள் தேவை முடிந்ததும் உங்களுக்குத் தந்த வாக்குறுதியைக் காற்றில் பறக்க விடுவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பிரச்சினை முளைக்கும் போதே ரகசியமாய் காவல் துறையைத் தொடர்பு கொள்ளுங்கள்.

9. யாரேனும் உங்களுக்கு “விவகாரமான” குறுஞ்செய்தியோ, படமோ, வீடியோவோ அனுப்பினால் அதற்கு துவக்கத்திலேயே ஒரு அழுத்தமான முற்றுப் புள்ளி இட்டு விடுங்கள். இவையெல்லாம் உங்களை வலையில் விழவைக்கும் தந்திரங்கள். “ஸ்போர்டிவ்”வாக எடுத்துக் கொள்கிறேன் பேர்வழி என நீங்களே போய் அந்த மாய வலையில் விழுந்து விடாதீர்கள். அப்படி வரும் தகவல்களை உடனுக்குடன் அழித்தும் விடுங்கள்.

10. உங்கள் மொபைல் எண்ணை இணைய தளங்களிலோ, ஆர்குட் போன்ற இடங்களிலோ கொடுக்காதீர்கள். இவை உங்களுக்கு தேவையற்ற எஸ்.எம்.எஸ்கள் வரவோ, சிக்கல்கள் வரவோ வழிவகுக்கக் கூடும்.

11. மொபைல் போன்களை அதற்குரிய சர்வீஸ் செண்டர்களிலோ, அல்லது மிகவும் நம்பிக்கைக்குரிய நபர்களிடமோ மட்டுமே கொடுங்கள். இல்லையேல் உங்கள் மொபைல் போன் “குளோனிங்” செய்யப்படக் கூடும் !

12. உங்கள் வீட்டில் குழந்தைகளோ, பதின் வயது சிறுமிகளோ இருந்தால் மிகவும் கவனம் தேவை. நெருங்கிய உறவினர்களானாலும், நண்பர்களானாலும் வரையறுக்கப்பட்ட சுதந்திரத்தை மட்டுமே வழங்குங்கள். கேமரா விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்காதீர்கள்.

13. எந்தக் காரணம் கொண்டும் விளையாட்டாக உங்கள் உடல் “அழகை” நீங்களே புகைப்படம் எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் மொபைலில் இருந்து அவை இன்னோர் மொபைலுக்கு திருடப்பட்டு விடலாம்.

14. நீங்கள் பேசுவதையெல்லாம் அட்சர சுத்தமாக பதிவு செய்யும் வல்லமையுள்ளவை நவீன கேமராக்கள். எனவே பேசும்போது கூட “இந்த உரையாடல் பதிவுசெய்யப்பட்டால்…” எனும் எச்சரிக்கை உணர்வுடனே பேசுங்கள்.

எல்லா வினைக்கும் உரித்தான எதிர்வினைகள் கேமரா மொபைல்களுக்கும் உள்ளன. ஒட்டுமொத்த தடை விதித்தல் சாத்தியமற்ற சூழலில் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

நன்றி :http://sirippu.wordpress.com/2009/07/07/camera_mobile/

Wednesday, July 7, 2010

சிறுவர் இல்லத்தில் பாலியல் பலாத்காரம்: காப்பக உரிமையாளர் கைது

அகத்தீஸ்வரம்: கன்னியாகுமரி அருகே அகத்தீஸ்வரத்தில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட காப்பக உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரியை அடுத்த அகத்தீஸ்வரத்தை சேர்ந்தவர் ஜெஸ்டின். இவர் அகத்தீஸ்வரத்திற்கு அருகில் உள்ள பூஜபுரைவிளையில் கடந்த 10 ஆண்டுகளாக குழந்தைகள் காப்பகம் நடத்தி வருகிறார்.

இதில் 3 வயது முதல் 16 வயது வரை உள்ள 18 பெண் குழந்தைகள் உள்பட 32 குழந்தைகள் தங்கி படித்து வந்தனர். இந்நிலையில் இக்காப்பகத்தில் தங்கி படித்து வந்த 8-ம் வகுப்பு மாணவர்கள் மூன்றுபேர் தாங்கள் கொடுமைப்படுத்தபடுவதாகவும், பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாகவும் தென்தாமரைகுளம் போலீசில் புகார் செய்தனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் தாசில்தார் நாகராஜன், நெல்லை சிறுவர் கூர்நோக்கு இல்ல கண்காணிப்பாளர் சகிலா பானு, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் உமா மகேஸ்வரி, ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் கென்னடி, கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் பால்துரை, தென்தாமரை குளம் எஸ்.ஐ. ஜெசி ஆகியோர் அகத்தீஸ்வரம் சென்று அந்த காப்பகத்தில் சோதனை நடத்தினர்.

அப்போது சிறுவர் இல்லம் முறையான அனுமதி இல்லாமல் இயங்கி வந்தது தெரிய வந்தது. மேலும் குழந்தைகளிடம் விசாரணை நடத்தியதில் குழந்தைகள் கொடுமைப்படுத்தப்பட்டதும், பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த குழந்தைகளில் 16 பேர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பெற்றோர் இல்லாத குழந்தைகள் நெல்லை சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஜெஸ்டினை கைது செய்தனர். ஜெஸ்டின் கடந்த 2002-ம் ஆண்டு பள்ளி சிறுமியை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் முஸ்லிம் நண்டுகள்!

ஒரு கூஜாவுக்குள்ளே நிறைய நண்டுகள் இருந்துச்சாம். ஹிந்து நண்டுகள், கிறித்துவ நண்டுகள், முஸ்லிம் நண்டுகள் எல்லாம் இருந்துச்சாம்..உள்ள இருந்த ஹிந்து நண்டுகள் சாதி அடிப்படையில் உயர்சாதி நண்டுகள், பிற்படுத்தப்பட்ட சாதி நண்டுகள், மிக பிற்படுத்தப்பட்ட சாதி நண்டுகள், தாழ்த்தப்பட்ட சாதி நண்டுகள் அப்படின்னு பல பிரிவுகளாக இருந்துச்சாம்.

அது போலவே கிறித்துவ நண்டுகளும் சாதி அடிப்படையில் பிரிந்து .நாடார் கிறுத்துவ நண்டுகள் - வன்னிய கிறுத்துவ நண்டுகள், தலித் கிறித்துவ நண்டுகள் அப்படின்னு கிடந்ததாம் - ஆனால் முஸ்லிம் நண்டுகளெல்லாம் மத்த நண்டுகள பாத்து ஏளனமா சிரிச்சக்கிட்டே சொன்னிச்சாம் "நாங்கல்லாம் ஒரே மாதிரியான நண்டுகள்.. ஏற்ற தாழ்வு எங்களுக்குள்ள கிடையாது" அப்படின்னு.. பிற நண்டுகளும் அத நம்பி .. அடடா.முஸ்லிம் நண்டுகள் மாதிரி 'சகோதரத்துவத்தோட' ஒத்துமையா இருக்கனும்னு நெனச்சி பெருமூச்சு விட்டதாம்.

நண்டுகளுக்கெல்லாம் காலங்காலமா கூஜாக்குள்ளாற அடஞ்சி கெடந்து வாழ்க்கையே வெறுத்து போயிடிச்சாம்.. சுதந்திரமா சுற்றித்திரிய வேண்டிய நம்மை அநியாயமாக இப்படி கூஜாக்குள்ள அடச்ச்சுப்போட்டுட்டானுங்களே அப்படினு புலம்ப ஆரம்பிச்சிடிச்சாம்.. எல்லா நண்டுகளும் யாரு எப்ப மூடிய தொறப்பா.. ஏறி வெளியே போகலாம்னு ஆர்வமாக இருந்துச்சாம்..

எல்லாரும் எதிர்பார்த்த மாதிரி அந்த கூஜாவின் மூடிய யாரோ தொறந்து வெச்சாங்களாம்.. அதைப் பார்த்தவுடன் நண்டுகளுக்கெல்லாம் மிகவும் சந்தோஷமாம்... முதலில் எல்லாரையும் முந்திக்கொண்டு.. உயர் சாதி நண்டுகள் எல்லாம் ஒவ்வொன்றாக வெளியே வந்ததாம்.. அப்புறம் கொஞ்ச நேரங்கழிச்சு மத்த நண்டுங்கள் எல்லாம் வெளிய வந்ததாம். அது மாதிரியே சாதி வேறுபாடுகளால் பிரிந்து கிடந்த கிறித்துவ நண்டுகளும் ஒவ்வொரு பிரிவா வெளியே வந்ததாம்..

ஆனா வெகு நேரம் ஆகியும் ஒரு முஸ்லிம் நண்டு கூட வெளிய வரவே இல்லையாம்.. உள்ளார பாத்தா... ஒரு முஸ்லிம் நண்டு கஷ்டப்பட்டு மேலே ஏறி வர முயற்சி செய்றப்ப..மாற்று இயக்கத்தை சார்ந்த முஸ்லிம் நண்டுகள் ’குரூப்பா’ ஒன்னு சேர்ந்துக்கிட்டு அதோட கால புடிச்சி இழுத்து கீழே போட்டு கைக்கொட்டி சிரிச்சிச்சாம்.. .அது மாதிரியே..மாத்தி மாத்தி குரூப் சேர்ந்துகிட்டு - மற்ற நண்டோட காலப்பிடிச்சி இழுத்து கீழே போடுறது தொடர்ந்து நடந்திச்சாம்..

இத பாத்த வெளியே வந்த நண்டு ஒன்னு கேட்டிச்சாம்.. ஏன் இப்படி உங்களுக்குள்ள எவரும் வெளியா வராத மாதிரி 'கால் வாருகிற' வேலய கச்சிதமா பன்னுறீங்க்கன்னு..நியாயமான கேள்விதானே கேட்டுச்சு அந்த நண்டு.. ஆனா அந்த ஒரு கேள்விக்கு..உள்ள இருந்த முஸ்லிம் நண்டுகள்ள ஒவ்வொன்னும் ஒவ்வொரு மாதிரி பதில் சொன்னிச்சாம்..

ஒவ்வொரு பதிலா பார்ப்போமா..?

ஒரு நண்டு சொன்னிச்சாம் நாங்க வெளியே ஏறி போகாம - எங்க கால்கள் முடங்கி போவதற்கு காரணமே இந்த சுன்னத் வல் ஜமாத் நண்டுகள்தான்.அதக்கேட்ட சுன்னத் வல் ஜமாத் ’தலைவர்’ நண்டு சொன்னிச்சாம்.."இந்த 'தவ்ஹீத்' நண்டுகள் வந்த பிறகுதான் கால் வாரும் வேலை இப்படி மும்முரமா நடக்குது..எங்க மேலே குத்தம் எதுவும் இல்ல" அதக் கேட்ட மத்த தவ்ஹீது நண்டுகளுக்குள்ள இருக்குற ஒரு குரூப்பு நண்டுகளுக்கு மூக்குக்கு மேலே கோபம் வந்துடுச்சாம்.."தவ்ஹீது" நண்டுகள்ன்னு 'பொதுப்படையா சொல்லாதே. நாங்கதான் - ஒரிஜினல் தவ்ஹீது நண்டுகள்..மத்ததுல்லாம் போலிகள் - வழிகேட்டில் இருப்பவர்கள் இதக்கேட்ட மத்த நண்டுகளுக்கு கோபம் வந்து. "நாங்களும்தான் தவ்ஹீது -.யாரு ஒரிஜினல் - யாரு போலின்னு சொல்றதுக்கு யாருக்கும் அருகதை இல்லைன்னு.. இதக்கேட்ட இன்னொரு குரூப் நண்டுகள் " போலிகளை அடையாளம் காட்டும் வரை ஓயமாட்டோம்..உறங்கமாட்டோம் அப்படின்னு சவால் விட்டதாம்.

ஒவ்வொரு அணியைச் சார்ந்த தலைமை நண்டுகளும் - எதிர் அணியை சார்ந்தவரகள் உண்மையான "தவ்ஹீது" நண்டுகள் அல்ல என்பதை வி.சி.டி, வார-மாத இதழ், இரவு நேர தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் ‘தோலுரித்து’ காட்டுவதற்காக - கூஜாக்குள்ள சிக்கி கிடக்கும் ‘தொண்டர்’ நண்டுகளிடமும் - பிழைப்புக்காக மனைவி மக்களை பிரிந்து - பாலைவனத்தில் கூலிக்கு வேலைப் பார்க்கும் ’தொண்டர்’ நண்டுகளிடம் மும்முரமாக நிதி வசூல் பன்னப்பட்டதாம்

அன்றிலிருந்து இன்றுவரை - யாரெல்லாம் உன்மையான தவ்ஹீது அல்ல என்று நிரூபிப்பதற்காக ‘மார்க்க பிரச்சாரம்’ - ‘ஏகத்துவ விளக்கம்’ ‘இஸ்லாமிய விளக்கம்’ என்று பல பெயர்களில் - இயக்கம் வளர்க்கும் பணி தொடர்ந்து வருகிறதாம். தலைவர் நண்டுகளின் உணர்ச்சிப்பூர்வமான பிரச்சாரத்தில் சிக்கிய நண்டுகள் கூஜாவை விட்டு வெளியே போகவேண்டும் என்பதை மறந்துவிட்டதாம்.. இயக்க வெறிபிடித்த சில நண்டுகள் உண்மையான தவ்ஹீத் நண்டு யாருன்னு முடிவா தெரிவதற்குள்ள எந்த இயக்கத்தை சார்ந்த நண்டாவது வெளியே போக முயற்சி பன்னினால்..கால புடிச்சி ஒரே இழுப்பா இழுத்து கீழே போடனும்னு "குர் ஆன் - ஹதீஸ்" ஆதாரத்தோடு ஒரே ஒரு தீர்மானம் மட்டும் 'தொண்டர்' நண்டுகளின் 'நாரே தக்பீர்' ..அல்லாஹ் அக்பர்’ கோசங்களுக்கிடையே நிறைவேற்றப்பட்டதாம்..

இயக்க உறுப்பினர்களாக காலம் கழித்த சில நண்டுகள் - தாம் இதுவரை செய்த ‘கால் வாறும்’ செயலால் சமுதாயத்திற்கு எந்தப் பயனும் இல்லையென்று காலங்கடந்து ஞானோதயம் வந்ததாம் - ஆனால் தலைமையை எதிர்த்து கேள்விக்கேட்கும் மனபான்மை மழுங்கி போனதால் - இயக்கத்தை விட்டு வெளியேறாமல் - கால் வாறும் பணியிலிருந்து ஒதுங்கிக்கொள்ள முடிவெடுத்ததாம். இனியாவது முஸ்லிம் நண்டுகள் ஒற்றுமையாகி - கூஜாவை விட்டு வெளியேறும் என்று நம்பிக்கையுடன் அந்த நண்டுகள் இருந்தபொழுது - கால் வாறும் பணியை செவ்வென செய்வதற்காக புதிய தலைமுறையை சார்ந்த இளைய நண்டுகள் உருவாக்கப்பட்டு - தயார் நிலையில் இருந்ததாம்.. இந்நிலை எதிர்காலத்திலும் எவ்வித தடையுமின்றி நடைபெற தேவையான ஏற்பாடுகளை ஒவ்வொரு இயக்க தலைமையும் திட்டமிட்டு செய்து வருகின்றனவாம்..

அன்றிலிருந்து - ஒவ்வொரு முஸ்லிம் நண்டும் கூஜாவை விட்டு வெளியேற என்ணும் பிற நண்டுகளின் கால்களை இறுக்கமாக பிடித்து - இழுத்து போட்டு இயக்கத் தலைமையிடம் நற்பெயர் வாங்க போட்டி போட்டதாம் .அதனால..கூஜாவை விட்டு இதுவரை ஒரு முஸ்லிம் நண்டு கூட வெளியே வராமல் இன்னும் அப்படியே இருக்குதாம்..

தோழமையுடன்,

பிறைநதிபுரத்தான்

http://pirainathi-puram.blogspot.com

Sunday, July 4, 2010

பிஞ்சுகளைக் குதறிய 90 வயது ஆஸ்திரேலிய பன்றி.


ஜோசப் கிராஸ் என்ற 90 வயது ஆஸ்திரேலிய வெள்ளைக்காரர் தாய்லாந்து நாட்டில் கடந்த பத்து வருடமாக வசித்து வருகிறார். சியாங் மாய் எனும் நகருக்கு அருகிலுள்ள இவரது வீட்டில் வைத்து இந்த முதியவர் தாய்லாந்து போலீசால் கைது செய்யப்பட்டிருக்கிறார். காரணம் என்ன?

நான்கு பச்சிளம் சிறுமிகளான சகோதரிகளை இந்த கிழட்டுப் பன்றி பாலியல் வன்முறை அதாவது ‘ரேப்’ செய்திருக்கிறது. 2008ஆம் ஆண்டு இந்தச் சிறுமிகளுக்கு ஆங்கிலம் கற்றுத் தருவதாக கூறி குடும்பத்தினரை சம்மதிக்க வைத்திருக்கிறான். அப்போது ஐந்து முதல் 13 வயதுள்ள இந்த சிறுமிகளுக்கு உயர்ரக இனிப்பும், சாக்லேட்டும் கொடுத்து நிர்வாணமாக்கி அதை புகைப்படம் கூட எடுத்திருக்கிறான்.

சிறுமிகள் வீட்டில் அசாதாரணமாக நடந்து கொள்வதை அடுத்து பெற்றோர்கள் விசாரிக்க உண்மை வெளிவந்து போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்கள். கிராசின் வீட்டிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாணச் சிறார்களது புகைப்படங்கள் கைப்பற்றப் பட்டிருக்கின்றன. அவற்றை மின்னஞ்சலில் வெளிநாடுகளுக்கும் அனுப்பியிருக்கிறான். இதனால் இது மிகப்பெரிய குழந்தை விபச்சார வலைப்பின்னலாக இருக்குமோ என்றும் போலீசு அதிகாரிகள் விசாரிக்கிறார்கள்.

தாய்லாந்து என்றால் வெளிநாட்டவர்க்கு குறிப்பாக மேற்குலக மனிதர்களின் நினைவுக்கு வருவது வகைவகையான விபச்சார – பாலியல் கேளிக்கை அடங்கிய சுற்றுலாதான். அத்தகைய பாலியல் வக்கிரங்களில் இப்போது உலகமெங்கும் கடும் கிராக்கியிருப்பது சிறார் விபச்சாரம்தான். வயதுக்கு வந்த விதவிதமான தேசிய இனப்பெண்களை ருசி பார்த்த காம வெறியர்கள் இப்போது கேட்பது குழந்தைகளைத்தான்.

கோவாவிலோ, மாமல்லபுரத்திலோ, இலங்கை கடற்கரையிலோ இல்லை தாய்லாந்திலோ இப்போது சிறார் விபச்சாரம்தான் கொடிகட்டிப் பறக்கிறது. இப்படித்தான் சுற்றுலா என்ற பெயரில் வெள்ளைப் பன்றிகள் ஆசியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளின் பிஞ்சுகளை குதறி வருகின்றன. இவை எல்லா நாட்டு அரசாங்கங்களுக்கும் தெரிந்தாலும் சுற்றுலா வருமானத்தை மனதில் கொண்டு கண்டுகொள்ளப்படாமல் விடப்படுகின்றன.

மற்ற நாடுகளை விட இந்தவகை ‘சுற்றுலாவில்’ கொடிகட்டிப்பறக்கும் தாய்லாந்தில் இதுதான் மிகப்பெரிய வருமானத்தை தருகிறது. வறண்டு போன நாட்டுப்புறங்களிலிருந்து இதற்கென்றே இருக்கும் முகவர்கள் மூலம் அன்றாடம் நூற்றுக்கணக்கான சிறுவர்- சிறுமிகள், பெண்கள் விபச்சாரத் தொழிலில் தள்ளப்படுகின்றனர்.

பாங்காக்கில் ஜனநாயகத்திற்காக போராடும் மக்கள் தங்கள் ஜனநாயக அரசுதான் இந்த சுற்றுலா விபச்சாரத்தை ஊக்குவிக்கிறது என்பதை உணரும் போதுதான் இந்த வெள்ளைப் பன்றிகளின் கொழுப்பை அடக்க முடியும். பிஞ்சுகளையும் காப்பாற்ற முடியும். உலகமயமாக்கம் வழங்கியிருக்கும் சுற்றுலா வருமானத்தின் யோக்கியதை இதுதான் என்பதற்கு வேறு ஆதாரம் வேண்டுமா என்ன?