Sunday, July 4, 2010

பிஞ்சுகளைக் குதறிய 90 வயது ஆஸ்திரேலிய பன்றி.


ஜோசப் கிராஸ் என்ற 90 வயது ஆஸ்திரேலிய வெள்ளைக்காரர் தாய்லாந்து நாட்டில் கடந்த பத்து வருடமாக வசித்து வருகிறார். சியாங் மாய் எனும் நகருக்கு அருகிலுள்ள இவரது வீட்டில் வைத்து இந்த முதியவர் தாய்லாந்து போலீசால் கைது செய்யப்பட்டிருக்கிறார். காரணம் என்ன?

நான்கு பச்சிளம் சிறுமிகளான சகோதரிகளை இந்த கிழட்டுப் பன்றி பாலியல் வன்முறை அதாவது ‘ரேப்’ செய்திருக்கிறது. 2008ஆம் ஆண்டு இந்தச் சிறுமிகளுக்கு ஆங்கிலம் கற்றுத் தருவதாக கூறி குடும்பத்தினரை சம்மதிக்க வைத்திருக்கிறான். அப்போது ஐந்து முதல் 13 வயதுள்ள இந்த சிறுமிகளுக்கு உயர்ரக இனிப்பும், சாக்லேட்டும் கொடுத்து நிர்வாணமாக்கி அதை புகைப்படம் கூட எடுத்திருக்கிறான்.

சிறுமிகள் வீட்டில் அசாதாரணமாக நடந்து கொள்வதை அடுத்து பெற்றோர்கள் விசாரிக்க உண்மை வெளிவந்து போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்கள். கிராசின் வீட்டிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாணச் சிறார்களது புகைப்படங்கள் கைப்பற்றப் பட்டிருக்கின்றன. அவற்றை மின்னஞ்சலில் வெளிநாடுகளுக்கும் அனுப்பியிருக்கிறான். இதனால் இது மிகப்பெரிய குழந்தை விபச்சார வலைப்பின்னலாக இருக்குமோ என்றும் போலீசு அதிகாரிகள் விசாரிக்கிறார்கள்.

தாய்லாந்து என்றால் வெளிநாட்டவர்க்கு குறிப்பாக மேற்குலக மனிதர்களின் நினைவுக்கு வருவது வகைவகையான விபச்சார – பாலியல் கேளிக்கை அடங்கிய சுற்றுலாதான். அத்தகைய பாலியல் வக்கிரங்களில் இப்போது உலகமெங்கும் கடும் கிராக்கியிருப்பது சிறார் விபச்சாரம்தான். வயதுக்கு வந்த விதவிதமான தேசிய இனப்பெண்களை ருசி பார்த்த காம வெறியர்கள் இப்போது கேட்பது குழந்தைகளைத்தான்.

கோவாவிலோ, மாமல்லபுரத்திலோ, இலங்கை கடற்கரையிலோ இல்லை தாய்லாந்திலோ இப்போது சிறார் விபச்சாரம்தான் கொடிகட்டிப் பறக்கிறது. இப்படித்தான் சுற்றுலா என்ற பெயரில் வெள்ளைப் பன்றிகள் ஆசியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளின் பிஞ்சுகளை குதறி வருகின்றன. இவை எல்லா நாட்டு அரசாங்கங்களுக்கும் தெரிந்தாலும் சுற்றுலா வருமானத்தை மனதில் கொண்டு கண்டுகொள்ளப்படாமல் விடப்படுகின்றன.

மற்ற நாடுகளை விட இந்தவகை ‘சுற்றுலாவில்’ கொடிகட்டிப்பறக்கும் தாய்லாந்தில் இதுதான் மிகப்பெரிய வருமானத்தை தருகிறது. வறண்டு போன நாட்டுப்புறங்களிலிருந்து இதற்கென்றே இருக்கும் முகவர்கள் மூலம் அன்றாடம் நூற்றுக்கணக்கான சிறுவர்- சிறுமிகள், பெண்கள் விபச்சாரத் தொழிலில் தள்ளப்படுகின்றனர்.

பாங்காக்கில் ஜனநாயகத்திற்காக போராடும் மக்கள் தங்கள் ஜனநாயக அரசுதான் இந்த சுற்றுலா விபச்சாரத்தை ஊக்குவிக்கிறது என்பதை உணரும் போதுதான் இந்த வெள்ளைப் பன்றிகளின் கொழுப்பை அடக்க முடியும். பிஞ்சுகளையும் காப்பாற்ற முடியும். உலகமயமாக்கம் வழங்கியிருக்கும் சுற்றுலா வருமானத்தின் யோக்கியதை இதுதான் என்பதற்கு வேறு ஆதாரம் வேண்டுமா என்ன?

No comments: